"அருண்ராஸ்கல் ரொம்பத்தான் மாறிட்டான்" மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
இப்படி அவன் ஒருபொழுதும் இருந்ததே கிடையாது. இப்போதான் கொஞ்ச நாளா ரொம்ப ரொம்ப மோசமாயிட்டு வர்றான். அழுத்துக் கொண்டே தன் இருக்கையில் வந்து அமர்ந்தவளுக்கு வேலையே ஓடவில்லை. சும்மா பேருக்கு மெயில் பாக்சை திறந்து வைத்தாள். முதல் மெயிலே மேனஜரிடமிருந்து வந்திருந்தது. இன்று மாலை நான்கு மணிக்குள் ACI கிளைண்டுக்கான அத்தனை வேலையயும் முடித்து விட்டு தன்னை வந்து பார்க்குமாறு கூறியிருந்தார். ஏற்கனவே இந்த பிராஜக்ட் UAT டெட்லைன் தள்ளிப்போய் 4 நாள் ஆகியிருந்தது.
"இது வேற பெரிய தொல்ல, போனா கொன்னு எடுக்கப் போறாரு." நினைத்துக் கொண்டே மெயில் பாக்சை மேலும் கீழும் சுற்றினாள், அருணிடம் இருந்து ஒரு மெயிலாவது வந்த்ருக்கா என்று. யார் யாரிடமிருந்தெல்லாமோ குட்மார்னிங் குட் டே என்று எக்கச்சக்க மெயில்கள் இருந்தன. ஆனால் அருணிடம் இருந்து பேருக்கு கூட ஒரு மண்ணும் வரவில்லை.கடுப்பாக இருந்தது.
"போய் காபி குடிச்சுட்டு வந்து வேலய பாக்கணும். அவன் கால் பண்ணா மட்டும் பேசவே கூடாது. அவனுக்கும் அப்பத்தான் புரியும்"
தனக்குத்தானே புலம்பிக் கொண்டு கேபிட்டேரியா போய் காபி எடுத்துக் கொண்டு ரிவர் பிரிட்ஜ்ல் போய் அமர்ந்த பொழுது உடம்புக்கும் மனசுக்கும் ஏதோ செய்வது போல் இருந்தது.மனசு முழுதுமாக அருண்ராஸ்கல் அருண்ராஸ்கல் அருண்ராஸ்கல் என்று ஏதோ சுற்றிக் கொண்டே இருந்தது.
அருண், அஞ்சு வருசத்துக்கு முன்னாடி எனக்குள் இறங்கிய காதல் சாத்தான். ட்ரெயினிங் பேட்ச்ல அவன முதன் முதலா பாத்தப்போ அவனா வந்து ஹாய் சொல்லி பேசுனதிலிருந்து முந்தாநேத்து நைட் 10 நிமிஷம் பேசியது வரைக்கும் எல்லாம் அவளைச் சுற்றி சுற்றி வந்தது.

அருண், காயத்ரியின் அன்பு காதல் சாத்தான்... புரியும்படியா சொல்லணும்னா காதல் கணவன். ஒரே ட்ரெயினிங் பேட்ச்ல பாத்துப் பேசிப் பழகி 6 மாசம் ஒன்றாக சுற்றிய போதெல்லாம் கூட அவர்களுக்குள் ஒன்னும் கிடையாது. ஆனால் இரண்டு பேரும் ஒரே கிளைண்டுக்கான பிராஜக்டில் ஒரே டீமில் போடப்பட்ட பொழுது அது வெறும் நால்வர் உலகமாகிப் போனது. அந்த உலகத்தில் ஜாவா, ஆரக்கிள், அருண், காயத்ரி நால்வர் மட்டுமே அடங்கிப் போனார்கள். யாரும் எதுவும் சொல்லாமலே உனக்கு நீ எனக்கு நான் என்று அவர்களையறியாமலே ஏதோ ஒன்றுக்குள் சிக்கித் தான் போயிருந்தார்கள். காயத்ரி காயுக்குட்டி ஆனதும் அருண் அருண்ராஸ்கல் ஆனதும் அடுத்த ஓராண்டுக்குள் தானாகவே நடந்து போயிருந்தது.ஒரு நாள் காயத்ரி ஏதோ ஆரக்கிளில் சந்தேகம் கேட்க அருண் இந்தக் குயரி உனக்கு ஒத்து வருமான்னு பாரு என்று எழுதிக் காண்பித்த பொழுது சொக்கித்தான் போனால்.
select 'Gayathri' || ' & ' || 'Arun' as "Best Couple of the World" from dual;
ராஸ்கல்ல்ல்ல்ல்ல்... என்று சினுங்கி கொஞ்சுவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை அவளுக்கு. "காயுக்குட்டி கல்யாணம் பண்ணிகலாமாடி" என்று அவன் கேட்ட பொழுது பொமேரியன் நாய்க்குட்டி போல் அவன் நெஞ்சில் முகத்தை வைத்து தலை ஆட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை அவளுக்கு.
ஒரு சின்ன பிரச்சனை கூட இல்லாமல் இரு வீட்டு சம்மதத்தோடு கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட பொழுது இவ்வுலகில் கடவுளாலும் காதல் தேவதையாலும் முழுதுமாய் மலர்தூவி ஆசிர்வதிக்கப்பட்ட தம்பதிகள் தாம் என்று மகிழ்ந்து கிடந்தார்கள். இன்னும் ஒரு வருஷம் நல்லா லவ் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்பதான் நேரம் நல்லா கூடி வருது. வீட்டுப்பெரியவர்கள் சொன்ன பொழுது திளைத்துப் போனார்கள். ஓராண்டு மூச்சு முட்ட முட்ட காதலித்து பின் திருமணம் செய்து கொண்ட பொழுது அவர்கள் வாழ்க்கை ஒரு காதல் பூக்காடு ஆகிப் போயிருந்தது. திருமணப் பரிசாய் அவர்கள் கம்பெனியில் இருந்து ஒரு மாதம் கனடா, யூ.எஸ் தேனிலவு அனுப்பிய பொழுது தாங்கள்தான் காதல் கடவுளின் நேரடிக் குழந்தைகள் என்று பூரித்துப் போனார்கள். அமெரிக்காவிலும் கனடாவிலும் ஒரே நாளில் நயகராவின் சாரலில் நனைந்து திளைத்த பொழுது
"கண்மணி !!! உன்னோடு சேர்ந்து நயாகராவில் நனைந்து விட்டேன்...
இனி நம் வாழ்வு வணக்கத்திற்குரியது...
மரணம் கூட மரியாதைக்குரியது"
இனி நம் வாழ்வு வணக்கத்திற்குரியது...
மரணம் கூட மரியாதைக்குரியது"
கிஷானுக்கு 4 மாதம் ஆன பின் காயு கம்பெனியில் சேர்ந்த நாளில் சொன்னார்கள் அருணுக்கு ஆர்கிடெக்டாக பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. அவன் உடனடியாக பெங்களூரிலிருந்து புனே செல்ல வேண்டும். அவன் ஒரே வார்த்தையில் ஒரே முடிவாய் சொல்லிவிட்டான் "இல்லை". இவளுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும் இவள்தான் அவனை சமாதானப்படுத்தி சரி சொல்ல சொன்னாள்.
"உன்னையும் கிஷானையும் விட்டுட்டு போனாதான் ஆர்கிடெக்ட் ஆக முடியும்னா அந்த பொடலங்கா ஆர்கிடெக்க்ட் எனக்கு தேவை இல்லை. விட்ட்டுடு."
"இல்லப்பா நமக்காக இல்லேனா கூட கிஷானுக்காகவாவது நீ போதான் வேணும். எவ்ளோ நாள் அங்க இருக்கப் போற. 3 மாசமோ 4 மாசமோ, அதுக்கப்புறம் இங்க ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடலாம். கேரியர் முக்கியம்டா.... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்டா".
வேறு வழியில்லாமல் போனான்.

1,2,3... 14,15,16....23....... காலமும் - மாதங்களும் போய்க் கொண்டுதான் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகிப்போனது... கிஷான் கூட பேபி சிட்டிங் நிலையை எட்டியிருந்தான். ஆனால் எவ்வளவோ முயன்றும் அருணுக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கவே இல்லை. மாதம் ஒருமுறை, இருமாதம் ஒருமுறை 2 நாள் - 3 நாள் என்று வந்து போய்க் கொண்டிருந்தான். இந்த 2 ஆண்டுகளில் தான் காயத்ரி அவன் இல்லாத வெறுமையை உணரத் தொடங்கியிருந்தாள். தினமும் கால் பண்ணும் நேரத்தில் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்,
" எப்படியாவது சீக்கிரமா வந்துடு டா இங்க... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் டா..."
அவனும் முயற்சி பண்ணிக் கொண்டுதான் இருந்தான். ஆனால் இந்த ரெஸ்ஷன் நேரத்தில், ட்ரான்ஸ்பர் லாம் மிகக் கடினமாக இருந்தது. அவளும் கூட புனே செல்வதற்கு ஒரு ட்ரான்ஸ்பர் அப்ளிகேஷன் போட்டு வைத்தாள். இந்த நிலையில்தான் இன்று அவர்களுடைய 5வது திருமண நாள். நேற்று இரவு 12 மணி முதல் அவனிடம் இருந்து போன், எஸ்.எம்.எஸ் ஏதாவது வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். எதுவும் வரவில்லை. போன திருமண நாளில் கூட, 4 டெடி பியர், 4 கேட்பரீஸ் பேமிலி பேக், 4 மிக நீண்ட முத்தங்கள் என்று சிம்பாலிக்கா 4வது திருமண நாளை அசத்தியவன் தன். இந்த முறை ஒரு போன் கூட பண்ணல. இந்த ஒரு வருஷத்துல தான் ரொம்பவே மாறிட்டான். மனதிற்குள் நினைத்த போதே ஏதோ செய்தது அவளுக்கு.
“ச்சீ.. என்ன வாழ்க்கை இது, ஒரு கல்யாண நாளைக்கு கூட சேர்ந்து இருக்க முடியல. இதெல்லம் ஒரு பொழப்பா...” மனசு என்னவோ செய்தது. ஆனாலும் அந்த குண்டு மேனஜரின் முகம் தோன்றி மறையவே வேலை முடிக்க வேண்டிய ஞாபகம் வந்தது. “ ஹ்ம்ம்ம்ம்ம்ம்... “ ஒரு பெருமூச்செரிந்தபடி எழுந்து செல்ல எத்தனிக்கையில் அலைபேசி சிணுங்கியது.. "ராஸ்கல் காலிங்..." கட் செய்து விட்டாள். மற்றுமொரு முறை... மற்றுமொரு முறை... மற்றுமொரு முறை.. ஆறு முறை கட் செய்து விட்டாள். அவளுக்கே பாவமாகத்தான் இருந்தது. இருந்தாலும் ஒரு கோபம். வேலைய முடிச்சுட்டு பேசிக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். திரும்ப கூப்பிடுவோமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே வந்து இருக்கையில் அமர்ந்தாள். மெயில்பாக்ஸ் அலெர்ட் காட்டியது... "New Mail from Arun". ஆர்வமாய் ஓப்பன் செய்தாள்.
"அடி லூசு பொண்டாட்டி.. கால் பண்ணா எடுக்க மாட்டியா.. திரும்ப கால் பண்ணுடி.. பிரமாதமான திருமண நாள் பரிசு காத்திருக்கிறது" - ராஸ்கல்...
அவசரமாக கைப்பேசியை எடுத்து கால் செய்தாள். காலை கட் செய்தான் அவன். மீண்டும்... இந்தமுறை எடுத்தான்..
"ராஸ்கல்.. ஏன்டா கட் பண்ற? கல்யாண நாளக்கூட மறந்துட்டேல்ல நீ?"
'
"போடி லூசு... உனக்கு ஒரு செம சர்ப்ரைசான கிப்ட்ட கன்ஃபார்ம் பண்றதுக்குத் தான் இவ்ளோ நேரம் காத்திட்ருந்தேன்... இப்பதான் கன்ஃபார்ம் ஆச்சு... அதான் கால் பண்ணேன்... நீ மட்டும் கட் பண்ணலாம்... நான் பண்ணக்கூடாதா?"
"சொல்லுடா.. என்ன கிப்ட்? ஏதாவது மொக்கையா சொன்ன, உதை வாங்கப் போற..."
"காயுக்குட்ட்டி..... எனக்கு அடுத்த ப்ரோமஷனும் கூடவே சென்னைக்கு ட்ரான்ஸ்பரும் கெடச்சாச்சு... மன்டே அய்யா சென்னை வர்றேன்..."
"ரியலி... யே... சூப்பர் டா... எவ்ளோ கஷ்டம் தெரியுமா, இந்த 2 வருஷத்துல...
இப்போதான் டா நிம்மதியா இருக்கு... தேங்க்ஸ் டா... ராஸ்கல்ல்ல்ல்...." சிணுங்கிக் கொஞ்சினாள்...
"சரி.. வை போன... நான் ட்ரான்ஸ்பர் பார்மாலிட்டிஸ்ஸ ஆரம்பிக்கணும்.. மதியம் கூப்பிடுறேன்..."
"ஹ்ம்ம்ம் டா" போனை கட் செய்து விட்டு பார்த்தால் மேனஜரிடமிருந்து சாட் விண்டோ மின்னிக் கொண்டிருந்தது...
"come to my desk immediately.."
"அய்யய்யோ... வேலய இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே... என்ன பண்றது... சரி குண்டுகிட்ட இன்னும் 2 நாள் டைம் வாங்கிக்கலாம்..." நினைத்துக் கொண்டே மேனஜர் ரூமுக்கு போனாள்.
"வாம்மா காயத்ரி... ட்ரீட்லாம் ஒன்னும் கெடையாதா...? " மேனஜர் கேட்ட பொழுது ஆச்சரியமாகிப் போனது அவளுக்கு.
"ட்ரீட் தான சார்... கண்டிப்பா கொடுத்துடலாம்... ஆனா அதுக்குள்ள உங்களுக்கு எப்படி ?? " கேட்டாள் அவள்.
"எல்லாம் தெரியும்... நீ போய் HR மேனஜரப் போய் பாரு." சொன்னார்..
"ம்ம்.. சரி சார்,,, தேங்க்ஸ்.. "என்றபடியே HR கேபினுக்கு போனாள்...
"ஆர் யூ காயத்ரி ஆப் ACI டீம்?" கேட்டாள் அந்த HR பெண்..
"ம்ம்... ஆமா... நாந்தான்..."
"கங்கிராட்ஸ் காயத்ரி ... உக்காருங்க..."
"யா... சொல்லுங்க.. அவருக்குதான் வந்து.. " என்று சொன்னபடியே வந்து உட்கார்ந்தாள்...
"உங்களுக்கு இந்த சைக்கிள்ல ஆர்கிடெக்ட் ப்ரோமஷன் வந்துருக்கு.. கங்க்ராட்ஸ்..."
"ஓ.. ரியலி... தேங்க்ஸ்... தேங்க்ஸ் ... " சந்தோஷம் தாங்கவில்லை அவளுக்கு...
"என்ன கோஇன்சிடன்ஸ் பாத்தீங்களா? இந்த நேரம் பார்த்து புனேல்ல இருந்து அருண்ணு ஒருத்தர் கன்ஸல்டன்ட்டா ப்ரோமோட் ஆகி போறதுனால உங்க ட்ரான்ஸ்பர் அப்ளிகேஷனையும் எங்களால ஈஸியா ப்ராஸஸ் பண்ண முடிஞ்சுது... இட்ஸ் அ கிரிட்டிக்கல் ப்ராஜக்ட்.. அதனால நீங்க மன்டேயே புனேல ரிப்போர்ட் பண்ணனும்... உங்க பில்லிங் ப்ராஸஸ் கூட ஸ்டார்ட் பண்ணியாச்சு... ஹேப்பி? பீ ஹியர்.. நான் போய் உங்க ப்ரோமஷன் லெட்டர பிரிண்ட் பண்ணிட்டு வந்துறேன்.." சொல்லிக் கொண்டே எழுந்து போனாள் அந்த HR பெண்....
கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்த காயத்ரிக்கு தலையை சுற்றி மயக்கம் வருவது போலிருந்தது... மயங்கியே விழுந்து விட்டாள்...
"வாட் ஹேப்ப்ப்ப்ப்ப்ப்பபபன்ட்ட்ட்ட்?"கத்திக் கொண்டே ஓடி வந்தாள் அந்த HR..
----------------
----------------
----------------
----------------
கண்விழித்து பார்த்த பொழுது அருண் அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை வருடிக் கொண்டிருந்தான்...
"என்னாச்சுடா?"
"ஒன்னும் ஆகல... நா சீனியர் மேனஜர்ஸ் லெவல்ல பேசிட்டேன்... நீயோ நானோ எங்கயும் போகத் தேவை இல்ல... ரெண்டு பேரும் இனிமே இங்கதான்... உன் ரோல்க்கு இங்கயே நெறைய ஓப்பனிங்ஸ் இருக்கு... இங்கயே இருக்கலாம்னு சொல்லிட்டாங்க... போதுமா ??? "
"ரியலி... நல்லதுடா.. நான் கூட பயந்துட்டேன்... ஆனா ஏன் மயங்குனேன்னு தெரியல.. " சன்னமாகச் சொன்னாள் அவள்.
"இன்னோரு விஷயம்டி... இந்த வாட்டி கண்டிப்பா பொண் கொழந்த தானாம்... டாக்டர் கைய பிடிச்சு பாத்ததுலேயே சொல்லிட்டாங்க...." - கண்ணடித்து சிரித்தான் அவன்.
"வாட்ட்ட்... ராஸ்கல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்... திருடன் டா நீ " என்று சினுங்கி கொஞ்சுவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை அவளுக்கு.
- முற்றும்...
இந்தக் கதையின் மூலம் நான் சொல்ல விழைந்த கருத்துக்கள்...
1) எந்த பிரச்சனை வந்தாலும் ரொம்பல்லாம் பீல் பண்ணாதீங்க.. நல்லது நடக்க ஆரம்பிச்சா எல்லாம் தானே நடக்கும்.
2) இரண்டு குழந்தைகளுக்கு இடையில் போதிய இடைவெளி தேவை.. :))))))))) பிம்பிலிக்கி பிலாபி...
நண்பர்களே... இது “சர்வேசனோட நச்னு ஒரு சிறுகதை” போட்டிக்கு தகுந்ததா இருக்குமான்னு பாத்துட்டு ஒரு கருத்த சொல்லிட்டு போங்க....
27 பேர் சொன்னது என்னான்னா..:
Nice story....
very nice story and narration. :)
'nach' effect kammidhaan, bcos it was predictable.
thanks for the participation. if you want to send this for the contest pls add a comment to my post, 'locking' your entry ;)
Thanks Aniba...
Thanks Surveysan... I will try to make someting Nach.. If not, I will lock this...
Nice one!
Thanks Senthil for your Comment...
2) இரண்டு குழந்தைகளுக்கு இடையில் போதிய இடைவெளி தேவை.. :))))))))) பிம்பிலிக்கி பிலாபி...
செம கதைங்க!
இந்த மாதிரி கருத்து சொல்ல உங்கள மாதிரி ஆளுங்க தமிழ் உலகுக்கு தேவை.
இந்த மாதிரி கருத்து சொல்ல உங்கள மாதிரி ஆளுங்க தமிழ் உலகுக்கு தேவை. ::///
ரொம்ப நன்றி பப்பு... ஏதோ நம்மலாள முடிஞ்சது... நாட்டுக்கு நாலு நல்ல கருத்து சொல்வோமேன்னு :)
நச் ன்னு ரொம்ப சொல்ல முடியலைங்க. ஆனால் காதல் கதையை ரொம்ப ரசிச்சேன். அழகான வர்ணனைகள்.
தமிழ் பட நச் மாதிரி கடசீல pregnancy மயக்கம் வேற :)))))))))))
வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி சக்திபிரபா... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்....
கார்ப்பரேட் இயல்பில் கதை செல்கிறது. களம் பழக்கப்பட்டிருந்தாலும் காதல் இன்னும் எனக்கு பழக்கப் படவில்லை :D என்ன இருந்தாலும் கதை ஸ்வீட் ராஸ்கலாக இருந்தது. திருப்பம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் இல்லாவிட்டாலும், சுபம் போடும் விதமாக இருக்கிறது. நடையும் கதை போக்கும் கடைசி வரி வரை படிக்கத் தூண்டுகிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் ராம்குமார் அமுதன் !
:)
அரவிந்தன் said...
//கார்ப்பரேட் இயல்பில் கதை செல்கிறது. களம் பழக்கப்பட்டிருந்தாலும் காதல் இன்னும் எனக்கு பழக்கப் படவில்லை //
எனக்கும் ஒண்ணும் பழக்கப்படலீங்க... ஏதோ கண்ணால பாத்தது காதால கேட்டதெல்லாம் வச்சு எழுதுனதுதான்...
//நடையும் கதை போக்கும் கடைசி வரி வரை படிக்கத் தூண்டுகிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் ராம்குமார் அமுதன் !:)//
ரொம்ப நன்றிங்க...
நல்ல காதல் கதை..சாக்லேட் லவ் ஸ்டோரி..படிக்கிறதுக்கு இனிமையா இருந்தது..
முடிவில் திருப்பம் ஆச்சரியம் அளித்தாலும், ’அட’ அல்லது ‘நச்’ன்னு இல்லாதது உங்க தப்பில்லை..இந்த கதை தளம் அப்படி..feel good காதல் genreல ’நச்’ கொண்டு வர்ரது கொஞ்சம் கஷ்டம்தான்..
ஆனால் மிகவும் நல்ல முயற்சி..வாழ்த்துகள் :)
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
//Blogger Swami said...
நல்ல காதல் கதை..சாக்லேட் லவ் ஸ்டோரி..படிக்கிறதுக்கு இனிமையா இருந்தது..
முடிவில் திருப்பம் ஆச்சரியம் அளித்தாலும், ’அட’ அல்லது ‘நச்’ன்னு இல்லாதது உங்க தப்பில்லை..இந்த கதை தளம் அப்படி..feel good காதல் genreல ’நச்’ கொண்டு வர்ரது கொஞ்சம் கஷ்டம்தான்..
ஆனால் மிகவும் நல்ல முயற்சி..வாழ்த்துகள் :)
அன்புடன்,
சுவாசிகா//
ரொம்ப நன்றி ஸ்வாமி... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்... நானும் அட, நச் எல்லாம் வர்ற மாதிரி வரணும்ன்னு தான் யோசிக்கிறேன்... ஆனா முடியலலலலலலலல.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... பீளீவ் மீ....
கதை சூப்பர்..வரிகளை ரசித்தேன்.
nice ஸ்டோரி.
வித்யா
ரொம்ப நன்றி வித்யா...
ரொம்ப நன்றி திருமலை கந்தசாமி... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்....
Nice Narration da...
But COuldn read the full text..
Sirisa yeluthungappa!
உண்மையான காதல் கதை
கதை மிகவும் நன்றாக இருந்தது. உங்களைப் போல் எல்லருக்கும் இது மாதிரியான வாழ்க்கை கிடைத்தால் நன்றாக இருக்கும்.
Ram. Super.
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே....
nice story.. really lovable n comedy.........
மிக்க நன்றி... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்.... Unknown என்பதை விட உங்கள் பெயரை போட்டு பின்னூட்டமிடலாமே....
NICE ARTICLES TO POST MORE ARTICLES http://www.erodetoday.com/login.php
Post a Comment
வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...