Wednesday, May 30, 2012

ஹலோ...


நாடு, மொழி, நிறம், குணம், மணம், கலாச்சாரம், தட்ப வெட்பம் இதையெல்லாம் தாண்டி இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு மனித உயிரும் இந்த வார்த்தையை அறிந்திருக்கக் கூடும். பேச்சுக்குறைபாடில்லாத அத்தனை மனிதர்களும் இதை சொல்லியிருக்கவும் கூடும். உலக மொழிகள் ஒவ்வொன்றிலும் இவ்வார்த்தை அம்மொழிக்கான ஒரு வார்த்தையாகவே மாறிப் போய் விட்டது. சொல்லபோனால் இந்த technology உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் வாழ்நாள் முழுவதுமாய் அதிகமாய்ச் சொல்லும் வார்த்தைகளின் டாப் 10 வரிசையில் இவ்வார்த்தைக்கு கண்டிப்பாய் இடம் உண்டு. ஆங்கிலத்தில் ஒன், டூ, த்ரி அறியாதவனைக் கூட கண்டுவிட முடியும். ஆனால் இந்த வார்த்தையைக் தெரியாதவனோ, அறியாதவளோ அரிதரிது மானிடராய் இருத்தலரிது..

இப்பொழுது தமிழையே எடுத்துக் கொண்டால் கூட அந்த வார்த்தைக்கான தமிழ்பதம் என்னவென்று துல்லியாமாய்ச் சொல்லுவது கஷ்டமே. இன்னும் பலரும் அதுவே ஒரு தமிழ் வார்த்தைதானென்று வாதிட்டாலும், ஆச்சர்யப்படுவதற்கில்லை. சரி சரி  பில்டப்ப நிறுத்திக்கலாம். அந்தவொரு வார்த்தை "ஹலோ". ஒரு நிமிடம் யோசித்துப்ப் பாருங்கள் நீங்கள் வாழ்வில் எத்தனை லட்சம் முறை அந்த வார்த்தையை உபயோகித்திருக்கக் கூடும். போனில், நேரில், காரில், பாரில் என.


இப்பொழுது நம் தமிழ் சினிமாவையே எடுத்துக் கொண்டால் ஹலோ என்ற வார்த்தைக்கு  அது கொடுத்திருக்கும் இடம் மிக மிகப் பெரிது. புதையல் என்றொடு  படத்தில் 1957ல்  பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் "ஹலோ மை டியர் டார்லிங்.. எங்கம்மா உனக்கு மாமி" என்று சந்திரபாபுவுக்காக ஒரு பாடலை எழுதி தொடங்கி வைத்தார். அதற்கு முன்னாலே ஏதும் பாடலில் "ஹலோ" வந்திருக்கிறதா என சரி வரத் தெரியவில்லை.  "ஹலோ ஹலோ சுகமா” என்று தர்மம் தலை காக்கும் படத்துல கவியரசர் எழுதி அதை தொடர்ந்தார்.. ஜெமினி கணேஷனும் சாவித்திரியும் நடித்து "ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்" என்றொரு படமும் அதிலே "ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் – How do you do" என்றொரு பாடலும் கூட உண்டு. அதிலிருந்து கொஞ்ச நாளிலேயே பழம்பெரும் நடிகர் பிரசாந்த் என்பவரும்(ஓ மை காட்.. வாட் எ டெரிப்க் அன்டு டைனமிக் ஆக்டர் ஹீ இஸ்) ப்ரீத்தி ஜாங்கிரியாயினி என்ற நடிகையும் நடித்து "ஹலோ" என்ற பெயரிலேயே ஒரு மொகாஹிட் திரைப்படம் கூட வந்தது. அந்தப்படத்தில் ப்ரீத்தி ஜாங்கிரியாயினி சொல்லும் "ப்ப்போடா போடா போடா போடா சந்துரு" என்ற வசனமும் 'சலாம் குலாமு' என்ற பாடலும் சன் மற்றும் கே டி.வியின் உபயத்தில் உலகப்பிரசித்தி. தலைவர் டி.ஆரும் மோனிஷா என் மோனோலிசா என்னும் திரைக்காவியத்தில் "ஹலோ ஹலோ ஹலோ... பேரை நான் சொல்லவா" என்று பாடல் வைத்திருந்தார்.


இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் ஹலோ என்ற வார்த்தைக்கு மிகப்பெரிய significance ஏற்படுத்திக் கொடுத்தவர் என வைகைப்புயல் வடிவேலுவைச் சொல்லலாம். "ஹலோ, துபாயா.. என்னோட பிரதர் மார்க் இருக்காரா" என்று "ஹலோவுக்கு தனி மாடுலேஷனே வரையறுத்தார் அவர். ஹலோ.. ஹல்லல்லலலோ… என்று ஹலோவை உச்சகட்டத்திற்கு ஏற்றிய பெருமை அவரையே சேரும். "ஹல்ல்லோ, ஐ ஆம் குண்டலகேசி" என்று கவுண்டரும் தன்னுடைய பங்குக்கு ஹலோவை கவுரவித்து இருக்கிறார். "ஹலோ மிஸ்டர்" என்பதை பகுதியாகவும் "என்னய பாலோ பண்றீங்களா?" என்பதை விகுதியாகவும் கொண்ட வசனங்களைப் பேசாத தமிழ் சினிமா கதாநாயகிகளை போன அரை நூற்றாண்டில் விரல் விட்டு எண்ணி விடலாம்


இப்பேர்ப்பட்ட ஹலோவைப் பற்றி இப்பதிவு எழுத காரணமே நேற்றுக் கேட்ட இந்த "ஹலோ"வின் வரலாறுதான். ஒருத்தன் சொன்னான் "ஹலோங்கிறது தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல்லின் மனைவி/காதலி பெயர். அவர் தொலைபேசியைக் கண்டுபிடித்தவுடனே முதன் முதலாக அவர் மனைவிக்குத்தான் அழைத்தார். அவள் எடுத்தவுடனே 'ஹலோ' என்று அவள் பெயரைச் சொன்னார். அது முதலாகவே ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும் ஹலோ என்ற வார்த்தை சொல்லப்படுகிறது." இதைக் கேட்டு அப்படியே அசந்து விட்டேன். எவ்வளவு பெரிய விஷயம்.ஒருவன் தன்னுடைய வாழ்க்கைத்துணைக்கு இதை விட இன்னுமொரு சிறப்பை செய்து விட முடியுமா. அதுநாள் முதல் இப்பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் சில லட்சம் முறையேனும் தன்னுடைய மனைவியின் பெயரை உச்சரிக்குமாறு வழிவகை செய்து விட்டாரய்யா என்று வியந்து மாளவில்லை.


 பிறகு வீட்டுக்கு வந்தவுடனே கூகிளாண்டவரிடம் "யோவ் பாத்தியா... கிராகம்பெல் கிரேட் மேன்யா. அவரு சம்சாரம் பேர ஊருக்கே தெரிய வச்ச மகான்யா" என்றேன். "ஹஹஹ" எனச் சிரித்து விட்டு சில லிங்குகளைக் காறி உமிழ்ந்தார். ஒன்றொன்றாக வாசிக்க வாசிக்கவே அறிய முடிந்தது கிராகம்பெலின் மனைவி ஹலோ என்பவள் நிலாவில் வடை சுடும் பாட்டிக்கு சொந்தக்காரி என. ரசனையானதொரு கட்டுக்கதை. அவருடைய மனைவியின் உண்மையான பெயர் Mabel Hubbardஅவளும் ஒரு கேட்கும் திறனில்லாத மாற்றுத் திறனாளி. ஆக தொலைபேசி கண்டுபிடிப்பாளரின் மனைவிக்கு காது கேட்காது. நிஜங்கள்  எப்பொழுதும் ரசனைக்குறியதாய் இருப்பதே இல்லை என்பதே நிதர்சனம். மேலும் அவர் டெலிபோனைக் கண்டுபிடித்தவுடனே சொன்ன முதல் வார்த்தை ஹலோவும் அல்ல. "Ahoy"… "hoi" என்ற Dutch வார்த்தையில் இருந்து மருவி வந்த "Ahoy". பிற்காலங்களில் இதுவே "Hi" என்றாகியிருக்கிறது என அறிகிறேன். “Hello” என்பது கூட "hola" "Hullo“ “Hallo” என்ற ஏதொவொரு பண்டைய மொழியின் வார்த்தைகளிலிருந்து மருவி வந்ததே. "Hello" என்பதை தொலைபேசியின் வணக்க வார்த்தையாக புழக்கத்தில் கொண்டு வந்தது தாமஸ் ஆல்வா எடிசன் தான் என்றொரு கூற்றும் நிலவுகிறது. ம்ம்ம் எது எப்படியோ, ஹலோ என்பது
 ஒவ்வொ... ஒன் நிமிட்.. எங்கோ நீதானே என் பொன்வசந்தம் டீசர் இசை கேட்கிறதே.. ஆங், என் மொபைல்தான்.  ஒரு கால் வருதுங்க. பை பை...


"ஹலோ சொல்லு மச்சி..."
---
"ஹலோ சொல்லுடா..."
---
"ஹலோ கேக்குதாடா.."
----
"ஹலோ ஹலோ ஒன்னுமே கேக்கலடா...."

மொத்தத்தில் வாழ்க்கை என்பது சில இன்பங்கள், சில துன்பங்கள் மற்றும் சில லட்சம் ஹலோக்களாலும் ஆனது. ஹலோ.... :)

Monday, May 28, 2012

கொல்'கெத்தா' டா...வேணாம் மச்சான் வேணாம் இந்த சென்னை சப்போர்ட்டு
கண்மூடி முழிக்கசல்லோ இங்க தோனியும் அவுட்டு
கடல்ல போல CSK வெறும் சால்ட்டு வாட்டரு...
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கிப் போட்டுடு..

KKRஅ நீயும் சப்போர்ட் பண்ணா டார்ச்சர் இல்லடா...
நீயும் CSKக்கு சப்போர்ட் பண்ணா டவுசர் அவுரும்டா..
லக்குல உள்ள வந்த CSk வேணாம்டா...
நமக்கு டேலண்டுல நம்பர் 1 KKR போதும்டா..

மும்பை டெல்லிய ஜெயிச்சு புட்டோம்...
KKRகிட்ட கொடுமையா தோத்து போனோம்...
டெக்கான் தயவுல உள்ள வந்தோம்...
காயத்ரி கூட இப்போ காறித் துப்பும்...

Play off வந்த போது அட கண்ணு தெரியாது...
கண்ண முழிச்சிகிட்டா அங்க CSK கெடையாது… 
CSK சுகரு மாதிரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாலு..
KKR தடுப்பு ஊசிடா
ஜனக்கு ஜானு கோபாலு

CSK சுகரு மாதிரி
செமில ஜெயிச்சு வந்துடும்...
kKR தடுப்பு ஊசிடா
பைனல்ல அடிச்சு கெலிச்சுடும்...

லக்கி கேப்டன் தோனிய நம்பி
டெரிபிக் கேப்டன் காம்பீர விட்டேன்...
பைனல்ல வந்து கவுத்துப்புட்டான்...
பாவி அவனை நம்பி கெட்டேன்...

கலரு மட்டும் மஞ்ச...
பிஸ்லா அடிச்சு புட்டான் கெஞ்ச...
என்ன பண்ணி என்ன
அட அப்பவே நான் சொன்னேன்...

ஷகீப் போட்டானே போட்டான் நல்ல sweeper shotஆ
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா...

Thursday, May 24, 2012

மினி மீல்ஸ் - 24/05/2012

பெட்ரோல் விலையை ஏற்றி விட்டார்கள். வழக்கமாக அவ்வப்பொழுது நாலணா, எட்டணா, ஒன்று, இரண்டு ரூபாய் என்று ஏற்றி வந்தவர்கள் இம்முறை முழுதாக 7.50 ரூபாய் ஏற்றியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 11 சதவிகிதத்துக்கும் மேல்.  ஆனால் ஏற்றிய ஜஸ்ட் 7.50க்கு பதிலாக இரண்ண்ண்ண்ண்டுடுடு ரூபாய் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தும்(ப்)பத்தகுந்த வட்டாரங்களின் கருத்துகள் தெரிவிக்கின்றன. எப்படியும் வழக்கம் போல், "சைக்கிள்ல போவோம், நடந்து போவோம்" என்று இரண்டு நாட்களுக்கு இணையத்தில் அங்கலாய்த்து விட்டு, காங்கிரசைக் கொஞ்சமே கொஞ்சம் கலாய்த்து விட்டு, எவ்வளவு கேட்டாலும் கொடுத்து பெட்ரோல் போடத்தான் போகிறோம். ஓட வேண்டுமே - வண்டியும் கூடவே வாழ்க்கையும்.Petrol price per litre effective midnight: Mumbai - Rs 78.16; Delhi - Rs 73.14; Kolkata - Rs 73.14; Chennai - Rs 77.05 #An increase by 7.50 Rs. This is called original ஏழரை.

பைக்குல தினமும் ஒன்னாப் போனோம்...
மூடிக்கினு இனிமே நடந்தே போவோம்...
#பெட்ரோல் #ஏழர

peTROLL  peTROLL peTROLL peTROLL peTROLL peTROLL  peTROLL 

சென்ற இரண்டு வாரங்கள் முழுவதுமாக பலதரப்பட்ட ட்விஸ்டுகளோடு களைகட்டிக் கொண்டிருக்கிறது IPL. முன்னேறிப் போகும்ன்னு நெனச்ச மும்பை முக்கிட்டு போக, சீனி மிட்டாய் திங்கும்ன்னு நெனச்ச CSK 2nd play offக்கு போயிருச்சு. கொல்கட்டா கூட மோதப் போறது டேல்ன்டடு டெல்லியா - லக்கி சென்னையன்னு நாளைக்கு தெரிஞ்சுரும். ஆனாலும் முதல் play-off win பண்ணதுக்கே சென்னையின் விசிலடிச்சான் குஞ்சுகள் ஆட்டமா ஆடித் தீத்துட்டாங்க. பார்க்கலாம். எனக்கு ராஜஸ்தான் தான் கோப்பை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. வாய்ப்பு விலகியதால் இப்பொழுது டெல்லி வாங்கினால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. சேவாக், வார்னர் மற்றும் மார்க்கல் கையில்தான் இருக்கிறது. பார்க்கலாம்.

                                                  IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL

IPL Tweets:

தோனி மொபைல்ல சங்ககாரா கால் பண்றப்ப மட்டும் இந்தப் பாட்ட காலர் ட்யூனா வச்சுருக்கானாம் "நன்றி சொல்லவே ஒனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே"

சென்னை டீமும் ராக்கெட்டு வெடி மாதிரிதான். அடில பத்த வச்சா மட்டுமே அடிப்பாய்ங்க போல. #CSKvsKKR #IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை சிலம்பாட்ட வீரர் சித்தப்பா தோனியின் சிறப்பான ஆட்டத்தில்... ஷ்ஷ்ஷப்பா, ஒரு வழியா ஜெயிச்சோம்டா சாமி. #CSKvsKKR #IPL

கெய்லு heightக்குத்தான் அந்த பச்சக் கலரு dress ஏதோ நடுராத்திரி மண்ட ஓடு வச்சு ரத்தக்காட்டேரி பூஜை பண்ற மாதிரி இருக்கு. குட் கலர் யூ நோ :)

IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL  


இசைக்கு வயது 36:

பிறப்பில் ஞானதேசிகன் என பெயரிடப்பட்டு, டேனியல் ராஜய்யாவாக வளர்ந்து, ராசய்யாவாக இசை கற்று, ராஜாவாக மெடுக்கள் அமைத்து, இளையராஜாவாக - இசையாளுமையாக இன்று வரை திகழ்ந்து கொண்டிருக்கும் ராகதேவனின் முதல் திரைப்படமான அன்னக்கிளி வெளியாகி மே 14 2012 ல்  36 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இயக்குநர் வசந்த் ஒரு பேட்டியில் சொன்னார் - "இளையராஜாவின் பாடல்கள் என்பது எனக்கு இன்னொரு தாய்மடி மாதிரி." கொஞ்சமும் மிகையில்லாதா வார்த்தைகள். அலுவலகத்தில் இருந்து எந்த மனநிலையில் கிளம்பினாலும் வீடு சேர்வதற்குள் தன்னிலையைத் திருப்பித் தரும் சக்தி ராஜாவின் பாடல்களுக்கு மட்டுமே உண்டு.  நண்பர் தமிழ்ப்பறவை ட்விட்டரில் ஒரு முறை இப்படிக் ட்வீட்டியிருந்தார்.

எஞ்ஜின் ஓடுவதால் பேருந்தும், இளையராஜா பாடல்கள் ஓடுவதால் பயணிகளும் தத்தமது தூரத்தைக் கடக்கின்றனர் எளிதில். @Tparavai

Raja is God - God is Raja Raja is God - God is Raja Raja is God - God is Rajaமை ராஜா ட்வீட்ஸ்:

கடவுளே இல்லையென்பவன் கூட "ஜனனி ஜனனி" பாடலின் முடிவில் பக்தனாக மாறிவிடுகிறான். இசைக்கடவுளின் பக்தனாக. ராகதேவனின் பக்தனாக. இளையராஜாவின் பக்தனாக.

'மைக்' மோகன், ராமராஜன், பிரதாப் போத்தன் போன்றவர்களை இன்றளவிலும் நினைவிருக்க ஒரே ஒரு காரணம் இளையராஜா மட்டுமே #solereasonRaja

இளையராஜா என்ற வர்த்தையை நினைக்கும் எந்தவொரு தருணத்திலும் என் காதில் கேட்கும் வரிகள் இவைதான். "உந்தன் ராஜராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே"

நீதானே என் பொன்வசந்தம் பாடல்களுக்காய் காது திறந்து காத்திருக்கின்றேன். கடவுள் காப்பாற்றுவார். Raja is God. God is Raja.

 Raja is God - God is Raja Raja is God - God is Raja Raja is God - God is Raja

கார்ட்டூன் கார்னர் : 


#####################

நான் பார்த்ததிலேயே ஆகச்சிறந்த தேசிய கீதம் இதுதான். On a sagacity my eyes were howling, my legs stood up and my hands saluted at the end of the video. Superb making and kudos to everyone who were part of this.

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

Wednesday, May 9, 2012

மினி மீல்ஸ் - 09/05/2012


இருண்ட தமிழகத்தின் இன்வர்ட்டரே :

அடுத்து புதுக்கோட்டையில் இடைத்தேர்தல். ஆனால் இம்முறை தி.மு.க, ம.தி.முக போட்டி இல்லை. ஆல்கஹால் விலை தாறுமாறாக ஏறியிருக்கும் இந்த சமயத்தில் கேப்டனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதையும் சரிவர யூகிக்க முடியவில்லை.

ஆனால் ஆனால் ஆனால்.......

சிங்கம் களம் எறங்கிருச்சோய்ய்ய்ய்ய். ல.தி.மு.க போட்டியிட எத்தனித்திருப்பதாக தலைவர் டி.ஆரீன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வா தலைவா வா. வறண்ட தமிழகத்துக்குக் கிடைத்த வாட்டர் பாக்கெட்டென இனி தமிழகமே உன் காமெடி வீடியோக்களால், மன்னிக்க, பிரச்சார வீடியோக்களால் கும்மாளமிட்டு குதூகலிக்கப் போகிறது. ஏதாவது ஒரு "ஜிம்பலக்கலி திலாபாதரடி ஜலபுல ஜங்கிரி" வீடியோவால் கொலவெறியின் Youtube Hits மற்றும் Likeகளை ஜஸ்ட் லைக் தட் தாண்டுவாய் என்று உளமார நம்புகிறோம்.  தலைவர் டி.ஆருக்காக ஒரு கொலவெறி கவுஜ...

டெப்பாஸிட்டின் ஆப்போஸிட்டே !!!
இருண்ட தமிழகத்தின் இன்வர்ட்டரே !!!
இந்த ஜெனரேஷனின் ஜெனரேட்டரே !!!
வா நீ வா!!!
வந்து நீ டெரரா ஆளனும் !!!
அப்பயாச்சும் நாங்க பெட்டரா வாழனும் !!!இன்று பிறந்தநாள் காணும் லட்சிய தி.மு.க. கண்ட லட்சிய வெறியர், மிமிக்ரி கலைஞர்களின் குடும்பங்களை வாழ வைக்கும் முழுமுதற் கடவுள்,  தலைவர் விஜய தேசிங்கு ராஜேந்தரை வாழ்த்த வயதில்லாமல் ரசித்து மட்டும் கொள்கிறோம். நீ வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதை தலைமுறைகளும் பேசட்டும். தலைவா, நீ வாழ்க பல்லாண்டு.

TR தலைவா TR தலைவா TR தலைவா TR தலைவா TR தலைவா

உங்கள் மகள் வீட்டை விட்டு ஓடிப்போனால் அவளைக் கொன்று விடுங்கள். இதனை சொல்லியிருப்பது ஏதோ விவரம் தெரியாத விவசாயக் கூலியோ இல்லை ப்ளாட்பார வாசியோ இல்லை. உத்தரப்பிரதேசத்தில் பணிபுரியும் ஒரு போலீஸ் டி.ஐ.ஜி. என்க்கவுன்டர், மரணதண்டனையே வேண்டாம் என்று பேசிக் கொண்டு இருக்கும் சமயத்திலே "நீயெல்லாம் போலீஸா இருந்தேனா நாட்டுல நல்லது எப்படி நடக்கும்?" உங்களுக்கெல்லாம் பத்தாயிரம் பவர் ஸ்டார் வந்தாலும், ம்ஹூம்...  திருந்த மாட்டீங்கடா, திருந்த மாட்டீங்க.

திருந்த மாட்டீங்கடா திருந்த மாட்டீங்கடா திருந்த மாட்டீங்கடா

எனது வலைப்பூவை வலைதளமாக மாற்றிவிட்டேன். இனிமேல் .blogspot தேவை இல்லை. http://www.nellainanban.com என்ற முகவரியிலேயே தளத்தை வாசிக்கலாம்.

 நெல்லை நண்பன் நெல்லை நண்பன் நெல்லை நண்பன்

IPL Corner :

தற்பொழுதின் நிலைமையில் டெல்லி, கொல்கட்டா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்குள் கிட்டத்தட்ட நுழைந்து விட்டது. நான்காவது அணிக்கான போட்டியில்தான் செம ஜரூர். எனது கணிப்பில் அது ராஜஸ்தானாகவே இருக்கக் கூடும். பார்ர்கலாம். சென்ற வாரத்தின் சுவாரசியமான போட்டிகள் என்றால் ஞாயிறு அன்று நடந்த இரண்டு போட்டிகளுமே படு சுவாரஸ்யம். CSKvsMI மற்றும் RCBvsDC அதிலும் RCBக்காக AB-De-Villiers அடித்த 47(17 பந்துகளில்) துவம்சம். இந்தத் தொடரின் மிகச்சிறந்த பவுலராக இருந்த Steyneனை 18வது ஓவரில் அடித்தது 22 ரன்கள். சென்னையும் கடைசி இரண்டு பந்துகளில் வெற்றியைத் தவற விட்டது. பார்க்கலாம் யாருக்கு கோப்பை என.

Ram’s instinct says, IPL winners - Rajasthan - Rahul - Royals - Rahane.

Let us wait and watch the Play…

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL

வழக்கு எண் 18/9 படத்தை மீண்டுமொரு முறை பார்த்தேன். இம்முறை சில காட்சிக் குறியீடுகளை உன்னிப்பாக கவனிக்க முடிந்தது. அவற்றுள் வெகு சில...

1) "அக்கா.. குடிக்காதக்கா" என்று சொல்லி வேலு கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு செல்லும் ரோசி, இனி குடிக்க மாட்டாள் என்பதன் குறியீடாக ஒரு பிளாஸ்டிக் டம்ளரையும் வாட்டர் பாக்கெட்டையும் மிதித்து விட்டு செல்வது.

2) அந்த "கல்வி"த்தாய் வீட்டில் ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரியா ஸ்வாமிகள்  போட்டோ.

3) அப்புறம் அந்தப் பையன் முதன் முதலில் அப்பெண்ணிடம் பேசுவது, ஆசிடைப் பற்றி கேட்கும் சந்தேகம்தான். (what is the difference between organic and inorganic acid?). மற்றொரு காட்சியில் அவன் சொல்வது " நேத்து ராத்திரி fullஆ நீங்க சொல்லிக் கொடுத்தததான் வொர்க்கவுட் பண்ணேன்.”  எப்படிப் பண்ணினான் என்பது பின்னால் விபரீதமாக.

இது போன்று இன்னும் பல இருந்திருக்கக் கூடும். ஆனால் நான் கவனித்தது இவ்வளவே. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதை ரொம்பவே பாதித்த திரைப்படமாய் இது அமைந்து விட்டது. பார்க்காதவர்கள் கண்டிப்பாக தியேட்டரில் போய் பாருங்கள்.

வழக்கு எண் 18/9 வழக்கு எண் 18/9 வழக்கு எண் 18/9 வழக்கு எண் 18/9 வழக்கு எண் 18/9

மை ட்வீட்ஸ் மாமே:

மதுரை மற்றும் மற்ற ஊர்களின் மடங்களில் நடப்பவற்றை பார்க்கும் பொழுது மடப்பயல் மற்றும் மடசாம்பிராணி என்ற வார்த்தைகளின் அர்த்தம் தெள்ளத்தெளிவாகப் பிடிபடுகின்றது.

வாலி, ஆசை, அமர்க்களம், காதல் மன்னன், முகவரி, காதல் கோட்டை ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நடிகர் அஜீத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். #May1

"எனக்கு பொறாமையா இருக்கு" இந்த வார்த்தைகளை உண்மையாக வெளியில் சொல்ல தனி கெத்து தேவைப்படுகிறது.

கிப்ட் என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே சுவர்க்கடிகாரம் கண்முன் தோன்றி மறைந்தால் நீயும் தமிழனே.

தமிழகத்தின் எல்லா அரசு அலுவலகங்களிலும் ராமநாதன் மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய பெயர்களில் யாரவது ஒருத்தர் வேலை செய்கிறார் #அவதானிப்பு.

எல்லா அழுவாச்சியும் அழுவாச்சி அல்ல. விஜய் டி.வி ஷோக்களில் அழுவதே அழுவாச்சி. #விடாம அழுகுறாய்ங்க பாஸ். முடியல.

உலகம் சுற்றிய வாலிபி Caption Tagline: ஊர்க்காசில் #PratibhaPatilBookTitle

நான் இதுவரை பார்த்ததிலேயே எந்திரன் ச்சிட்டியை விட மிக நேர்த்தியான உருவமைப்பு கொண்ட ஹ்யூமனாய்ட் ரோபோ #IloveManmohanSingh


சினேகா-பிரசன்னா திருமணத்தை பெரும் விலை கொடுத்து ஒளிபரப்புகிறது விஜய் டி.வி #அப்படியே பழைய லவ்வரெல்லாம் கூட்டிட்டு வந்து அழ விடுங்க.TRB பிச்சிக்கும் #ஐடியா


கார்ட்டூன் கார்னர் : ############################

தமிழில் ஏன் இது போன்ற ஆல்பங்கள் அதிகளவில் வருவதில்லை என்று யோசிக்க வைத்த ஒரு மலையாள ஆல்பத்தின்னுன்டே ஒரு பாடல். இந்தப்பாடல் பிடித்தற்கு காரணம் இசை, நல்ல high quality video மட்டும்தான்னு சொன்னா நம்பவா போறீங்க? :)) என்னவோ போடா மாதவா...Friday, May 4, 2012

வழக்கு எண் 18/9 - Salutes பாலாஜி சக்திவேல்

 நேற்றோடு இந்திய சினிமாவுக்கு 99 வயது நிறைவடைந்திருக்கிறது. தாதா சாகேப் பால்கே எடுத்த இந்தியாவின் முதல் சினிமாவான "ராஜா ஹரிஸ்சந்திரா" ரீலீஸ் ஆனது மே 3, 1913ல். நூறாவது வயதின் முதல் நாளான இன்று தமிழில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் "வழக்கு எண் 18/9".  உண்மையிலேயே சினிமா என்பது ஊடகம் என்பதைத் தாண்டி உயிருள்ள விஷயமாக இருந்திருந்தால், இந்த நாளுக்காக மனதளவில் மகிழ்ந்து நெகிழ்ந்திருக்கும். அத்தனை அற்புதமான படம் இது. பாலாஜி சக்திவேல் என்ற படைப்பாளியின் இரண்டாண்டு கால உழைப்பு, ஒவ்வொரு ப்ரேமிலும் தெறிக்கிறது. அவரின் முந்தைய படங்களான சாமுராய், காதல், கல்லூரி மூன்றுமே என் மனதிற்கு மிக நெருக்கமான படங்கள். "கல்லூரி படத்தை நான் கொஞ்சம் அமெச்சூர்தனமாகத்தான் எடுத்திருந்தேன்" என்று அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது அவருடைய பெருந்தன்மை. கொட்டிக் கிடக்கும் லட்சம் குப்பைகளுக்கு மத்தியில் அப்படமே உயர்ரகம்தான். ஆனால் இந்தப்படம் உயரங்களின் உச்சம்.  ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் "காசிருப்பவர்களால் கஷ்டத்துக்குள்ளாகும் கடைநிலை மனிதர்களைப் பேசும் உன்னதமான ஒரு கமர்சியல் சினிமா."


ஒரு திரைப்படம் முழுமையடைவதற்கு அப்படத்தில் உலாவும் கதாப்பாத்திரங்கள் முதலில் முழுமையடைய வேண்டும். இத்திரைப்படத்தில் ஜோதி, வேலு, சின்னச்சாமி என்னும் மூன்று கதாப்பாத்திரங்களை உருவாக்கியதிலும் அதற்கான நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததிலும் 90 சதவிகிதம் முடித்து விட்டார் பாலாஜி. அருமையான பாத்திரப்படைப்புகள். மற்றவை அப்படி அப்படியே. முதல் பாதி முழுதுமே ஒரு நல்ல நாவலோ, சிறுகதையோ வாசித்த உணர்வுதான். ஒரு தட்டுக்கடை/கையேந்தி பவனைச் சுற்றி நடக்கும் காட்சிகள். சமூகத்தின் கடைநிலை மனிதர்கள் என்று வரையறுக்கப்படும் பிளாட்பாரம் மற்றும் குடிசைவாழ் மனிதர்களைச் சுற்றியே நடக்கிறது. வேலுவாக நடித்திருக்கும் ஸ்ரீ  அருமையான நடிப்பு. சினிமாவில் survive ஆக வாழ்நாளைக்கும் தேவையான நடிப்பை முதல் படத்திலேயே கற்றுக் கொண்டிருக்கிறார். ஜோதியாக வரும் ஊர்மிளாவும் பிரமாதமான நடிப்பு. சில பிரேம்களில் அபரிமிதமான அழகாய் இருக்கிறாள். அதுவும் ஸ்ரீயின் கனவுப்பாடலாக வரும் ஒரு montage sequenceல் ஒவ்வொரு ப்ரேமிலுமே ரம்மியமாய் இருக்கிறாள். Kudos to Vijay Milton’s Canon EOS 5D Digital camera. Yes, just a digi cam it is. படத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு சின்னசாமியாகவே நடித்திருக்கும் சின்னசாமி. நடிப்பெல்லாம் இல்லை. அப்படியே இயல்பாக வருகிறது எல்லாமே. முதல் பாதியின் வேகமான போக்கிற்கு அவருடைய காமெடியே காரணம். முதல் பாதி வெறும் 55 நிமிடங்கள்தான். ஆனால் அடுத்த பாதியில் என்னதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி முடிக்கத் தவறவில்லை. 
படத்துல பாட்டு என்று தனியாக ஏதுமில்லை. பாடல்களும் கூட அப்படியே RRஒடு இயைந்தே செல்கிறது. கிடைத்த முதல் வாய்ப்பிலேயே பிரமாதப்படுத்தியிருக்கிறார் கிடாரிஸ்ட் R.பிரசன்னா. 


படத்தின் பிற்பாதி அப்படியே வேறு ஒரு நிறம். கான்வென்ட் செல்லும் இளம்பெண், இளைஞனைச் சுற்றியே நகரும் களம். ஆனால் உண்மையிலே பகீர் என்று அறைகிறது பல காட்சிகள். இப்படத்தில் வரும் கான்வென்ட் மாணவர்களைப் போலதான் இன்றைய இளைஞர்களில் சிலரேனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையானால், டெக்னாலஜியால் ஒரு தலைமுறையே நாசமாகிக் கொண்டிருக்கிறது என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த இரண்டு கதைகளும் இணையும் புள்ளியில்தான் உணமையிலேயே திரைப்படம் ஆரம்பிக்கிறது. இதற்கு மேல் நான் எதையுமே சொல்லவில்லை. நீங்கள் திரையிலேயே போய்ப் பாருங்கள். ஆனால் இரண்டே மணி நேரத்தில் இப்படி ஒரு மனதில் அறையும் அற்புதமான  தமிழ்சினிமா பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. "த்தா... காசிருந்தா என்ன வேணாலும் பண்ணுவீங்களாடா?"ன்னு கத்தணும் போல இருக்கேல வருது பாருங்க கிளைமேக்ஸ். கிளைமேக்ஸ்ன்னா இதுதான்டா கிளைமேக்ஸ். இப்படித்தான்டா இருக்கணும். இது வரைக்கும் வாழ்க்கைல தன்னோட நல்லதுக்காகவும் சுயநலத்துக்காகவும் மற்றொருவனுடைய வாழ்க்கையக் கெடுத்த எவனுக்குமே இந்தப் படத்தப் பாத்துட்டு வந்ததுக்கப்புறம் நிம்மதி கண்டிப்பா போயிரும். 


நான் படம் பார்த்தது AGS Multiplex, OMRல் தான். கிட்டத்தட்ட படத்துக்கு வந்திருந்த மொத்தக்கூட்டமுமே அருகில் இருக்கும் IT கம்பெனிகளில் இருந்து வந்த posh ஆன கூட்டம்தான். ஆனாலும் படத்தின் முடிவில் மொத்தத் தியேட்டருமே எழுந்து நின்று கை தட்டியதுதான் இந்தப் படைப்புக்குக் கிடைத்த உண்மையான மரியாதை. சல்யூட்ஸ் பாலாஜி சக்திவேல். கூடவே ஒரு தயாரிப்பாளராக தோள் கொடுத்துள்ள இயக்குநர் லிங்குசாமிக்கும் ஒரு பொக்கே பார்சேல்..

மொத்ததில் வழக்கு எண் 18/9 உன்னதமான தமிழ் சினிமாக்களின் வரிசையில் ஒரு புது வரவாக தன்னையும் இணைத்துக் கொண்டது..  பார்த்தே தீர வேண்டிய தமிழ்படங்களுள் ஒன்று.

வழக்கு எண் 18/9  = 100/120.

தட்கல் டைம்ஸ்.


ஆயகலைகள் 64 என்று முற்காலத்தில் சொன்னவர் யாராக இருந்தாலும் மன்னிச்சூ. லெட் மீ ஆட் ஒன் மோர்... மொத்தத்தில் ஆயகலைகள் 65. 65வது கலை என்ன தெரியுமா... ? IRCTCல் தட்கலில் ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுவது. தட்கலில் இதுவரை டிக்கெட் புக் செய்த எவரும் மிகச்சாதரணமாக இதை ஒத்துக் கொள்வார்கள்.


"மாப்பிளை நல்ல திறமையான ஆளாப்பா?"
"யேய் என்ன இப்படி கேட்டுட்ட... மாப்பிளை போன தீபாவளி டிக்கெட்டையே தட்கல்ல எடுத்தவரப்பா. அவ்ளோ டேலண்டு" - பெண்பார்க்கும் படலங்களில் இனி இது போன்ற வசனங்களை கண்டிப்பாகக் கேட்க முடியும். உண்மையிலேயே தட்கலில் திறமையாய் டிக்கெட் எடுப்பவர்களுக்கு இந்த சமூகத்தில் ஒரு படி மேலான அந்தஸ்து வழங்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையினுடைய உச்சபட்ச பிரஷரை, பொறுமையின்மையை தட்கல் டிக்கெட் எடுக்கும் படலங்களில் சந்திக்கிறார்கள் என்று சொன்னால் சிறிதும் மிகையாகாது. இவன் கடலினும் பெரிய பொறுமைக்காரன்டா என்று பெயர் வாங்கிய எவரையும் ஜஸ்ட் லைக் தாட் கடுப்பேற்றி கிறுக்கனாக்கி கையில் கிடைப்பவற்றையெல்லாம் தூக்கிக் கடாச வைப்பதில் தட்க்கல் டிக்கெட்டுகளுக்கு ஈடு இணையானதென எதையுமே சொல்வதற்கில்லை. எனது நண்பன் ஒருவனெல்லாம் மரணவாக்குமூலமே எழுதி வைத்திருக்கிறான் "எனது வாழ்நாளில் உச்சபட்ச டென்ஷன் காரணமாக இதயத்தின் குழாயோ, மூளையின் நரம்போ வெடித்து நான் செத்தால் அதற்கு IRCTC காரர்களே தார்மீகப் பொறுப்பாவார்கள்" என்று.

நேற்று போட்ட ஒரு ட்வீட் :
நன்றாக சுற்றி விட்டு "உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே" என்று சொல்வதில் இக்கால Figureகளை just like that மிஞ்சி விடுகிறது IRCTC #Tatkal நேரக் கடுப்புகள்

அதுவும் அதிகாலை ஏழரை மணிக்கெல்லாம் எழுந்து அரைத்தூக்கத்தில் டிக்கெட் எடுப்பது என்பது, சொல்லொனாத் துயரம். எனக்கெல்லாம் 7.30 என்பது கிட்டத்தட்ட நடுராத்திரி. ஏழரை முதல் எட்டு மணி வரைக்கும் "மேகம் கருக்குது" பாட்டுல வர்ற ஜோதிகா மாதிரி பளபளன்னு பல்லக்காட்டுற IRCTC எட்டு மணி ஆனவுடனே இடுப்பு சீன்ல கடுப்பு காட்டுற ஜோதிகா மாதிரி ஆகிரும். என்ன வேணாக் கேளுங்க, காசு குடுங்க, ரெண்டு அடி வேணாலும் அடிங்க. ஆனா என் இடுப்பப் பாத்தியான்னு கேக்குற ஜோ மாதிரியே இதுவும் ரெண்டே வார்த்தைய மாறாம சொல்லும் "Service Unavailable". கடுப்போஸ்த்ரலேபியா.எட்டு மணிக்கு ஸ்டார்ட் ஆகுற booking processதான் உண்மையான Humanised Multitasking. ஒருபக்கம் erail.in ல் டிக்கெட் எண்ணிக்கை குறைகிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மறுபக்கம் IE, FireFox, Chrome, Opera போன்ற பல பிரவுசர்களிலும் வேறு வேறு ஐ.டிக்களில் IRCTS வலைதளத்தில் Login செய்து வைத்திருக்க வேண்டும்.  ஒவ்வொன்றிலும் Plan My Travel ல எல்லாத்தகவலையும் கொடுத்து, ட்ரெயின செலக்ட் பண்ணி, அடுத்த பக்கத்துக்கு போய் பயணம் செய்யப் போகிறவர்களின் தகவல்களைக் கொடுத்து.. அந்த எடத்துல ஒரு Word verification வச்சான் பாருங்க ஒருத்தன். நல்லவன்டா  நீயி...  பாதி நேரம் அந்த இமேஜ் சனியன் லோடாகியே தொலையாது. அதுவும் Chromeக்கும் அந்த இமேஜுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம்தான். ஏதோ நீங்களோ, உங்கம்மா, அப்பாவோ முற்காலத்துல செஞ்ச நல்ல வினைகளின் காரணமா இதெல்லாம் தாண்டுனீங்கன்னா அப்புறம் காசுபணம் கொடுக்குற பார்மாலிட்டி. "பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என"ன்னு நம்மளும் "சுத்துதே சுத்துதே பூமி"ன்னு அதுவும், ரொம்ப டென்ஷன் ஆகுற சமயமே அதுதான். இத்தனைக்கும் நடுவுலயும் நம்ம IRCTCய ஒரு பூவப் பாத்துக்குறா மாதிரி பத்திரமாப் பாத்துக்கணும். எசகுபிசகா எங்கயாவது கையக் கிய்ய தப்பா வச்சாங்காட்டி கோபப்பட்டு யாருகிட்ட வந்து எங்க வைக்கிறன்னு கீழார உள்ள மாதிரி த்தூன்னு துப்பிரும். 


எல்லாம் முடிஞ்சு டிக்கெட் வந்தா இந்த நாள் இனிய நாள். வராங்காட்டி இந்த நாளும் ஈனநாளே. இவ்வளவு கஷ்டப்பட்டும் டிக்கெட் கெடைக்கலன்னு கடுப்புல இருக்கேல, எவனாச்சும் "கடமையைச் செய் பலனை எதிர்பாராதே"ன்னு தத்துவம் சொன்னான்னா, அவன ங்கோ, கே, தா, கி, பூ, லூஇதுல எந்த எழுத்துல ஆரம்பிக்கிற கெட்ட வார்த்தையச் சொல்லித் திட்டுனாலும் தப்பே இல்லை. எனக்குத் தெரிஞ்சு நம்மாளுங்களத் தவிர வேற எந்த நாட்டுக்கரனாலையுமே செய்ய முடியாத காரியம்ன்னா அது இந்த தட்கல்ல டிக்கெட் எடுக்குறதுதான். சொல்லப்போனால் ஒவ்வொரு தட்க்கல் டிக்கெட் எடுக்கப்பட்டு செய்யப்படும் ரயில் பயணமும் ஏறக்குறைய ஒரு லிம்கா புத்தகத்திற்கான சாதனைதான். Great Indians. You all are the epitome of patience, and keep on living cool under any kind of pressure.  Kudos Guys.

இப்படிக் கஷ்டப்பட்டு டிக்கெட் எடுத்து வச்சுருப்போம். இன்னைக்கு சாயங்காலம் ஊருக்கு கெளம்பனும்ன்னு சந்தோஷமா ஆபிஸ்ல இருந்து கெளம்பேல உங்க டேமேஜர் கூப்பிட்டு சொல்லுவார் பாருங்க... "Ram, due to very tight deadlines, we need to work over this weekend and close out everything. So please plan accordingly man…"  அதுதான் அதுதான் The Real கடுப்பேத்துறார் மை லார்ட்.
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.