Sunday, April 29, 2012

மினி மீல்ஸ் - 29/04/2012

ஒரு கடவுள் எம்.பி ஆகிறார் :

சச்சின் ராஜ்யசபா எம்.பி ஆகிறார். கிட்டத்தட்ட விவரம் தெரிந்த வயதில் இருந்து சச்சினின் அதிதீவிர விசிறிகள் பலருக்கும் இது கொஞ்சம் வருத்தமே. சச்சினுக்கு அரசியலெல்லாம் ஒத்து வருவதற்கு வாய்ப்பே இல்லை. வரும்காலங்களில் இந்தியாவின் எந்தவொரு முக்கியப் பிரச்சனையிலும் பாராளுமன்றத்தின் நட்சத்திர எம்.பியாக சச்சினின் கருத்தை பூஸ்ட் செய்யும் மீடியா. பற்பல விமர்சனங்களுக்குள்ளாக வேண்டியதிருக்கும். இது காங்கிரஸ் கட்சி இழந்திருக்கும் தனது மைலேஜை தக்கவைக்க செய்யும் முயற்சியாகவே படுகின்றது. எப்படியும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் சச்சினை ஓட்டுக்கேட்க விட்டு விடுவார்களோ என்ற பயமும் வருகிறது. "கடவுள் நூறாவது நூறு அடித்தார்" என்பதைப் போல "கடவுள் எம்.பி ஆகிறார்" என்பதைக் கொண்டாட முடியவில்லை. நம் சமூகத்தின் அரசியல் நிலவரம் அப்படி இருப்பதால். மொத்தத்தில் ஒரே கேள்வியாய்க் கேட்க வேண்டுமானால்
"கத்திக் கதறும் சில நூறு கயவர்களுக்கு மத்தியில் அமர்ந்து அமைதியின் திருவுருமான சச்சின் என்ன செய்யப் போகிறார்?"

தப்பு பண்ணிட்டியோ தல. :(அடங்காத காளை ஒண்ணு அடிமாடாப் போனதடி
கண்மணி என் கண்மணி !!!

#Very first time in my life posting/thinking an unhappy message about the God of cricket.
கடவுளுக்கும் அடி சறுக்கும்... கடவுளுக்கும் அடி சறுக்கும்… கடவுளுக்கும் அடி சறுக்கும்…

IPL Corner :


ஐ.பி.எல் அடி தூளாகப் போய்க் கொண்டிருக்கிறது. டெல்லி உச்சத்தில். மற்றவை எல்லாமே மிச்சத்தில். சேவாக் அத்துணை பவுலர்களையும் மரண ஓலத்தில் கதறவிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் வெள்ளிக்கிழமை நடந்த Mumbai VS Delhi மேட்ச்சில் மும்பை இண்டியன்சை முத்தழகு ரேஞ்சுக்கு ரேப்பித் தள்ளி விட்டார். மரண அடி. பொல்லார்டைப் பொலம்ப விட்டு பொளந்ததில் 22 ரன்கள் ஒரே ஓவரில். பீட்டர்சன், சேவாக், மார்னே மார்க்கல் - இவர்கள் மூவரின பெர்பர்மன்ஸைப் பொறுத்தே கோப்பைக்கனவு டெல்லிக்கு சாத்தியாமாகுமா என்பதைப் பார்க்க வேண்டும். சேவாக்கைத் தொடர்ந்து காம்பீரும் கிடைக்கும் கேப்பிலெல்லாம் பிரமாதமான Captain's knock ஆடி வருகிறார். இன்றைய பெண்களூருடனான போட்டியில் அவர் அடித்த 93 ரன்கள் அடிப்பொலி அதகளம். 20 - 20 உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் இந்தியாவின் ஓப்பனர்கள் இருவரும் தத்தம் அணிகளுக்காக பிரமாதமான ஃபார்மில் ஆடிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயமே. 


                                                            
                                                        இந்த வாரத்தில் அசத்திய இன்னோரு பேட்ஸ்மேன் மும்பையின் அம்பத்தி ராயுடு. அருமையான இரண்டு இன்னிங்ஸ். சீக்கிரத்தில் இவரை இந்திய அணியில் காணவேண்டும் என்பது என் அவ்வா அவ்வா அவாவா. அதுவும் தேவையான நேரத்தில் பஞ்சாபின் சாவ்லாவை 'சாவு'லா ஆக்கியதில் இவரும் ராபின் பீட்டர்சனும் 19வது ஓவரில் அடித்தது 27 ரன்கள். “IPL matches are not done with until the last ball is bowled” என்று சொல்லப்படுவதை  “IPL matches are not done with until the 19th Over is bowled” என்று redefine செய்து கொள்ளலாம் போல. அந்தளவுக்கு கோலி, நெஹ்ரா, சாவ்லா போன்ற அற்புதமான பவுலர்களால் இந்த IPLல் 19வது ஓவர் முக்கியத்துவம் பெற்று வருகிறது. "சங்கூதுற நேரத்தில் சங்ககாராவுக்கு வெற்றி" என டெக்கானும் புனேக்கு எதிராக பெயருக்கு ஒரு வெற்றியைப் பதிவு செய்து கொண்டது.
                                               
                                                       இவ்வாரத்தில். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான பெண்களூர் - சென்னைப் போட்டி டாஸோடு நின்று போனதில் கொஞ்சம் ஏமாற்றமே. "மிஸ்டர்.வருண்பக்வான், ஒய் திஸ் மழவெறி?". கெய்லும் எதிர்பார்த்தது போலவே அடித்து நொறுக்கி ஆரஞ்சு கேப்பெல்லாம் வாங்கினாலும் பெண்களூரின் மற்ற துறைகள் அனைத்துமே படு திராபையாக இருப்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. மொத்தத்தில் வரும் வாரம்தான் டெல்லியைத் தவிர மற்ற மூன்று அரையிறுதிப் போட்டியாளர்கள் யார் யாரென முடிவு செய்யும் முக்கியமான வாரம். பார்க்கலாம்.

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPLIPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL

சில IPL ட்வீட்ஸ் :

ஒரு சின்னப்புள்ளைய, கொழந்தைய, பச்சமண்ணப் போட்டு இப்படியா அடிக்கிறது. பொளந்துட்டாய்ங்கடா பொல்லார்ட்ட #22SewhagBeatenPollardtoDeath #MIvsDD

பர்த்தீவ் பட்டேல் ஸ்டம்பை நோக்கி குறி பார்த்து எறிந்து ரன் அவுட். டெக்கான் வெற்றி. #நாஞ்சொல்லல நாதஸ் திருந்திட்டான்னு..

A perfect gift pack of entertainment from Sewhag on this auspicious Sachin Jayanthi Or Sachmas # #Happy Birthday Sachin #Sewhaaaaag celebrated sachin's birthday in his own way.

நாந்தான் அப்பவே சொன்னேன்ல, ஆணி போய் ஆடி போய் ஆவணி வந்தா மும்பை டாப்பா வரும்ன்னு #வின்ன்ன்ன்னேய் #MIvsPXI #MumWon #Rohith&Chawla-Key Players of the match.


இனி சென்னைக்கான IPL கப் என்பது காசியப்பன் பாத்திரக்கடையில் மட்டுமே கிடைக்கும். #CSKvsKXIP #IPL #CSKLoss 


அசார் முகம்மத் என்ற தனிமனிதனின் பவுலிங் திறமையினால் மட்டுமே பஞ்சாப் இன்னும் இந்த IPLல் நி(ம)ன்றாடிக் கொண்டிருக்கிறது. #PKXI #KudosAzharBhai

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPLIPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL

இந்த வாரத்தில் வெளியான பில்லா - 2வின் டீசர்களில் வரும் கேங் கேங் கேங்ஸ்டர் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது. அஜீத் கோட்டு போட்டு நடக்கும் படங்கள் என்றாலே யுவன் இசையில் பிச்சு உதறி விடுகிறார்.. அவ்வகையில் இப்படமும் சேரும்.

####################

ஆனந்த விகடன் வலைபாயுதேவில் முதன்முறையாக பெயர் பதித்த நண்பர், "நிதர்சன ட்வீட்டர்" தமிழ்பறவைக்கு வாழ்த்துகள். @Tparavai

 ####################


சில ட்வீட்ஸ் :

மதுரை ஆதினமானார் நித்யானந்தா  # அப்படியே ரஞ்சிதாவ எம்.எல்.ஏ ஆக்கி நமீதாவ மேயர் ஆக்கீட்டீங்கன்னா மதுரையே ச்சும்மா ஜிகர்தண்டா மாதிரியே ஜில்ன்னு இருக்கும்ல.
காசு பணம் வந்தா காக்கா கூட கலராகிடும்டா மகனே. கலர் மட்டுமல்ல ஆதினமும்...என்ன தவம் செய்தனை.KTVல் தருமபுரி. கேப்டனின் டான்சுக்கு ஆஸ்கார் விருது குடுக்கவிடினும் எம்.எஸ்.பாஸ்கார் விருதாவது குடுக்க பரிந்துரைக்கிறேன் #Captainroxx

Youtube என்னடா youtube. தருமபுரி படப்பாடல்களை தன்னகத்தே கொள்ளாத youtubeஐ எதிர்த்து ஒருநாள் எதிர்கட்சி பந்த் அறிவிங்க கேப்டன் #ஆளுங்கட்சி சதி

####################
கார்ட்டூன் கார்னர் : 

சில சமயங்களில் எல்லாருக்குமே இப்படி ஒரு டை தேவைப்படுகிறது ;))

இணைய உண்மை


####################

இனம், மொழி, மண், நிறம், தேசம் கடந்து - என்றுமே அன்பிற்கான முதல் சொல் அம்மா.
இரண்டே நிமிடங்களில் ஒரு அருமையான காணொளி.

Thursday, April 26, 2012

நான் சொன்னது தப்பா சார்...


இன்றே கடைசி, மதியத்துக்குள் குடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் குடுக்க வேண்டிய விண்ணப்பத்தைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். பெயர், பிறந்த தினம், கல்வித்தகவல்கள், முகவரி, அலைபேசி எண். எல்லாம் சரியாகவே இருந்தது. விண்ணப்பத்தின் கூடவே சமர்பிக்க வேண்டிய சான்றிதழ் நகல்களின் பட்டியலையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டேன். கிளம்ப எத்தனிக்கையில்தான் அந்த வாக்கியம் கண்ணில் பட்டது. "All the Certificate photocopies must be duly attested" . அட, இதை எப்படி கவனிக்காமல் விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கின்றது. பல்கலைக்கழகத்துக்கு எட்டு கிலோமீட்டர் போக வேண்டும். இன்று சனிக்கிழமை வேறு. எங்கு போய் attestation வாங்குவது. யாரிடம் வாங்குவது. இதே நெல்லையாய் இருந்தால், attestation போடுவதற்கு தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஏன், எனது அம்மா அப்பா இருவருமே கூட ஓய்வு பெறும் வரையில் பலருக்கும் attest பண்ணியிருக்கிறார்கள்.. ஆனால் சென்னையில எனது பழக்கம் எல்லாமே தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நண்பர்களோடே என்பதால் Attestation போடுமளவிற்கு அரசு துறையில் உள்ளவர்கள் யாரும் பழக்கம் இல்லை. என்ன செய்வது? தோன்றியது, வீட்டின் அருகில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்தில் போய் கேட்டுப் பார்க்கலாம். பொறியாளர் எவரேனும் இருந்தால் போடுவார்கள். எல்லாச் சான்றிதழ்களின் அசலையும் நகலையும் எடுத்துக் கொண்டு அங்கே போனேன்.

கையில் பைலோடு உள்நுழைவதைப் பார்த்த கடைநிலை சிப்பந்தி ஒருவர் வழிமறித்தார்.

"யாரு சார்? என்ன வேணும்?"

"AE,  ADE யாராவது இருக்காங்களா? பாக்கணும்"

"கமெர்ஷியல் கனெக்ஷன் தான? மொதல்ல என்கிட்ட சொல்லுங்க சார்.. நேரா AEயப் பாக்க முடியாது."  - பைலைப் பார்த்து தப்பாக நினைத்திருந்தார்.

"கனெக்ஷன்லாம் இல்லீங்க. Attestation வாங்கனும். அதான்.."

" Attestationஆ... போங்க... உள்ளார யாராவது இருந்தா போய்ப்பாருங்க." சில்லறை தேறாது என்ற கடுப்பில் தலையைச் சொறிந்து கொண்டு போனார்.

இன்னும் இரண்டு மூன்று பேரைக் கடந்த போதும் இதே. Attestation என்ற வார்த்தையைக் கேட்டதுமே ஏதோ பல்பு திருடியவனைப் பார்ப்பது போல் கேவலமாகப் பார்த்தார்கள். ஒருவழியாக AEன் அறையை நெருங்கி வாசலில் போய் நின்றேன். இரண்டு மூன்று முறை ஏறெடுத்துப் பார்த்தார். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. நான்காம் முறை பார்த்த பொழுது கேட்டார்

"யாரு நீங்க என்ன வேணும்?"

" Attestation வேணும் சார்"

"எதுக்கு Attestation?"

"காலேஜ் அப்ளிக்கேஷனுக்கு certificate, Marksheet attestation "

"அது ஏன் சார் சனிக்கிழமை வர்றீங்க... வாரநாள்ல வர வேண்டியதுதான. போய்ட்டு திங்கக்கிழமை வாங்க.."  - அது வரையில் அவர் துக்ளக்தான் படித்துக் கொண்டிருந்தார் என்பதை இந்த இடத்திலே சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் மை லார்ட்.

"இல்ல சார், இன்னிக்கு கடைசி நாள்... குடுக்கணும்"

"உங்க கடைசி நேர அவசரத்துக்கு எங்களையும் பாடாப்படுத்துங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க தம்பி" சொல்லியவாறே எழுந்து போய் கம்ப்யூட்டரில் போய் உட்கார்ந்தார். கண்டிப்பாக சீட்டுதான் விளையாடப் போகிறார் என்று உள்மனது சொல்லியது. ஆனால் இல்லை.

"யோவ் ராமநாதன், அந்த DC பண்ணதுல பில்லு கட்டுனவன் லிஸ்டக் கொண்டாய்யா... இந்த எளவுல என்ட்ரியப் போடணும்" என்று சொல்லியவாறே சிஸ்டத்தை ஆன் செய்து மவுசைத் ஆட்டிக் கொண்டே இருந்தார். ராமநாதன் வந்து லிஸ்டைக் கொடுத்துவிட்டு என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் போனார். ராமநாதன் - அந்த முதல் கமர்ஷியல் கனக்ஷனார்.  சிரித்து வைத்தேன்.

ஒரு ஐந்து நிமிடம் போயிருந்தது. என்னதான் செய்கிறார் என்று தற்செயலாகப் பார்த்தே. வினோதமாக ஏதோ செய்து கொண்டிருந்தார்.  முதலில் மவுசை வைத்து மவுஸ்பேடில் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ போட்டார். பின்னர் ஒரு க்ளிக். திரும்பவும் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ. பின்னர் ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.  மீண்டும்  பதினாறு, க்ளிக், பதினாறு, டைப்பிங்…. தொடர்ந்து கொண்டிருந்தது. விஷயம் என்னவென்றால், அது ஒரு Form. நான்கு Text Boxகளை Fill பண்ண வேண்டும். Submit.  ஒவ்வொரு Text Boxஐயும் தேடிப் போய் க்ளிக் பண்ணி விட்டு மீண்டும் Mouse cursorஐ மானிட்டரின் கீழே ஓரத்துக்கு கொண்டு வந்து வைத்து விடுகிறார். டைப் செய்கிறார். மீண்டும் ஜென்மப் பிரயத்தனத்தில் மவுசை நகட்டி நகட்டி அடுத்த Text Boxல் க்ளிக். மீண்டும் மானிட்டரின் ஓரம். ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.  

என்னுடைய ஏழரை அங்கேதான் தொடங்கியது. சனி வாய் வழியாக வந்தது.

"சார்... ... .... .... ... ....." -  அதை நான் சொல்லி விட்டேன்.

ஏறிட்டுப் பார்த்து "என்ன சொன்னீங்க?" என்றார். அதைக் காட்டி மீண்டும் அதையே சொன்னேன். அங்கே ஆரம்பித்தது டண்டணக்கா.

"கம்ப்யூட்டர் தெரியும்ன்னு திமிரு காட்றீங்களா..? என்ன வேலை பாக்குறீங்க?"

"சாப்ட்வேர்லதான் சார். ஆனா அப்படில்லாம் இல்ல சார்.. நான் சொன்னது.. சார்... சாரி... அது வந்து"

"வருவீங்க இத அடி, அத அடின்னு சொல்லுவீங்க. அப்புறம் கம்ப்யூட்டர் நொட்டையா வேல செய்யாம ரிப்பேராப் போகும். யாரு பாக்குறது. நீ வந்து ஓசில சர்வீஸ் பண்ணுவியா.. எதாவதுன்னா என் சம்பளத்துல கைக்காசு போட்டு பாக்க சொல்லி தாளி அறுப்பானுங்க. நீ வந்து பாப்பியா? சொல்லுய்யா..."

"சார்... அது வந்து சார்... அப்படில்லாம் ஒன்னும் ஆகாது சார்..."

"என்னாது வந்து போயி... இப்படித்தான் முன்னால வந்தவன் ஒருத்தன் கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்ன்னான். கம்ப்யூட்டர் Slowவா இருக்கு பாக்குறீங்களான்னு கேட்டதுக்கு இத்த அத்தன்னு எத்தையோ கெலிட்(delete) பண்ணீட்டு போய்ட்டான். இந்த சனியன் 3 மாசமா வேலை செய்யாமக் கெடந்தது. என்னையப் போட்டு கொடஞ்சிட்டானுக.. தேவையா எனக்கு"

"சார்... அது வந்து... அப்படில்லாம்... சார்..."

"போயிரு… Attestationலாம் ஒன்ணும் போட முடியாது... போயிரு"

"சார்... சாரி சார்.. இல்ல அது சார்.. சாரி சார்..."

"போங்கறேன்ல... போயிரு" என்று கோபத்தில் மவுசை வைத்து மவுஸ் பேடில் 360, 3350 எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஏப்ரல் மாசம் வேற... ராத்திரிக்கு கரண்டப் புடுங்கிட்டானுகன்னா Fan, AC ஓடாது என்பதால் கம்மென்று கிளம்பி விட்டேன்.

அவரிடம் நான் சொன்னது இதுதான்.... இது மட்டும்தான்

"சார்... இந்த Tab Key ah அடிச்சீங்கன்னா அடுத்தடுத்த Text boxக்கு ஆட்டோமேடிக்காப் போகும். Mouse ah use பண்ண தேவை இல்லை."நான் சொன்னது தப்பா சார்?

****************************
பக்கத்திலேயே இருந்த அரசு மருத்துவர் ஒருவரிடத்தில் Attestation வாங்கப் போனேன். நல்லவேளையாக அவர் அறையில் கம்ப்யூட்டர் எதுவும் இல்லாத காரணத்தால் அன்றே அப்ளிகேஷனைக் கொடுக்க முடிந்தது.  

கடவுள் இருக்கான் கொமாரு.

Monday, April 23, 2012

மினி மீல்ஸ் - 23/4/2012


IPL கார்னர் :

சென்ற வாரம் முழுக்கவே ஐ.பி.எல் போட்டிகளை follow பண்ணவே முடியவில்லை. கொம்பேனியில் ஆணிகள் மிக மிக மிக மிக அதிகமாக இருந்த இருக்கின்ற காரணத்தால். "உனக்கு மட்டும் எப்படிடா எல்லாத்துக்கும் நேரம் இருக்கு? எல்லா படமும் பர்ஸ்ட் நாள் பாக்குற,  ப்ளாக் எழுதுற, ஊர் சுத்துற, 24 மணி நேரமும் பேஸ்புக்லயே பழியா கெடக்குற... விடாம எல்லா மேட்ச்சும் பாக்குற… வேல வெட்டியே இல்ல... ம்ம்ம்ம்" என்று மனம் வெதும்பி, புழுங்கி, புகைந்த சில சதிகாரர்களால்தான் இப்படி ஆகியிருக்கக் கூடும் என்பதைக் கணம் கோர்ட்டார் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் Cricinfoல் அவ்வப்பொழுது மேய்வதில் ராஜஸ்தானும், டெல்லியும் கிட்டத்தட்ட அரையிறுதி நெருங்கி விட்டதாகத் தெரிகின்றது. நான் முதல் மினி மீல்ஸிலேயே சொன்னேன் ரஹானேவும், ராஜஸ்தானும் நம்பிக்கையூட்டுகிறார்கள் என்று. ரா-ரா பொய்க்கவில்லை. கெய்லும் அதகளப்படுத்திக் கொண்டுதானிருக்கிறார். மார்க்கல் திரும்பியது சென்னைக்கு கொஞ்சம் பின்னடைவே. பார்ப்போம்.

IPL ஆணி IPL ஆணி IPL ஆணி IPL ஆணி IPL ஆணி IPL ஆணி IPL ஆணி IPL ஆணி 

இன்று உலக புத்தக தினமாம். புத்தகங்களுக்கும் ஒரு தினமென மனதுக்கு மகிழ்ச்சி. கவிப்பேரரசின் இந்த வரிகளை விட புத்தகம் பற்றி வேறென்ன சொல்லிவிட முடியும்.

உயிரின் சுவாசமல்லவா
புத்தகம்?

உனக்குள் ஒரு சூரியனல்லவா
புத்தகம்?

அட்டையிட்ட அமுதமல்லவா
புத்தகம்?

உனக்கு வரம்வர
யாரோ இருந்த தவமல்லவா
புத்தகம்?

இந்த வாரத்தில். வாத்தியாரின் 24 ரூபாய் தீவு வாசித்துக் கொண்டிருக்கிறேன். A typical commercial fast Sujatha piece.

இந்த வாரத்தில் வாசித்ததில் மிகவும் பிடித்த ஒரு பதிவு. வாத்தியார் நாவல்களில் பரவலாக வரும் சுஜாதா ஸ்டைல் க்ளிஷேக்களை நன்றாக அனலைஸ் செய்திருக்கிறான் எனது பள்ளி, கல்லூரி ஜூனியர் Smams. இந்த சுட்டியில் போய் வாசியுங்கள். பெங்களூரு மேட்டர், புறா மேட்டர் சூப்பர். வாத்தியார் ரசிகர்களுக்கு "அட, ஆமால்ல" சொல்ல வைக்கும் பல இடங்களையும் நுட்பமாய் குறிப்பிட்டிருக்கிறான். கலக்கல்டா தம்பி.

Book Book Book Book Book Book Book Book Book Book Book Book Book Book 

ஓ.கே ஓ.கே பார்த்தேன். படம் ஓ.கே. சந்தான சாம்ராஜ்யம். அந்த Flight சீன், Translation சீன் இரண்டும் சரவெடி காமெடி. ஹன்சிக்க்க்க்க்கா, யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா கண்ணக் கட்டுது. உதயநிதி – A welcome underplay performance. ஒ.கே ஓ.கே - ஒரு முறை பார்க்க - சில முறை சிரிக்க.

Ok ok ok ok ok ok ok ok ok ok ok ok ok ok ok ok Ok ok ok ok ok ok ok ok 

சென்ற வாரத்தில் ஒரு நாள், வீட்டுப்பக்கத்தில் உள்ள ஹெரிட்டேஜ் சூப்பர் மார்க்கெட் சென்ற பொழுது நடந்தது. செம க்யூட்டா ஒரு குட்டிப்பெண் அதன் அம்மாவுடன் ஷாப்பிங் வந்திருந்தாள். இரண்டரை வயது இருக்கலாம். அம்மாவிடம் ஐஸ் க்ரீம் கேட்டு அடம்பிடித்தாள். "சளி பிடிக்கும், ஊசி போடுவாங்க..." "முடியாது முடியாது" என்று சொல்லிக்கொண்டே இருந்தார் அந்த அம்மா. "அப்டின்னா... ச்சாக்கி ச்சாக்கி" என்று ஓடிப்போய் ஒரு Kinderjoy சாக்லேட்டைத் தூக்கியது அந்தக் குட்டி. உடனே அந்தப் பெண் ஓடி வந்து அதைபுடுங்கி வைத்துவிட்டு "வயித்துல பூச்சி வரும், ஊசி ஊசி... வேணாம்" என்றார். உம்மென்று மூஞ்சியை வைத்துக் கொண்டாள். அந்தம்மா பில்லெல்லாம் போட்டுவிட்டு வெளியே வந்து, அங்கே இருந்த soup yardல் ஒரு வெஜிடபுள் சூப் வாங்கி "இதைக் குடி.. ரொம்ப நல்லது... புரோட்டீன்ஸ், விட்டமின்ஸ் A, B, C,D,  Health conscious Diet“ இதெல்லாம் சொல்லி, அக்குழந்தைக்கு புரிகிறதா என்றெல்லாம் யோசிக்காமல் வலுக்கட்டாயமாக அதன் வாயில் சூப்பை ஊற்றிக் கொண்டிருந்தார். துப்பித் துப்பி, கிட்டத்தட்ட அழுது விடும் நிலையிலிருந்த அந்தக் குட்டியைப் பார்க்கையில் பாவமாகத்தான் இருந்தது.

                                                      "எனக்கு இந்த அப்ரைசலில் ஹைக் ஏன் கம்மியா இருக்கு?" என்று கேட்டால் "Company growth, Team pyramid, quarter-early results, people management, plotting the graph, market analysis" என்று எதை எதையோ சொல்லி, கடைசி வரை காசு மட்டும் தராமல் தப்பித்த சக மேனேஜரின்  நினைவு வந்தது இயல்பாகவே இருந்தது. கூடவே “இவன் எதைக் கேட்டாலும் கமல் மாதிரி புரியாமலே பேசுறான்டா” என்ற பாஸ் என்கிற பாஸ்கரன் வசனமும்.  வண்டியைக் கிளப்பிக் கொண்டு வந்து விட்டேன்.

ஆப்புரைசைல் டைம்ஸ் ஆப்புரைசைல் டைம்ஸ் ஆப்புரைசைல் டைம்ஸ் ஆப்புரைசைல் டைம்ஸ் 

பிரதீபா பாட்டீல் பொட்டியைக் கட்ட வேண்டிய காலம் வந்து விட்டது.  அடுத்த ஜனாதிபதிக்கான தேடல் தொடங்கி விட்டது. மீண்டும் கலாம்? என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ஜெ., முலாயம் ஆகியோரும் அதை முன்னிறுத்துவதாய் தெரிகிறது. ஆனால் என்னளவில் கலாம் மீண்டுமொரு முறை வேண்டாம் என்றே தோன்றுகிறது. கலாம் நல்ல அறிவியலாளர். மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த பொம்மைப் பொறுப்பில், அவர் மீண்டுமொரு முறை வேண்டாம் என்றே படுகிறது.

FORNEXTPRESIDENT FORNEXTPRESIDENT FORNEXTPRESIDENT FORNEXTPRESIDENT FORNEXTPRESIDENT

பூட்டான் தேசத்தில் ஒவ்வொரு வருடப்பிறப்பிலும் அனைவரும் தங்கள் வயதில் ஒன்றைக் கூட்டிக் கொள்ள வேண்டுமாம். Dec 31ல் பிறந்த குழந்தையானாலும், Jan 1ல் அதற்கு ஒரு வயது. பிறந்த நாள் கணக்கெல்லாம் கிடையாதாம். #இன்று ஒரு தகவல்

############################

கார்ட்டூன் கார்னர் :
############################

எனக்கு மிகவும் பிடித்த ஒரு பேன்டீன் ஷாம்பு விளம்பரம். ஒரு உலகப்படத்துக்கு இணையான - 4 நிமிடத்திற்குள் இப்படி ஒரு உருக்கமான படத்தை செய்து விட முடியுமா ? பிரமாதம். இது பெண்களின் கார்மேகக் கூந்தலுக்கான பேண்டின் விளம்பரம்தான். ஆனால் நான்காவது நிமிடத்தின் முடிவில் அலைபாய்வது அவளது கூந்தல் மட்டுமல்ல, நம் ஆத்மாவும்தான்..Saturday, April 14, 2012

மினி மீல்ஸ் - 14/04/2012

IPL Corner : 


ஐ.பி.எல் அதகளமாக களைகட்ட ஆரம்பித்து விட்டது. அதிலும் வியாழன் நடந்த சென்னை-பெங்களூரு போட்டி உச்சம். இரண்டு ஓவரில் 43 ரன்கள். மார்க்கல் கோலியைத் துவைத்ததில் 19வது ஓவரிலேயே 28 ரன்கள். கடைசி பந்தில் "2 மில்லியன் டாலர் பேபி" ஜடேஜா 4 அடிக்க சென்னைக்கு இந்தப்போட்டி சுபம்.  மனம் இருந்தால் Morkel உண்டு போனவாரம் சொன்னது போலவே கெய்ல் ஒரு "Extreme Entertainment" கொடுத்தார். ஆனால் சொத்தையான பவுலிங்காலும், தவறான முடிவாலும்(கோலி பவுலிங்) பெங்களூரு பணால். அதற்கு முந்தைய போட்டியில் டெல்லி நம்மை டெல்லி அப்பளம் போல சுக்குநூறாக நொறுக்கிவிட்டது.  வெறும் 110 ரன்கள். செவ்வாய்க் கிழமை நடந்த மற்றொரு போட்டியிலும் பெங்களூரு  மகா சொதப்பல். RCB vs KKR. அந்தப் போட்டிக்கு முதல் நாள் ஷாருக்கான் கம்பீரைக் கண்டபடி திட்டியிருக்கக் கூடும் என்றே படுகிறது. கம்பீர் பேட்டிங்கில் சாமியாடி விட்டார். 64 Runs in 39 Balls. பவுலிங்கில் நம்ம ஊர்ப்பையன் பாலாஜி  "பாரேன், இந்தப் பையனுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்" என்று சொல்லுமளவில் 4 விக்கெட்டுகளைக் கழற்றி MOM ஆனதில் கொல்கட்டா பெங்களூரிடம் தனக்கான வெற்றியைப் பதிவு செய்தது.   இன்னொரு நல்ல போட்டி Mumbai Vs Deccan Chargers . ரோகித் சர்மாவின் பிரமாதமான பேட்டிங் இன்னிங்க்ஸில் கடைசி பந்து வரை வந்து சிக்சர் அடித்ததில் மும்பைக்கு  சுபம். அந்தப்போட்டியின் முடிவில் தடவி தடவி கீப்பிங் செய்து DCன் தோல்விக்கு மிக முக்கிய காரணமான "பச்சப்புள்ள" பர்த்தீவ் பட்டேலையே பலரும் கழுவி கழுவி ஊத்தினார்கள். மும்பை ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் வென்றதையடுத்து ராஜஸ்தான் 2012ன் முதல் தோல்வியைப் பதிவு செய்தது. மேலும் சில போட்டிகள். ஆனால் மொத்தத்தில் போன வாரம் மும்பை வாரம். பார்க்கலாம் அடுத்தடுத்த வாரங்களில்.

சில IPL ட்வீட்ஸ் :


இனி நிம்மதியாக K TVல் தென்னவன் படத்தில் கிரண் கேப்டனை ரசித்து காதலில் விழும் காட்சிகளைப் பார்த்து ரசிக்கலாம். #IPL #PunvsPjb #DaDa out

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL
  
OOoooooooo Rohith... Fabulous innings, and what a way to finish the matchhh... Going to be one of the brilliant knocks of IPL5. சர்மான்னு பேரு வச்சவன் சளைக்காம வெளையாடுவான்ன்னு சங்கர் தயாள் சர்மாவே சொல்லிருக்காரு #IPL #MumVsDC #Rohith

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL

மல்லையாவைப் போலவே அவர் டீமும் பெய்ல் அவுட் கேட்டுக் கதறிக் கொண்டிருக்கிறது. கெய்ல் அவுட். சாச்சுப்புட்டியே கெய்லு. :(( #IPL #KKRvsRC #Ban 33/5

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL

 இப்போதான் IPLன் பர்ப்பிள் கேப்புக்கே பெருமை சேந்துருக்கு. நம்ம ஆங்கிலோ இன்டியன் ஆன்டி முனாப் பட்டேல் கைல. Super Aunty. #IPL #PurpleCap


IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL


மல்லையா... ப்ளீஸ் ப்ளீஸ்... கடைசி ஓவர் பேபி ஓவர் வச்சு கோலிக்கு 3 பால் குடுங்க ப்ளீஸ் #CSKvsRCB #28MorkelBeatenKohliToDeath

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL

 பாவம் கோழி(லி). இன்னிக்கு ராத்திரி கோழி கனவுல மார்க்கல் ஒரு 300 சிக்ஸாவது அடிப்பான்.. #IPL #CSKvsRCB #மனம் இருந்தால் Morkel உண்டு #WeWON

விகடன்  விகடன்  விகடன்  விகடன்  விகடன்  விகடன்  விகடன்  

ஆனந்த விகடனுடன் வெளிவரும் என் விகடனின் இந்த வார தென் தமிழ்நாடு(திண்டுக்கல் to கன்னியாகுமரி) பதிப்பின் வலையோசை பகுதியில் நெல்லை நண்பனுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். உண்மையிலேயே மகிழ்ச்சியான தருணம். அதுவும் சச்சினைப் பற்றிய பதிவும், என்னுடைய மங்கை சார் பற்றிய பதிவும் வந்திருந்தது மனதிற்கு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும். இதுவரையிலும் இனிமேலும் வாசித்து ஊக்கப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஒரு கோடி நன்றிகள். "ஆமா.. இவரு பெரிய மதன்...இவுரு திரைவிமர்சனம் எழுதலேன்னா படம் ஓடாது... ஒனக்கு எதுக்குடா இதெல்லாம் தேவை இல்லாம" என்று அட்வைஸ் பண்ணிய இன்னும் சில நண்பர்களுக்கும் நன்றிகள். ஆனால் உண்மையிலேயே விளையாட்டாக மட்டுமே பதிவு எழுத ஆரம்பித்த எனக்கு விகடனில் வந்திருப்பது என்பது மிக மிக மிகப் பெரிய அங்கீகாரமே. அதுவும் புகைப்படமெல்லாம் போட்டிருக்கிறார்கள். "நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு..." எந்நாளும் நன்றி விகடன்.

முதன்முதலில் விகடன் வலைதளத்தில் பார்த்துவிட்டு அழைத்துச் சொன்ன நண்பர் தமிழ்பறவைக்கு, "நன்றி சகா... நடக்கும் எல்லா நல்லதிலும் உடனிருக்கிறீர்கள்." உடனடியாக வாழ்த்தியதோடு ஐந்து "என் விகடன்" புத்தகங்களை வாங்கி கொரியரில் அனுப்பி வைத்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்தினவேல் ஐயாவுக்கு நன்றிகள் பல.

க்ளிக் செய்து பெரிதாக்கி படித்துக் கொள்ளவும்.

விகடன் விகடன்  விகடன்  விகடன்  விகடன்  விகடன்  விகடன்   


சில ட்வீட்ஸ் :


12-12 -2012 அப்ப கன்பார்மா? சீட் சும்மா கும்முனு ஆடுச்சு... மிஸ்.பூமாதேவி WTK #உள்ளே போனாலும் ஸ்டேட்டஸ் போடுவோர் கிளை, OMR. #Earthquake

Quake Shake Quake Shake Quake Shake Quake Shake Quake Shake  

இங்க மட்டும்தான் திரும்பவும் ஆடுதா ? எல்லாப் பக்கமும் ஆடுதா? #2ndTime at 4:24 PM #EarthQuake #OMR #Chennai #Shake

Quake Shake Quake Shake Quake Shake Quake Shake Quake Shake  

பரமா, சாவு பயத்தக் காட்டிட்டானுகடா பரமா. ஏதாவது செய்யனும்டா பரமா. #Earthquake #Chennai
Quake Shake Quake Shake Quake Shake Quake Shake Quake Shake  

பக்கத்துல ஒருத்தன் இன்னும் ஆடுது ஆடுதுன்றான். டேய் அது உன் பேன்ட் லூசா இருக்கதுனால காத்துல ஆடுது. முடியல டா # நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய.

Quake Shake Quake Shake Quake Shake Quake Shake Quake Shake  

‎"இந்த உலகின் கடைசி மனிதன் உட்கார்ந்திருந்தான். அந்த அறையின் கதவு தட்டப்பட்டது" #140Story #சுஜாதா

Quake Shake Quake Shake Quake Shake Quake Shake Quake Shake  


ஒருவன் ஆந்திரா மீல்ஸ் சாப்பிட்டு விட்டு மதியம் தூங்கும் போதேனும் வேலை கொடுக்கக் கூடாது என்ற மிகக் குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட சில டேமே(ன)ஜர்களுக்கு இருப்பதில்லை. ஏன் பூகம்பத்துக்கும் தான். #SoSad #கண்ணக்கட்டுது #RTedited

Quake Shake Quake Shake Quake Shake Quake Shake Quake Shake  

கொஞ்சம் பழசுதான் ஆனால் எப்பொழுது பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ஆதவனின் "கலக்கப் போவது யாரு" மிமிக்ரி வீடியோ.


கார்ட்டூன் கார்னர் : 


சிரித்தாலும் சிந்திக்க வேண்டிய விஷயமே...

Sunday, April 8, 2012

மினி மீல்ஸ் - 8-4-12

IPL Corner : 
ஐ.பி.எல் ஆரம்பமாகி விட்டது. அடுத்த 1 மாதத்துக்கு எல்லாம் மறக்கடிக்கப்பட்டு இந்த கிரிக்கெட் திருவிழா களைகட்டக் கூடும். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி முதல் எல்லா நிகழ்ச்சிகள், சீரியல்களுக்கும் TRB Rating அடுத்த ஒரு மாத காலத்துக்கு கொஞ்சம் மந்தமாகவே இருக்கக் கூடும்.  இது வரை நடந்த நான்கு நாட்களில் Rajasthan Royals VS KXI Punjab மேட்சும் இன்றைய CSK VS Deccan Chargers மேட்ச்சும் அட்டகாசம். முதல் மேட்ச்சில் கொஞ்சம் அடிபட்டு தோற்றாலும் இந்த மேட்ச் CSK க்கு அபாரமான வெற்றியே. தோனிக்ஸ் பீனிக்ஸ். "2 மில்லியன் டாலர் பேபி" ஜடேஜா தன் பெயரையும் அதை விட அதிகதிகமாக தோனியின் பெயரையும் இந்த மேட்ச்சின் மூலம் காப்பாற்றி விட்டது என்றே சொல்ல வேண்டும். 48 ரன்கள் + 5 விக்கெட்.  IPL Historyல் இது ஒரு நல்ல ஆல்ரவுண்ட் பெர்பார்மன்ஸாக நினைவில் கொள்ளப்படும். நான் இந்த மொத்தத் தொடரிலும் நெருக்கமாகத் தொடர நினைத்தது இரண்டு பேரின் பேட்டிங்கையே. ஒன்று பஞ்சாபின் பால் வாளத்தட்டி இன்னொன்று மும்பையின் அம்பத்தி ராயுடு. சென்ற IPL முழுதுமே இருவரது ஆட்டமும் மிகச்சிறப்பாக இருந்தது. அதிலும் வாளத்தட்டியின் 120 சென்ற ஆண்டின் ஒரு மறக்க முடியாத ஒரு classic இன்னிங்க்ஸ். ஆனால் இப்பொழுது அந்தப் பட்டியலில் மூன்றாவதாக Rajasthan Royalsன் ரஹானேவையும் இணைத்துக் கொண்டுள்ளேன். பஞ்சாபுடனான முதல் போட்டியில் ரஹானே அடித்த 98 ரன்கள் அற்புதமான ஒரு பேட்டிங் ஸ்கிரீன்ப்ளே. எனது அபிப்ராயத்தில் முதல் IPLக்குப் பிறகு Rajasthan Royalsஇந்த IPLல் ஒரு சிறப்பான அணியாக உருவெடுக்கக் கூடும் என்றே படுகிறது. நல்ல திறமையான இளம் வீரர்களும், டிராவிட் மாதிரி  ஒரு லெஜன்ட்ரி காப்டனும், பவுலிங்க் பேட்டிங்கில் சரிவிகித திறமையும் இருப்பது போலத் தெரிகிறது. எனது பார்வையில் RR இறுதிப்போட்டி  வரை வர வாய்ப்புள்ள அணியாகவே படுகிறது. பார்க்கலாம்.


 
ஓய்வு பெற்று பல மாதங்கள் ஆகி விட்டது. போன IPLல் முதல்நிலை ஏலத்தில் எடுக்கவே படவில்லை. பின்னர் கொச்சின், புனே என்று வதந்தி கிளப்பி ஒன்றிலும் உருப்படி இல்லாமல் போனது. சரி லெக் தாதாதான் போலும் என்று நினைக்கும் நிலையிலும்  தாதாவுக்கான புகழும் மாஸும் இன்னும் குறையவேயில்லை என்பதை ட்விட்டர், FB மற்றும் இணைய வட்டாரங்களில் மிகத்தெளிவாக பார்க்க முடிந்தது. தாதா சொற்ப ரன்னில் அவுட்டானாலும் புனே மேட்சை ஜெயித்த பிறகு கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். மிகவும் ரசித்த ஒரு தாதா ட்வீட்

"தாதான்னா பொட்டு வச்சுட்டு பொங்கல் சாப்பிடுவான்னு நெனச்சியா... தாதாடா... போய் பழைய வின்னிங் ரெக்கார்ட்ஸ் எடுத்துப்பாரு"

மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் எல்லாம் இன்னும் ஒரு வாரம் கழித்து இருக்கும் நிலையை வைத்தே பார்க்க முடியும். கிறிஸ் கெய்லிடமிருந்து இவ்வாண்டும் ஒரு Extreme Entertainment எதிர்பார்க்கிறேன். பார்ப்போம்.

#######################################################

இந்தவார விகடனில் எனது ட்வீட் ஒன்று வலைபாயுதேவில் வந்திருக்கின்றது. ட்விட்டரில் இன்னும் முழுதாக செயல்பட ஆரம்பிக்கவே இல்லை. உருப்படியாக இன்னும் பத்து  ட்வீட் கூடப் போடவில்லை. அதனால் எனக்கு இது கொஞ்சம் பெரிய விஷயமாகவே படுகின்றது. அந்த ட்வீட்டைக் கொஞ்சம் எடிட்டி ரீட்ட்வீட்டி வலைபாயுதேவிற்கு வழிவகுத்த நண்பர் தமிழ்ப்பறவைக்கு நன்றிகள் பல.

தமிழ்மணம் போனவாரம் வெளியிட்ட வலைபதிவு பட்டியலில் நெல்லை நண்பனுக்கு 18வது இடம். நட்சத்திர வாரத்தில் பதிவுக்கு வந்த வாசித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

#######################################################

எஸ்.ராவின் "புத்தனாவது சுலபம்" சிறுகதைத் தொகுப்பு வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு அல்லது ஒரு இரவில் ஒரு கதைக்கு மேல் தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை. மிகவும் கனமான கதைகள். ஒவ்வொரு கதையின் முடிவிலும் மனது பற்பல சிந்தனைகளில் வயப்படுவதை தடுக்க முடியவில்லை. இநதப்புத்தகத்தை முடித்த பிறகு "கணேஷ்-வசந்த்" என்று தலைவரின் குறுநாவல் ஏதாவது வாசித்தால்தான் தன்னிலை கலகலப்புக்கு திரும்பும் என்று படுகிறது.

#######################################################

சில ட்வீட்ஸ் :

"கடல் ஏன்ப்பா இவ்ளோ பெருசா இருக்கு?" என்ற குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியாத ஏதோவொரு அப்பாதான் கடவுளைக் கண்டுபிடித்திருக்கக் கூடும்.
 
$

ஐபிஎல் துவக்க விழாவில் அருவருக்கத்தக்க ஆபாச நடனம்: பாஜக # கர்நாடகா, குஜராத்ல வசனமாடா முக்கியம் படத்தப் பாருடான்னு பாத்தது கி.கூ.க கட்சிகாரங்களா பாஸ்?

$

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா # யோவ் பெங்களூர் ஜட்ஜு... இந்தக் கை எப்பவுமே ஜெமினியோட கைதான். இது மாறாது.

$
 
ஆசியா கப்பில் ஆடிய கோலியைப் போல அதிரடியாக இருந்த வாழ்க்கை இரண்டாம் ரன்னுக்கு ஓடும் இன்சமாமைப் போல சுணங்கிக் கொண்டிருக்கிறது #NeedABreak

#######################################################

இந்தவாரத்தில் பார்த்து வயிறு குலுங்க சிரித்த ஒரு வீடியோ. தனியார் சேனல்களில் வரும் ரியல் எஸ்டேட் நிகழ்ச்சிகளை சூரப்பகடி செய்து கலக்கியிருக்கிறார் ரோபோ சங்கர். கோபிநாத் குரல் அவ்வளவு செட்டாகவில்லை என்றாலும், உடல்மொழியில் அசத்திவிட்டார். ஆனால் கேப்டன் தான் மிகப்பிரமாதம். Mind Blowing :P :)) .  

19வது நிமிடத்தில் இருந்து பார்க்கவும்.  http://www.youtube.com/watch?v=cTtiEhp8KWk&feature=player_detailpage#t=1140s#######################################################  
 
நெட்ல சுட்டது :

எங்களுக்கும் உண்டுடா ஏப்ரல் 1... ஏப்ரல் பூல் டூமாங்கோலி பசங்களா... :Pஎல்லோரும் நெஞ்சில் கைவைத்து ஒரு முறை சொல்லுங்கள்... "All is Well.. All is Well... "

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.