Thursday, October 22, 2009

அடியே சம்யுக்தா... சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டிக்காக II...

ஆகஸ்டு 18 2000 வெள்ளிக்கிழமை இரவு 7:40 :


சேலம் பேருந்து நிலையம் கொஞ்சம் கூட்டமாகத்தான் இருந்தது..


"என்ன ஊருக்கு கிளம்பிட்டியா?" எதிரில் பையோடு வந்த சம்யுக்தாவிடம் கேட்டேன்.


"ம்ம்..."


"நாங்கெள்லாம் நாளைக்குத்தான் கெளம்புறோம்.."


"ம்ம்..." விடுவிடுவென்று பையை இழுத்துக் கொண்டு போய் விட்டாள்.

"காலேஜ்க்கு வந்து 2 வருஷமாச்சு... அவ ப்ரெண்ட்ஸ்க்குள்ள என்னாமா வாய் அளக்குறா.. நம்மகிட்டதான் வெட்டி ஸீனு..." நினைத்துக் கொண்டே ஒரு சிகெரட் பற்ற வைத்தேன் நான்...


மார்ச் 21 2001 புதன்கிழமை மாலை 6 மணி:


"ரகு ரகு... கொஞ்சம் இங்க வாயேன்" சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன்..


"தோ பார்டா.. என்ன சம்யுக்தா... எப்பவும் நானா வந்து பேசுனாலே பயங்கர வெட்டியா ஸீன் போடுவ.. இன்னைக்கு என்ன... ம்ம்ம்... சொல்லு என்ன வேணும்"


"இல்ல.. ஒரு சின்ன ஹெல்ப்... சிஸ்டம் பேக் பண்ணி ஊருக்கு கொண்டு போறேன்.. லக்கேஜ் ஜாஸ்தி.. கொஞ்சம் பஸ்ஸ்டாண்ட் வரைக்கும் வந்து உதவி பண்ணேனா நல்லா இருக்கும்... " - கேட்டாள்.

"ஹ்ம்ம்ம்... ஓகே ஓகே.. இரு போய் ஒரு ஆட்டோ புடிச்சிட்டு வர்றேன்..." ஆட்டோ தேடி நகர்ந்து போனேன் நான்...


அக்டோபர் 20 2001 சனிக்கிழமை காலை 11.30 :


"இந்த பேக்கரில எல்லாமே நல்லா இருக்கும்.. என்ன சாப்பிடுற?" நான் கேட்ட கேள்வியை மதிக்காமல் என் கண்களை ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.


"யேய்.. சம்யுக்தா... என்ன அப்படி பாக்குற ? யேய்..." மீண்டும் கேட்டேன் நான்.


"இதுக்குத்தான்டா... உன்னையெல்லாம் முதல்ல இருந்தே அவாய்ட் பண்ணேன்... இப்பப் பாரு என்னையவே கவுத்துட்டேல்ல... உன்னையத் தவிர வேற எதையுமே யோசிக்க முடியாத மாதிரி லூசாக்கிட்டேல்ல என்னய... " சொல்லிவிட்டு உதட்டை சிழித்தாள் அவள்.


"ச்சீ.. போடி லூசு... என்னைய லவ் பண்றதுக்கு நீ குடுத்து வச்சிருக்கனும்... எப்பப்பாரு பொலம்பிகிட்டு "


"ஆமாமா... இவரு பெரிய இவரு... "

மனதாரச் சிரித்துக் கொண்டிருந்தோம் நாங்கள்.


ஜூன் 16 2002 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி:


நான் செய்வது சரியா தவறா... தெரியாமல் ஒரு பதற்றத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன் நான். சிறிது நேரத்தில் எழுந்து அந்த அறையின் ஜன்னல் கதவுகளை திறந்து விட்டேன்...


"என்னடா... ஒரு மாதிரியா இருக்க... பிடிக்கலையா ?" சிரித்துக் கொண்டே கேட்டாள் சம்யுக்தா.


"பண்ணது சரியா தப்பான்னு தெரியல..." அவள் முகத்தை பார்ப்பதற்கே ஒரு போலாய் இருந்தது எனக்கு.


"போடா லூசு.. அதான் 2 பேரும் கன்பார்மா கல்யாணம் பண்ணிக்கப் போறோம்... அப்புறம் என்ன..." சிறிதும் சலனமில்லாம்ல் சொன்னாள் அவள்.


"ஒரு தம்மடிக்கனும் போல இருக்கு" - என் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தேன்.


"ஹ்ம்ம்ம்ம்... நானும் கேள்விப்பட்ருக்கேன்... 'இது'க்கப்புறம் தம்மடிச்சா செம கிக்கா இருக்குமாமே... போய் அடிச்சுக்கோ போ... நாங்கெல்லாம் பொண்ணா பொறந்ததுனால நெறய மிஸ் பண்ண வேண்டி இருக்கு..." பழிப்பம் காட்டிச் சிரித்தாள் அவள்...


ஆகஸ்ட் 22 2003 வெள்ளிக்கிழமை - இரவு 7 மணி :


"லூசு மாதிரி பேசாத ரகு, ஏதோ நம்ம வயசுக்கு காலேஜ்ல அப்படி இப்படி இருந்தோம்... அதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா ? காலேஜ் முடிச்சப்புறமும் அதையே சொல்லிட்ருக்க... " என் கைகளை உதறித் தள்ளி விட்டாள் அவள்.


"என்னம்மா சொல்ற? இதெல்லாம் தப்பு இல்லையா? புரிஞ்சுக்கோ ப்ளீஸ்" கெஞ்சும் தொனியில் இருந்தேன் நான்.


"ச்சீய்... உனக்கு ஏன் புரியவே மாட்டேங்குது? எனக்கு அம்மா அப்பா லாம் யாராவது இருக்கங்களா... நல்ல வரனா பாக்குறதுக்கு.. ஏதோ இவன் மால்ல பாத்ருக்கான்... எதப் பாத்து விழுந்தான்னு கூட தெரியல... என்னையதான் கல்யாணம் பண்ணி யூ.கே கூட்டிட்டுப் போவேன்னு அடமா சொல்றான். அத விட்டுடுட்டு, உன்னைய கட்டிகிட்டு என்ன பண்றது சொல்லு... போ நீயும் நல்ல வேலயாத் தேடு... நல்லா என்ஞ்சாய் பண்ணு... அப்புறமா வீட்ல பொண்ணு பாக்க சொல்லி கல்யாணம் பண்ணிக்கோ.. உனக்குதான் புரியனும்..." அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது...


"என்னடா இப்படி சொல்ற... ப்ளீஸ்டா ப்ளீஸ்டா..." கண்ணீர் வழிந்துவிடும் நிலையில் இருந்தேன் நான்...


"ரகு... நீ எப்பவுமே எனக்கு ப்ளான் 'B'யா தான் இருந்துருக்க... என்னோட ப்ளான் 'A'வே வேற... அது புரியாம டார்ச்சர் பண்ணாத... கெட் லாஸ்ட்" சத்தமாக சொன்னாள் அவள்.


"சத்தியமா என் காதல் உண்மைனு உனக்கு ஒரு நாள் புரியும்... கண்டிப்பா என்கிட்ட வருவ... நீ நல்ல பொண்ணுதான் ... அதுல ஒரு மாற்றமும் இல்ல..." சொல்லிவிட்டு விடுவிடுவென்று எழுந்து நடக்கத் தொடங்கினேன் நான்.


இன்று - இரவு 1.00 மணி:


என் குழந்தையின் தலை தடவி சிரிக்கிறேன். "உங்களுக்காகதான்டா எல்லாமே.". அவள் லேசாக மூக்கை இழுத்து விட்டு சம்யுக்தாவின் மேல் காலை போட்டு திரும்பிப் படுத்தாள். அரைகண்கள் திறந்த சம்யுக்தா கேட்டாள்,


"என்னாச்சுங்க... ஏன் இவ்ளோ நேரம்?"


"ஒண்ணும் இல்ல.. நெறைய பக் ப்ராஜக்ட்ல.. இன்னைக்குதான் எல்லாத்தையும் குளோஸ் பண்ணேன். கொஞ்சம் நேராயிடுச்சு.. நீ தூங்கு..."


"ம்ம்.. கொஞ்ச நாளாவே நீங்க சரி இல்ல...உடம்ப பத்தி கவலப்படுறதே இல்ல..." சொல்லிவிட்டு என்னை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு தூங்கலானாள். இரவில்தான் பெண்கள் எத்தனை அழகாய் இறுக்கிறார்கள். மெதுவாய் கண்மூடினேன் நான்.


நவம்பர் 14 2006 திங்கட்கிழமை - இரவு 9.30 மணி :


ஸ்பென்சர் ப்ளாசா கார் பார்க்கிங்கில் நின்று தம்மடித்துக் கொண்டிருக்கிறேன்.

"ஹேய்... ரகு.. நீ எங்கடா இங்க.. ?" தோளில் கை போட்ட பெண்ணை அடையாளம் கண்டுகொள்ள 10 நொடிகள் பிடித்தது எனக்கு.


"யேய் சம்யுக்தா.. நீயா? என்ன கோலம் இது... ஆளே மாறிட்ட.. நீ யூ.கே போலயா... " - ஆளே மாறிப்போயிருந்தாள் அவள்.


"ஹ்ம்ம்ம்.. போனேன் போனேன்... 2 வருஷம்... அதுக்குள்ள எனக்கும் அவன போரடிச்சிருச்சு... அவனுக்கும் என்ன போரடிச்சுருசு... நா அப்டியே ஜாலியா சென்னை வந்துட்டேன்... அவன் ஒரு இம்பொட்டென்ட் ராஸ்கல்.. நீ இங்கதான் செட்டில் ஆயிருக்கியா ? " - கேட்ட போழுது அவள் குடித்திருந்தது தெரிந்தது...


"ஹ்ம்ம்ம்... ஆம... நான் இங்கதான் செட்டில் ஆகிருக்கேன்... சரி டைம் ஆகுது.. " சொல்ல்லி விட்டு கிளம்ப எத்தனித்தேன்..


"ஹே... நில்லுப்பா... நா கூட உன்னைய அடிக்கடி நெனச்சுப்பேன்... உன்னைய கல்யாணம் பண்ணிருந்தா நல்லா செட்டில் ஆயிருகலாமோன்னு... பட்... இப்பவும் நான் ஜாலியாதான் இருக்கேன். சரி... உனக்கு எப்படி.. கல்யாணம்லாம் ஆயிடுச்சா ? "


"நா கெளம்புறேன்..." நொடி தாமதிக்காமல் கரைக் கிளப்பிக் கொண்டு வந்து விட்டேன்...


ஜூன் 8 2007 வெள்ளிக்கிழமை - மதியம் 1 மணி :


அலுவலகத்தில் கொஞ்சம் வேலை ஜாஸ்தியாய் இருக்கிறது. இன்னைக்குள்ள நெறய முடிக்கனும்... என் கைப்பேசி சிணுங்கியது... எடுத்தேன்..


"ஹலோ... யாருங்க "


"டேய்.. நீ அன்னைக்கு அப்படி போய்ட்டேனா... உன்னைய விட்ருவனா நா ? " எதிர்முனையில் ஒரு பெண்குரல்.


"ஹலோ... யாரு இது... என்ன வேணும் ? " கொஞ்சம் அதட்டலாக கேட்டேன் நான்..


"ஹே.. நாந்தான்டா.. உன்னோட பழைய காதலி..." கண்டுபிடித்து விட்டேன்... அவள்தான்...


"நீயா ? என் நம்பர்லாம் எப்படி கெடச்சது உனக்கு.." சற்று எரிச்சலாக இருந்தது..


"அதெல்லாம் கெடச்சுது... சொல்லவே இல்ல பாத்தியா... உனக்கு கல்யாணம்லாம் ஆகிடுச்சாம்..."


"ம்ம்ம்ம்"


"டேய்... உன் வொய்ஃப் பேரு கூடா சம்யுக்தாதானாமே? என் அளவுக்கு இருப்பாளாடா... " சற்று நக்கலாக கேட்டாள்...


"யே.. ச்சீ அசிங்கம் நீ... என் தங்கத்த போய் உன்கூட கம்பேர் பண்ற... நாயே" கடுப்பாக வந்தது எனக்கு..


"கோபப்படாத... கோபப்படாத... அந்தப் பேருக்காகவே நீ கல்யாணம் பண்ணிருப்பேன்னு தெரியும்டா எனக்கு... என் பேர்ல உனக்கு எப்பவுமே ஒரு கிக்.. இல்ல..."


"அந்தப் பேருக்காக அவள கல்யாணம் பண்ண வேண்டாம்னு முதல்ல நெனச்சேன்... பட்.. தேங்க் காட்... அந்த மாதிரி தப்புல்லாம் பண்ணல.."


"சரி உன் கொழந்த எப்படி இருக்கு.. ஸ்கூலுக்கெல்லாம் போதாமே இப்போ" கேட்டாள்...


"பை.. கெட் லாஸ்ட்..." சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டேன்..


ஒரு வாரம் முன்பு... இரவு 7 மணி :


கைப்பேசி சிணுங்கியது... எடுத்தேன்..


"ஹலோ... யாருங்க "


"ஹலோ... நா யாரு பேசுறேன்னுலாம் உனக்கு தேவை இல்ல... நா சொல்ற நம்பருக்கு நீ உடனடியா கால் பண்ணணும்... "


"டேய்... யாருடா நீ... நீ சொல்றதெல்லாம் நா எதுக்கு கேக்கணும்.. "


"கேட்டுதான் ஆகனும்... வெற வழி இல்ல... 999..4.... . இது சம்யுக்தாம்மாவோட நம்பர் "


"முடியாதுடா... என்னடா பண்ணுவ... "


"எங்க டீலிங்க்லாம் ரொம்ப மோசமா இருக்கும்... அப்புறம் உன் பொண்டாட்ட்டி கொழந்தைக்குதான் கஷ்டம்... பாத்துக்கோ... ஒழுங்கு மரியாதையா கால் பண் ணு.."

இணைப்பு துண்டிக்கப்பட்டது... பாத்துக்கலாம்... என்ன பண்ண முடியும் இவளால... நினைத்துக் கொண்டேன்...நேற்று மாலை 6 மணி :


கைப்பேசி சிணுங்கியது... எடுத்தேன்..


"ஹலோ... யாருங்க "


"டேய்... ஆளு வச்சு மிரட்டுனாலும் பயப்பட மாட்டியா நீ?”


"போடி... நானெல்லாம் அசர மாட்டேன்… எதுக்கு என்னைய தொந்தரவு பண்ற ? "


“நானும் எத்தனையோ பேர பாத்துட்டேன்டா... ஆனா என்னவோ தெரியல... உன் அளவுக்கு யாரையுமே பிடிக்கல.... நீ எனக்கு வேணும்... மாசம் ஒரு தடவையோ ரெண்டு தடவையோ... கண்டிப்பா வேணும்....”


“அடச்சீய்... நீயும் ஒரு பொம்பளையா?” - கோபம் கொப்பளித்தது எனக்கு...


" அட... நீதான் பாத்ருக்கியேடா... நா ஒரு அட்ரஸ் உன் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணிருக்கென்... நீ காலையில ஆறு மணிக்கு அங்க வரலேன்னா என்னாகும்னு உன் பொண்டாட்டிகிட்ட போய் கேளு... "


இணைப்பு துண்டிக்கப்பட்டது...


படபடத்தது எனக்கு... வேகமாய் வீட்டுக்கு விரைந்தேன்...


"யேய்... சம்யுக்தா என்னாச்சு இன்னைக்கு? ஏதாவது ப்ராப்ளமா ? " சோபவில் அமர்ந்திருந்த மனைவியிடம் கேட்டேன் நான்...


"அதெல்லாம் ஒண் ணும் இல்லையே... ஏன்? என்னாச்சு ? சீக்கிரமே வேற வந்துட்டீங்க… உடம்பு சரி இல்லையா?" நெற்றியில் கைவைத்துக் கேட்டாள்...


"ஒன்னுமில்ல... சும்மாதான் கேட்டேன்... " சமாளித்தேன்..


"காலையில ஒரு போலீஸ்காரர் வந்தார்... வந்து இங்க பக்கத்துல ஏதாவது தப்பானவங்க குடியிருக்காங்களா.. அது இதுனு கேட்டுடு இருந்தார்... அப்புறம் போய்ட்டார்..." சொல்லி விட்டு கிச்சனுக்குள் சென்று விட்டாள்.


பொறி தட்டியது எனக்கு... சரி இதுதான் போலும்...இன்று காலை 4 மணி :


அரை போதையில் என் அருகில் அமர்ந்திருக்கிறாள் அவள். என்னுடைய கார் கிழக்கு கடற்கரை சாலையில் பறந்து கொண்டிருந்தது. நேராக ஒரு சவுக்குத்தோப்பில் காரை பார்க் செய்தேன். ஏர் மோட்டார் போட் செட் ஒன்றை தயார் செய்தேன். "கடல்ல என்ஞாய் பண்றதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.." பிதற்றியபடியே உடன் வந்து கொண்டிருக்கிறாள் அவள். மோட்டார் போட்டில் அவளைக் கிட்டத்தி நடுக்கடலுக்கு சீறிப் பாய்கிறேன். 10 நிமிடம். நடுக்கடல்... இருட்டு... திரும்பிய பக்கெமெல்லாம் எதுவும் தெரியாத மை இருட்டு... நாங்கள் இருவர் மட்டும்... யோசிக்கிறேன்... நிதானமாய் யோசிக்கிறேன்... என் மனைவி சிரித்து விட்டு போகிறாள். என் குழந்தை நெஞ்சில் முட்டி சிரிக்கிறது. கண்திறக்கிறேன்... முழுதாய் கிறங்கியிருந்தாள் அவள். நெற்றியில் முத்தமிட்டேன். உள்ளே தூக்கி எறிந்து விட்டேன். ஏன் தெரியவில்லை... 2 சொட்டு கண்ணீர் வந்தது.


தற்சமயம் இரவு 1:45 :


எனது ஆண்மையய் வென்று விட்டது போல், மனைவியயியும் மக்களையும் காப்பாற்றி விட்டது போல்... ஏதேதோ உணர்வுகள்..

பக்கத்து வேதகோவிலில் நள்ளிரவு ஜெபம் போலும்... அந்த பாதிரியாரின் வார்த்தைகள் கற்றில் கலந்து கொண்டிருந்தன...


“வெளிப்படுத்தல் அதாவது றெவெலடிஒன் 21வது அதிகாரம் 8வது வசனம்...

அவர் அவர்களை நோக்கி .....

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். "


சம்யுக்தாவின் அன்புப்பிடியில் நிம்மதியாய் உறங்கிக் கிடக்கிறேன் நான்...- முற்றும்...இத அனுப்பவா ? இல்லை இத(ராஸ்கல்) அனுப்பவா ? பாத்துட்டு அப்படியே ஒரு கருத்து சொல்லிட்டு போனீங்கன்னா நல்லா இருக்கும்.

13 பேர் சொன்னது என்னான்னா..:

நிலாரசிகன் said...

இந்தக் கதையின் பலம்: சொல்லப்பட்ட விதம். விறுவிறுவென்ற எழுத்து நடை.

பலவீனம்: இரண்டாம் பாதியில் எழுதப்பட்டுள்ள மிதமிஞ்சிய எதார்த்தம். அவ்வளவு லேசா எல்லாம் கடல்ல போட்டுட்டு திரும்பிர முடியுமா?

ராம்குமார் - அமுதன் said...

நன்றி நிலாரசிகன்...

எனக்கே தெரிஞ்சுது... அது அவ்ளோ சுலபமா பண்ணக்கூடிய காரியம்லாம் இல்லன்னு... இருந்தாலும், ஒரு வகையில் முடிக்கனுமேன்னு பண்ண முயற்சிதான்.... :)

aniba said...

ராம், என்னை கேட்டா இத அனுப்பலாம். "ராஸ்கல்" கதை படிக்கும்போது நார்மலா எதிர் பாத்த மாதிரி போகும். இது அப்படி இல்ல.

ராம்குமார் - அமுதன் said...

ஓகே அனிபா... எனக்கும் கூட அதான் தோணுது.... நன்றி...

pappu said...

நல்ல நடை. மாத்தி மாத்தி கொண்டு போனது நல்லாருந்தது!

ராம்குமார் - அமுதன் said...

Thanks Pappu...

அரவிந்தன் said...

விறுவிறுப்பான கதை என்னை சுறுசுறுப்பாக படிக்க வைத்தது.
இதையே அனுப்பலாம் என்று தோன்றுகிறது.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி அரவிந்தன்... எனக்கும் கூட அதான் தோணுது.... நன்றி...

Thirumalai Kandasami said...

Boss,Thriller story super.

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி திருமலை... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்...

மணிகண்டன் said...

அமுதன், கதை நல்லா இருக்கு. வேகமா இருக்கு. இதையே போட்டிக்கு அனுப்புங்க. வாழ்த்துக்கள்.

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி திருமலை மணிகண்டன்... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்....

தமிழ்ப்பறவை said...

/இந்தக் கதையின் பலம்: சொல்லப்பட்ட விதம். விறுவிறுவென்ற எழுத்து நடை.

பலவீனம்: இரண்டாம் பாதியில் எழுதப்பட்டுள்ள மிதமிஞ்சிய எதார்த்தம்.//

அதேதான் எனக்கும்....

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.