முன்னொரு
காலத்தில் 2005
- 2006ஐ ஒட்டி வெட்டிப்பயல் என்றொரு பதிவர் வலையுலகத்தில்
மிகப்பிரபலமாக எழுதி வந்தார். இயற்பெயர் பாலாஜி. இன்போசிஸில் வேலை பார்ப்பவர்.
சொல்லப்போனால் நான் முதன்முதலில் படித்த தமிழ் வலைப்பதிவு அவருடையதுதான்.
பெரும்பாலும் software கம்பெனியைக் களமாகக் கொண்ட காதல் கதைகளை எழுதுவார். தேன்கூடு
இணையதளம் மாதாந்திர பதிவர் போட்டிகளை நடத்தி வந்த பொற்காலம் அது. அவருடைய பதிவைப் பற்றி ஆனந்தவிகடனில் ஒருமுறை
வந்திருந்தது. அதைப் பார்த்து முதன்முதலில் அவருக்கு ஓர்க்குட்டில் செய்தி அனுப்பி
அவருக்கே தெரியப்படுத்தியவன் அடியேன் தான். சொல்லப்போனால் நானெல்லாம் பதிவு எழுத
ஆரம்பித்ததே அவரைப் பார்த்துத்தான். ஆனந்தவிகடனில் செய்தி வருமளவுக்கு அவர் மிகச்
சிறப்பாக எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க.
மென்பொருள் துறையில் நுழைவதற்கு முயற்சி செய்யும் ப்ரெஷர்களுக்கு வழிகாட்டும்
வகையில் மிகவும் எளிமையாக எழுதப்பட்டது அந்தத் தொடர். அந்த காலகட்டத்தில்
பலருக்கும் அது பெருமளவில் உபோயகப்பட்டிருக்கக் கூடும். இன்றும் ஊர்ப்பசங்க
யாராவது "அண்ணா வேலை தேடுகிறேன்" என்று என்னிடம் சொல்லும் பொழுது அந்தக்
கட்டுரைகளைப் படிக்கச் சொல்லுவதுண்டு.
சரி
இப்போ நம்ம மேட்டருக்கு வருவோம். எதுக்கு இந்த கட்டுரை என்று. பொதுவாகவே எனக்கு
என்னுடைய வலைப்பூவையும்,
வலைதளத்தையும் பார்த்து நிறைய மின்மடல்கள் வருவதுண்டு. அய்யய்யோ
அந்த மாதிரி பிரபல பதிவருக்கு வர்ற வாசகர் கடிதம்ல்லாம் இல்லீங்க. "அண்ணா,
நீங்களும் திருநெல்வேலியா? நானும்
நெல்லை/தூத்துக்குடி/கோவில்பட்டி/சங்கரங்கோவில்/ஏரல்/திசையன்விளை/அம்பைக்
காரந்தான். 2009/10/11/12 B.E.
Passed outs . இப்போ சென்னைல/பெங்களூர்ல வேலை தேடிகிட்டு இருக்கேன்.
தெரிஞ்ச கம்பெனில எங்கயாவது ரெஃபர் பண்ணுங்க" இந்த மாதிரியான மெயில்கள்.
அதிலும் பெரும்பாலான மெயில்களில் தவறாமல் இடம்பெறும் வாசகம் "அண்ணா நான் தமிழ்
மீடியம்ண்ணா. அதனாலதான் வேலை கெடைக்க மாட்டேங்குது" இந்த வாசகத்துக்கான
அர்த்தம் "எனக்கு ஆங்கிலம் கொஞ்சம் தகராறு என்பதுதான்". அப்படிப்பட்ட
தம்பிகளுக்காகத் தான் இந்தப் பதிவு. ஆங்கிலம் என்பது ஒரு
மொழிதான், அறிவு கிடையாது... இதத்தான் ரீமாசென் தூள்லயே
சொல்லிட்டாளே, நீ என்ன சொல்லப்போறன்னு கேக்குறீங்களா?
ஒரு சம்பவம் சொல்றேன். 2006ல நான் வேலைக்குச் சேர்ந்திருந்த புதுசு. புல் டைட்ல இருக்க பார்க்ல ஐ
மீன் டைடல் பார்க்லதான் எங்க கம்பெனி. முதல்முறையா கம்பெனி அளவுல நட்க்குற
காலாண்டு மீட்டிங்குக்கு வரச் சொல்லிருந்தாங்க.
காலைல 10 மணிக்கு மீட்டிங். நானும் வழக்கம் போல சீக்கிரமே
எந்திரிச்சு கெளம்பி 11.30க்குல்லாம் போய்ட்டேன். டைடல்
தரைதளத்துல இருக்க ஆடிட்டோரியம்ல தான் மீட்டிங்க். சரின்னு உள்ள போனா
செம கூட்டம். உள்ளார டை கட்டிகிட்டு ஒரு வெள்ளைக்காரன் "We had gasgasdgzzbiz
this Quarter. Plans to hsyfdfbnzzbidz the next quarter"ன்னு ஏதோ பேசிகிட்டு இருக்கான். ஒண்ணுமே புரியல. நான் நேராப் போய்
காலியா இருந்த ஒரு நாற்காலில உக்காந்தேன். பாத்தாப் பக்கத்துல நம்ம
பங்காளி.முன்னாடி பேட்ச்மேட் ஒருத்தந்தான் உக்காந்திருந்தான். கிண்டலாக்
கேப்போமேன்னு "டேய் மாப்பி, ஆனாலும் வெள்ளக்காரன்
வெள்ளக்காரந்தான்டா... கொஞ்சம் கூட கூச்சப்படாம நைட் அடிச்ச குவாட்டரப் பத்தி
ஓப்பனா பேசுறான்டா"ன்னு சொன்னேன். அதுக்கு அவன் சொன்னான் "லூசு மாதிரி
பேசாத... அந்த சார்ட்லாம் பாத்தியா? கம்பெனிக்கு நல்ல லாபம்.
அதனால இனிமேல் நல்லா வேலை பாத்தா சம்பளத்தோட சேத்து குவார்டரும்
தருவாங்களாம்" சிரிக்காமதான் சொன்னான். ஆனால் இப்போ வரைக்கும் தெரியல அவன்
தெரிஞ்சுதான் சொன்னானா.. இல்ல தெரியாம சொன்னானான்னு. ஆனால் "Quarter
Quarter" என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தது காலாண்டைத்தான்
என்பது மட்டும் எங்களுக்குத் தெரியவில்லை என்பது நிஜம். அதற்குப் பிறகுதான்
தெரிந்தது. இதனால என்ன சொல்ல வர்றேன்னா, உள்ள இருக்கவனுக்கே
இதுதான் நிலைமை. நீங்கல்லாம் சொக்கத்தங்கம்.
ஆங்கிலம்
என்பது பழகப்பழக வசப்படக்கூடிய ஒன்றுதான். எந்த மீடியத்துல படிச்சிருந்தாலும் சரி, சரியான
பயிற்சி இருந்தால், ஆங்கிலம் வராது என்ற குறையை சரிக்கட்டி
விடலாம். சரியோ, தப்போ தயங்காமல் பேச வேண்டும். இந்த
விஷயத்தில் நாம் இதை தெலுங்குப் பசங்களிடம் இருந்து கண்டிப்பாக கற்றுக் கொண்டே ஆக
வேண்டும். அவர்களுக்கு ஆங்கிலம் என்றால் நம்மை விட அதிகதிக தடுமாற்றமே. ஆனால்
எவ்வளவு பேர் இருந்தாலும், எவ்வளவு தப்பாகப் பேசினாலும்
கொஞ்சமும் கூச்சப்படாமல் பேசுவார்கள். அதுதான் நமக்கும் தேவை. பழகப்பழகவே வரும்.
இருந்தாலும் ஆங்கிலத்தை வசப்படுத்த சில யோசனைகள். நான் கல்லூரிக்காலங்களில்
நேர்முகத்தேர்வுகளின் போது பயன்படுத்தி வெற்றி கண்ட யோசனைகள். உங்களுக்கும்
பயன்படட்டுமே என்று.
1)
உங்கள் ரெசுமேவில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம்
தெரிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை நீங்களே உங்கள் ரெசுமேவைத் தயார் செய்யுங்கள்.
டெம்ப்ளேட் மட்டும் வேண்டுமானால் இணையத்தில் இருந்தோ நண்பர்களிடம் இருந்தோ
எடுத்துக் கொள்ளலாம். எப்படியானாலும் ரெசுமேவில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும்
அர்த்தத்தையும் அது பற்றிக் கேட்டால் என்ன பதில் கூற வேண்டும் என்பதையும் நன்றாக
தயார் செய்து கொள்ளுங்கள். எனது நண்பனின் தம்பி ஒருவன் இன்டர்வியூவிற்கு செல்லும்
பொழுது தன்னுடைய நண்பனின் ரெசுமேவை பெயர் மற்றும் மாற்றி எடுத்துக் கொண்டு சென்று
விட்டான். அது கொஞ்சம் பெரிய நிறுவனமாதலால் மொத்தம் ஐந்து ரவுண்டுகள். நான்கில்
தேறி விட்டான். கட்டக்கடைசியான HR ரவுண்டில் "உனது
பலங்களில்(Strengths) நீ மிகவும் Optimistic- என்று போட்டிருக்கிறாயே.. இது வரை எந்த சம்பவத்தில் நீ மிகவும் Optimistic ஆக இருந்திருக்கிறாய்?"
Optimistic
என்ற வார்த்தை தன் ரெசுமேவில் இருப்பதும் அதற்கு என்ன அர்த்தம்
என்றே தனக்குத் தெரியாது என்பதும் அவனுக்கே அப்பொழுதுதான் தெரிய வந்தது. நழுவிப்
போனது. ஆகவேதான் சொல்கிறேன் உங்கள் ரெசுமே என்பது உங்கள் அடையாளம். முழுதாக தெ/பு/ரிந்து கொள்ளுங்கள்.
2)
கண்ணாடி பார்த்துப் பேசிப் பழகுங்கள். எனக்கெல்லாம் ஆங்கிலம்
என்றால் வாயில் டைப்ரைட்டர் அடிப்பது நின்றதற்கு மிக முக்கியமான காரணம் கண்ணடி
பார்த்துப் பேசிப் பழகியதுதான். யாருமில்லாத தனிமையில் என்ன வகையான
கேள்விகளையெல்லாம் இது வரையில் எதிர்கொண்டிருக்கீறிர்களோ அத்தணைக்கும் பதில்களை
கண்ணாடியைப் பார்த்து சொல்லிப் பழகுங்கள். நமது வாய் பொதுவாக எங்கே டைப்
அடிக்கிறது உணர்ந்து கொள்ளச் சிறந்த வழி. நமது உச்சரிப்பிலும் எங்கெங்கு பிழைகள்
வருகிறது என்பதையும் எளிதாக கண்டறியலாம்.
3) "உங்களைப் பற்றி
சொல்லுங்கள்"(Tell about yourself) பெரும்பாலான
நேர்முகத்தேர்வுகளில் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். உங்களுடைய நேர்முகத்
தேர்வு எப்படிச் செல்லும் என்பதை தீர்மானிக்கும் கேள்வி. நாம் கண்ணாடி பார்த்துப்
பேசி பழக வேண்டிய முதன்முதல் கேள்வியும் இதுதான். நீங்கள் யார், என்ன துறையில் படிக்கிறீர்கள்/படித்திருக்கிறீர்கள், உங்கள் குடும்பப்பிண்ணனி, உங்கள் பலம்/பலகீனம்
ஆகியவற்றை மிகத் தெளிவாக சொல்லி விடுங்கள். கூடவே உங்கள் தனித்திறமைகளையும்
மற்றவர்களிலிருந்து நீங்கள் எப்படி மாறுபடுகிறீர்கள் என்பதையும். உங்களுடைய
பதிலிலிருந்தே அடுத்த மூன்று நான்கு கேள்விகள் கேட்கப்படும் அளவுக்கு தயாரித்துக்
கொள்ளுங்கள். குறைந்தது முந்நூறு முறையாவது கண்ணாடி முன் சொல்லிப்பாருங்கள்.
ஒப்பிப்பது போல் அல்லாமல் நேரிடையாக பேசுவது போன்ற லாவகம் வரும் வரையினில்
விடாதீர்கள்.
4)
ஆங்கில வளத்தைப் பெருக்குவதற்கு முன்பெல்லாம் ஹிந்து
எடிட்டோரியலைத்தான் படிக்கச் சொல்லுவார்கள். அது பண்டைக்காலம். என்னைக் கேட்டால்
ஆங்கில நாவல் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சேட்டன் பகத்,
ரவீந்தர் சிங் ஆகியோரது நாவல்கள் நல்ல சாய்ஸ். பொழுதுபோக்கோடு கூடவே
ஆங்கிலமும். உங்களுக்குப் பிடித்தமான வசனங்களை சத்தமாக வாசித்துப் பாருங்கள்.
உச்சரிப்பு திருத்தம் ஏற்படும். நாவலின் ஏதாவது ஒரு அத்தியாத்தை வாசித்து முடித்த
பிறகு அதனை உங்களுடைய சொந்த ஆங்கிலத்தில் சொல்லி முயற்சி செய்து பாருங்கள். அது
ஆங்கிலத்தில் விவரிக்கும் திறனை அதிகரிக்கும்.
5)
நண்பர்கள் குழுவாக சேர்ந்து ஏதாவது ஒரு தலைப்பில் பேசிப்பழகுங்கள்.
அது நீங்கள் அன்று படித்த நாவலின் சாராம்சமாகக் கூட இருக்கலாம். இல்லை ஏதாவது ஒரு
சமகால நிகழ்வு, அன்றைய செய்தி இப்படி ஏதாவது ஒன்றைப் பற்றி
பேசிப்பழகுங்கள்.
6)
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். சில சக்கரக்கட்டிகள் இருக்கும். ஆறு X
ஆறு எத்தணை என்று கேட்டால்
அரை மணி நேரம் ஆங்கிலத்திலேயே தாளிப்பார்கள். ஆனால் உண்மை அவர்களுக்குப் பதில்
தெரியாது என்பதுதான். Peter Heater மண்டையன்களைக் கண்டு
ஒருபோதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளாதீர்கள். அவர்களுக்கு இருப்பது ஆங்கிலம், இல்லாதது அறிவு. அது கடலை போட மட்டுமே உதவும். உங்களுக்கு
அதிகதிகமாக
இருப்பது அறிவு, வந்து கொண்டிருப்பது ஆங்கிலம், சீக்கிரம் வந்து விடும்.
7)
சின்னச் சின்ன வாக்கியங்களாக அமைத்து எளிமையான சொற்களில் சொல்ல
வேண்டியதைத் தெளிவாகச் சொன்னாலே போதும் என்பதை நன்கு உணருங்கள், உங்களிடமிருந்தும் அதுதான் எதிர்பார்க்கப் படுகிறது. மெதுவாகப் பேசிப் பழக
பழக பயம் தன்னாலே விலகும்.
8)
Group Discussion ஆகட்டும் Technical/HR Interview ஆகட்டும். உங்களோடோ அல்லது உங்கள் எதிரிலோ அமந்திருப்பவர்கள் உங்களுக்கு
சமமானவர்களே என்பதில் தெளிவாக இருங்கள். அவர்களுக்கும் நம் அளவுக்கே ஆங்கிலம்
தெரியும் என்ற நினைப்பை வழுப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களை விடவும் நம்மால்
சிறப்பாகவே பேச முடியும் என்பதில் உறுதியாய் இருங்கள்.
எதுவுமே முடியும் என்பதை அடி
மனதின் ஆழத்தில் இருந்து நம்புங்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன்னுடைய 187வது இன்டர்வியூவில் வேலைக்குச் சென்றார். அவர் மொத்தமாக மெயிலில் அனுப்பிய
ரெஸ்யூம் அட்டாச்மென்ட்கள் 4000த்துக்கும் மேல். எடுத்த ரெஸ்யூம்
ப்ரிண்ட்டவுட்டுகள் 1000க்கும் மேல். சொல்லப்போனால் அவர் நண்பர்கள் பலரையும் விட
இன்று அவர் மிகவும் உயரிய நிலையில் உள்ளார். மொத்தத்தில்
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. கீழே ஒரு சில லிங்க்களைக் கொடுத்திருக்கிறேன். அதில்
முதலாவது லிங்க் ஒரு 28
பக்க Word document. சத்தியம் செய்கிறேன்,
அது உங்களுக்கு மிக மிக பயன்படும். எந்த ஒரு இன்டர்வியூவிற்கு முதல்
நாளும் அதை ஒரு முறை வாசியுங்கள். நல்லதொரு Interview Mindset உருவாக்க வல்ல மந்திரக்கோல் அது. எனக்கும் என் நண்பர்கள் பலருக்கும் மிகவும் பயன்பட்டது.
Interview’s
Inner views: http://www.ramkumarn.com/Superb_Tips_For_Interview.DOC
20 பேர் சொன்னது என்னான்னா..:
அருமை
நானும் பாதிக்கப்பட்டவன் தான்... எப்படியோ என்னுடைய தர்க்கரீதியான அறிவை மனதில் வைத்துக்கொண்டு ஆங்கில அறிவை சற்றே புறந்தள்ளி என்னை தேர்வு செய்தார் என்னுடைய மேனேஜர்... ஆனாலும் வேலையில் சேர்ந்தபிறகு அடிக்கடி நாம் இந்த வேலைக்கு தகுதியான ஆள் இல்லையோ என்ற சந்தேகம் எழுவதுண்டு... பாதி பதிவை மட்டுமே படித்திருக்கிறேன்... உங்கள் ஐடியாக்கள் ஏதாவது தேறுமா என்று பார்க்கிறேன்...
அருமையான பதிவு நண்பரே.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
இது மாதிரி பயனுள்ள பதிவுகள் எழுதுங்கள். எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
rathnavel.natarajan@gmail.com
மனப்பூர்வ வாழ்த்துகள்.
நிறைய நாள் கழித்து... ஒரு பெண்ணுக்காக இல்லாமல் கண்ணீர் வந்த தருணம்.... மிக்க நன்றி அண்ணா .... :)
நிறைய நாள் கழித்து... ஒரு பெண்ணுக்காக இல்லாமல் கண்ணீர் வந்த தருணம்.... மிக்க நன்றி அண்ணா .... :)
வணக்கம்! இளைஞர்களுக்கு வழி காட்டும் நல்ல கட்டுரை.
சத்தியமான கூற்றுக்கள் அண்ணா ... :)
நானும் அப்படிதான் இருந்தேன்...
பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி பயின்று... திருநெல்வேலி கல்லூரியில் பொறியியல் பழகிய நேரத்தில் எனக்கும் இதைப் போல நிறைய பிரச்சனைகள் இருந்தன...
எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்ததன் பலனாக இன்று என்னால் ஆங்கிலத்தில் பேச முடியும் என்று நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்களை நம்ப வைக்க முடிகின்றது...
எல்லாருக்கும் எனக்குக் கிடைத்த நண்பர்கள் போல், நண்பர்கள் கிடைப்பார்கள் என்று சொல்ல முடியாது ...
உங்கள் பதிவுகள் உண்மையிலேயே மிகவும் உதவியாக இருக்கும் ... :) வாழ்த்துக்கள் .... :)
சத்தியமான கூற்றுக்கள் அண்ணா ... :)
நானும் அப்படிதான் இருந்தேன்...
பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி பயின்று... திருநெல்வேலி கல்லூரியில் பொறியியல் பழகிய நேரத்தில் எனக்கும் இதைப் போல நிறைய பிரச்சனைகள் இருந்தன...
எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்ததன் பலனாக இன்று என்னால் ஆங்கிலத்தில் பேச முடியும் என்று நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்களை நம்ப வைக்க முடிகின்றது...
எல்லாருக்கும் எனக்குக் கிடைத்த நண்பர்கள் போல், நண்பர்கள் கிடைப்பார்கள் என்று சொல்ல முடியாது ...
உங்கள் பதிவுகள் உண்மையிலேயே மிகவும் உதவியாக இருக்கும் ... :) வாழ்த்துக்கள் .... :)
Dear Ram very nice posting. A small advice to you, CV is known as Resume'.அதாவது ரெசுமே என்று உச்சரிக்கவேண்டும் .Resume means restart,do something again. இதற்க்கு ரெஸ்யும் என்று உச்சரிக்க வேண்டும்.Otherwise all is well.Nice to read your posting.
நல்லா சொல்லி இருக்கீங்க....thanks....ஏதோ நமக்கு தெரிந்த இங்கிலிசு...
Super! Super! Simply superb posting..
ரொம்ப நல்ல பதிவு...Hats off....
நான் பணிபுரிவது ஹைதராபாதில், நீங்கள் சொல்வது 100% உண்மை. தெலுங்கு பசங்கள் கொஞ்சம் கூட கூச்சமே படாமல், தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில பொளந்து கட்டுவார்கள், உச்சரிப்பு சரியோ தவறோ, content சரியா இருக்கும்...அவர்களை பார்த்து கண்டிப்பாய் அந்த self Confidence-ஐ கற்று கொள்ள வேண்டும்.......
Excellent one Ramkumar!! Very inspiring!!
முக்கியமானது ஒண்ணு விட்டுட்டீங்க. நம்மைப் போலவே தமிழில் மட்டும் பேசுபவர்களிடம் நம் 100% நேரத்தை செலவிடக்கூடாது. (அவர்களிடம் பேசவே கூடாது என்று சொல்லமாட்டேன்) தமிழ் அறியாதவர்களிடம் 30% - 40% நேரத்தை செலவிடுகிறமாதிரி பார்த்துக் கொள்ளவேண்டும். நல்லவேளை நமக்கு ஹிந்தி தெரியாது. அதனால் வட இந்தியர்களிடம் ஆங்கிலத்தில் பேசி பழகலாம்.
முக்கியமானது ஒண்ணு விட்டுட்டீங்க. நம்மைப் போலவே தமிழில் மட்டும் பேசுபவர்களிடம் நம் 100% நேரத்தை செலவிடக்கூடாது. (அவர்களிடம் பேசவே கூடாது என்று சொல்லமாட்டேன்) தமிழ் அறியாதவர்களிடம் 30% - 40% நேரத்தை செலவிடுகிறமாதிரி பார்த்துக் கொள்ளவேண்டும். நல்லவேளை நமக்கு ஹிந்தி தெரியாது. அதனால் வட இந்தியர்களிடம் ஆங்கிலத்தில் பேசி பழகலாம்.
நானும் ஆங்கிலம் பேச கற்று கொண்டிருகின்றேன் .நல்ல பதிவு . என்னை போன்ற தமிழ் மீடியம் ஸ்கூலில் படித்து வந்த மாணவர்கள் தைரியத்தை வளர்த்து ஆங்கிலம் பேசலாம் என்ற நம்பிக்கையை வளர்க்கும் பதிவு .
வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே... யாராவது ஒருவருக்கு இந்தப் பதிவு பயன்பட்டாலும் மகிழ்ச்சி என்றே இருந்தேன்.. நிறைய நண்பர்களுக்கு பயன்பட்டது என்று சொல்கிறார்கள்.. மகிழ்ச்சியே.
@அனானி நண்பர் : சொன்னதத் திருத்தி விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சகா.
Anonymous said...
Dear Ram very nice posting. A small advice to you, CV is known as Resume'.அதாவது ரெசுமே என்று உச்சரிக்கவேண்டும் .Resume means restart,do something again. " இதற்க்கு " ரெஸ்யும் என்று உச்சரிக்க வேண்டும்.Otherwise all is well
பெயர் தெரியா நண்பரே... கொஞ்சம் தமிழும் பழுகுங்கள்...
nambikkaioottum urchaha varthaigal. pls,accept my appreciation. continue your service
nice
Post a Comment
வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...