Sunday, April 1, 2012

நன்றி நன்றி...

இன்றோடு இந்தியா உலகக்கோப்பையை வென்று ஒரு ஆண்டும், எனக்கு தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஒரு வாரமும் நிறைவடைகிறது. வாசித்த-வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், வழிவகை செய்து கொடுத்த தமிழ்மணத்துக்கும் நன்றிகள் பல.  நான் எப்பொழுதுமே தொடர்ந்து பதிவுகள் எழுத வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. ஆனால் சில நேரங்களில் தொடர்ந்து எழுதமுடியாமல் போய் விடும். "சுமாஆஆஆர் ஆறு மாசமா” போல சுமார் ஆறுமாதம் வரைக்கூட பதிவுகள் எழுதாமல் இடைவெளி விழுந்ததுண்டு. இப்பொழுது இரண்டு மூன்று மாதங்களாகத்தான் தொடர்ந்து எழுத முயற்சி செய்து வருகிறேன். ஆனால் வாரத்துக்கு ஒரே ஒரு பதிவாவது போட்டுவிட வேண்டும் என்று எனக்கு நானே உத்தரவு பிறப்பிக்க என்ன செய்வதென்று என்று யோசித்துப்பார்த்தால் ஒன்றே ஒன்றுதான் வழி எனப்பட்டது. "கொத்து புரோட்டா" "காக்டெயில்" "அவியல்" "பிரபா ஒயின் ஷாப்" "சாண்ட்விச்" இவைகளைப் போல ஏதாவது ஒன்று சமைக்க ஆரம்பித்தால் மட்டுமே முடியும். ஆதலால் மிக விரைவில் பிரபல பதிவர் ஆக வேண்டும்(ஆகணும்டா ஆகணும் Sound :வடிவேலு டூ மகாநதி சங்கர் - மருதமலை) என்றால் நானும் "வாராவாரம் ஆராவாரம்" என்ற வகையில் ஏதாவது எழுதியே ஆகணும் என்ற முடிவுக்கு வந்து(அவ்வ்வ்வ்வ்வ்வ்) விட்டேன். "யோவ், யாருய்யா அது இன்ஷுரன்ஸ் கொம்பேனி நம்பர கூகிள் பண்றது" அந்தளவுக்குல்லாம் வொர்த் இல்ல பாஸ். லைட்டாதான்.


சரி எழுதனும் ஓக்கே. ஆனா என்ன தலைப்பு வைக்கிறதுன்னு யோசிச்சு பாத்தாக்கா ஒன்னியுமே செட் ஆவல. மகா கணம் பொருந்திய வலையுலக வரலாற்றின்படி  ஏதாவது சாப்பாடு பேரோ சரக்கு பேரோதான் கண்டிப்பா வைக்கனும். ஆனா என்ன வைக்கிறது. பிரியாணின்னு வைக்கலாம். ஆனா மசாலா தூக்கலா இருக்கணும். நமக்கு செட் ஆவாது. மட்டன் சுக்கா, சிக்கன் 65, நண்டு ப்ரை, ப்ரான்ஸ் மசாலா, வஞ்சிரம் வறுவல். "ஆமாய்யா, பொன்னுசாமி ஹோட்டல் மெனுவ அப்படியே வாசி. போய்யாங்க"ன்னு நீங்க சொல்றது நல்லாவே கேக்குது. ஆனா ஒன்னும் செட் ஆக மாட்டேங்குதே. அப்ப என்னதான் வைக்கிறது. சைவமாப் போலாம்னா அவியல், கூட்டாஞ்சோறு எல்லாமே வச்சுட்டாங்க. சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, காரக்குழம்பு, பொரியல், அப்பளம், ஊறுகாய்ன்னுல்லாம் வச்சா அவ்ளோ கரெக்ட்டா செட்  ஆவாது. பூரி, புரோட்டா, ப்ரைடுரைஸ், நூடுல்ஸ்... ம்ஹூம்... தயிர்சோறுன்னு வச்சா... யப்பா சாமி ஒலகமே ஓட்டித் தள்ளி கிண்டிக் கெழங்கெடுத்துரும்.. மொத்தத்துக்கு மீல்ஸ்ன்னு வச்சா லென் த் கம்மியா இருக்கு , ஐ மீன் நீளம் பத்தல. ஆங் வந்துருச்சு... கெடச்சுருச்சு... கெடச்சுருச்சு. மீல்ஸ் அளவுக்கு புல்லா குடுக்க முடியாது. நம்மளால முடிஞ்சது கொஞ்சமோ நஞ்சமோ.. ஒச்சமோ சொச்சமோ. அதனால மினி மீல்ஸ்.  எப்பூடி..


டைட்டில் மினி மீல்ஸ்... கேப்ஷன் வாராவாரம் ஆராவாரம். 96 சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல சொல்லணும்னா இனி ஒவ்வொரு வாரமும் உங்களை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது. இனி எல்லா வாரத்திலும் ஏதாவது ஒருநாள் மினிமீல்ஸ் பரிமாறப்படும். அந்த வாரத்தில் நடந்த மேட்ச்சோ, பாத்த படமோ, பாதிச்ச விஷயமோ, கொஞ்சம் ட்வீட்ஸோ, முகப்புத்தக ஸ்டேட்டஸ்களோ, பாட்டு, படம்... எல்லாத்தையும் கலந்துகுடுக்கும் இந்த மினிமீல்ஸ். உலக வலைபதிவுகளில் முதன்முறையாக உங்களுக்காக இனிமேல் வாராவாரம் நெல்லை நண்பனின் மினிமீல்ஸ். ஜமாய்.
"மினிமீல்ஸ்... நீ எழுதியதால் இது ஹனிமீல்ஸ் :))" போன்ற டெம்ப்ளேட் கமென்டுகள் அதிகளவில் வரவேற்கப்படுகின்றன.
 "இல்ல, இல்ல... கமெண்டு போட்டா அக்கவுண்ட்ல காசுல்லாம் போட முடியாது. நன்றி கமெண்டு மட்டும்தான்." அப்படினா சனிமீல்ஸா. நோ  நோ. ஐ ஆம் பாவம். 

ஆரம்பமாக சென்ற வாரத்தில் போட்ட சில ட்வீட்டுகளும் முகப்புத்தக ஸ்டேட்டஸ்களும்.


################## 

இழப்பதற்கு ஏதுமில்லை என்னும் தருவாயில், அமெரிக்காவின் தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேறியது. 24 supported, 8 neutral, 15 against  #KillingFields #IndiaSupported #Very1st-Victory #ShameOnSL

##################

"முயற்சி திருவினையாக்கும்" ன்னு சொன்னது யாரு..?  "ஓ மிஸ்டர் வள்ளுவர், வாங்கவந்து 
எங்க வீட்ல பாப்பாவுக்கு ஒரே ஒரு இட்லி ஊட்டுங்க பாப்போம்".

##################

தூக்கமே வரல. யோசிச்சு பாத்தா பேசாம சென்ட்ரல் மினிஸ்டர் ஆகிட்டா பிரச்சனையே இல்லன்னு தோணுது. திரிவேதி நேத்துதான் பேப்பர் போட்டாப்ல, அதுக்குள்ள Resource Request raise பண்ணி முகுல் ராய replacement ah கொண்டு வந்துட்டானுக. ஒரு Notice period உண்டா, KT உண்டா. ஒண்ணும் கெடையாது. கெரகம் நம்ம பாக்குற டப்பாடக்கர் வேலைல பேப்பர் போட்டாத்தான் 2,3 மாசம் Notice period, KT, Reverse KT, Manager approval, Client approval, Exit formalities, Last day mail லொட்டு லொசுக்குன்னு ஆயிரத்தெட்டு formality. What the nonsense. #EKSI #அனுபவம் #அவனவன் கவலை.


##################

Blasting BJP. கர்நாடகாவைத் தொடர்ந்து குஜராத்திலும் BJP MLAs ம்ம்ம் #BJP செம ஸ்டராங்மா #ஆனாலும் பொது எடத்துல ச்சங்கடமா இருக்காது. #PornSena

################## 

இந்த எளனியில தண்ணி வரலீங்க... "அந்த பைப்ல வருது, போய் புடிச்சு குடி.. போ..." Happy Birthday to the King of Nakkals #Goundamani

##################

அன்பு என்ற ஒன்று மட்டுமே பிராதனாமாக்கப்பட்டு ஆக்கும் அழிக்கும் என்ற நிலையிலான கடவுள் கூட இரண்டாம் பட்சமாக்கப்பட்டால்தான், மனிதநேயம், மனித உரிமை எல்லாம் வாய்ச்சொல் தாண்டிய விஷயமாக மாறும். உணர்வுகளில் ஊறும். குரூரம் குறையட்டும். சித்தார்த்தன் புத்தனான இரவில் அவனுக்கு என்ன நடந்ததோ அது நம் எல்லோருக்கும் நடக்கட்டும்.  #KillingFields


##################

சுஜாதாவை விட மிகப்பெரிய தீர்க்கதரிசி ராஜீவ்மேனன்தான். 2012 TN நிலைமையை 15 வருஷத்துக்கு முன்னாடியே படத்தலைப்பா வச்சுருக்காரு #மின்சார(மே) கனவு
##################

கடந்த 24 வருஷத்தில் கராகாட்டக்காரன் சண்முகசுந்தரத்துக்கு அடுத்து இத்தனை அக்கா போட்டது இந்த தங்கச்சிக்காதான் #சகிக்கலா http://t.co/ojs12scW

##################

இந்த வாரம் பார்த்ததில் ஒரு நல்ல பெப்பி பெர்பார்மன்ஸோட வீடியோ. பொள்ளாச்சி மகாலிங்கம் காலேஜ் பசங்க பண்ணிருக்காங்க. பிரமாதமா இருக்கு. காலேஜ் பசங்க இந்தளவுக்கு பண்ணிருக்கது மிக மிகப் பெரிய விஷயம். கண்டிப்பாக பாருங்கள்.##################
கடைசியா ஒரு கார்ட்டூன் ஜோக்.. கார்ட்டூன் நெட்ல சுட்டது.  It is always important to have machies and machans...3 பேர் சொன்னது என்னான்னா..:

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

மோகன் குமார் said...

நம்ம தம்பி மெட்ராஸ்பவன் சிவகுமார் ஸ்பெஷல் மீல்ஸ் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடுறார். நீங்க மினி மீல்ஸா? ரைட்டு

Anonymous said...

மினி மீல்ஸ்னாலும் வயிறு நிரம்பிற்று...தொடருங்கள்...

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.