Friday, November 6, 2009

கடைசி இரவு - சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டிக்காக III...

இது துயிலற்று கனவு காணும் எனது கடைசி இரவாய் இருந்து விட்டு போகட்டும். குளியலறையில் குழாய் சொட்டு சொட்டாய் நீர் சிந்தும் சத்தம்... ஏன், என் அறைக் கடிகாரத்தின் நொடி முள் சத்தம் கூட எனக்குத் தெளிவாய் கேட்கிறது. இதுவரை இப்படி நான் இருந்திருக்கிறேனா. யோசித்துப் பார்க்க்கிறேன். நான் ஒரு ராணீத்தேனீயின் பின்னாலே செல்லும் வேலைக்காரத்தேனீயாகத் தான் இருந்திருக்கிறேன். பள்ளி, கல்லூரி, அலுவலகம் எல்லா இடங்களிலும் ஏதோ ஒன்றை எவரோ ஒருவரை பின் தொடர மட்டுமே முற்பட்டிருக்கிறேன். எனக்கு தேவையா இல்லையா, எனக்கு தெரியாது. அது யாரோ ஒரு அவனிடத்தில் இருக்கிறது அல்லது அவனுக்கு கிடைத்திருக்கிறது. எனக்கும் வேண்டும். ஏன்? இந்த கேள்வியை கேட்டுக் கொள்ள நான் ஏன் எப்பொழுதுமே முற்பட்டதில்லை, இல்லை இப்பொழுது ஏன் முற்படுகிறேன். இருபத்து ஏழு ஆண்டுகளாய் எனக்குள் இல்லாத ஒரு கேள்வி. இன்று ஏன்..? எனது கைப்பேசியை எடுத்துப் பார்க்கிறேன். மணி 11.47. இன்னும் 4 மணி நேரம் மூன்று நிமிடங்கள். என்ன செய்ய?

"5 மணிக்கு கல்யாணம், தூங்காம என்ன பண்றவ?" பாட்டி முனகிக்கொண்டே கடக்கிறாள். நினைக்கையிலேயே எங்கோ ஏதோ இனிக்கிறது. இத்துணை நாளாய் நான் கட்டிக்காத்த மொத்த பெண்மையும் கரை/றையப் போகும் பொழுதுக்கு இன்னும் சில மணி நேரம்தான். முன்பின் தெரியாத ஒருத்தனை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற எனது 23 வருட கொள்கையெல்லாம் காற்றில் பறக்க விட்டு மூன்று மாதத்தில் எப்படி ஆக்கிரமித்து விட்டான். என்னுடைய மொத்த ரசனையும் மாறியல்லவா போய் விட்டது. அந்தக் குறுஞ்செய்தி... அய்யோ அய்யோ. நினைக்கும் பொழுதெல்லாம் வெட்கத்தில் என்னையும் அறியாமல் எப்படி சிவந்து போகிறேன். மீண்டும் என் கைப்பேசியை எடுத்து அதைப் படித்துப் பார்க்கிறேன். "உன் இடையின் பக்க...." ச்சீய். எத்தனை ரசனைக்காரன் அவன். என்னையும்தான் எவ்வளவு மாற்றி விட்டான். தமிழின் இரண்டாம்தர பாடல்களுக்கும் புத்தகங்களுக்கும் ரசிகையாய் இருந்த என்னை கர்னாடக சங்கீதத்தில் கரைந்து போகும் ஒரு ஜீவனாய் அல்லவா மாற்றி விட்டிருக்கிறான்.

"வாழ்வின் இத்துணை முக்கியமான.." நினைக்கும் பொழுதே சிரிப்புதான் வந்தது. வாழ்வா. அது அற்றுப் போனதாகி விட்டது. நாளைக் காலை வரை நான் இருந்தால் அது முக்கியமானதாய் மாறி இருக்கலாம். இன்னும் சில மணி நேரம்தான். முக்கால் பாகம் நிறைந்து விட்ட என் வாழ்வின் கோப்பையை மரண மது நிறைத்து விட போகிறது. இந்த கடைசி இரவின் சுகந்தங்களை முழுதுமாய் உணர்ந்து விட்டு அதனை செய்து விட வேண்டியதுதான். அவள் இதை நினைத்து கவலைப்படுவாளா. பட்டால் படட்டும். ஒரு நாளோ ஒரு வாரமோ ஒரு மாதமோ. அதற்கு மேல் என்ன... அவளாவது நல்லா இருக்கட்டும்.

அவன் என் கணவன் என்பது விதிக்கப்பட்டதாய் இருக்கலாம், என் காதலனானது என்னையும் அறியாமல் நடந்தேறிப் போனது. இருக்கட்டும் இருக்கட்டும். நாளை இரவின் இந்த நேரத்திற்கெல்லாம்.. உடலெங்கும் பரவி இன்பமூட்டும் மார்கழி மாதத்தின் அதிகாலை குளிரைப் போல் அவன் உடலெங்கும் பரவித் திளைக்கப் போகிறேன். அவனை எதுவுமே சொல்லவிடப் போவதில்லை. இனி என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு பொழுதும்... நினைக்கயிலேயே மூச்சு முட்டுகிறது.


"வேறு வழியே இல்லையா? இன்னைக்கு இத பண்ணிதான் ஆகனுமா?" இந்தக் கேள்வியை இன்னும் ஒரு நான்கு முறை கேட்டால் என் மனது மாறினாலும் மாறி விடலாம். ஹ்ம்ம்ம், இந்த நிலையில் மனது மாறுவதற்கு நான் கோழையும் அல்ல, முட்டாளும் அல்ல. இரண்டாண்டுகள் எத்தணை கஷ்டப்பட்டு தெருத்தெருவாய் அலைந்து வேலை தேடியிருப்பேன். "தண்டசோறு, உதவாக்கரை,இவனுக்கு பொது அறிவும் கணித அறிவும் கம்மிடா" எத்தணை பேரின் எத்தணை விதமான பேச்சுக்கள். என்னாலும் முடியும் என்று நிரூபித்து வாங்கிய வேலை. இரண்டாண்டுகள் அமைதியான வாழ்க்கையும் தேவையான பணமும் கொடுத்த வேலை. மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்கிறது "நீங்கள் நாளையிலிருந்து அலுவலகம் வரத் தேவையில்லை... தேவையில்லை...தேவையில்லை... இந்த நிலையில் எப்படி???" இதையெல்லாம் யோசித்து யோசித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. போதும். 4 மணிக்கு சரியாய் முடித்து விட வேண்டும். எண்ணிப்பார்க்கிறேன், 24 மாத்திரைகள். சரியாய் 5 மணிக்கு நான் அண்டவெளிகளில் பிராயணப்பட்டிருப்பேன். எல்லாம் தாண்டி போகப்போகிறேன். கடைசி சிறிது நேரம் மனம் சுத்தமாகட்டும். எனது கணிப்பொறியிலிருந்து பாம்பே ஜெயஸ்ரீயின் அடியு ஆட்டம்ன்
காற்றோடு காற்றாய் கறையத் தொடங்குகிறது.

குளித்து விட்டு அலங்காரம் செய்ய வேண்டும். அதற்குமுன் அவனுடன் ஒருமுறை அலைபேசலாமா? வேண்டாம் வேண்டாம். அவன் தான் சொல்லியிருக்கிறானே "கடைசி 5 நாட்களாவது பேசாமல் இருப்போம். தீபாவளி நாளின் பட்டாசு வெடிக்கும் கணங்களுக்காக காத்திருக்கும் ஒரு சிறுவன்/சிறுமியின் எதிர்பார்ப்போடு நாமும் நம் திருமண நாளை எதிர்நோக்கிக் காத்திருப்போம்..." அவனாகவே அழைத்தால் பேசலாம். இருக்கட்டும்... இனிமேல் எங்கே போய்விடப் போகிறான். உன் வாழ்நாளும் எனதோடுதானே....

ஒன்று, இரண்டு, மூன்று... இருபத்தி நான்கு. படுக்கைக்கு செல்கிறேன். நான் இந்த அண்டவெளியில் கரைந்து பேரின்பம் பெறப் போகும் நொடிகள், இதோ இதோ.. காலையில் எல்லோரும் தேடுவார்கள்... எங்கே எங்கே... அவளுக்குத் தெரிந்தால்... ம்ம்ம்ம்... தேடுவார் தேடி விட்டு போகட்டும். எனக்கு இப்பொழுது என்னவோ செய்கிறது. என்னென்னவோ செய்கிறது...


"என்னப்பா இது... முகூர்த்தத்துக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு? எங்கப்பா உங்க நண்பன்? இந்த நேரத்துல எங்க போனான்?" வெளியே கேட்பது அவன் தந்தையின் சத்தம்தான். காணோமா.. எங்கே போயிருப்பான் இந்த நேரத்தில்... வித்தியாசன்... அதீத வித்தியாசன்... எங்காவது ஏதாவது செய்து கொண்டிருப்பான்... "போன் பண்ணுங்கப்பா... போன் பண்ணுங்கப்பா... வெட்டிப்பய, இந்நேரத்துல எங்க சுத்த போனான்.." அவன் தந்தையின் சத்தம். "நடு ராத்திரி வரைக்கும் இங்கதான் இருந்தான்ப்பா.. பக்கத்துல தான் எங்கயாவது போயிருப்பான். நாங்க பாக்குறோம்... நீங்க போங்கப்ப"


"நர்ஸ்... என்னாச்சு.. என்ன கேஸ்... இப்படி திடீர்னு எதுக்கு வர சொன்னிங்க. " அந்த மிகப்பெரிய ஆஸ்பத்திரியின் ட்யூட்டி நர்ஸைப் பார்த்துக் கேட்டார் டாக்டர்.

"இல்ல டாக்டர்... ஒரு கேஸ்... ரொம்ப இளைஞன்... சாப்ட்வேர் இஞ்சினியர்னு சொன்னாங்க... ஸ்லீப்பிங் பில்ஸ்... அரைமயக்கத்துல வயித்தப் பிடிச்சுட்டு கத்திகிட்டு இருந்தான்னு ஒரு லாட்ஜ்ல இருந்து போன் பண்ணி, ஆம்புலன்ஸ் கூப்பிட்டு அட்மிட் பண்ணிருக்காங்க... ஸாரி டாக்டர்... ரொம்ப இளைஞன்... அதான் நீங்க வந்த்தீங்கன்னா கண்டிப்பா காப்பாத்திடலாம்னுதன்... ஸாரி டாக்டர்..."

"இட்ஸ் பைன்... வேகமாப் பாக்கலாம்... ட்ரிப்ஸ் போடுங்க... வாமிட் பண்றதுக்கு சொல்யூஷன்... எல்லா ஏற்பாடும் பண்ணுங்க... ஹரி அப் ஹரி அப்."
பல்ஸ் பார்த்தால் அரை நார்மலாகத் தான் இருக்கிறது. எத்தணை இளைஞன். கோழை. இந்த சாப்ட்வேர் ஆளுங்கெள்லாம் சைக்கோ ஆகி விடுகிறார்களா.. என்ன.. கோபாமாக வந்தது டாக்டருக்கு.

"சொல்யூஷன் பீட் பண்ணுங்க... ஸ்பீட்.. ஸ்பீட்.. "

"ஆச்சு... 5 நிமிஷம் ஆச்சு... அவனை அப்படியே தலையை முழுதுமாய் கவிழ்த்து வாந்தி எடுக்க வையுங்கள்... இன்னும் இன்னும் கவிழுங்கள்... வாந்தி மூச்சுக்குழாயில் நுழைந்தால் பேராபத்து..."

"டாக்டர்... இப்பொ பல்ஸ் ரேட் கொஞ்சம் நார்மலா இருக்கு..."

"ஆகட்டும்... இன்னும் ஒரு அரை மணியில் அவன் கண்விழிப்பான். ஒரு கிளாஸ் தண்ணில 3 டீஸ்பூன் ஆக்டிவேட்டட் பவுடர்ட் சார்கோல் கலந்து குடுங்க. அவன் ஐ.டி கார்ட்ல இருக்க கம்பெனிக்கு கால் பண்ணி அவன் வீட்டுக்கு தகவல் சொல்ல ஏற்பாடு செய்யுங்கள்.."


"என்ன இது... எங்கே போனான்... 5 மணி ஆச்சு... காணவில்லை.. கைப்பேசியில் அழைத்தாலும் தொடர்பு இல்லை..." படபடக்கத் தொடங்கியது எனக்கு.. மண்டபத்தில் இரு வீட்டுப் பக்கமும் பரபரப்பு.. "கல்யாணத்தன்னிக்கி லெட்டர் எழுதி வச்சுட்டு ஒடிட்டேன்னா என்ன பன்னுவ?" அவன் கேட்டதெல்லாம் விளையாட்டுக்காகவே விளையாட்டுக்காக மட்டுமே இருக்க வேண்டும். மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது. "கடவுளே! ஏன் இப்படி? இங்கே தான் இருந்தேன் என்று ஓடி வந்து என்னை ஆரத்
ழுவிக் கொள்ள கூடாதா... ஐயோ.." 'மன்மதனே நீ காதலன் தான்' - எனது அலைபேசிதான். தெரியாத எண். அவனாக இருக்குமோ... இருக்க வேண்டும்... எடுக்கிறேன்...

"ஹலோ... புதுபொண்ணு... நா அனு பேசுறேன்டி... ஸாரிம்மா... கல்யணத்துக்கு வர முடியல... அட்வான்ஸ்டு விஷ்ஸஸ்மா"
அடச்சே... "தேங்க்ஸ்டி..." சுரத்தில்லாமல் சொல்லி விட்டு வைக்கிறேன்.
ஒருவேளை அவன் எங்காவது போய் ஏதாவது ஆகியிருக்குமோ. ஆக்ஸிடென்ட்.. "ச்சே... எனக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது?? கடவுளே அவன் வர வேண்டும்" கைப்பேசியில் அழைக்கிறேன். மீண்டும் தொடர்பு இல்லை... என் கண்கள் கலங்குவதை என்னாலும் தடுக்க முடியவில்லை.


"யேய்... எதுக்கு இப்படி பண்ண?" அரைகுறையாய் கேட்கிறது. யாரோ வெள்ளை உடையில் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை வானத்து தேவதைகளாய் இருக்கலம். நான் தான் இறந்து விட்டேனே. "பளார்... பளார்" இரண்டு அறைகளில் நிலை மாறுகிறது. கண்கள் இப்பொழுது நண்றாய் தெரிகிறது. யார் இந்த குண்டுப்பெண். புரிகிறது... நான் பிழைத்து விட்டேன். ஐயோ... நான் பிழைத்து விட்டேன்.
"செத்துட்ட டா கிட்டத்தட்ட... இப்ப நீ பொழச்சுருக்குறது பெரிய விஷயம்..." அவளை வெறித்துப் பார்க்கிறேன்.
"உன் வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சு... எல்லாரும் வந்துகிட்டு இருக்காங்க..."
ஐயோ... நான் அவர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன். ஐயோ... ஐயோ... ஐயோ... எவ்வளவு கேவலமானவனாய் ஆகிப் போனேன்.

ஏதோ வண்டிச்சத்தம் கேட்கிறது... கல்யாணத்திற்கு அனைவரும் வரத்தொடங்கி விட்டார்கள் போலும். அவன் மட்டும் இல்லாமலோ வராமலோ போனால்... நினைக்க நினைக்க மனது.
"நா சொல்றத கேளுங்க... தயவு செய்து..." உற்றுக் கேட்கிறேன். இது அவன் குரல்தான். வந்து விட்டானா. கதவு திறந்து கண்ணீரை மரைத்து வெளியே செல்கிறேன்....

"ரொம்ப சின்ன வயசுப் பையன்... சூசயிட் அட்டெம்ட்... நீங்க வந்தா காப்பாத்தலாம்னு சொன்னாங்க... போய் கேஸ் அட்டென்ட் பண்ணிட்டு வர கொஞ்ச நேராயிடுச்சு... ஸாரி ஸாரி..."

"ஏய்.. நீ ஏன் முஞ்சிய ஒரு மாதிரி வச்சுருக்க... டாக்டர் மனைவின்னா கொஞ்சம் இதெல்லாம் அனுசரிச்சுதான் போகணும். மொத நாளே தெரிஞ்சுடுச்சா? 5 நிமிஷம்... ரெடி ஆயிட்டு வந்துடறேன்..." கண்ணடித்து சிரித்து விட்டு மணமகன் அறைக்குள் நுழைந்தவணை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அவன் தான் என் காதலன், கணவன், மருத்துவர் டாக்டர்.கார்த்திக்.16 பேர் சொன்னது என்னான்னா..:

Subankan said...

நச்!!! நல்லாயிருக்கு!

சங்கர் said...

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

Mohan Kumar said...

சுஜாதா துவக்க காலத்தில் இதே போல் ஒரு கதை எழுதியிருக்கிறார். நீங்கள் வாசித்தீர்களா என அறியேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்
*******
கதை போட்டி களத்தில் நானும் குதித்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/

parameswary namebley said...

நல்ல twist கதையில், வாழ்த்துகள்

தமிழ்ப்பறவை said...

நல்லா இருந்தது அமுதன்.. நச்சும் கூட...
பிறர் சொன்னது போல் இதில் சுஜாதா கதை போல் இருக்கிறதா எனத் தெரியவில்லை...
இதுபோல் ஒரு ஆள்மாறாட்ட நினைப்புக் கதையை ‘கேபிள் சங்கர்’ குறும்படமாக எடுத்திருக்கிறார்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ராம்குமார் - அமுதன் said...

வந்த / வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி... இது சுஜாதாவோட சாயலா இல்ல அதே மாதிரி கதையான்னு தெரியல... ஆனா எங்கயோ எப்பவோ படிச்ச ஒரு கதையோட தாக்கத்துல எழுதுன கதைன்றது உண்மை... அது என்ன கதை எப்போ எதுல படிச்சேன்னு இப்போ எனக்கு முழுசா நியாபகம் இல்லை. நீங்க எல்லாரும் சொல்ற மாதிரி அது சுஜாதாவோடதாகக் கூட இருக்கலாம்.... ஆனா அதே மாதிரி கதை எழுதனும்ன்ற எண்ணத்துல இது எழுதப்படல....

டாப் 20ல தேர்ந்தெடுத்த சர்வேஷன் சென்ஷிக்கு நன்றிகள்....

ராம்குமார் - அமுதன் said...

@தமிழ்ப்பறவை...

அந்த குறும்படத்தின் சுட்டி இருந்தால் கொஞ்சம் கொடுங்கள்... நான் பார்க்கிறேன்....

செந்தில் நாதன் said...

top 20-ல வந்தததுக்கு வாழ்த்துக்கள்!! கத உண்மையாவே 'நச்'.

ராம்குமார் - அமுதன் said...

சங்கர்...
சுபாங்கன்
மோகன் குமார்
தமிழ்பறவை
செந்தில்நாதன்
ரொம்ப ரொம்ப நன்றி... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்....

ஜெஸ்வந்தி said...

கதை மிக சுவாரசியமாகப் போய் நச் என்று முடிகிறது. வாழ்த்துக்கள்.

காவிரிக்கரையோன் MJV said...

நல்ல கதை. நன்றாக செதுக்கி உள்ளீர்கள். நச்சும் நன்றாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

காவிரிக்கரையோன் MJV said...

நல்ல கதை. நன்றாக செதுக்கி உள்ளீர்கள். நச்சும் நன்றாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

காவிரிக்கரையோன் MJV said...

நல்ல கதை. நன்றாக செதுக்கி உள்ளீர்கள். நச்சும் நன்றாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றீஸ் ஜெஸ்வந்தி மற்றும் காவேரிக்கரையோன்... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்....

Chitra said...

அப்படியே பேசிப்பேசி... எங்கே வேலை செய்கிறேன்.. எவ்வளவு சம்பளம்... சொந்த ஊர்.. பூர்வீகம், இத்யாதி இத்யாதி மற்றும் இன்ன பிற விவரங்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வயதானவர்களுக்கே உள்ள பொதுப்பழக்கம்..............நெல்லையில் இது சகஜமப்பா. ஆமாங்க, நானும் நெல்லை பறவைதான். உங்கள் கதை நல்லா இருந்துச்சுங்க. வாழ்த்துக்கள்.

Unknown said...

வித்தியாசமான சிறுகதை!! மனதை பதைக்க விட்டு விட்டு .. கடைசில அப்பாட என்று சொல்ல வைத்து விட்டீர்கள்! :) நன்றி !

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.