Sunday, April 29, 2012

மினி மீல்ஸ் - 29/04/2012

ஒரு கடவுள் எம்.பி ஆகிறார் :

சச்சின் ராஜ்யசபா எம்.பி ஆகிறார். கிட்டத்தட்ட விவரம் தெரிந்த வயதில் இருந்து சச்சினின் அதிதீவிர விசிறிகள் பலருக்கும் இது கொஞ்சம் வருத்தமே. சச்சினுக்கு அரசியலெல்லாம் ஒத்து வருவதற்கு வாய்ப்பே இல்லை. வரும்காலங்களில் இந்தியாவின் எந்தவொரு முக்கியப் பிரச்சனையிலும் பாராளுமன்றத்தின் நட்சத்திர எம்.பியாக சச்சினின் கருத்தை பூஸ்ட் செய்யும் மீடியா. பற்பல விமர்சனங்களுக்குள்ளாக வேண்டியதிருக்கும். இது காங்கிரஸ் கட்சி இழந்திருக்கும் தனது மைலேஜை தக்கவைக்க செய்யும் முயற்சியாகவே படுகின்றது. எப்படியும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் சச்சினை ஓட்டுக்கேட்க விட்டு விடுவார்களோ என்ற பயமும் வருகிறது. "கடவுள் நூறாவது நூறு அடித்தார்" என்பதைப் போல "கடவுள் எம்.பி ஆகிறார்" என்பதைக் கொண்டாட முடியவில்லை. நம் சமூகத்தின் அரசியல் நிலவரம் அப்படி இருப்பதால். மொத்தத்தில் ஒரே கேள்வியாய்க் கேட்க வேண்டுமானால்
"கத்திக் கதறும் சில நூறு கயவர்களுக்கு மத்தியில் அமர்ந்து அமைதியின் திருவுருமான சச்சின் என்ன செய்யப் போகிறார்?"

தப்பு பண்ணிட்டியோ தல. :(அடங்காத காளை ஒண்ணு அடிமாடாப் போனதடி
கண்மணி என் கண்மணி !!!

#Very first time in my life posting/thinking an unhappy message about the God of cricket.
கடவுளுக்கும் அடி சறுக்கும்... கடவுளுக்கும் அடி சறுக்கும்… கடவுளுக்கும் அடி சறுக்கும்…

IPL Corner :


ஐ.பி.எல் அடி தூளாகப் போய்க் கொண்டிருக்கிறது. டெல்லி உச்சத்தில். மற்றவை எல்லாமே மிச்சத்தில். சேவாக் அத்துணை பவுலர்களையும் மரண ஓலத்தில் கதறவிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் வெள்ளிக்கிழமை நடந்த Mumbai VS Delhi மேட்ச்சில் மும்பை இண்டியன்சை முத்தழகு ரேஞ்சுக்கு ரேப்பித் தள்ளி விட்டார். மரண அடி. பொல்லார்டைப் பொலம்ப விட்டு பொளந்ததில் 22 ரன்கள் ஒரே ஓவரில். பீட்டர்சன், சேவாக், மார்னே மார்க்கல் - இவர்கள் மூவரின பெர்பர்மன்ஸைப் பொறுத்தே கோப்பைக்கனவு டெல்லிக்கு சாத்தியாமாகுமா என்பதைப் பார்க்க வேண்டும். சேவாக்கைத் தொடர்ந்து காம்பீரும் கிடைக்கும் கேப்பிலெல்லாம் பிரமாதமான Captain's knock ஆடி வருகிறார். இன்றைய பெண்களூருடனான போட்டியில் அவர் அடித்த 93 ரன்கள் அடிப்பொலி அதகளம். 20 - 20 உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் இந்தியாவின் ஓப்பனர்கள் இருவரும் தத்தம் அணிகளுக்காக பிரமாதமான ஃபார்மில் ஆடிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயமே. 


                                                            
                                                        இந்த வாரத்தில் அசத்திய இன்னோரு பேட்ஸ்மேன் மும்பையின் அம்பத்தி ராயுடு. அருமையான இரண்டு இன்னிங்ஸ். சீக்கிரத்தில் இவரை இந்திய அணியில் காணவேண்டும் என்பது என் அவ்வா அவ்வா அவாவா. அதுவும் தேவையான நேரத்தில் பஞ்சாபின் சாவ்லாவை 'சாவு'லா ஆக்கியதில் இவரும் ராபின் பீட்டர்சனும் 19வது ஓவரில் அடித்தது 27 ரன்கள். “IPL matches are not done with until the last ball is bowled” என்று சொல்லப்படுவதை  “IPL matches are not done with until the 19th Over is bowled” என்று redefine செய்து கொள்ளலாம் போல. அந்தளவுக்கு கோலி, நெஹ்ரா, சாவ்லா போன்ற அற்புதமான பவுலர்களால் இந்த IPLல் 19வது ஓவர் முக்கியத்துவம் பெற்று வருகிறது. "சங்கூதுற நேரத்தில் சங்ககாராவுக்கு வெற்றி" என டெக்கானும் புனேக்கு எதிராக பெயருக்கு ஒரு வெற்றியைப் பதிவு செய்து கொண்டது.
                                               
                                                       இவ்வாரத்தில். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான பெண்களூர் - சென்னைப் போட்டி டாஸோடு நின்று போனதில் கொஞ்சம் ஏமாற்றமே. "மிஸ்டர்.வருண்பக்வான், ஒய் திஸ் மழவெறி?". கெய்லும் எதிர்பார்த்தது போலவே அடித்து நொறுக்கி ஆரஞ்சு கேப்பெல்லாம் வாங்கினாலும் பெண்களூரின் மற்ற துறைகள் அனைத்துமே படு திராபையாக இருப்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. மொத்தத்தில் வரும் வாரம்தான் டெல்லியைத் தவிர மற்ற மூன்று அரையிறுதிப் போட்டியாளர்கள் யார் யாரென முடிவு செய்யும் முக்கியமான வாரம். பார்க்கலாம்.

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPLIPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL

சில IPL ட்வீட்ஸ் :

ஒரு சின்னப்புள்ளைய, கொழந்தைய, பச்சமண்ணப் போட்டு இப்படியா அடிக்கிறது. பொளந்துட்டாய்ங்கடா பொல்லார்ட்ட #22SewhagBeatenPollardtoDeath #MIvsDD

பர்த்தீவ் பட்டேல் ஸ்டம்பை நோக்கி குறி பார்த்து எறிந்து ரன் அவுட். டெக்கான் வெற்றி. #நாஞ்சொல்லல நாதஸ் திருந்திட்டான்னு..

A perfect gift pack of entertainment from Sewhag on this auspicious Sachin Jayanthi Or Sachmas # #Happy Birthday Sachin #Sewhaaaaag celebrated sachin's birthday in his own way.

நாந்தான் அப்பவே சொன்னேன்ல, ஆணி போய் ஆடி போய் ஆவணி வந்தா மும்பை டாப்பா வரும்ன்னு #வின்ன்ன்ன்னேய் #MIvsPXI #MumWon #Rohith&Chawla-Key Players of the match.


இனி சென்னைக்கான IPL கப் என்பது காசியப்பன் பாத்திரக்கடையில் மட்டுமே கிடைக்கும். #CSKvsKXIP #IPL #CSKLoss 


அசார் முகம்மத் என்ற தனிமனிதனின் பவுலிங் திறமையினால் மட்டுமே பஞ்சாப் இன்னும் இந்த IPLல் நி(ம)ன்றாடிக் கொண்டிருக்கிறது. #PKXI #KudosAzharBhai

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPLIPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL

இந்த வாரத்தில் வெளியான பில்லா - 2வின் டீசர்களில் வரும் கேங் கேங் கேங்ஸ்டர் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது. அஜீத் கோட்டு போட்டு நடக்கும் படங்கள் என்றாலே யுவன் இசையில் பிச்சு உதறி விடுகிறார்.. அவ்வகையில் இப்படமும் சேரும்.

####################

ஆனந்த விகடன் வலைபாயுதேவில் முதன்முறையாக பெயர் பதித்த நண்பர், "நிதர்சன ட்வீட்டர்" தமிழ்பறவைக்கு வாழ்த்துகள். @Tparavai

 ####################


சில ட்வீட்ஸ் :

மதுரை ஆதினமானார் நித்யானந்தா  # அப்படியே ரஞ்சிதாவ எம்.எல்.ஏ ஆக்கி நமீதாவ மேயர் ஆக்கீட்டீங்கன்னா மதுரையே ச்சும்மா ஜிகர்தண்டா மாதிரியே ஜில்ன்னு இருக்கும்ல.
காசு பணம் வந்தா காக்கா கூட கலராகிடும்டா மகனே. கலர் மட்டுமல்ல ஆதினமும்...என்ன தவம் செய்தனை.KTVல் தருமபுரி. கேப்டனின் டான்சுக்கு ஆஸ்கார் விருது குடுக்கவிடினும் எம்.எஸ்.பாஸ்கார் விருதாவது குடுக்க பரிந்துரைக்கிறேன் #Captainroxx

Youtube என்னடா youtube. தருமபுரி படப்பாடல்களை தன்னகத்தே கொள்ளாத youtubeஐ எதிர்த்து ஒருநாள் எதிர்கட்சி பந்த் அறிவிங்க கேப்டன் #ஆளுங்கட்சி சதி

####################
கார்ட்டூன் கார்னர் : 

சில சமயங்களில் எல்லாருக்குமே இப்படி ஒரு டை தேவைப்படுகிறது ;))

இணைய உண்மை


####################

இனம், மொழி, மண், நிறம், தேசம் கடந்து - என்றுமே அன்பிற்கான முதல் சொல் அம்மா.
இரண்டே நிமிடங்களில் ஒரு அருமையான காணொளி.

3 பேர் சொன்னது என்னான்னா..:

முன்பனிக்காலம் said...

வலைப்பூ குவியல்களுக்கு மத்தியில் இருந்து பொறுமையோடு தேடினால் தான் சில முத்துக்கள் கிடைக்கிறது. அப்படித் தேடிக்கண்டு பிடித்தவைகளுள் உங்களுடையதும் ஒன்று. எழுத்து நடை சுஜாதாவை ஞாபகப்படுத்துகிறது. அதுவே பழைய இடுகைகளையும் வாசிக்கத் தூண்டுகிறது.தலைப்பு, போட்டோ கமென்ட் ரசிக்க வைத்தது!

ராம்குமார் - அமுதன் said...

வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகா... சுஜாதாவை ஞாபகப்படுத்துகிறதா ? பெரிய வார்த்தை... அவருடைய புத்தகங்களை அதிகளவில் வாசிப்பதால் இருக்கலாம். நன்றி நண்பரே, தொடர்ந்து பயணிப்போம்...

ராஜ் said...

ஏங்க விஜய் மல்லையா, ஜெயா பச்சன் எல்லாம் எம்.பி ஆகி
நாட்டுக்கு சேவை !!!!! செய்யும் போது நம்ப சச்சின் எம்.பி ஆகி அதே சேவைய மக்களுக்கு செய்யமாட்டாரா என்ன ...??? :)
சச்சினுக்கு எம்.பி என்பது கவுரவ போஸ்ட் மாதிரின்னு எனக்கு படுத்து. தம்பி உனக்கு இந்த வாட்டி பாரத ரத்னா கிடையாதுன்னு காங்கிரஸ் சொல்லாம சொல்லி இருகாங்கன்னு எனக்கு தோணுது

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.