Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - என்னைத் தாண்டி போய் விட்டது...

விண்ணைத் தாண்டி வருவாயா?

"இந்த உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெசிய லவ் பண்ணேன்...??"

காதல நம்ம தேடி போகக் கூடாது.. அதுவா நமக்கு நடக்கனும்.. நம்மளப் போட்டு தாக்கனும்... நம்மள அப்படியே தலகீழா திருப்பி போடனும்...அது எனக்கு நடந்துச்சு"இந்த 2 வசனங்களோட சிம்பு சொல்ற மாதிரியா ஆரம்பிக்கிற கதை எப்படி எப்படியோ போய் என்னவோன்னு முடியுறதுதான் விண்ணைத் தாண்டி வருவாயா.

எனக்கு இந்த படம் பிடிச்சிருக்கா இல்லையான்னே தெரியல... படம் முடிஞ்சவுடனே நானும் பாதி படத்துல வர்ற த்ரிஷா மதிரி ஆயிட்டேன்.

படம் முதல் பாதி சூப்பர்... அப்படியே கெளதம் மேனன் டச்.. வழக்கமான கெளதம் படம் போலவே ஹீரோ மெக்கனிக்கல் எஞ்சினீயரிங் முடிச்ச பையன்.ஆனா சினிமா டைரக்க்டராக ட்ரை பண்ணிட்டு இருக்க பையன். சிம்பு அவ்ளோ சின்னப் பையனா தெரியுறான் இந்தப் படத்துல. நல்ல முதிர்ச்சியான நடிப்பு. த்ரிஷா கூட வர்ற சீன்ல லாம் அவ்ளோ ரொமன்டிக்.

த்ரிஷா... அபியும் நானும்ல பாத்த அழகு த்ரிஷவா இது?, மேக்கப்லாம் போட மாட்டோம்னு, ரொம்ப வயசான மாதிரி காமிச்சுருக்காங்க. கிளைமாக்ஸ்க்கு முந்திய கொஞ்சம் காட்சிகள்ல ஓகேயா இருக்கார். ஆனா அவரோட பாத்திரப்படைப்புதான் என்னன்னே புரியல.
"கார்த்திக் நீ ஏன் என்னைய லவ் பன்ற?"
"கார்த்திக் நான் ஏன் உன்னைய லவ் பண்றேன்?"
இந்த 2 டயலாக்கையும் செகண்ட ஹாப்ல அவர் 136வது தடவையா கேக்கேல 'என் உச்சி மண்டைல சுர்ர்ர்..."ஒரு இடத்துல த்ரிஷா சிம்புகிட்ட சொல்ற வசனம்
"கார்த்திக், உன் பிரச்சனையே நாந்தான்... என்னால தான் உனக்கு எல்லா பிரச்சனையுமே" -

தியேட்டர்ல யாரோ ஒருத்தர் இந்த படத்தோட பிரச்சனையும் நீதாம்மான்னு கவுன்ட்டர் கமென்ட் பாஸ் பண்ணிட்டு இருந்தார். அது கொஞ்சம் உண்மைதான்.

மத்தபடி கதைன்னு பாத்தா.. ஒரே ஒரு வயசு மூத்த மலையாள கிறிஸ்டியன் பொண்ணு... ஹிந்துப் பையன்.. காதல்... "உனக்கு 50 வயசு ஆகேல எனக்கு 49" இந்த மாதிரி கொஞ்சம் கெள்தம் ஸ்டைல் அரித்மெடிக் டயலாகஸ்.. அப்பா ஒத்துக்கல... பிரியுறது... 2 வருஷம் கழிச்சு திரும்ப பாக்குறது... அவ்ளோதான். அப்படியே போகுது.. சில இடங்கள்ல படத்தோட, கதையோட போக்க கே.எஸ்.ரவிக்குமார் வாயாலல்லாம் சொல்ல வச்சுருக்காங்க.அந்த சிம்பு கூடவே சுத்துற காரெக்டர்ல நடிச்சுருக்கவர் ரொம்ப எதார்த்தமா நடிச்சுருக்கார். 'தோ பாருட தம்பி'னு அவரு பேசுற டயலாக்லாம் நல்லா இருக்கு.
"என்னது கெளதம்கிட்ட அசிஸ்டென்டா சேரனுமா? எதுக்கு தமிழ்ல எங்கிலீஷ் படம் எடுக்கப் போறியா?"ன்ற மாதிரி ரசிக்கத்தகுந்த வசனங்கள் அங்கங்க.

பாட்டுல்லாம் சூப்பர்... 2 மாசமா தமிழ்நாடே கொண்டாடிட்டு இருந்த ஏ.ஆர்.ரகுமானோட காதல் சுனாமி. ஓமணப் பெண்ணேவும் ஆரோமலேவும் கோரியோகிராபி ஓ.கே. ஹோசனாவும், அன்பில் அவன் பாட்டும் அப்படியே வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடுல பாத்த மாதிரியே அதே ஸ்டைல் கோரியோகிரபி.

படத்துல மீதம் 2 பெரிய ப்ளஸ், கேமரா மற்றும் ஆர்ட் டைரக்க்ஷன். கேமரா கேரளக்காட்சிகள்ளலாம் வாய்ப்பே இல்ல... செம சூப்பர். ஒரு மைல்டான ப்ளாக் டோன் படம் முழுதுமாக. கண்ணை உறுத்தாத வகையில். அற்புதம். போட் ஹவுஸ், தென்னந்தோப்புன்னு கேரளவோட மொத்த அழகையும் அள்ளிருக்காங்க... சூப்பர். ஆர்ட் டைரக்க்ஷனும் ரொம்பவே நல்லருக்கு. நெறைய எடங்கள்ல பளிச்னு.

சிம்பு டைரக்டர் ஆகி ஒரு படம் டைரக்ட் பண்ணும் போது, விண்ணைத் தாண்டி வருவாயாவோட தெலுங்கு சூட்டிங் காமிக்கிற சீன்ஸ் நல்லாருக்கு... அந்த அசிஸ்டென்ட் டைரக்டர் கம் ஹீரோயின் கொள்ளை அழகு. ரசகுல்லா மாதிரி இருக்கு அந்த பொண்ணூ.

படத்துல வர்ற மலையாள டயலாக்குக்கெல்லாம் தமிழ்ல சப்-டைட்டில் போட்ருக்காங்க... அதுல நெறையவே எழுத்துப்பிழை.. ஏன் அப்படி கண்டுக்காம விட்டாங்கன்னு தெரியல.

திரும்பவும் சொல்றேன்... எனக்கு இந்த படம் பிடிச்சிருக்கா இல்லையான்னே தெரியல... ஆனா இன்னோரு தடவல்லாம் பாக்க முடியாதுன்னு நெனக்கிறேன்.

விண்ணைத் தாண்டி வருவாயா? - அது சும்மா ஒரு பெரிய பாதிப்பில்லாமல் என்னைத் தாண்டி போய் விட்டது...

3 பேர் சொன்னது என்னான்னா..:

தமிழ்ப்பறவை said...

நல்லா இருக்கு விமர்சனம் ... கௌதம் மேனன் படம்கிறதுக்காக எல்லாரும் பாராட்டுற மாதிரி இல்லாம இருக்கிறது நல்லா இருக்கு...

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Arun Kumar N said...

Super Comments..
Madurai arun
http://maduraispb.blogspot.com/2010/08/079.html

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.