
ஸ்ஸ்ஸ் அப்பாடா என்று பெருமூச்சு விட்ட பெரிய ரசிகர் கூட்டத்துக்கு நடுவில் நின்ற பொழுது வந்த பூரிப்பு... படம் நல்லாருக்கா? என்று தியேட்டர் வாசலில் நின்று கேட்டவர்களிடம் படம் நல்லாருக்குண்ணா, சூப்பர்ணா... என்று தயங்காமல் சொல்ல முடிந்த போது வந்த சந்தோஷம்.... போதும்... தாரளாமா போதும்...
ரசிகர்கள் எல்லாருமே போக்கிரிக்கு அப்புறமாவே விஜய்கிட்ட இருந்து இதத்தான் எதிர்பாத்துட்டு இருந்தோம். கொஞ்சம் டிலே... ஆனாப் பரவால்ல...
படத்தோட பெரிய ப்ளஸ்... கண்டிப்பா விஜய்... அப்புறமா அசின்...

கதை ஓகே... கிளைமாக்ஸ் டபுள் ஓகே... மூணு பாட்டு சூப்பர்... வடிவேல் காமெடி செம செம...
ட்ரெய்லர்ல போட்டது மட்டும் இல்ல... படம் உண்மையிலேயெ சம்திங்க் டிபரெண்ட் தான்...
படத்துல விஜய்க்கு லவ் மூட் ஆரம்பிக்குறப்ப அசின் ஒரு டயலாக் சொல்லுவா... "பாலைவன பூமில லேசா தூறல் விழ ஆரம்பிச்சுருக்கு. இனிமேல் அட மழைதான்."
அது விஜய பத்தி அவ சொன்ன டயலாக்கா எனக்கு படல... விஜய் ரசிகர்கள்ன்ற பாலைவன பூமில காவலன் தூறலா விழுந்துருக்கு... இனி மறுபடியும் அட மழைதான்... கண்டிப்பா விஜய்கிட்ட இருந்து வெளிய போன ரசிகர்கள் பல பேர் திரும்ப வர்ற காலகட்டம் ரொம்ப துரத்துல இல்ல....
படம் இங்க திருநெல்வேலில இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்குதான் பெட்டி வந்துச்சு... ஏகப்பட்ட பிரச்சனை... இப்போ வரைக்கும் மூணு ஷோவும் ஹவுஸ்புல்லா தான் போய்ட்டு இருக்கு... அதுவும் ரெண்டு தியேட்டர்ல...
என்ன ஒண்ணு... ஒரு மீடியாவும் இந்த படத்த பெருசா கண்டுக்கல்ல. இன்னைக்கு எல்லா டிவில்லயும் எத்தனையோ புது பாட்டு நிகழ்ச்சி வந்துச்சு... ஒண்ணுலயுமே காவலன்ல இருந்து ஒரு பாட்டு கூட போடல... பாக்கலாம்... என்ன ஆனாலும் இளைய தளபதி... தளபதிதான்....
5 பேர் சொன்னது என்னான்னா..:
மீடியா யுத்தத்துக்கு , எதிராக விஜயின் பழைய "Box Office Magic " எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு பார்போம் !!!
கண்டிப்பா ஒர்கவுட் ஆகணும் விஜய்.... பாப்போம்...
சூப்பர் விமர்சனம்
இந்த பொங்கல் தளபதி பொங்கல்
:))
படம் கண்டிப்பா ஹிட்
மச்சி என்ன சொன்ன மாதிரியே எழுத ஆரம்பிச்சிட.... கலக்கு... நான் 10 நாலா ஊர் ல இல்ல அதான் படிகல...
Post a Comment
வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...