Wednesday, May 9, 2012

மினி மீல்ஸ் - 09/05/2012


இருண்ட தமிழகத்தின் இன்வர்ட்டரே :

அடுத்து புதுக்கோட்டையில் இடைத்தேர்தல். ஆனால் இம்முறை தி.மு.க, ம.தி.முக போட்டி இல்லை. ஆல்கஹால் விலை தாறுமாறாக ஏறியிருக்கும் இந்த சமயத்தில் கேப்டனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதையும் சரிவர யூகிக்க முடியவில்லை.

ஆனால் ஆனால் ஆனால்.......

சிங்கம் களம் எறங்கிருச்சோய்ய்ய்ய்ய். ல.தி.மு.க போட்டியிட எத்தனித்திருப்பதாக தலைவர் டி.ஆரீன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வா தலைவா வா. வறண்ட தமிழகத்துக்குக் கிடைத்த வாட்டர் பாக்கெட்டென இனி தமிழகமே உன் காமெடி வீடியோக்களால், மன்னிக்க, பிரச்சார வீடியோக்களால் கும்மாளமிட்டு குதூகலிக்கப் போகிறது. ஏதாவது ஒரு "ஜிம்பலக்கலி திலாபாதரடி ஜலபுல ஜங்கிரி" வீடியோவால் கொலவெறியின் Youtube Hits மற்றும் Likeகளை ஜஸ்ட் லைக் தட் தாண்டுவாய் என்று உளமார நம்புகிறோம்.  தலைவர் டி.ஆருக்காக ஒரு கொலவெறி கவுஜ...

டெப்பாஸிட்டின் ஆப்போஸிட்டே !!!
இருண்ட தமிழகத்தின் இன்வர்ட்டரே !!!
இந்த ஜெனரேஷனின் ஜெனரேட்டரே !!!
வா நீ வா!!!
வந்து நீ டெரரா ஆளனும் !!!
அப்பயாச்சும் நாங்க பெட்டரா வாழனும் !!!இன்று பிறந்தநாள் காணும் லட்சிய தி.மு.க. கண்ட லட்சிய வெறியர், மிமிக்ரி கலைஞர்களின் குடும்பங்களை வாழ வைக்கும் முழுமுதற் கடவுள்,  தலைவர் விஜய தேசிங்கு ராஜேந்தரை வாழ்த்த வயதில்லாமல் ரசித்து மட்டும் கொள்கிறோம். நீ வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதை தலைமுறைகளும் பேசட்டும். தலைவா, நீ வாழ்க பல்லாண்டு.

TR தலைவா TR தலைவா TR தலைவா TR தலைவா TR தலைவா

உங்கள் மகள் வீட்டை விட்டு ஓடிப்போனால் அவளைக் கொன்று விடுங்கள். இதனை சொல்லியிருப்பது ஏதோ விவரம் தெரியாத விவசாயக் கூலியோ இல்லை ப்ளாட்பார வாசியோ இல்லை. உத்தரப்பிரதேசத்தில் பணிபுரியும் ஒரு போலீஸ் டி.ஐ.ஜி. என்க்கவுன்டர், மரணதண்டனையே வேண்டாம் என்று பேசிக் கொண்டு இருக்கும் சமயத்திலே "நீயெல்லாம் போலீஸா இருந்தேனா நாட்டுல நல்லது எப்படி நடக்கும்?" உங்களுக்கெல்லாம் பத்தாயிரம் பவர் ஸ்டார் வந்தாலும், ம்ஹூம்...  திருந்த மாட்டீங்கடா, திருந்த மாட்டீங்க.

திருந்த மாட்டீங்கடா திருந்த மாட்டீங்கடா திருந்த மாட்டீங்கடா

எனது வலைப்பூவை வலைதளமாக மாற்றிவிட்டேன். இனிமேல் .blogspot தேவை இல்லை. http://www.nellainanban.com என்ற முகவரியிலேயே தளத்தை வாசிக்கலாம்.

 நெல்லை நண்பன் நெல்லை நண்பன் நெல்லை நண்பன்

IPL Corner :

தற்பொழுதின் நிலைமையில் டெல்லி, கொல்கட்டா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்குள் கிட்டத்தட்ட நுழைந்து விட்டது. நான்காவது அணிக்கான போட்டியில்தான் செம ஜரூர். எனது கணிப்பில் அது ராஜஸ்தானாகவே இருக்கக் கூடும். பார்ர்கலாம். சென்ற வாரத்தின் சுவாரசியமான போட்டிகள் என்றால் ஞாயிறு அன்று நடந்த இரண்டு போட்டிகளுமே படு சுவாரஸ்யம். CSKvsMI மற்றும் RCBvsDC அதிலும் RCBக்காக AB-De-Villiers அடித்த 47(17 பந்துகளில்) துவம்சம். இந்தத் தொடரின் மிகச்சிறந்த பவுலராக இருந்த Steyneனை 18வது ஓவரில் அடித்தது 22 ரன்கள். சென்னையும் கடைசி இரண்டு பந்துகளில் வெற்றியைத் தவற விட்டது. பார்க்கலாம் யாருக்கு கோப்பை என.

Ram’s instinct says, IPL winners - Rajasthan - Rahul - Royals - Rahane.

Let us wait and watch the Play…

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL

வழக்கு எண் 18/9 படத்தை மீண்டுமொரு முறை பார்த்தேன். இம்முறை சில காட்சிக் குறியீடுகளை உன்னிப்பாக கவனிக்க முடிந்தது. அவற்றுள் வெகு சில...

1) "அக்கா.. குடிக்காதக்கா" என்று சொல்லி வேலு கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு செல்லும் ரோசி, இனி குடிக்க மாட்டாள் என்பதன் குறியீடாக ஒரு பிளாஸ்டிக் டம்ளரையும் வாட்டர் பாக்கெட்டையும் மிதித்து விட்டு செல்வது.

2) அந்த "கல்வி"த்தாய் வீட்டில் ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரியா ஸ்வாமிகள்  போட்டோ.

3) அப்புறம் அந்தப் பையன் முதன் முதலில் அப்பெண்ணிடம் பேசுவது, ஆசிடைப் பற்றி கேட்கும் சந்தேகம்தான். (what is the difference between organic and inorganic acid?). மற்றொரு காட்சியில் அவன் சொல்வது " நேத்து ராத்திரி fullஆ நீங்க சொல்லிக் கொடுத்தததான் வொர்க்கவுட் பண்ணேன்.”  எப்படிப் பண்ணினான் என்பது பின்னால் விபரீதமாக.

இது போன்று இன்னும் பல இருந்திருக்கக் கூடும். ஆனால் நான் கவனித்தது இவ்வளவே. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதை ரொம்பவே பாதித்த திரைப்படமாய் இது அமைந்து விட்டது. பார்க்காதவர்கள் கண்டிப்பாக தியேட்டரில் போய் பாருங்கள்.

வழக்கு எண் 18/9 வழக்கு எண் 18/9 வழக்கு எண் 18/9 வழக்கு எண் 18/9 வழக்கு எண் 18/9

மை ட்வீட்ஸ் மாமே:

மதுரை மற்றும் மற்ற ஊர்களின் மடங்களில் நடப்பவற்றை பார்க்கும் பொழுது மடப்பயல் மற்றும் மடசாம்பிராணி என்ற வார்த்தைகளின் அர்த்தம் தெள்ளத்தெளிவாகப் பிடிபடுகின்றது.

வாலி, ஆசை, அமர்க்களம், காதல் மன்னன், முகவரி, காதல் கோட்டை ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நடிகர் அஜீத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். #May1

"எனக்கு பொறாமையா இருக்கு" இந்த வார்த்தைகளை உண்மையாக வெளியில் சொல்ல தனி கெத்து தேவைப்படுகிறது.

கிப்ட் என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே சுவர்க்கடிகாரம் கண்முன் தோன்றி மறைந்தால் நீயும் தமிழனே.

தமிழகத்தின் எல்லா அரசு அலுவலகங்களிலும் ராமநாதன் மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய பெயர்களில் யாரவது ஒருத்தர் வேலை செய்கிறார் #அவதானிப்பு.

எல்லா அழுவாச்சியும் அழுவாச்சி அல்ல. விஜய் டி.வி ஷோக்களில் அழுவதே அழுவாச்சி. #விடாம அழுகுறாய்ங்க பாஸ். முடியல.

உலகம் சுற்றிய வாலிபி Caption Tagline: ஊர்க்காசில் #PratibhaPatilBookTitle

நான் இதுவரை பார்த்ததிலேயே எந்திரன் ச்சிட்டியை விட மிக நேர்த்தியான உருவமைப்பு கொண்ட ஹ்யூமனாய்ட் ரோபோ #IloveManmohanSingh


சினேகா-பிரசன்னா திருமணத்தை பெரும் விலை கொடுத்து ஒளிபரப்புகிறது விஜய் டி.வி #அப்படியே பழைய லவ்வரெல்லாம் கூட்டிட்டு வந்து அழ விடுங்க.TRB பிச்சிக்கும் #ஐடியா


கார்ட்டூன் கார்னர் : ############################

தமிழில் ஏன் இது போன்ற ஆல்பங்கள் அதிகளவில் வருவதில்லை என்று யோசிக்க வைத்த ஒரு மலையாள ஆல்பத்தின்னுன்டே ஒரு பாடல். இந்தப்பாடல் பிடித்தற்கு காரணம் இசை, நல்ல high quality video மட்டும்தான்னு சொன்னா நம்பவா போறீங்க? :)) என்னவோ போடா மாதவா...4 பேர் சொன்னது என்னான்னா..:

ராஜ் said...

வழக்கம் போல் கலக்கல் மீல்ஸ்... நம்ப கரடியார் பொது வேட்பாளராக நிறுத்த பட்டால், தமிழ்மக்களுக்கு செம சம்மர் என்டர்டைன்மென்ட் தான்..
என் மனசுக்கு இந்த முறை IPL சாம்பியன் ராஜஸ்தான் தான் ஆகும் என்று படுகிறது.. பார்போம்....
பாடல் வீடியோ பார்த்தேன்...சுமார் தான்...என்னோ எனக்கு மலையாளம் புரியாதனால் பிடிக்கவில்லை...நிறைய செயற்கைத்தனம். :)

உலக சினிமா ரசிகன் said...

விஜய டி.ஆரை வாழ்த்தியிருக்கிறீர்களே!
நீங்க நல்லவரா?கெட்டவரா?

ராம்குமார் - அமுதன் said...

@ராஜ் : எனக்கு அந்தப் பாட்டுல இயற்கை அழகு மட்டும்தான் பிடிச்ச்ருந்துது :))

வரணும் ராஜஸ்தான் வரனும்.. பார்ப்போம்....

ராம்குமார் - அமுதன் said...

நம் அனைவரையுமே நம் வாழ்வின் சில மணி நேரங்களேனும் சிரிக்க வைத்த மாபெரும் தலைவர் விஜய டி ஆரை வாழ்த்தினால் நான் நல்லவனா கெட்டவனா - அவ்வ்வ்வ் தெரியலையே பாஸூ :( :)

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.