Monday, February 14, 2011

பயணத்தில் பாதித்த பாஸ்கர்...

பயணம்... மிக அருமையான திரைப்படம். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நடிகர் தேர்வும் கனகச்சிதம்... ஆனால் அதில் ஒரு நடிகர் அவர் நடிப்பு என்னை மிகவும் பாதித்தது என்றே சொல்ல வேண்டும்.

எம்.எஸ். பாஸ்கர்.ஒரு காது பட்டாபியா சீரியல்ல வந்த அக்கவுண்டன்ட் பாஸ்கர தமிழ்த் திரையுலகம் இது வரைக்கும் அழைச்சுகிட்டு வந்துருக்கது பெரிய விஷயம்.

மொழி படம் பாக்கேல பாஸ்கரோட நடிப்ப பாத்து ஆச்சரியப்பட்டது உண்மை. "Watch my words... ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள்.... " இந்த டயலாக்
படம் ரிலீஸ் ஆகி ரொம்ப நாளைக்கு அப்புறம் வரைக்கும், ஏன் இப்பவும் கூட நான் பேசேல என் பேச்சுல வர்ற வசனம். அந்தப் படத்துல ஜோதிகா காரெக்டருக்கு சமமா என்னைய பாஸ்கரோட புரபொசர் கதாப்பாத்திரமும் பாதித்திருந்தது.ஆனல் இந்த பயணம் படம் அவரோட நடிப்புல இன்னோரு பரிமாணம் காமிச்சுருக்கது உண்மையிலேயே பிரமாதம்.பயணம் படத்தில் பாஸ்கர் பண்ணிருக்க பாதிரியார் அல்போன்ஸ் கதாப்பாத்திரம் நிச்சயமா இன்னுமொரு உயர்ந்த மைல்கல்.

"இங்க இருக்க எல்லாருக்கும் குடும்பம் இருக்கு,கடமை இருக்கு. எனக்குன்னு தேவன் ஒருத்தனே. ஊழியம்தான் என் கடமை. அதனால் அடுத்து யாரையாவது கொல்லணும்னா என்னையக் கொல்லுங்க.. சரியா?" இந்த வசனத்த பேசேல பாஸ்கரோட அந்த உணர்ச்சியும் எக்ஸ்பிரஸன்சும் ஒரு வார்த்தைல சொல்லணும்னா "மார்வெலஸ்". எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பில் கதாப்பாத்திரத்தில் வசனங்களில் செயல்களில் உள்ளார்ந்த திறமை சாத்தியமாய் வெளிப்பட்டு இருக்கிறது. அதுலயும் அந்த பிளைட்ல இளைஞன் சாகும் போது பிரேயர் பண்றதாகட்டும்... செத்துப் போன தீவிரவாதிகள் பக்கத்துல பிரேயர் பண்ர சீனாகட்டும் - ஹேட்ஸ் ஆப் ராதா மோகன் சார்.
இனிமேலாவது பேரரசு மாதிரி இயக்குநர்கள் பாஸ்கரை நடிக்க அழைக்காமல் இருப்பது உசிதம் என்றே படுகிறது. பல இயக்குனர்கள் அவர காமெடிக்கு மட்டும் பயன்படுதுறத நிறுத்திகிட்டு அவரோட திறமைக்கு தகுந்த கதபாத்திரங்கள பிரத்யோகமாய் உருவாக்குனா அவரால் தொடப்படக்கூடிய உயரம் அளக்க முடியாததாய் இருக்கும் என்பது சத்தியம்.
கடைசியாக செவிவழிச் செய்தியாய் கேட்ட ஒன்று... "பாஸ்கர்லாம் பயங்கர திறமைசாலி. பாஸ்கர் உங்களுக்கு இந்தப் படத்துல இந்த காரெக்டர். நீங்க இந்த ஸ்லாங்க்ல பேசணும்னு சொன்னா கரெக்ட்டா 15 நிமிஷத்துல பொறந்ததுலர்ந்தே அந்த ஸ்லாங் பேசுன ஆள் மாதிரி மாறி வந்து நிக்கிற ஆளுய்யா. எனக்கே சமயத்துல ஆச்சர்யமா இருக்கும்"

சொன்னதாய் அறியப்படுபவர் நமது உலக நாயகன் கமல்.
7 பேர் சொன்னது என்னான்னா..:

கோவி.கண்ணன் said...

பாஸ்கர் திறமையான நடிகர், தெலுங்கு மலையாளம், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் அனைத்திலும் அசத்துவார்

SenthilGanesh said...

பாஸ்கர் ஒரு திறமையான நடிகர் தான், அதுனால அவர் காமெடி உட்பட நிறைய ரோல் பண்ணனும்...

ராம்குமார் - அமுதன் said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

FOOD said...

பாஸ்கர் பற்றி பல கோணத்தில் அலசி உள்ளீர்கள்.

FOOD said...

என்ன நண்பரே, தமிழிஷ், தமிழ்மணம் லிங்க் எங்கே?

ராம்குமார் - அமுதன் said...

மிக்க‌ ந‌ன்றி உண‌வு உல‌க‌ம் அவ‌ர்க‌ளே... தமிழ்ம‌ண‌ம் தம‌ழீஷ் லாம் இன்னும் சேர்க்க‌வில்லை...நெல்லையிலா இருக்கீறீர்க‌ள்... ஒரு முறை நெல்லை வ‌ரும்பொழுது ச‌ந்திக்க‌லாமே...

கே. பி. ஜனா... said...

'அழகிய தீயே' படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார் பாஸ்கர்! மிகச் சிறந்த நடிகர்...

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.