Tuesday, March 27, 2012

ஆட்டோ கர்ணா - I


இப்போ சமீபத்துல ஆட்டோ கர்ணானு ஒரு படம் ரிலீஸ் ஆகி ஹவுஸ்புல்லா ஓடிகிட்டு இருக்கு. சொல்லப்போனா எல்லாப்பக்கமும் ஹவுஸ்புல்லா சக்கைபோடு போடுது. படம் எப்படின்னு டெம்பெர்மெண்ட்டா சொல்லணும்னா செம படம். படத்தோட கதை இரண்டு கேங்ஸ்டர்ஸ் மற்றும் அவர்களுக்குள் நடக்கும் சண்டை பற்றியது. செம ட்விஸ்ட் & டர்ன் அங்கங்க. ஓப்பனிங்க் ஸீன் சூப்பர் ஸ்டாரோட தளபதி படத்த பாத்து அப்படியே காப்பி அடிச்சுருக்காங்க. இன்னும் நெறைய சீன்களும். 
 சரி மொத்தக் கதையும் என்னன்னு பாப்போம்.

ஓப்பன் பண்ண உடனேயே ஒரு குழந்தைய அவங்கம்மா அழுதுகிட்டே "எங்கிட்டு போனாலும் நல்லா இருடா மவனே"ன்னு சொல்லி ஒரு பெட்டிக்குள்ள வச்சு தண்ணிக்குள்ள விட்ருது. அது அப்படியே ட்ராவல் ஆகி போய் இன்னோரு ஊர்ல ஆத்துல ஆட்டோவ கழுவிக்கிட்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர்கிட்ட போய்டுது. அந்த டிரைவரும் அவரு சம்சாரமும் அந்தக் குழந்தையை எடுத்து, கர்லாக்கட்ட மாதிரி இருக்கதுனால கர்ணான்னு பேரு வச்சு வளர்க்க ஆரம்பிக்குறாங்க. அப்டிக்கா "ஆட்டோ கர்ணா" அப்படின்னு Zoom marquee ல Blowஆகி டைட்டில் கார்டு போடுறாங்க. அது முடிஞ்சவுடனே குழந்தைய வளர்க்க ஆரம்பிச்ச ஆட்டோ டிரைவர வயசானவரா காட்டுறாங்க. அவரு சம்சாரத்தையும். அந்தம்மா "இன்னாய்யா இது? பொறந்தநாளு அதுவுமா இந்த கர்ணம்பயல காணோமே"ன்னு கேக்க "அவ்ந்தான் ரேசு கீசுன்னு வந்தா வீட்ல தங்க மாட்றானே. நம்ம பெத்த புள்ளையா இருந்தா சொல்லலாம். இது கைல என்னாத்த சொல்றது"ன்னு சொல்றாரு. கரெக்ட்டா அந்த டயத்துல வீட்டுக்கு வந்த கர்ணம்பய(25 years Guy - Auto Driver cum Gym boy cum DhaDha) காதுல அது விழுந்துருது. "இன்னாப்பா சொல்ற... அப்டின்னா மை மதர் யாருமை மதர்... மததததர்"ன்னு கேட்டுகிட்டே கர்ணா eyes Full ஆ  Tears வுட"தெரியலப்பா தெரியலயே"ன்னு சொல்லி அவங்கப்பா ஆட்டோக்காரும் அழுவுறாரு. இந்த நேரத்துல அவங்க ஏரியாவுக்கு ஆப்போஸிட் கேங்ல இருந்து அஞ்சு பேரு வந்து, "தில்லிருந்தா இந்த பஞ்சா கேங்கிட்ட கவுட்டப்புள்ளு வுடுற காம்பெடிஷன்ல மோதிப்பாருங்கடா"ன்னு  கர்ணா ப்ரண்டு துரியோதன்கிட்ட வம்பு பண்றாங்க. அப்படியே அந்த ஏரியால இருந்த மரத்துல ரெண்டு மாங்காயையும் கவுட்டாப்புள்ளுல தட்டுறாங்க. (ந.கு : பஞ்சா கேங்குல அஞ்சு பேருக்கும் சேத்து ஒரே ஒரு பிகர்தான் ஜிகிடி. For Imagination சரோஜா படத்துல வர்ற நிகிதா மாதிரி) அப்ப டக்னு  கர்ணா என்ட்ரி ஆகி "த்தா.. யாருகிட்ட. இப்போ பாருங்கடா"ன்னு சொல்லி அந்த ஏரியால செம பெர்பார்மன்ஸ் காட்டுறாரு. மாங்கா, தேங்கா, கெழவி தலைல இருந்த மோர்ச்சட்டி, ஆப்போசிட் IT Companyல இருந்த கண்ணாடின்னு எல்லாத்தையும் கவுட்டாப்புள்ளுல கல்ல வச்சு போட்டுத் தள்ளுறாரு. அத தாங்க முடியாத பஞ்சா குரூப்ஸ் "ஆத்தா அப்பன் பேரு தெரியாத ஆட்டோ டிரைவர்லாம் காம்பெடிஷன்ல கலந்துக்க கூடாது"ன்னு சொல்லி கலாய்க்க  கர்ணா மெர்சலாகிடுறாரு. டக்னு உள்ளார பூந்து துரியோதனன் "யார்டா ஆட்டோ டிரைவர்... இனிமேல் என்கிட்ட இருக்க பாதி ஏரியாக்கு இவந்தான்டா தாதா... பாதி பேருக்கு இவந்தான்டா தலைவன்.. என் தளபதிடா இவன்"னு சொல்ல  கர்ணா "மச்சி சூப்பர்டா... உன் லைப்புக்கு 100% நான் கியாரண்டிடா... மதர் பிராமிஸ்"ன்னு ஆனந்தக்கண்ணீர் வடிக்கசல்லோ சீனக் கட் பண்றானுக. அப்படியே கர்ணன் ஏரியால நல்ல தாதாவா இருந்து எல்லாருக்கும் நல்லது பண்ண ஆரம்பிக்குறாரு. கைல இருக்க அம்பது-நூறு, ஆட்டோல வேலை செய்யாமப் போன பழைய ஸ்பேர் பார்ட்ஸ், பழைய பேண்ட், கிழிஞ்ச சட்டை இப்படி எல்லாத்தையும் கூட எல்லாருக்கும் தானமா குடுக்குறாரு.


 ஒரு நாளு துரியோதனன் அவரோட சம்சாரத்த "கர்ணா, இது ஒனக்கு சிஸ்டரு"  "மை ஒய்பு, இது ஒனக்கு பிரதரு"ன்னு சொல்லி இன்ட்ரோ குடுக்க அவங்க அப்படியே "அண்ணாத்த அண்ணாத்த " - "தங்கச்சி நீதாம்மா என் கட்சி"ன்னு பாசம் காட்டுறாங்கோ. சேம் பாசமலர் குரூப்ஸ். ஒரு நாளைக்கு அண்ணனும் தங்கச்சியும் கேரம் ஆடுறப்போ ஏதோ சொல்லிக்கிட்டே அந்த தங்கச்சி எந்திரிச்சு போகுது. "ஏய்... எங்க புள்ள போற"ன்னு இவரு அதப்புடிக்க அது இடுப்புல இருந்த பாசி அந்து போகுது. அந்த நேரத்துல உள்ளார வர்ற துரியோதனன் "அல்லாப் பாசியும் எடுத்து நா வேணா நூலு போட்டுனு கோக்கவா"ன்னு கேக்க "மச்சி ப்ளீஸ் மச்சி, தப்பா நெனைக்காதடா"ன்னு  கர்ணா பீல் ஆவுறாரு. "என் ப்ரெண்டப் போல யாரு மச்சான்... அவன் ட்ரெண்டையெல்லாம் மாத்தி வச்சான்..."ன்னு துரியோத் சொல்ல, தங்கச்சி கேரக்டர் அழ சீனக் கட் பண்றானுக.

இன்னோரு நாள்  கர்ணா ரோட்டுல நிக்கேல ஒரு பொண்ணு "கார் மேய்ன் பிரேக் நஹி ஹை... மேரா நாம் சகுத் பஹி ஹை..."ன்னு கத்திகிட்டே இஸ்பீடா கார்ல போகுது. அது ஒரு சேட்டுப்பொண்ணு.  இவரு டக்னு உள்ள குதிச்சு பேனட் மூடியத் தொறந்து ஜஸ்ட் லைக் தாட் கார இஸ்டாப் பண்ண அந்தப்பொண்ணுக்கு  கர்ணா மேல லவ்வாகிடுது. "இந்தாடி... எந்த ஏரியா பிகருடி நீயி"ன்னு கர்ணா கேக்க அந்தப் பொண்ணு மூஞ்சில கைய வச்சுட்டு, படிக்கிற மாதிரி சைகை காமிச்சுட்டு ஓடிருது. இவரு டக்னு ஏரியால வந்து "புல் அடிச்சும் போதையில்லை, புல்லட் பீரடிச்சும் கிக்கு இல்லை"ன்னு லவ்ல ராவடி பண்றாரு. டக்னு அங்க ஒரு ட்ரீம் சாங். துரியோதனன் வந்து "மச்சி, பிகரு பேர் என்ன, எந்த ஏரியா, இன்னா மேட்டரு"ன்னு கேக்க "ஒண்ணுமே தெர்ல மச்சி"ன்னு சொல்லி கர்ணன் அவ பண்ண ஆக்ஷன பண்ணிக் காட்டுறாரு. "ஒரு எளவும் புரியல.. இது ஆவுறதுல்ல மச்சி... கஷ்டம் டா"ன்னு சொல்லிட்டே "வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு.. மூடி தொறக்கும் போதே நம்மள கவுக்கும் குவாட்டரு"ன்னு ஓகே ஒகே ஸாங்கப் போடுறாரு. அந்நேரத்துல அங்க வர்ற அவரோட சம்சாரம் "போய்யா போய்யா பொங்சு... அந்தப் பொண்ணு சொன்னதுக்கு அர்த்தம் எனக்குத் தெரியும்... மூஞ்சில கைய வச்சு படிக்கிற மாதிரி காமிச்சா இன்னா அர்த்தம்.. மூஞ்சிபுக்... அதான்யா பேஸ்புக்ல தேடிக் கண்டுபிடின்னு சொல்லிருக்குதுய்யா. போய் எல்லா சேட்டு பிகர் புரொபைலையும் தேடுங்க."ன்னு சொல்ல  கர்ணா  மூஞ்சி பத்துவாட்ஸ் பல்பு மாதிரி ப்ரைட் ஆவுது. சீனக் கட் பண்றானுக.


 நெக்ஸ்ட் சீனே மேரேஜ்தான். மேரேஜ் முடிஞ்சன்னிக்கி ராத்திரிக்கா பொண்ணோட அப்பாவுக்கு  கர்ணா  பேருக்குதான் தாதா... ஆனா உண்மையிலேயே ஆட்டோ டிரைவர்ன்னு தெரியவர, அவரு "ஆட்டோ டிரைவர் மேலே ஆன மேரேஜும் அடைச்சுக்கிட்டு நிக்கிற ட்ரைனேஜும் மீ சேட்டுக்கு ஒண்ணுதான்" அது இதுன்னு பஞ்சு டயலாக்லாம் பேசி பர்ஸ்ட் நைட் நடக்க விடாமப் பண்றாரு சேட்டு கர்ணா மூடவுட் ஆகி அழுதுகிட்டே ஏரியாக்கு வர்றாரு. பேக்கிரவுண்ட்ல "என் அழகென்ன என் தொழிலென்ன.. ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு". பாத்தா அவருக்கு முன்னாடியே அந்த பிகரு ஐ மீன் அவரு ஒய்பு அங்க வந்து நிக்கிது. "என்னா புள்ள நீ எப்படி வந்த"ன்னு  கர்ணா  கேக்க "எங்கப்பன் ஒரு லூசுப்பய... பேமானி.. அவன் சொல்றதெல்லாம் மதிக்க வேணாம்"ன்னு சொல்லுது. "அது சரி... எனக்கு முன்னாடியே எப்படி இங்க வந்த"ன்னு கேக்க "ம்ம்ம்... ஆட்டோக்காரன் பொண்டாட்டி ஆட்டோல தான் வந்தேன்"ன்னு அந்தப் பொண்ணு சொல்ல "நீயும் என்னைய ஆட்டோக்காரன்னு சொல்றியேயேயேயே"ன்னு ஜெர்க்காகி பீலிங்ஸ் காட்டுறாரு. "யோவ்... டயத்த வேஸ்ட் பண்ண வேணாம்யா, வாய்யா" அப்படின்னு அந்தப் பொண்ணு சொல்ல அப்படியே அங்க ஒரு பர்ஸ்ட் நைட் சாங்.
சாங்க க்ளோஸ் பண்ணிட்டு அப்படியே இடைவேளை ஸ்லைடு போடுறாங்க..

Second Half புல் ஆக்ஷன் ப்ளாக் & இண்டெலிஜென்ட் ட்விஸ்ட்ஸ்... சீயான் விக்ரம் வாய்ஸ்ல சொல்லனும்னா "ஹே சுசி/லிங்கு/விஜய்... வெரி நைஸ் ஸ்க்ரிப்ட் யூ நோ.. Shall we remake this? "ன்னு கேக்குற மாதிரியான புல்டைம் ஆக்ஷன்...


தொடரும்... 

இது யாரையும் எந்தப் படைப்பையும் தரக்குறைவாக சித்தரிக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல... ஏதாவது ஒரு படத்தைப் பகடி செய்து ரீமேக் எழுதமுடியுமா என்று இணைய நண்பர் ஒருவர் கேட்டதன் பேரில் செய்து பார்த்த முதல் முயற்சி... வாழ்த்தோ வசவோ, எதுவாக இருந்தாலும் இங்கேயே சொல்லி விடுங்கள். Don't be a Buddha here.. Just be a Laughing Buddha. All for Fun :))


இரண்டாம் பாகம் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

13 பேர் சொன்னது என்னான்னா..:

Kaarthik said...

செம பகடி. இப்போதான் ப்ளஸ்ல இந்த http://goo.gl/cvhXj மகாபாரதப் பகடி படிச்சேன். இது அதவிட சூப்பர்:-)//மூஞ்சில கைய வச்சு படிக்கிற மாதிரி காமிச்சா இன்னா அர்த்தம்.. மூஞ்சிபுக்... அதான்யா பேஸ்புக்ல தேடிக் கண்டுபிடின்னு சொல்லிருக்குதுய்யா// - lol :-))

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

ராம்குமார் - அமுதன் said...

நன்றி துளசி அம்மா... தாங்கள் என்னுடைய முந்தைய பதிவையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். :))

ராம்குமார் - அமுதன் said...

மிக்க நன்றி கார்த்திக்... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் :))

கானா பிரபா said...

கலக்கல்ஸ் மாம்ஸ் :)

கானா பிரபா said...

கலக்கல்ஸ் மாம்ஸ்

புதியவன் said...

மூஞ்சில கைய வச்சு படிக்கிற மாதிரி காமிச்சா இன்னா அர்த்தம்.. மூஞ்சிபுக்... அதான்யா பேஸ்புக்ல தேடிக் கண்டுபிடின்னு சொல்லிருக்குதுய்யா.
டைரக்டருக்கான அனைத்துத் திறமைகளும் உங்களிடம் உள்ளன. என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் இன்னும்...
புதியவன்
pudhiavan.blogspot.com

ராம்குமார் - அமுதன் said...

@கானாபிரபா : நன்றி தலைவா :))

ராம்குமார் - அமுதன் said...

@புதியவன்: நன்றி புதியவன்... என்னைய வச்சு காமெடீ கீமெடீ பண்ணலையே... அவ்வ்வ்வ்வ் :))

Anonymous said...

ரொம்ப நல்லா வந்திருக்கு. ஒரு சின்ன சஜெஷன். முதல் பத்தியை எடுத்துவிடுங்களேன் ! எள்ளல் இன்னும் கூடி வரும்.

ராம்குமார் - அமுதன் said...

அன்பின் நண்பர் ஹேம்கன்... நன்றிகள், வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்.... நீங்கள் சொன்ன திருத்தத்தை செய்து விட்டேன். முதல் பத்தியைக் கடைசிக்குத் தள்ளிவிட்டேன்.:))

Anonymous said...

excellent...ரசனையான பதிவு இது. பாராவை சின்ன சின்னதாக பிரித்துப் போட்டால் மேலும் மெருகேற்றலாம்.

cheena (சீனா) said...

அன்பின் ராம்குமார் - சூப்பர்யா - தூள் கெளப்பிட்டீங்க - வி.வி.சி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.