Friday, May 4, 2012

வழக்கு எண் 18/9 - Salutes பாலாஜி சக்திவேல்

 நேற்றோடு இந்திய சினிமாவுக்கு 99 வயது நிறைவடைந்திருக்கிறது. தாதா சாகேப் பால்கே எடுத்த இந்தியாவின் முதல் சினிமாவான "ராஜா ஹரிஸ்சந்திரா" ரீலீஸ் ஆனது மே 3, 1913ல். நூறாவது வயதின் முதல் நாளான இன்று தமிழில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் "வழக்கு எண் 18/9".  உண்மையிலேயே சினிமா என்பது ஊடகம் என்பதைத் தாண்டி உயிருள்ள விஷயமாக இருந்திருந்தால், இந்த நாளுக்காக மனதளவில் மகிழ்ந்து நெகிழ்ந்திருக்கும். அத்தனை அற்புதமான படம் இது. பாலாஜி சக்திவேல் என்ற படைப்பாளியின் இரண்டாண்டு கால உழைப்பு, ஒவ்வொரு ப்ரேமிலும் தெறிக்கிறது. அவரின் முந்தைய படங்களான சாமுராய், காதல், கல்லூரி மூன்றுமே என் மனதிற்கு மிக நெருக்கமான படங்கள். "கல்லூரி படத்தை நான் கொஞ்சம் அமெச்சூர்தனமாகத்தான் எடுத்திருந்தேன்" என்று அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது அவருடைய பெருந்தன்மை. கொட்டிக் கிடக்கும் லட்சம் குப்பைகளுக்கு மத்தியில் அப்படமே உயர்ரகம்தான். ஆனால் இந்தப்படம் உயரங்களின் உச்சம்.  ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் "காசிருப்பவர்களால் கஷ்டத்துக்குள்ளாகும் கடைநிலை மனிதர்களைப் பேசும் உன்னதமான ஒரு கமர்சியல் சினிமா."


ஒரு திரைப்படம் முழுமையடைவதற்கு அப்படத்தில் உலாவும் கதாப்பாத்திரங்கள் முதலில் முழுமையடைய வேண்டும். இத்திரைப்படத்தில் ஜோதி, வேலு, சின்னச்சாமி என்னும் மூன்று கதாப்பாத்திரங்களை உருவாக்கியதிலும் அதற்கான நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததிலும் 90 சதவிகிதம் முடித்து விட்டார் பாலாஜி. அருமையான பாத்திரப்படைப்புகள். மற்றவை அப்படி அப்படியே. முதல் பாதி முழுதுமே ஒரு நல்ல நாவலோ, சிறுகதையோ வாசித்த உணர்வுதான். ஒரு தட்டுக்கடை/கையேந்தி பவனைச் சுற்றி நடக்கும் காட்சிகள். சமூகத்தின் கடைநிலை மனிதர்கள் என்று வரையறுக்கப்படும் பிளாட்பாரம் மற்றும் குடிசைவாழ் மனிதர்களைச் சுற்றியே நடக்கிறது. வேலுவாக நடித்திருக்கும் ஸ்ரீ  அருமையான நடிப்பு. சினிமாவில் survive ஆக வாழ்நாளைக்கும் தேவையான நடிப்பை முதல் படத்திலேயே கற்றுக் கொண்டிருக்கிறார். ஜோதியாக வரும் ஊர்மிளாவும் பிரமாதமான நடிப்பு. சில பிரேம்களில் அபரிமிதமான அழகாய் இருக்கிறாள். அதுவும் ஸ்ரீயின் கனவுப்பாடலாக வரும் ஒரு montage sequenceல் ஒவ்வொரு ப்ரேமிலுமே ரம்மியமாய் இருக்கிறாள். Kudos to Vijay Milton’s Canon EOS 5D Digital camera. Yes, just a digi cam it is. படத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு சின்னசாமியாகவே நடித்திருக்கும் சின்னசாமி. நடிப்பெல்லாம் இல்லை. அப்படியே இயல்பாக வருகிறது எல்லாமே. முதல் பாதியின் வேகமான போக்கிற்கு அவருடைய காமெடியே காரணம். முதல் பாதி வெறும் 55 நிமிடங்கள்தான். ஆனால் அடுத்த பாதியில் என்னதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி முடிக்கத் தவறவில்லை. 
படத்துல பாட்டு என்று தனியாக ஏதுமில்லை. பாடல்களும் கூட அப்படியே RRஒடு இயைந்தே செல்கிறது. கிடைத்த முதல் வாய்ப்பிலேயே பிரமாதப்படுத்தியிருக்கிறார் கிடாரிஸ்ட் R.பிரசன்னா. 


படத்தின் பிற்பாதி அப்படியே வேறு ஒரு நிறம். கான்வென்ட் செல்லும் இளம்பெண், இளைஞனைச் சுற்றியே நகரும் களம். ஆனால் உண்மையிலே பகீர் என்று அறைகிறது பல காட்சிகள். இப்படத்தில் வரும் கான்வென்ட் மாணவர்களைப் போலதான் இன்றைய இளைஞர்களில் சிலரேனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையானால், டெக்னாலஜியால் ஒரு தலைமுறையே நாசமாகிக் கொண்டிருக்கிறது என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த இரண்டு கதைகளும் இணையும் புள்ளியில்தான் உணமையிலேயே திரைப்படம் ஆரம்பிக்கிறது. இதற்கு மேல் நான் எதையுமே சொல்லவில்லை. நீங்கள் திரையிலேயே போய்ப் பாருங்கள். ஆனால் இரண்டே மணி நேரத்தில் இப்படி ஒரு மனதில் அறையும் அற்புதமான  தமிழ்சினிமா பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. "த்தா... காசிருந்தா என்ன வேணாலும் பண்ணுவீங்களாடா?"ன்னு கத்தணும் போல இருக்கேல வருது பாருங்க கிளைமேக்ஸ். கிளைமேக்ஸ்ன்னா இதுதான்டா கிளைமேக்ஸ். இப்படித்தான்டா இருக்கணும். இது வரைக்கும் வாழ்க்கைல தன்னோட நல்லதுக்காகவும் சுயநலத்துக்காகவும் மற்றொருவனுடைய வாழ்க்கையக் கெடுத்த எவனுக்குமே இந்தப் படத்தப் பாத்துட்டு வந்ததுக்கப்புறம் நிம்மதி கண்டிப்பா போயிரும். 


நான் படம் பார்த்தது AGS Multiplex, OMRல் தான். கிட்டத்தட்ட படத்துக்கு வந்திருந்த மொத்தக்கூட்டமுமே அருகில் இருக்கும் IT கம்பெனிகளில் இருந்து வந்த posh ஆன கூட்டம்தான். ஆனாலும் படத்தின் முடிவில் மொத்தத் தியேட்டருமே எழுந்து நின்று கை தட்டியதுதான் இந்தப் படைப்புக்குக் கிடைத்த உண்மையான மரியாதை. சல்யூட்ஸ் பாலாஜி சக்திவேல். கூடவே ஒரு தயாரிப்பாளராக தோள் கொடுத்துள்ள இயக்குநர் லிங்குசாமிக்கும் ஒரு பொக்கே பார்சேல்..

மொத்ததில் வழக்கு எண் 18/9 உன்னதமான தமிழ் சினிமாக்களின் வரிசையில் ஒரு புது வரவாக தன்னையும் இணைத்துக் கொண்டது..  பார்த்தே தீர வேண்டிய தமிழ்படங்களுள் ஒன்று.

வழக்கு எண் 18/9  = 100/120.

14 பேர் சொன்னது என்னான்னா..:

GOPS said...

// பார்த்தே தீர வேண்டிய தமிழ்படங்களுள் ஒன்று.//அதயும் பாத்துருவோம் ...

HariHaranHaran said...

Periya aala varuveenga bosss........

மோகன் குமார் said...

Good to know this. Should see soon

கோவை நேரம் said...

நல்ல விமர்சனம்...இன்றே பார்த்து விடுகிறேன்...

sunfun said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம்
எனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன
www.suncnn.blogspot.com

Sankaran said...

Was waiting for your review about this movie da.. :)

ராம்குமார் - அமுதன் said...

அனைவருக்கு நன்றிகள் வந்தமைக்கும் கருத்துகளுக்கும். கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய தமிழ் படம்.. பாருங்கள்...

@Sankara : I was waiting for this movie daa :))

Prakash said...

அருமையான விமர்சனம் தோழர்...

உலக சினிமா ரசிகன் said...

அருமையாக எழுதி உள்ளீர்கள்.
இப்படத்திற்க்கு நானும் பதிவிட்டுள்ளேன்.
வந்து பார்த்து கருத்துரைத்தால் அக மகிழ்வேன்.
நானும் தாமிரபரணிதான்.

Anonymous said...

Excellent film n excellent review.. Kudos!!

ராம்குமார் - அமுதன் said...

@Shakti @உலக சினிமா ரசிகன்

நன்றி சகா வந்தமைக்கும் கருத்துகளுக்கும்.

Madhav said...

நானும் AGS Multiplex, OMRல் தான் பார்த்தேன் , ஆனா ஒரு பய கை தட்டல , நான் உள்பட

Abarna said...

padam super. unga review um super :)

ராம்குமார் - அமுதன் said...

நன்றி... பட் சேகர் deid எ வெரி லாங் அகோ ரைட் :)

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.