Sunday, September 28, 2008

சக்கரக்கட்டி - சல்பேட்டாக் கட்டி...

இது வரைக்கும் நான் சில நல்ல, மனச பாதிச்ச படங்களுக்கு மட்டும் தான் விமர்சனம் பண்ணிருக்கேன். எந்த ஒரு படத்துக்கும் தரக்குறைவான விமர்சனம் பண்ணினதே கிடையாது. சில பதிவர்கள் ஒரு சில படங்கள பாத்துட்டு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவோ,ஏதோ சுயபச்சாதாபம் காரணமாகவோ கொலவெறி பதிவுகள் போட்டு பாத்ருக்கேன். ஆனா முதன்முறையா இந்தப் படத்துக்கு ஒரு கேவலமான விமர்சனம் பண்றேன். ஒரே ஒரு காரணம் தான். கடந்த 2 மாசமா, ஒரு நாள் விடாம கேட்டு கேட்டு,என்னெனவோ கற்பணை பண்ணி வச்சிருந்த ஏ.ஆர்.ரஹ்மானோட 5 முத்தான பாடல்கள் நாசாமாக்கப் பட்ருக்குன்னு ஒரு கொலவெறில இந்த பதிவ போடுறேன்.


கொலைவெறி காரணம் #1:
முதல்ல படத்தோட ஹீரோ மற்றும் அவரோட நண்பர்களோட கதாப்பாத்திரம். எல்லா காலேஜ்லயும், எல்லா கம்பெனிலயும் சில பீட்டர் கேரக்டர்கள் இருக்கும், நம்ம வாழ்நாள்ல இவன் கூடல்லாம் சேந்துரவே கூடாதுனு நமக்கு நாமே சுய சத்தியம் பண்ணி வைராக்கியத்தோட வாழுவோம் பாருங்க. அப்படிப்பட்ட நாலு பேரோட கதைதான் இது . "Hey Dude, Life is a COLA da.. She is a MALA da" அப்படினு எப்பவுமே 'தமிழ்னா இன்னாது?' அப்படினு சீன் போட்டு கடுப்ப கிளப்புற கூட்டத்தோட கதை.

கொலைவெறி காரணம் #2:
இத வாசிக்குற உங்களுக்கு ஒரு கேள்வி.. ஒரு ஐந்து நண்பர்கள் ஒண்ணா உக்காந்து பேசிக்கிட்டு இருக்கீங்க. ஒரு நண்பர் உங்கள பயங்கரமா கிண்டல் பண்றாரு. உங்களோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்."இவரு பெரிய --------" கோடிட்ட இடத்துல அவங்கவங்க தகுந்தாப்ல ஏதோ ஒண்ணு நிரப்பிக்கோங்க. கிட்டத்தட்ட இந்த மாதிரிதான ஏதாவது சொல்லுவீங்க. இந்தப் படத்துலயும் அப்படி ஒரு காட்சி. படத்தோட ஹீரோ சாந்தணுவ அவரு நண்பர்கள் ஓட்டுற மாதிரி ஒரு காட்சி. அதுல கடுப்பாகுற சாந்தனு பேசுற டைலாக் என்ன தெரியுமா?
"Hey Man, If anyymore words, I am sure, I gonna Kill youuu..."
கொலைவெறி காரணம் #3:
படம் முழுக்க முழுக்க சாந்தணு தமிழத் தவிர எல்லா மொழிலயும் பேசுறாரு. அது மட்டுமில்லாம, அவரு பேசுறதுல பல ஆங்கில வார்த்தைகள் GRE, TOEFL, BEC எழுதுனவங்குளுக்கே புரியாததா இருக்கு. படத்துல லட்டு லட்டா 2 நாயகிகள். ஆனா 2 பேருமே "என்னா ஜொல்ழுற... முத்தும் ஹேக்குற... உங்கி வீடி எங்கிருக்கா"னு தமிழ நாரசப்படுத்தீருக்காங்க.இது தவிரவும் படத்துல வர்ற எல்லாக் கதாப்பாத்திரங்களுமே பூமி இல்லாத ஒரு அந்நிய கிரகத்துல வாழுற மாதிரியே நடிச்சுருக்காங்க. அதுலயும் ஹீரோவோட நண்பர்களா வர்ற நாலு பேருல ஒருத்தன் கெடச்சிருந்தா கூட தியேட்டர்ல கல்லாலயே அடிச்சு துரத்திருப்பாங்க.

கொலைவெறி காரணம் #4:
சரி நடிப்பு, வசனம்தான் இப்படி மொக்கையா இருக்கு, திரைக்கதைல ஏதாவது பண்ணீருப்பாங்கணு பாத்தா படம் மொத்தமுமே எதார்த்ததுக்கும், இயல்புக்கும் அப்பாற்பட்டதாவே இருக்கு. ஹீரோ ஹீரோயினுக்கு காதல சொன்ன காட்சியாகட்டும், அவரு வேதிகா வீட்டுக்கு போற மாதிரி கனவு காணுற காட்சியாகட்டும், இல்ல இதுல தான் எல்லாமே இருக்குனு அவங்களே சொல்லிக்குற கிளைமாக்ஸ் காட்சியாகட்டும், எதுலயுமே எதுவுமே சத்தியமா புரியல. அப்பாகிட்ட காசிருக்குன்ற ஒரேயொரு காரணத்துக்காகவே டைரக்டர் ஆகிட்டியா கலாபிரபு. கொஞ்சம் சினிமான்னா என்ன, கதை திரைக்கதைன்னா என்னனுலாம் தெரிஞ்சுகிட்டு வந்தீங்கன்னா, நல்லா இருக்கும்.

கொலைவெறி மிக முக்கிய காரணம் #5:
மருதாணி, சின்னம்மா சிலகம்மா, நான் எப்போது பெண் ஆனேன், இந்த மூணு பாட்டுமே காலத்துகும் நின்னுருக்க வேண்டிய ரஹ்மானோட மெலடி மெட்டுக்கள். ஆனா தேவையே இல்லாம கிராபிக்ஸ் லாம் புகுத்தி பாட்டெல்லாம் படு மோசமா எடுத்துருக்காங்க. "டாக்சி டாக்சி". என்ன கொடுமை சார் இது. நண்பர்கள்ன்ற பேர்ல நடிச்சிருக்கிற நாலு லூசு பசங்களுக்காகவா ரஹ்மானோட இவ்வளவு உழைப்பும், நாசமா போச்சு.

வெள்ளித்திரை படத்துல பிரகாஷ்ராஜ் ஒரு வசனம் பேசுவாரு, இந்தப்படத்துக்கு மிகவும் பொருத்தமான வசனம்... "தமிழனுக்கு தமிழ்ல படம் எடுங்கடா, டேய்".

எங்க ஊர் திருநெல்வேலிங்க. எங்க ஊர்ப்பக்கமெல்லாம் இந்தப்படத்துக்கு இப்படி தான் கமென்ட் இருந்திருக்கும் "ஏலேய் ! என்னதிது.. இந்த பயபுள்ளக்கி என்ன இங்க்லீஷ் தொரன்னு நெனப்பா? தியேட்டர்காரனுவளா, வெளிய சக்கரக்கட்டினு தமிழ் பட போஸ்டர் ஒட்டிகிட்டு இங்கிட்டு என்னா, இங்கிலீஷு படத்தப் போடுதீயளா?"

இந்தப்படத்துல, ஒரெயொரு ஆறுதலான விஷயம்.
....................
...................
...................
...................

அப்படினு ஏதாவது ஒண்ணு சொல்லலாம்னு என் மூளைய பயங்கரமா கசக்கி யோசிச்சு பாத்தேன். தயவு செய்து தப்பா நெனக்காதீங்க. அப்படி எதுவுமே இல்ல.

அலை, தூண்டில், மச்சக்காரன், பழனி, திருப்பதி, வல்லவன், 'சாம் ஆண்டர்சனின்' யாரோ யாரோ ... இந்த மாதிரி படங்கள்லாம் விரும்பி பாக்குற மனசு உங்களோடதா? தயவு செய்து இந்தப் படத்தையும் கண்டிப்பா போய் பாருங்க.

18 பேர் சொன்னது என்னான்னா..:

ராகவன் said...

me the escape!

ராம்குமார் - அமுதன் said...

:-) எஸ்கேப் ஆகிடுங்க...

வெட்டிப்பயல் said...

தம்பி,
எல்லாத்தையும் சொல்லிட்டு சாம் ஆண்டர்சன் படத்தை சொல்ற பார்த்தியா அதை மட்டும் நான் கண்டிக்கிறேன் :)

"டாக்டர்" விஜய் said...

//அலை, தூண்டில், மச்சக்காரன், பழனி, திருப்பதி, வல்லவன், 'சாம் ஆண்டர்சனின்' யாரோ யாரோ ... இந்த மாதிரி படங்கள்லாம் விரும்பி பாக்குற மனசு உங்களோடதா? தயவு செய்து இந்தப் படத்தையும் கண்டிப்பா போய் பாருங்க.//

அண்ணா, என்னங்கணா என்னோட படங்கள விட்டுட்டீங்க

Madhusudhanan Ramanujam said...

நல்ல வேளை முன்னாடியே சொன்னீவ...நா எஸ்கேப்!

Senthil Kumar said...

Dai enaku credit card la irunthu waste ha money pochida.....

சுபாஷ் said...

ஆரம்பத்திலேயே கொலவெறியோட இருந்திருப்பீங்களோ!!!
ஆனாலும் தல றஃமான பத்தி சொல்லிருக்கீங் பாருங்க இதுக்காக உங்கள பாராட்டணும்.

முத்து குமரன் said...

naanum pathen sir... intha kodumaiya..

ராம்குமார் - அமுதன் said...

//வெட்டிப்பயல் Said...

தம்பி,
எல்லாத்தையும் சொல்லிட்டு சாம் ஆண்டர்சன் படத்தை சொல்ற பார்த்தியா அதை மட்டும் நான் கண்டிக்கிறேன் //

தல... சாம் ஆன்டர்சன் படமாவது பசங்களோட பாத்து என்ஜாய் பண்ரதுக்கு ஓ.கே... இது வேற மாதிரி.. சூர மொக்க...

ராம்குமார் - அமுதன் said...

//டாக்டர்" விஜய் Said...

//அலை, தூண்டில், மச்சக்காரன், பழனி, திருப்பதி, வல்லவன், 'சாம் ஆண்டர்சனின்' யாரோ யாரோ ... இந்த மாதிரி படங்கள்லாம் விரும்பி பாக்குற மனசு உங்களோடதா? தயவு செய்து இந்தப் படத்தையும் கண்டிப்பா போய் பாருங்க.//

அண்ணா, என்னங்கணா என்னோட படங்கள விட்டுட்டீங்க
//

அண்ணா, உங்க படத்துல கமெர்ஷியல் எலெமெண்ட்னு ஏதாவது ஒண்ணாவது இருக்கும்... அட்லீஸ்ட் ஒரு பாட்டாவது இருக்கும்.. இது எதுவுமே இல்லீங்கணா...

ராம்குமார் - அமுதன் said...

//Madhusudhanan Ramanujam said...
நல்ல வேளை முன்னாடியே சொன்னீவ...நா எஸ்கேப்!
//

கண்டிப்பா மது... தயவு செய்து தப்பிச்சுக்கோங்க...

ராம்குமார் - அமுதன் said...

//சுபாஷ் said...
ஆரம்பத்திலேயே கொலவெறியோட இருந்திருப்பீங்களோ!!!
ஆனாலும் தல றஃமான பத்தி சொல்லிருக்கீங் பாருங்க இதுக்காக உங்கள பாராட்டணும்.//

கண்டிப்பா இல்லைங்க... பாட்டெல்லாம் கேட்டுட்டு பயங்கர எதிர்பார்ப்போட தாங்க போனேன்... ரொம்பவே ஏமாந்துட்டேன்...

ராம்குமார் - அமுதன் said...

முத்து குமரன் said...
naanum pathen sir... intha kodumaiya..

//ஏமாந்துட்டோமே முத்துகுமரன்...//

Anonymous said...

//அண்ணா, என்னங்கணா என்னோட படங்கள விட்டுட்டீங்க //

அண்ணா - உங்க படத்தை சேர்க்கணும்னா, அவர் ஒரு தனிபதிவே எழுதியிருப்பாருங்கணா ! அழகியதமிழ்மகன், சக்கரகட்டி என்று ரகுமானின் போறாதகாலம் தொடரும்போல ! :-(

saravanan said...

Macha nejamave kaapathite da. Nalla irunga thambi!!!!!

ராம்குமார் - அமுதன் said...

//அழகியதமிழ்மகன், சக்கரகட்டி என்று ரகுமானின் போறாதகாலம் தொடரும்போல ! :-(//


மனசு ரொம்பவே கஷ்டமா இருக்கு.. ரஹ்மான் இனிமேல் கதையா நல்லா கேட்டு முடிவு பண்ணி இசை அமைச்சா நல்லா இருக்கும்...

ராம்குமார் - அமுதன் said...

// saravanan said...
Macha nejamave kaapathite da. Nalla irunga thambi!!!!!
//

மச்சி தப்பிச்சுக்கோ... Beware of Sakkarakatti...

வந்தியத்தேவன் said...

ரகுமானிற்க்கு அடுத்த படங்கள் இரண்டும்(மர்மயோகி, எந்திரன்) அதிரடி சரவெடி தான் அதனால் இந்த டப்பா படங்களுக்கு இசை அமைத்தது மறந்துபோகட்டும். என் சுவாசக் காற்றே பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனால் படம் பப்படம். அரவிந்த சுவாமியின் திரைப்பட வரலாற்றையே மாற்றிய படம் அது.

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.