IPL கார்னர் :
சென்ற
வாரம் முழுக்கவே ஐ.பி.எல் போட்டிகளை follow பண்ணவே முடியவில்லை. கொம்பேனியில் ஆணிகள் மிக
மிக மிக மிக அதிகமாக இருந்த இருக்கின்ற காரணத்தால். "உனக்கு மட்டும் எப்படிடா
எல்லாத்துக்கும் நேரம் இருக்கு? எல்லா படமும் பர்ஸ்ட் நாள் பாக்குற, ப்ளாக் எழுதுற, ஊர் சுத்துற, 24 மணி நேரமும் பேஸ்புக்லயே
பழியா கெடக்குற... விடாம எல்லா மேட்ச்சும் பாக்குற… வேல வெட்டியே இல்ல... ம்ம்ம்ம்"
என்று மனம் வெதும்பி, புழுங்கி, புகைந்த சில சதிகாரர்களால்தான் இப்படி ஆகியிருக்கக்
கூடும் என்பதைக் கணம் கோர்ட்டார் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் Cricinfoல்
அவ்வப்பொழுது மேய்வதில் ராஜஸ்தானும், டெல்லியும் கிட்டத்தட்ட அரையிறுதி நெருங்கி விட்டதாகத்
தெரிகின்றது. நான் முதல் மினி மீல்ஸிலேயே சொன்னேன் ரஹானேவும், ராஜஸ்தானும் நம்பிக்கையூட்டுகிறார்கள்
என்று. ரா-ரா பொய்க்கவில்லை. கெய்லும் அதகளப்படுத்திக் கொண்டுதானிருக்கிறார். மார்க்கல் திரும்பியது சென்னைக்கு கொஞ்சம் பின்னடைவே. பார்ப்போம்.
IPL
ஆணி IPL ஆணி IPL ஆணி IPL ஆணி IPL ஆணி IPL ஆணி IPL ஆணி IPL ஆணி
இன்று
உலக புத்தக தினமாம். புத்தகங்களுக்கும் ஒரு தினமென மனதுக்கு மகிழ்ச்சி. கவிப்பேரரசின்
இந்த வரிகளை விட புத்தகம் பற்றி வேறென்ன சொல்லிவிட முடியும்.
உயிரின்
சுவாசமல்லவா
புத்தகம்?
உனக்குள்
ஒரு சூரியனல்லவா
புத்தகம்?
அட்டையிட்ட
அமுதமல்லவா
புத்தகம்?
உனக்கு
வரம்வர
யாரோ
இருந்த தவமல்லவா
புத்தகம்?
இந்த
வாரத்தில். வாத்தியாரின் 24 ரூபாய் தீவு வாசித்துக் கொண்டிருக்கிறேன். A typical
commercial fast Sujatha piece.
இந்த வாரத்தில் வாசித்ததில் மிகவும் பிடித்த ஒரு பதிவு.
வாத்தியார் நாவல்களில் பரவலாக வரும் சுஜாதா ஸ்டைல் க்ளிஷேக்களை நன்றாக அனலைஸ் செய்திருக்கிறான்
எனது பள்ளி, கல்லூரி ஜூனியர் Smams. இந்த சுட்டியில் போய் வாசியுங்கள். பெங்களூரு மேட்டர்,
புறா மேட்டர் சூப்பர். வாத்தியார் ரசிகர்களுக்கு "அட, ஆமால்ல" சொல்ல வைக்கும்
பல இடங்களையும் நுட்பமாய் குறிப்பிட்டிருக்கிறான். கலக்கல்டா தம்பி.
Book
Book Book Book Book Book Book Book Book Book Book Book Book Book
ஓ.கே
ஓ.கே பார்த்தேன். படம் ஓ.கே. சந்தான சாம்ராஜ்யம். அந்த Flight சீன், Translation சீன்
இரண்டும் சரவெடி காமெடி. ஹன்சிக்க்க்க்க்கா, யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா கண்ணக்
கட்டுது. உதயநிதி – A welcome underplay performance. ஒ.கே ஓ.கே - ஒரு முறை பார்க்க
- சில முறை சிரிக்க.
Ok
ok ok ok ok ok ok ok ok ok ok ok ok ok ok ok Ok ok ok ok ok ok ok ok
சென்ற
வாரத்தில் ஒரு நாள், வீட்டுப்பக்கத்தில் உள்ள ஹெரிட்டேஜ் சூப்பர் மார்க்கெட் சென்ற
பொழுது நடந்தது. செம க்யூட்டா ஒரு குட்டிப்பெண் அதன் அம்மாவுடன் ஷாப்பிங் வந்திருந்தாள்.
இரண்டரை வயது இருக்கலாம். அம்மாவிடம் ஐஸ் க்ரீம் கேட்டு அடம்பிடித்தாள். "சளி
பிடிக்கும், ஊசி போடுவாங்க..." "முடியாது முடியாது" என்று சொல்லிக்கொண்டே
இருந்தார் அந்த அம்மா. "அப்டின்னா... ச்சாக்கி ச்சாக்கி" என்று ஓடிப்போய்
ஒரு Kinderjoy சாக்லேட்டைத் தூக்கியது அந்தக் குட்டி. உடனே அந்தப் பெண் ஓடி வந்து அதைபுடுங்கி
வைத்துவிட்டு "வயித்துல பூச்சி வரும், ஊசி ஊசி... வேணாம்" என்றார். உம்மென்று
மூஞ்சியை வைத்துக் கொண்டாள். அந்தம்மா பில்லெல்லாம் போட்டுவிட்டு வெளியே வந்து, அங்கே
இருந்த soup yardல் ஒரு வெஜிடபுள் சூப் வாங்கி "இதைக் குடி.. ரொம்ப நல்லது...
புரோட்டீன்ஸ், விட்டமின்ஸ் A, B, C,D, Health
conscious Diet“ இதெல்லாம் சொல்லி, அக்குழந்தைக்கு புரிகிறதா என்றெல்லாம் யோசிக்காமல்
வலுக்கட்டாயமாக அதன் வாயில் சூப்பை ஊற்றிக் கொண்டிருந்தார். துப்பித் துப்பி, கிட்டத்தட்ட
அழுது விடும் நிலையிலிருந்த அந்தக் குட்டியைப் பார்க்கையில் பாவமாகத்தான் இருந்தது.
"எனக்கு இந்த அப்ரைசலில் ஹைக் ஏன் கம்மியா இருக்கு?" என்று கேட்டால்
"Company growth, Team pyramid, quarter-early results, people management,
plotting the graph, market analysis" என்று எதை எதையோ சொல்லி, கடைசி வரை காசு மட்டும் தராமல் தப்பித்த சக மேனேஜரின்
நினைவு வந்தது இயல்பாகவே இருந்தது. கூடவே “இவன்
எதைக் கேட்டாலும் கமல் மாதிரி புரியாமலே பேசுறான்டா” என்ற பாஸ் என்கிற பாஸ்கரன் வசனமும். வண்டியைக் கிளப்பிக் கொண்டு வந்து விட்டேன்.
ஆப்புரைசைல்
டைம்ஸ் ஆப்புரைசைல் டைம்ஸ் ஆப்புரைசைல் டைம்ஸ் ஆப்புரைசைல் டைம்ஸ்
பிரதீபா
பாட்டீல் பொட்டியைக் கட்ட வேண்டிய காலம் வந்து விட்டது. அடுத்த ஜனாதிபதிக்கான தேடல் தொடங்கி விட்டது. மீண்டும்
கலாம்? என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ஜெ., முலாயம் ஆகியோரும் அதை முன்னிறுத்துவதாய் தெரிகிறது. ஆனால் என்னளவில் கலாம் மீண்டுமொரு முறை வேண்டாம் என்றே தோன்றுகிறது. கலாம்
நல்ல அறிவியலாளர். மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த பொம்மைப் பொறுப்பில், அவர் மீண்டுமொரு
முறை வேண்டாம் என்றே படுகிறது.
FORNEXTPRESIDENT
FORNEXTPRESIDENT FORNEXTPRESIDENT FORNEXTPRESIDENT FORNEXTPRESIDENT
பூட்டான்
தேசத்தில் ஒவ்வொரு வருடப்பிறப்பிலும் அனைவரும் தங்கள் வயதில் ஒன்றைக் கூட்டிக் கொள்ள
வேண்டுமாம். Dec 31ல் பிறந்த குழந்தையானாலும், Jan 1ல் அதற்கு ஒரு வயது. பிறந்த நாள்
கணக்கெல்லாம் கிடையாதாம். #இன்று ஒரு தகவல்
############################
கார்ட்டூன்
கார்னர் :
############################
எனக்கு
மிகவும் பிடித்த ஒரு பேன்டீன் ஷாம்பு விளம்பரம். ஒரு உலகப்படத்துக்கு இணையான - 4 நிமிடத்திற்குள்
இப்படி ஒரு உருக்கமான படத்தை செய்து விட முடியுமா ? பிரமாதம். இது பெண்களின் கார்மேகக்
கூந்தலுக்கான பேண்டின் விளம்பரம்தான். ஆனால் நான்காவது நிமிடத்தின் முடிவில் அலைபாய்வது
அவளது கூந்தல் மட்டுமல்ல, நம் ஆத்மாவும்தான்..
2 பேர் சொன்னது என்னான்னா..:
good one...
நல்ல அனுபவம் ராம்குமார்...சொந்ததோ?
Post a Comment
வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...