Friday, March 30, 2012

"3" திரைப்படம் - 3 ரியாக்ஷன்ஸ்3 திரைப்படத்தோட விமர்சனத்த நம்ம 3 ரியாக்ஷன் படங்கள்ல பாக்கலாம்.

ஹலோ ப்ரம்மி சார்... "3" படம் பாத்துட்டீங்க போல... ம்ம்ம்ம்...

படத்துல பாட்டுல்லாம் கேக்குறதுக்கு  எப்படி.? தனுஷ் நடிப்பு எப்படி ?  சிவகார்த்திக்கேயன் டைமிங்/காமெடி எப்படி? 


படத்துல "First Half" எப்படி? ஸ்ருதி நடிப்பு எப்படி? நல்லாருந்துச்சா? என்ன சார்... ? ஏன் மூஞ்சிய இப்படி வைக்குறீங்க? அப்பன்னா "Second Half"வும் கிளைமேக்ஸும் தான் உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருந்தது போல...அய்யய்யோ... விட்ருங்க சார் ஓடிர்றேன்... ஐ ஆம் வெரி வெரி பாவம்...

தியேட்டரில் இருந்து வெளியே வரும்பொழுது கேட்ட சில வசனங்கள் :

"இந்தப் படத்துக்கு வந்ததுக்கு முப்பொழுதும் உன் சைக்கோத்தனங்கள் படத்தையே முப்பது வாட்டி பாத்ருக்கலாம் மச்சி" #பீலிங்ஸ்.

"டேய்... மாசக்கடைசின்னு சொல்லியும் நீதான என்னைய ஏமாத்தி இந்தப் படத்துக்கு கூட்டிட்டு வந்த.. ஒழுங்கா டிக்கெட் காசத் திரும்ப குடு.... அப்படியே இன்னைக்கு ராத்திரி ட்ரீட் குடு... செம டென்ஷன்ல இருக்கேன்... கொலைகாரனா ஆக்காத...." #மிரட்டல்.

"Hey dude, awesome romantic first half da... Taken back to my school days... Memories... ச்சோ ச்ச்வீட் யூ நோ...Even 2nd half கூட my characterடா மச்சான்..." #சைக்கோ பீட்டர்ஸ்.


"மச்சி... நான் சிம்புவோட வல்லவன், ஷாம் நடிச்ச தூண்டில், சாம் ஆன்டர்சனின் யாரோ யாரோ கூட பாத்து அவ்ளோ கடுப்பாகலடா.. ஆனா இந்த படம், முடியல மச்சான்..." #Confident இல்லாத பாய்ஸ்


"எனக்கு முதல்லயே தெரியும் மச்சி, படம் மொக்கையாதான் இருக்கும்ன்னு.. இது இன்னும் கொஞ்சம் சூர மொக்கை அவ்ளோதான்...." #அய் வலிக்கலையே வலிக்கலையேஆனால் ஒன்று மட்டும்தான் புரியவில்லை.. எல்லாரும் கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் ஏன் இப்படி கடுப்பாக இருந்தார்கள் என்று. ஒரு Scenario... இந்தியா பாகிஸ்தான் 20 - 20 மேட்ச்... இந்தியா பேட்டிங்... ரெய்னா பேட்ஸ்மேன்... கடைசி மூன்று பந்துகள்... ஆறு ரன் எடுத்தால் வெற்றி... முதல் பந்து யார்க்கர்... ரன் இல்லை. இரண்டாம் பந்து பவுன்சர்... ரன் இல்லை... கடைசி பந்து.  ஷார்ட் பால்... Straightல் பிரமாதமான சிக்சர்... வெற்றி... எப்படிக் கத்துவோம், குதூகலிப்போம்.. இப்படத்தின் கிளைமேக்ஸில்லும் அப்படித்தான். தனுஷ் தற்கொலை செய்து கொள்வதற்காக கத்தியைக் கழுத்துப் பக்கத்தில் கொண்டு போகிறார்... பயத்தில் அறுக்கவில்லை... அழுகையோடு இரண்டாம் முறையும் கத்தியைக் கழுத்து வரைக் கொண்டு போகிறார், மொத்தத் தியேட்டரும் அலறுகிறது "Come on Dhanusssssh… You can…. Die soon… Come on maaaaaan.. Getting late... Do it Do it" இம்முறையும் இல்லை. மூன்றாம் முறை... கொண்டு போகி.... றா ....றா..... றார்.. அறுத்தே விட்டார்... தற்கொலை வெற்றி... படம் முடிகிறது "ஹேஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்" என்று கத்தியவாறே மொத்தத் தியேட்டரும் குதூகலத்தில் கும்மாளமிடுகிறது.  இயக்குநருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. நிற்க தனுஷ் வில்லனோ, நெகட்டிவ் காரெக்டரோ அல்ல.. ஹீரோதான்.
 முதல் பாதி முழுவதும் 1970களின் க்ளிஷேக்கள்... உட்காரவே முடியவில்லை. ஊரோடு கொஞ்சமும் ஒத்து வாழாமல் மயக்கம் என்ன நல்ல திரைப்படம்தான் என்று நாந்தான் விமர்சனம் எழுதினேன். உண்மையில் படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் அந்தப் படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்ட காட்சிகளைக் கொண்டு மீண்டும் ஏன் "3" என்ற பெயரில் படம் எடுத்தார்கள் என்றுதான் புரியவில்லை. It is time to take a break from Psycho character Dhanush… You had done enough of it… No more for next 10 movies at least… You are doing a Great performance on that… But How many times ? Fed up….

மொத்தத்தில் "இனிமேல் ஓவர் ஹைப் ஏத்தும் படங்களை முதல் நாளே பாக்க வருவியா, வருவியா?"ன்னு கேட்டுக் கேட்டு 3 மணி நேரம் மூஞ்சியிலேயே கும் கும்மென்று குத்துகிறது இந்த மூணு...."

3 = 3/120 :(

19 பேர் சொன்னது என்னான்னா..:

Raja Pandian said...

Padam pidihcirukko illayo, unnoda vimarsanam top class da.. :)

Wilson said...

Hey really nice Ram...Nalla veali naan moonji la kuthu vaangala...

அமுதா கிருஷ்ணா said...

ப்ரம்மி சார் எக்ஸ்ப்ரஸன்ஸ் சூப்பர்..ஒரு குடும்பமே படத்தை எடுக்கும் போது குடும்பத்துடன் படத்தை நம்மை பார்க்க விடாட்டாலும் பரவாயில்லை.இப்படியா யாருமே பார்க்க முடியாமல் படம் எடுக்கிறது.

ராம்குமார் - அமுதன் said...

@பாண்டி... நன்றி நண்பா...

ராம்குமார் - அமுதன் said...

@வில்சன்... நான் வாங்குனது பத்தாதா? உனக்கு வேற எதுக்கு தனியா?

ராம்குமார் - அமுதன் said...

@அமுதா... முடியல... வந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி...

Anonymous said...

படத்தை விட உங்க விமர்சனம் சூப்பர் போல.தனுஷ் சிறந்த நடிகனா என்றே ஒரு 'மனப்பிரம்மை' வருகிறது.சைக்கோ கேரக்டர் மட்டும்தான் நல்லா பண்ணுவாரோ? யோசிச்சுப் பார்த்தா அவரால வேற வேற கேரக்டர் பண்ண முடியாதமாதிரியே தோணுது.அவர் தலைக்கு மேலே ஒரு glass ceiling இருப்பது இப்போது தெரிகிறது.நாம் அதிகப்படியாக கொண்டாடுகிறோமோ என்று இதுநாள் வரை வராத சந்தேகம் எனக்கு வருகிறது...

Anonymous said...

"Come on Dhanusssssh… You can…. Die soon… Come on maaaaaan.. Getting late... Do it Do it" இம்முறையும் இல்லை. மூன்றாம் முறை... கொண்டு போகி.... றா ....றா..... றார்.. அறுத்தே விட்டார்... தற்கொலை வெற்றி... படம் முடிகிறது "ஹேஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்" என்று கத்தியவாறே மொத்தத் தியேட்டரும் குதூகலத்தில் கும்மாளமிடுகிறது. -- these lines tell the full story. Now i understood why they have kolaveri song in this movie.

மோகன் குமார் said...

Interesting. I am also a blogger from Chennai.

ராஜ் said...

செம டைமிங் காமெடி பாஸ்..
உங்க கிரிக்கெட் உதாரணம் சான்சே இல்ல. அருமை..

sathish said...

அண்ணா எப்டி ணா இப்டி

Anonymous said...

hahaha... good one

YESRAMESH said...

படத்தை விட உங்க விமர்சனம் சூப்பர் போல.தனுஷ் சிறந்த நடிகனா என்றே ஒரு 'மனப்பிரம்மை' வருகிறது.சைக்கோ கேரக்டர் மட்டும்தான் நல்லா பண்ணுவாரோ? யோசிச்சுப் பார்த்தா அவரால வேற வேற கேரக்டர் பண்ண முடியாதமாதிரியே தோணுது.அவர் தலைக்கு மேலே ஒரு glass ceiling இருப்பது இப்போது தெரிகிறது.நாம் அதிகப்படியாக கொண்டாடுகிறோமோ என்று இதுநாள் வரை வராத சந்தேகம் எனக்கு வருகிறது...

100% உண்மை

ராம்குமார் - அமுதன் said...

@ChilledBeers @YesRamesh...

வந்தமைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே...

தனுஷ் நல்ல நடிகர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை... ஆடுகளம், பொல்லாதவன், காதல் கொண்டேன், ம.என்ன என்று நிறைய எடுத்துக்காட்டுகள்... ஆனால் சைக்கோ கேரக்டர்களிலேயே இன்னும் எத்தனை முறை பார்ப்பது என்று சலிப்பு தட்டுகிறது...

ராம்குமார் - அமுதன் said...

@Raj @Balavin @Sathish @Anony வந்தமைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே...

kiruba said...

Padam avalo mokkai illa da..

kiruba said...

Idhu konjam over dhaan..

kokilavani marimuthu said...

super o... super o..... i love this movie

kokilavani marimuthu said...

super o... super o..... i love this movie

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.