இது நான் ஏற்கனவே என்னோட பழைய வலைப்பூவில் எழுதிய விஷயம் தான். ஆனால் என் பதிவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த பதிவு. இன்னும் எத்தனை வலைப்பூக்கள் ஆரம்பித்தாலும் இந்த பதிவு அத்தனையிலும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய சின்ன பேராசை :-)
நான் எனது பள்ளிப்பருவத்து நினைவுகளை அசை போடுவதற்காக கடந்த சனிக்கிழமை எனது பள்ளிக்குச் சென்றேன்... சில்லென வீசிய வேப்பங் குளிர்க்காற்றில் பின்னோக்கி விரிந்த எனது நினைவுகளின் சில துளிகள் இங்கே... இதே நினைவுகள் அரசு ஆண்கள் பள்ளிகளில் படித்த பலருக்கும் இருக்கும் என்றே எண்ணுகிறேன்...
தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை...காலத்தால் காக்கப்பட்டு வரும் அரும்பெரும் பொக்கிஷம். என்னைப் போன்றே பலரையும் உருவாக்கி உருவப்படுத்தியிருப்பதில் 160 ஆண்டுகளைக் கடந்து விட்ட அந்தக் கல்விக்கூடம் ஒரு அன்னைக்கூடமாய் மாறியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.
அந்த நாட்களிலே....
9 மணி பள்ளிக்கு காலை 8 மணிக்கே தொடங்கி விடும் சைக்கிள் பயணம்,ஏழெட்டு நண்பர்களாய் கதைத்துக் கொண்டு அழுத்தி வரும் அந்த பயணம், எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இன்று கிடைக்கத அந்த பயணம்....
வாசலில் வந்து பேன்ட்டு களைந்து அரைக்கால் ட்ரவுசரோடு உள்ளே வந்த அந்த நாட்கள்....ஸ்௯ல் அட்டேன்ஷன் தொடங்கி "சருவலோகதிபா நமஷ்காரம்" வழியாக "ஜண கண மண" பாடிய கூட்டுப்பிரார்த்தனைகள்..."
அக்கா!!!! ஒரு ரூபாய்க்கு மாங்கா குடுங்க", "அண்ணே 50 காசு ஜூஸ் ஒன்னு 1 ரூபா ஜூஸ் ஒன்னு", "பாண்டியன் ஒரு மேங்கோ ஐஸ்" என்று வாங்கித்தின்ற இடைவேளைப் பொழுதுகள்...
10 பேர், 15 பேர் கூடிப் பகிர்ந்து பேசி சிரித்து சம்சாக்களோடும் வடைகளோடும் உணவு உண்டுக் களித்த புளியமரத்தடி நிழல்......
ஒரு பாடத்தில் பெயில் ஆனால் ஒரு அடி வீதம் ஆளுக்குத் தகுந்தாற் போல் வாங்கிய அடிகள்....
சட்டை கழற்றி உள் பனியனோடு கூட உலா வந்த விளையாட்டுப் பாடவேளைகள்.... அதிலே விளையாடிய ஏழுகற்கள், எறிப்பந்துகள்...போட்டுக் காட்டிய நாடகங்கள், பேசிப் பழகிய மேடைகள், எழுதிய கவிதைகள்... அதிலே வென்று குவித்த பரிசுகள்...அதிகாலை நேரத்திலே 5 மணிக்கு லாம் வந்து கலந்து கொண்ட NCC பரேடுகள்....(இப்பல்லாம் நெனச்சாக் கூட 12 மணிக்கு முன்னாடி எந்திரிக்க முடியல)
"உள்ள மட்டும் நானே உசிரக் கூடத்தானே நண்பண் கேட்டா வாங்கிக்கோன்னு சொல்லுவேன்" என்று பாடித்திரிந்த நட்பு வட்டங்கள்...
கோயில்மணி சாரிடம் டியூஷன் என்று சொல்லி தண்ணீர் டேங்கிற்கு பின்னால் நின்று "மாப்ளே இவ லட்டு; இவ ஜாங்கிரி; " என்று அடித்த சைட்டுகள்....
சொட்டை என்றும் வழுக்கை என்றும் குண்டன் என்றும் காட்டான் என்றும் வாத்தியார்களுக்கு இட்ட புனைப் பெயர்கள்... அவர்களைப் போலவே பேசிக்காட்டி நடித்துக்காட்டி மகிழ்ந்திட்ட கணங்கள்.......
வருடத்திற்கு ஏழு நாட்கள் நடக்கும் ஐ.எம்.எஸ். விற்பனைத் திருவிழா.... அவற்றில் நாம் கொடுத்த சின்ன சின்ன பங்களிப்புகள்......
இன்னும் எத்தனையோ பசுமையான, செழுமையான, ஆத்மார்த்தமான நினைவுகள் நம் பள்ளிப்பருவத்து நாட்களிளே....ஆனால் இன்று என் பள்ளித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரிமாணத்தில்...
சிலர் மருத்துவர்களாய்...
சிலர் வழக்குரைங்கர்களாய்...
பலர் பொறியாளர்களய்...
ஆனால் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு ஓரத்திலாவது இந்த நினைவுகள் புதைந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மையே !!!!!
Saturday, December 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
12 பேர் சொன்னது என்னான்னா..:
பள்ளி பருவம்.....மறக்க முடியாத ஒரு கனாக்காலம்!
எல்லா வாத்தியருக்கும் 'பட்ட பெயர்' வைச்சுடுவீங்க போலிருக்கு???
அதெல்லாம் இப்போ நினைச்சா நகைச்சுவையா இருக்கிமில்லையா?
உங்க பள்ளி நினைவுகள் பற்றி நிறைய எழுதுங்க.
Can u please take of the WORD VERIFICATION......plssssssss!!!
ஆமா திவ்யா! அது ஒரு மறக்க முடியாத கனாக்காலம்.... எத்தனை வருஷம் ஆனாலும் நெஞ்சுல ஆழமா பதிஞ்சு போன நினைவுகள்...
ஒரு வாத்தியார விட மாட்டோம்.... தலைமயாசிரியர்ல இருந்து, கடை நிலை ஆசிரியர் வரை ஒருத்தர் விடாம போட்டுத் தாக்குவோம்....
//உங்க பள்ளி நினைவுகள் பற்றி நிறைய எழுதுங்க.//
கண்டிப்பா எழுத முயற்சிக்கிறேன்....
ரொம்ப உணர்ந்து எழுதிருக்கீங்க! அப்பாடா அப்பிடியே பள்ளிப் பருவம் நினைவுக்கு வந்து எனக்கும் கூட இது போன்ற ஒரு பதிவு எழுதணும்னு ஆசையாக இருக்கு....இதோ கிளம்பிட்டேங்க!!
அன்புடன் அருணா
ரொம்ப நன்றி அருணா... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்.... பள்ளிப்பருவம் ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலயும் ஒரு மறக்க முடியாத, நெனச்சு நெனச்சு பாக்க வேண்டிய பருவம்... நீங்களும் உங்க பள்ளிப்பருவத்து நினைவுகளை கண்டிப்பா எழுதுங்க..... வாழ்த்துக்கள்....
Awesome!!took me back to my school days, bus journeys,lunch sheds and 50p pepsis.
Thanks Vinodh..
i just have 1 word to say...Speechless!! though we only know this is just a tip of the iceberg....thodarndu ezhududa thakkaLi :)
Iys machi.. Thanks da... will try to write atleast some, when I find time...
Seems like I have also shared the same class with you in all those schooling till 10th....NCC Samosa, Vadai maranthutiya....illai venumune vitutiya....
You don't look out there for God, something in the sky, you look in you.
Take a look at my page - heel lifts
Change yοur thoughts anԁ you сhange your world.
My blog post - heel lifts insoles
Post a Comment
வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...