Saturday, December 29, 2007

மறக்க முடியல மங்கை சார் !!!

மங்கை சார்@ மங்கை மணவாளன். திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அத்தனை +2 படிச்சவஙக்ளுக்கும் பரிட்சயமான பெயர். அவர் எளிமையின் எடுத்துக்காட்டு அவர். அவர் ஒரு வேதியியல் வாத்தியார். இத வாசிக்குற உங்க அத்தனை பேராலயும் இதுக்கு பின்னாடி இருக்க ஒரு உண்ர்வுப்பூர்வமான விஷயத்த புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியல. ஆனா நீங்க அவர ஒரே ஒரு தடவ உங்க வாழ்க்கைல பாத்தாலும் உஙகளால புரிஞ்சுக்க முடியும்.

இத அவரு வாசிப்பாரா இல்லையான்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா அவருக்கு தெரிஞ்சவுங்க்ளோ, அவருக்கு பக்கத்துல இருக்க உங்கள்ல யாரோ ஒருத்த்ர்க்கு இது கண்ல பட்டா, அவ்ர்கிட்ட போய் சொல்லுங்க, உங்க கிட்ட படிச்ச ஒரு பழைய பையன் அவனுடைய நெஞ்சாங்கூட்டில் இருந்து உஙகளப் பத்துன சில வார்தைகள வலைப்பூவுல வடிச்சு வச்சிருக்கான்னு.

மங்கை சார் !!!

மறக்க முடியல மங்கை சார்!!!
கெமிஸ்ட்ரின்னா சைத்தான்னு நெனப்புல இருந்த எனக்கு அதையே கர்த்தனாக்கி, பின்னாடி காதலியாக்கிக் கொடுத்தீங்களே... அத....

எப்போ ட்யூசன் பீஸ் கொடுக்க வந்தாலும் உள்ளதுல்லேயே கஷ்டமான கொஸ்டியன் பேப்பரக் கொடுத்து பரீட்சை எழுத சொல்லி அதுல நான் நூத்துக்கு நாலு மார்க் கம்மியா வாங்குனதுனால,"நான் இன்னும் ட்யூசன் பீஸ் வாங்குற அளவுக்கு சொல்லிக் கொடுக்கல போல, எப்ப நீ சென்டம் எடுக்குறியோ அப்பதான் ட்யூசன் பீஸ் வாங்குவேன்"னு மறுத்தீங்களே.... அத....

நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதுக்காக குடுத்தீங்களே 50 ரூபா... ஒரு வியபாரிக்கு அவ்னுடைய முதல் போணிய பொறுத்துதான் அன்னைக்கு வியாபரம் நல்லா இருக்கும்ன்றது நம்பிக்கை. உங்ககிட்ட வாங்குனது தான் என்னோட முதல் சம்பாத்தியம்... இன்னைக்கு நாலு பேர் பாராட்டுற அளவுக்கு ஒரு நல்ல எடத்துல நான் இருக்கேனே... அத.....


நான் எப்போ ஃபுல் போர்ஷன் பரிட்சை எழுதி நல்ல மார்க் வாங்குனாலும், பரீட்சை பேப்பர்லேயே ஒரு பாராட்டு பத்திரம் எழுதி கொடுப்பீங்களே.... அத....

ராத்திரி உங்க வீட்லயே உக்காந்து படிச்ச பல நாட்கள், ஹைகிரவுண்டு ரவுண்டானா பக்கத்துல உள்ள ஜூபிடர் பேக்கரில கணக்கே பாக்காம சாப்பிட வாங்கிக் கொடுப்பீங்களே.... அத....

நாங்க +2 பரீட்சை எழுதேல, எக்ஸாம் சென்டர்ல இருந்த நம்ம ப்ள்ளிக்கூட வாத்தியார் அத்தனை பேர் மேலயும் நீங்க கோபமா இருந்தாலும் எங்களுக்காக சென்டர் வாசல்லேயே நின்னு வாழ்த்து சொல்லிட்டு போனீங்களே.... அத....

இப்படி எதையுமே என்னால மறக்க முடியல மங்கை சார்....

நான் கெமிஸ்ட்ரில வாங்குன 198 மார்க்குல 0.00000000000001 கூட என்னதுல்ல.... அத்தனையுமே உங்களுதுதான் சார்..


உஙகளுக்கு ஏதோ சுகர், உடம்பு சரியில்லன்னுலாம் கேள்விப்பட்டு மனசு கலங்கி போயிட்டேன்... உங்களுக்காக இல்லேன்னாலும் எங்களுக்காக தயவு செய்து உடம்ப நல்லா பாத்துக்கோங்க...

என் பேரனுக்குக் கூட வாத்தியார்ன்னா இப்படிதான்டா இருக்கனும்னு காமிக்கிறதுக்காக உங்க ட்யூசன்ல தான் சேத்து விடனும்...

மறக்க முடியல மங்கை சார்....!!!!!

31 பேர் சொன்னது என்னான்னா..:

Divya said...

உங்க பதிவு படிச்சுட்டு 'மங்கை சாரை' நேர்ல பார்க்கனும்னு தோனிச்சு,

ரொம்ப நெகிழ்ந்து போய்ட்டேன் பதிவு படிச்சு!

Chemistry la 198/200 aahhhhhhh, adengappa!!! Congrats!

ராம்குமார் - அமுதன் said...

உண்மைலேயே தங்கங்க எங்க மங்கை சார்.... அவ்ருகிட்ட படிச்ச ஒவ்வொருத்தருக்கும் அவரோட தாக்கம் கொஞ்சமாவது இருக்கும்....

//Chemistry la 198/200 aahhhhhhh, adengappa!!! Congrats!//
அதான் பதிவுலயே போட்டுட்டனே

/*நான் கெமிஸ்ட்ரில வாங்குன 198 மார்க்குல 0.00000000000001 கூட என்னதுல்ல.... அத்தனையுமே உங்களுதுதான் சார்..*/

subash said...

Well Said Da Ram Kumar...
Mangai sir is such a great person.. I am lucky enough to have studied under him..Apart from academics i learnt lot other good thing from him, which every human must have ...Though I haven't seen him for nearly six years now.. I think of him many times.. Hope I would get a chance to see him in the future and get the blessings of him..
Long Live Mangai sir..

subash said...

Can any one get me the phone no of Mangai sir??

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி சுபாஷ்! அவருகிட்ட படிச்ச எல்லாருக்குமே அவ்ரோட தாக்கம் கண்டிப்பா இருக்கும்... அதுக்கு நீயும் நானும் விதி விலக்கல்ல..... கண்டிப்பா அவர ஒரு தடவ பாக்கலாம்... பொங்கலுக்கு ஊருக்க்கு போகும் போது பாக்கணும்னு ஒரு எண்ணம் இருக்கு!!!

Uthay said...

கலக்குறடா நீ...
உன் கவிதையெல்லாம் கூட பதிவு செய்...

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி உதய் அண்ணா.... கண்டிப்பாக கவிதைகளையும் போடுறேன்... சீக்கிரமே....

Vinoth said...

super da... romba nalla irukuthu...
- Vinoth

Anonymous said...

super da... romba nalla irukuthu... blog padikumbothu 12 std'key poitein...
-Vinoth Sudalaimuthu

Anonymous said...

Mangai sir is an idle and for me he is he only best suited example for a nice person and for a good teacher. Proud to be his student.

Mangai sir's student,
Vimal Prashanth.

Shankar said...

I don't know whom u r?. But i got this blog url thro my class mates group.Very Nice , what v had in our heart is published here, Actually am a Commerce student. But i had studied in 8th to 10th Chemistry taken by him.

I once any thank you very much for creating this from my heart.

He is not only a teacher, a friend, s guide. in short a gem among teachers.

ராம்குமார் - அமுதன் said...

Hi Vinoth anna... Welcome to my Blog and Thanks for the COmment...

ராம்குமார் - அமுதன் said...

Shankar and Vimal.. Thanks for your Comments.... Mangai is really Gem among teachers....

aruna said...

இப்பிடி ஆசிரியர்களை நினைவில் வைத்திருக்கும் மாணவர்கள் கூட இப்போதெல்லாம் பார்ப்பது ரொம்பக் கஷ்டம் அமுதன்! இது கூட உங்களுக்குக் கிடைச்ச நல் ஆசிரியர்களினால்தான் என்று நினைக்கிறேன்! அருமையான ஆசிரியர்.....சிறப்பான மாணவன்!
அன்புடன் அருணா

ராம்குமார் - அமுதன் said...

எனக்கு சின்ன வயசுல இருந்து பாடம் நடத்துன நூத்துக்கணக்கான ஆசிரியர்கள்ல மனசுல நிக்கக் கூடியவங்க ஒரு நாலஞ்சு பேர் மட்டும் தான்....

ஆனா மங்கை சார், உண்மையிலேயே வாழ்நாள் முழுசும் மறக்கவே முடியாதவர்....

Kalimuthu C said...

Hello Ramkumar,

I am really happy to see a note for the beloved Managai sir. I have been his student between 1996 to 1998, that was the year when Managai sir started his academics life. I still call him my 'God Father'. It has been almost 10 years now...I am happy to see such a blog..words are not enough to describe my expression. However my favourite quote is 'Those who dream know thier way to success'..this is something that Mangai sir (we call him 'Chemistry' those times) writes on the top of the board as he comes into the class. I strongly believe in it till date and it has been true in my case. I have the same quote inscribed in my Ipod, my profile etc etc....I had challenged with him for my 12th exam score to cross 1100 for 1200 and I did win the challenge and he tool me and my 10 friends to Janakiram hotel for a treat..he used to treat us in Agnes restaurant, Jupiter bakery for no reason and big encourager of all.

Sorry Ramkumar -wish I could do it in tamil...but pardon me, am not good in tamil...Mangai sir taught me Chemistry and not tamil..else I would have done better in it....

Good Job..still a sincere student to Chemistry.....Cheers!

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி காளிமுத்து... உங்களுடைய விரிவான உரைக்கு.... அவர் உங்களுக்கு மட்டும் இல்ல , அவருகிட்ட படிக்கிற அத்தனை பேருக்கும் "காட்பாதர்" தான்.

eniasang said...

i too had ateacher whom i adored very much. that was alovely post of urs.

Hari Krishnan said...

I'm glad I could be a student of this wonderful human being. I'm deeply touched by your wonderful article. You sent me drifting back to those times, overcome with nostalgia. Thanks. :)

embwiz said...

Dear Ramkumar very happy to see a blog about such a great person. I am guharajan 1998 batch student from Jeyandra , I have been trying to get the contacts of kalimuthu sir for quite sometime, so excited to see a blog under his name, is it possible to get his contact number;

He is the first person who has encourage me ever in my life,he is the first person who taught me about what is teaching i always remember his words " A teacher is one who holds the golden chalk who write the future of every student under him" and he is so true.

Because of the inspiration he has given me i have trained more than 5000 engineers till now and still taking lectures and training when i ever i find time between my working hours.

Dear Ramkumar very happy to see a blog about such a great person. I am guharajan 1998 batch student from Jeyandra , I have been trying to get the contacts of kalimuthu sir for quite sometime, so excited to see a blog under his name, is it possible to get his contact number;

He is the first person who has encourage me ever in my life,he is the first person who taught me about what is teaching i always remember his words " A teacher is one who holds the golden chalk who write the future of every student under him" and he is so true.

Because of the inspiration he has given me i have trained more than 5000 engineers till now and still taking lectures and training when i ever i find time between my working hours.

He is a legend,please get me his contacts.

பெயர் : அப்துல்லாஹ் said...

நானும் அவருடைய தற்போதைய மாணவன் அவரிடம் இப்போது அவரிடம் chemistry படித்து கொண்டிருக்கிறேன் உங்களுடைய இந்த வலைப்பதிவை அவரிடம் கூரியுள்ளேன்.

Abdulla said...

நானும் அவருடைய தற்போதைய மாணவன் அவரிடம் இப்போது அவரிடம் chemistry படித்து கொண்டிருக்கிறேன் உங்களுடைய இந்த வலைப்பதிவை அவரிடம் கூரியுள்ளேன்.

Anonymous said...

hi My Name is student of mangai sir, S.Gopala krishnan
batch 2009-2010 12th finished this year(2010)
any body know about moksham , in all the religion attaining the feet of god is called moksham.
if the person attains moksham he must have certain qualitiesif u want to see such qualities , meet mangai sir and atleast attend one class of sir.


i have studied three years in sir tution
sir is not only chemistry teacher ,sir is also a spiritual teacher, and teaches wat is life,

i have no rights to say that sir is a very good or perfect person , as iam not soo good to tell that , the parents of students studying in the tuition and outside the tution says this words.

you must have done any good things , to be a student of mangai sir, i think i must be the lukiest person , if u are a student dont leave sir till ur life ends , workship him as a teacher .


A N Y B O D Y K N O W S

S I R S e-mail address \

P L E A S E M A I L TO

findsujay92@gmail.com


anything for a very good master ,

BE SURE , INDIA NEEDS GOOD AND WELL EQUIPED STUDENTS , BUT GOOD STUDENTS CAN ONLY BE BROUGHT FROM GOOD PARENTS AND VERY GOOD MASTERS , ACCORDING MYSELF A GOOD TEACHER IS NOT ALONE A TEACHER A SOCIAL WORKER

-LIKE SIR

Thiagarajan B said...

Hi Ramkumar,

We are all very lucky to have such a gr8 professor, more than that he is an exceptional human being. I could never think of a sir in my life as him till now. He is one of the best professor in my experience. Moreover we must not forget our other professors also at this time who also deserves to what we are now. I think we are all lucky enough to have all the best professors at Tirunelveli. I salute them all, as because of them what we are now.

Regards,
Thiagarajan.

Thiagarajan B said...

Hi Ramkumar,

Thanks for the blog. It been very nice to remember Mangai Sir at this day. Not only he has been gr8 professor/teacher, but he is an exceptional human being. I think we are all lucky enough to be students under him.

At the same time we should not forget our other teachers Chockalingam, Ravishankar, Sankara Bagham etc. Also CSAFA. Who also equally deserves credit and thanks from our end.

I still believe that we are all at good positions since we are lucky enough to get such a group of exceptional teachers.

Gr8 thanks to them all where ever they are.

We should all plan to meet them once together.

Regards,
Thiagarajan

John Joshua said...

I have created a page for mangai sir in facebook. I have began to love chemistry after learning with Mangai sir. Great gift to Tirunelveli students. His Land line number 2575977 and his mobile number is 9948478080

John Joshua said...

I have created a page for mangai sir in facebook. I have began to love chemistry after learning with Mangai sir. Great gift to Tirunelveli students. His Land line number 2575977 and his mobile number is 9948478080

Anonymous said...

hi..i was also a student of him....

innaiku varaikum college la "na mangai sir student" nu neriya thadavai perumai pattu iruken..ennoda 12 th chemistry test notes, paper ellam innum pathirama vahu iruken...

living legend....he is.......

Anonymous said...

மங்கை சாரிடம் படிச்சதுலயே கம்மியான மார்க் வாங்கியவன் நான் அவரை நேரில் சென்று பார்க்க பயமாக இருக்கிறது நான் மிகவும் மதிப்பவர்களுளில் அவரும் ஒருவர்

Deepa Maharajan said...

Super ram,varthaigal illa unnai parata,unkuda intha vagupula naanum padichaenu nenaikum pothu romba perumaiya iruku... mangai sirkaga namma school a strike nadakum pothu antha whole school a naa matum participate panale...ethanaiyo naal varutha paten...but perumaiya soluvaen enoda UG subject chemistry eduthaen...mangai sir needudi valavendum endru prathikiraen.....enudaiya pathivum ithil irukirathu endru santhoshathudan deepa

Deepa Maharajan said...

Hi Thiagarajan
Rite said..we are all lucky to have teachers like chockalingam sir,Ravi Shankar sir,mangai sir....perfect examples for a teacher

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.