Sunday, April 8, 2012

மினி மீல்ஸ் - 8-4-12

IPL Corner : 
ஐ.பி.எல் ஆரம்பமாகி விட்டது. அடுத்த 1 மாதத்துக்கு எல்லாம் மறக்கடிக்கப்பட்டு இந்த கிரிக்கெட் திருவிழா களைகட்டக் கூடும். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி முதல் எல்லா நிகழ்ச்சிகள், சீரியல்களுக்கும் TRB Rating அடுத்த ஒரு மாத காலத்துக்கு கொஞ்சம் மந்தமாகவே இருக்கக் கூடும்.  இது வரை நடந்த நான்கு நாட்களில் Rajasthan Royals VS KXI Punjab மேட்சும் இன்றைய CSK VS Deccan Chargers மேட்ச்சும் அட்டகாசம். முதல் மேட்ச்சில் கொஞ்சம் அடிபட்டு தோற்றாலும் இந்த மேட்ச் CSK க்கு அபாரமான வெற்றியே. தோனிக்ஸ் பீனிக்ஸ். "2 மில்லியன் டாலர் பேபி" ஜடேஜா தன் பெயரையும் அதை விட அதிகதிகமாக தோனியின் பெயரையும் இந்த மேட்ச்சின் மூலம் காப்பாற்றி விட்டது என்றே சொல்ல வேண்டும். 48 ரன்கள் + 5 விக்கெட்.  IPL Historyல் இது ஒரு நல்ல ஆல்ரவுண்ட் பெர்பார்மன்ஸாக நினைவில் கொள்ளப்படும். நான் இந்த மொத்தத் தொடரிலும் நெருக்கமாகத் தொடர நினைத்தது இரண்டு பேரின் பேட்டிங்கையே. ஒன்று பஞ்சாபின் பால் வாளத்தட்டி இன்னொன்று மும்பையின் அம்பத்தி ராயுடு. சென்ற IPL முழுதுமே இருவரது ஆட்டமும் மிகச்சிறப்பாக இருந்தது. அதிலும் வாளத்தட்டியின் 120 சென்ற ஆண்டின் ஒரு மறக்க முடியாத ஒரு classic இன்னிங்க்ஸ். ஆனால் இப்பொழுது அந்தப் பட்டியலில் மூன்றாவதாக Rajasthan Royalsன் ரஹானேவையும் இணைத்துக் கொண்டுள்ளேன். பஞ்சாபுடனான முதல் போட்டியில் ரஹானே அடித்த 98 ரன்கள் அற்புதமான ஒரு பேட்டிங் ஸ்கிரீன்ப்ளே. எனது அபிப்ராயத்தில் முதல் IPLக்குப் பிறகு Rajasthan Royalsஇந்த IPLல் ஒரு சிறப்பான அணியாக உருவெடுக்கக் கூடும் என்றே படுகிறது. நல்ல திறமையான இளம் வீரர்களும், டிராவிட் மாதிரி  ஒரு லெஜன்ட்ரி காப்டனும், பவுலிங்க் பேட்டிங்கில் சரிவிகித திறமையும் இருப்பது போலத் தெரிகிறது. எனது பார்வையில் RR இறுதிப்போட்டி  வரை வர வாய்ப்புள்ள அணியாகவே படுகிறது. பார்க்கலாம்.


 
ஓய்வு பெற்று பல மாதங்கள் ஆகி விட்டது. போன IPLல் முதல்நிலை ஏலத்தில் எடுக்கவே படவில்லை. பின்னர் கொச்சின், புனே என்று வதந்தி கிளப்பி ஒன்றிலும் உருப்படி இல்லாமல் போனது. சரி லெக் தாதாதான் போலும் என்று நினைக்கும் நிலையிலும்  தாதாவுக்கான புகழும் மாஸும் இன்னும் குறையவேயில்லை என்பதை ட்விட்டர், FB மற்றும் இணைய வட்டாரங்களில் மிகத்தெளிவாக பார்க்க முடிந்தது. தாதா சொற்ப ரன்னில் அவுட்டானாலும் புனே மேட்சை ஜெயித்த பிறகு கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். மிகவும் ரசித்த ஒரு தாதா ட்வீட்

"தாதான்னா பொட்டு வச்சுட்டு பொங்கல் சாப்பிடுவான்னு நெனச்சியா... தாதாடா... போய் பழைய வின்னிங் ரெக்கார்ட்ஸ் எடுத்துப்பாரு"

மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் எல்லாம் இன்னும் ஒரு வாரம் கழித்து இருக்கும் நிலையை வைத்தே பார்க்க முடியும். கிறிஸ் கெய்லிடமிருந்து இவ்வாண்டும் ஒரு Extreme Entertainment எதிர்பார்க்கிறேன். பார்ப்போம்.

#######################################################

இந்தவார விகடனில் எனது ட்வீட் ஒன்று வலைபாயுதேவில் வந்திருக்கின்றது. ட்விட்டரில் இன்னும் முழுதாக செயல்பட ஆரம்பிக்கவே இல்லை. உருப்படியாக இன்னும் பத்து  ட்வீட் கூடப் போடவில்லை. அதனால் எனக்கு இது கொஞ்சம் பெரிய விஷயமாகவே படுகின்றது. அந்த ட்வீட்டைக் கொஞ்சம் எடிட்டி ரீட்ட்வீட்டி வலைபாயுதேவிற்கு வழிவகுத்த நண்பர் தமிழ்ப்பறவைக்கு நன்றிகள் பல.

தமிழ்மணம் போனவாரம் வெளியிட்ட வலைபதிவு பட்டியலில் நெல்லை நண்பனுக்கு 18வது இடம். நட்சத்திர வாரத்தில் பதிவுக்கு வந்த வாசித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

#######################################################

எஸ்.ராவின் "புத்தனாவது சுலபம்" சிறுகதைத் தொகுப்பு வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு அல்லது ஒரு இரவில் ஒரு கதைக்கு மேல் தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை. மிகவும் கனமான கதைகள். ஒவ்வொரு கதையின் முடிவிலும் மனது பற்பல சிந்தனைகளில் வயப்படுவதை தடுக்க முடியவில்லை. இநதப்புத்தகத்தை முடித்த பிறகு "கணேஷ்-வசந்த்" என்று தலைவரின் குறுநாவல் ஏதாவது வாசித்தால்தான் தன்னிலை கலகலப்புக்கு திரும்பும் என்று படுகிறது.

#######################################################

சில ட்வீட்ஸ் :

"கடல் ஏன்ப்பா இவ்ளோ பெருசா இருக்கு?" என்ற குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியாத ஏதோவொரு அப்பாதான் கடவுளைக் கண்டுபிடித்திருக்கக் கூடும்.
 
$

ஐபிஎல் துவக்க விழாவில் அருவருக்கத்தக்க ஆபாச நடனம்: பாஜக # கர்நாடகா, குஜராத்ல வசனமாடா முக்கியம் படத்தப் பாருடான்னு பாத்தது கி.கூ.க கட்சிகாரங்களா பாஸ்?

$

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா # யோவ் பெங்களூர் ஜட்ஜு... இந்தக் கை எப்பவுமே ஜெமினியோட கைதான். இது மாறாது.

$
 
ஆசியா கப்பில் ஆடிய கோலியைப் போல அதிரடியாக இருந்த வாழ்க்கை இரண்டாம் ரன்னுக்கு ஓடும் இன்சமாமைப் போல சுணங்கிக் கொண்டிருக்கிறது #NeedABreak

#######################################################

இந்தவாரத்தில் பார்த்து வயிறு குலுங்க சிரித்த ஒரு வீடியோ. தனியார் சேனல்களில் வரும் ரியல் எஸ்டேட் நிகழ்ச்சிகளை சூரப்பகடி செய்து கலக்கியிருக்கிறார் ரோபோ சங்கர். கோபிநாத் குரல் அவ்வளவு செட்டாகவில்லை என்றாலும், உடல்மொழியில் அசத்திவிட்டார். ஆனால் கேப்டன் தான் மிகப்பிரமாதம். Mind Blowing :P :)) .  

19வது நிமிடத்தில் இருந்து பார்க்கவும்.  http://www.youtube.com/watch?v=cTtiEhp8KWk&feature=player_detailpage#t=1140s#######################################################  
 
நெட்ல சுட்டது :

எங்களுக்கும் உண்டுடா ஏப்ரல் 1... ஏப்ரல் பூல் டூமாங்கோலி பசங்களா... :Pஎல்லோரும் நெஞ்சில் கைவைத்து ஒரு முறை சொல்லுங்கள்... "All is Well.. All is Well... "

3 பேர் சொன்னது என்னான்னா..:

ஆண்மையூறான் said...

என்னடா தமிழ் mini meals இன்னும் வராமலேயே இருக்குன்னு பார்த்தேன்...

"தாதான்னா பொட்டு வச்சுட்டு பொங்கல் சாப்பிடுவான்னு நெனச்சியா... தாதாடா... போய் பழைய வின்னிங் ரெக்கார்ட்ஸ் எடுத்துப்பாரு"

"போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா # யோவ் பெங்களூர் ஜட்ஜு... இந்தக் கை எப்பவுமே ஜெமினியோட கைதான். இது மாறாது."


நச்சுன்னு இருக்குண்ணா .. :)

ராஜ் said...

பாஸ்,
ரொம்ப நல்லா இருக்கு உங்க மினி மீல்ஸ் !! உங்க சென்ஸ் ஆப் ஹுமர் செம பாஸ் !!
//கடல் ஏன்ப்பா இவ்ளோ பெருசா இருக்கு?" என்ற குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியாத ஏதோவொரு அப்பாதான் கடவுளைக் கண்டுபிடித்திருக்கக் கூடும்.//
இது தானே உங்க வலைபாயுதே ட்வீட்..!! ரொம்பவே ரசித்தேன்..
உங்க IPL analysis ரொம்ப சூப்பர் !! வார வாரம் மினி மீல்ஸ் எதிர்பார்கிறேன் !!!!!

ராம்குமார் - அமுதன் said...

@கிரி : நன்றி தம்பி...

@ராஜ்... நன்றி ராஜ்... தொடர்ந்து எழுத ஆசைதான் பார்ப்போம்... வ.பாவில் வந்த ட்வீட் இது இல்லை. வேறு ஒன்று... போன பதிவில் அதை போட்டுள்ளேன்... :))

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.