Monday, March 26, 2012

கடலிலே ஒரு காகிதக்கப்பல்...

"தமிழ்மணத்தில் ஒரு வாரத்துக்கு நட்சத்திரமாக இருக்க சம்மதமா?" இப்படி ஒரு மின்னஞ்சலைப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. நானோ வருடத்துக்கு நான்கைந்து சுமாரான பதிவுகள் மட்டுமே எழுதுபவன். அதுவும் பார்த்த படம், பிடிச்ச பாட்டு, படிச்ச புத்தகம் என்று தேறுவதைக் கிறுக்கிக் கொண்டிருப்பவன்.  அதனால் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருந்து தினமும் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்று சொல்லியவுடனே கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன். எழுதித்தான் பார்ப்போமே என்று. நான் 2006லேயே ராம்குமார் அமுதன் என்ற பெயரில் ஒரு வலைப்பூவைத் தொடங்கி கிறுக்க ஆரம்பித்தேன். ஆனால் "யப்பா.. மரணமொக்கையா எழுதி சாவடிக்கிறான்டா... முடியல" என்று உணர்ந்த ஏதோ ஓர் நல்லுள்ளம் அந்த வலைப்பூவை ஹேக் செய்து கொண்டது. அப்புறம் சில நாட்கள் சும்மா இருந்தேன். அதற்குப்பிறகு 2007ல் நெல்லை நண்பன் என்ற இந்த வலைப்பூவைத் தொடங்கி கிறுக்க ஆரம்பித்தேன். வருடத்திற்கு இரண்டோ மூன்றோ பதிவுகள் எழுதுவதின் மூலம் இந்த சமுதாயத்தை ஏன் சொல்லப்போனால் மொத்த தமிழ்ச் சமூகத்தையும் திருத்தி நல்வழியில் செலுத்தும் கடமையை தோளில் சுமந்து கொண்டிருப்பவன்.   அதே அதே. மொத்ததில் நான் இந்த வலைகடலிலே மிதக்கும் ஒரு காகிதக்கப்பல்.

என்னைப்பற்றி கொஞ்சமே கொஞ்சம் சுயபுராணம். அக்பர்ஷா முதல் அப்புசாமித்தாத்தா வரை பலரையும் தெரிந்த உங்களுக்கு இந்த அப்பிராணியைப் பற்றி கொஞ்சமே கொஞ்சம். பிறப்பாலும் நினைப்பாலும் எப்பொருட்டும் நெல்லைக்காரன். படித்தது நெல்லை அரசினர் பொறியியற் கல்லூரி.  இப்பொழுது பார்க்கின்ற மென்பொருள் பணி நிமித்தமாக கடந்த ஆறாண்டுகளாக சென்னை வாசம். நடுவில் ஓராண்டு நம்ம பெங்களூரு. இனிமேல் நிரந்தரமாக சென்னைக்காரந்தான். தமிழ் கொஞ்சம் பிடிக்கும். தமிழ் சினிமா இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிடிக்கும். சிறு வயது முதலே தமிழ் மேடைப்பேச்சுகளில் அதிக ஆர்வம் உண்டு. பள்ளிக்காலங்களில் பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்ற நாட்களை விட பேச்சுப்போட்டிக்குச் சென்ற நாட்கள் மிக மிக அதிகம். அப்புறம் கொஞ்ச காலம் தொடர்பு விட்டுப்போனது. கல்லூரிக்காலங்களில் மூன்று, நான்கு மேடைகளில் பேசியிருக்கிறேன். அதிலே கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் பொழுது சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றம் பேசியது எனது வாழ்வானுபவம். மார்ச் 8 2006 - முகில் 2006 - தமிழ் மன்ற விழா - வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நாள். அந்தப் பேச்சின் காணொளியைக்  இணைத்திருக்கிறேன். பாருங்கள். ஒரு கல்லூரி மாணவனின் மனப்பக்குவத்தில் பேசியது அது. யாரையேனும் புண்படுத்தினால் மன்னிச்ச்ச்ச்சூ. மென்பொருள் துறைக்கு வந்த பிறகு தமிழ் மேடைப் பேச்சுக்கான வாய்ப்பு என்பது "கடல்லயே இல்லையாம்" என்பது போன்ற வாய்ப்பற்ற ஒரு விஷயமாக ஆகி விட்டது. பார்க்கலாம், மங்காத்தாவில் 'தல' அஜீத் சொன்னதைப் போல "Life begins at 40". நமக்கு ஜஸ்ட் 20 :) இன்னும் வயது இருக்கிறது. வாழ்க்கை இருக்கிறது. வசந்தம் இருக்கிறது. ஓ பாஸுகளா, வீடியோவப் பாத்துட்டு போகலையா. இன்னும் இங்கனயேதான் சுத்திகிட்டு இருக்கீங்களா? அவ்ளோ வெட்டியா? சரி உங்களுக்காக நான் முற்காலங்களில் எழுதிய சில பழைய பதிவுகளுக்கு லின்ங்க் கொடுக்கிறேன். வாசித்துப் பாருங்கள். இந்தப் பதிவுகள் அனைத்தும் எனது பதிவுகளிலேயே ஆகச்சிறந்தது என்று உலக அளவில், பல நாடுகளில் இருந்தும் அதிகமான பாராட்டுக்களைப்  பெற்றவை. யாருங்க அது RRல "ஆணியே புடுங்க வேணாம்"னு சொல்றது. வுடுங்க பாஸூ.. ஒரு வெளம்பரம்... எதையும் சீரியஸாக எடுத்து யாரும் இந்த வலைபூவையும் ஹேக் செய்ய வேண்டாமெனத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். ஐ ஆம் பாவம்.. ஆகையால் எல்லாரும் நெஞ்சில் கை வைத்து ஒருமுறை சொல்லுங்கள் "All is Well All is Well"

14 பேர் சொன்னது என்னான்னா..:

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள்

thamizhparavai said...

Oh... gr8...keep posting ram...!

ராம்குமார் - அமுதன் said...

நன்றீ கோவி.கண்ணன்... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

ராம்குமார் - அமுதன் said...

கண்டிப்பாக பரணி, இந்த வாரத்தில் நிறைய பதிவுகள் போட முயற்சி செய்கிறேன்.

Denzil said...

வாழ்த்துகள் ராம்!

ராம்குமார் - அமுதன் said...

நன்றி நெல்லை நண்பர் டென்சில்... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

வினையூக்கி said...

வாழ்த்துகள்

ராம்குமார் - அமுதன் said...

நன்றி நண்பர் வினையூக்கி செல்வா....

Anonymous said...

ஏல நீ நம்ம ஊரா...நல்லா இருங்கடே...ரொம்ப சந்தோசம்ப்பா..நல்லா எழுதிரீங்க....வாழ்த்துகல்.

சமுத்ரா said...

வாழ்த்துக்கள் ராம்!

ராம்குமார் - அமுதன் said...

@அனானி நண்பர் : ஆமா எல்லாம் நம்ம ஊருதான். வாழ்த்துக்களுக்கு நன்றி.

ராம்குமார் - அமுதன் said...

@சமுத்ர : வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி. :))

மோகன் குமார் said...

வீடியோ பார்த்தேன் . நல்லா காமெடியா பேசிருக்கீங்க . பாப்பையாவே புகழ்ந்து தள்ளிட்டார்

பிரம்மானந்தம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போல். எனக்கும் தான் !!

ராம்குமார் - அமுதன் said...

வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மோகன்... ஆமாம்.. ப்ரம்மியின் ரசிகன் நான் :)

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.