Thursday, May 24, 2012

மினி மீல்ஸ் - 24/05/2012

பெட்ரோல் விலையை ஏற்றி விட்டார்கள். வழக்கமாக அவ்வப்பொழுது நாலணா, எட்டணா, ஒன்று, இரண்டு ரூபாய் என்று ஏற்றி வந்தவர்கள் இம்முறை முழுதாக 7.50 ரூபாய் ஏற்றியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 11 சதவிகிதத்துக்கும் மேல்.  ஆனால் ஏற்றிய ஜஸ்ட் 7.50க்கு பதிலாக இரண்ண்ண்ண்ண்டுடுடு ரூபாய் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தும்(ப்)பத்தகுந்த வட்டாரங்களின் கருத்துகள் தெரிவிக்கின்றன. எப்படியும் வழக்கம் போல், "சைக்கிள்ல போவோம், நடந்து போவோம்" என்று இரண்டு நாட்களுக்கு இணையத்தில் அங்கலாய்த்து விட்டு, காங்கிரசைக் கொஞ்சமே கொஞ்சம் கலாய்த்து விட்டு, எவ்வளவு கேட்டாலும் கொடுத்து பெட்ரோல் போடத்தான் போகிறோம். ஓட வேண்டுமே - வண்டியும் கூடவே வாழ்க்கையும்.Petrol price per litre effective midnight: Mumbai - Rs 78.16; Delhi - Rs 73.14; Kolkata - Rs 73.14; Chennai - Rs 77.05 #An increase by 7.50 Rs. This is called original ஏழரை.

பைக்குல தினமும் ஒன்னாப் போனோம்...
மூடிக்கினு இனிமே நடந்தே போவோம்...
#பெட்ரோல் #ஏழர

peTROLL  peTROLL peTROLL peTROLL peTROLL peTROLL  peTROLL 

சென்ற இரண்டு வாரங்கள் முழுவதுமாக பலதரப்பட்ட ட்விஸ்டுகளோடு களைகட்டிக் கொண்டிருக்கிறது IPL. முன்னேறிப் போகும்ன்னு நெனச்ச மும்பை முக்கிட்டு போக, சீனி மிட்டாய் திங்கும்ன்னு நெனச்ச CSK 2nd play offக்கு போயிருச்சு. கொல்கட்டா கூட மோதப் போறது டேல்ன்டடு டெல்லியா - லக்கி சென்னையன்னு நாளைக்கு தெரிஞ்சுரும். ஆனாலும் முதல் play-off win பண்ணதுக்கே சென்னையின் விசிலடிச்சான் குஞ்சுகள் ஆட்டமா ஆடித் தீத்துட்டாங்க. பார்க்கலாம். எனக்கு ராஜஸ்தான் தான் கோப்பை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. வாய்ப்பு விலகியதால் இப்பொழுது டெல்லி வாங்கினால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. சேவாக், வார்னர் மற்றும் மார்க்கல் கையில்தான் இருக்கிறது. பார்க்கலாம்.

                                                  IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL

IPL Tweets:

தோனி மொபைல்ல சங்ககாரா கால் பண்றப்ப மட்டும் இந்தப் பாட்ட காலர் ட்யூனா வச்சுருக்கானாம் "நன்றி சொல்லவே ஒனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே"

சென்னை டீமும் ராக்கெட்டு வெடி மாதிரிதான். அடில பத்த வச்சா மட்டுமே அடிப்பாய்ங்க போல. #CSKvsKKR #IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை சிலம்பாட்ட வீரர் சித்தப்பா தோனியின் சிறப்பான ஆட்டத்தில்... ஷ்ஷ்ஷப்பா, ஒரு வழியா ஜெயிச்சோம்டா சாமி. #CSKvsKKR #IPL

கெய்லு heightக்குத்தான் அந்த பச்சக் கலரு dress ஏதோ நடுராத்திரி மண்ட ஓடு வச்சு ரத்தக்காட்டேரி பூஜை பண்ற மாதிரி இருக்கு. குட் கலர் யூ நோ :)

IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL IPL  IPL  


இசைக்கு வயது 36:

பிறப்பில் ஞானதேசிகன் என பெயரிடப்பட்டு, டேனியல் ராஜய்யாவாக வளர்ந்து, ராசய்யாவாக இசை கற்று, ராஜாவாக மெடுக்கள் அமைத்து, இளையராஜாவாக - இசையாளுமையாக இன்று வரை திகழ்ந்து கொண்டிருக்கும் ராகதேவனின் முதல் திரைப்படமான அன்னக்கிளி வெளியாகி மே 14 2012 ல்  36 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இயக்குநர் வசந்த் ஒரு பேட்டியில் சொன்னார் - "இளையராஜாவின் பாடல்கள் என்பது எனக்கு இன்னொரு தாய்மடி மாதிரி." கொஞ்சமும் மிகையில்லாதா வார்த்தைகள். அலுவலகத்தில் இருந்து எந்த மனநிலையில் கிளம்பினாலும் வீடு சேர்வதற்குள் தன்னிலையைத் திருப்பித் தரும் சக்தி ராஜாவின் பாடல்களுக்கு மட்டுமே உண்டு.  நண்பர் தமிழ்ப்பறவை ட்விட்டரில் ஒரு முறை இப்படிக் ட்வீட்டியிருந்தார்.

எஞ்ஜின் ஓடுவதால் பேருந்தும், இளையராஜா பாடல்கள் ஓடுவதால் பயணிகளும் தத்தமது தூரத்தைக் கடக்கின்றனர் எளிதில். @Tparavai

Raja is God - God is Raja Raja is God - God is Raja Raja is God - God is Rajaமை ராஜா ட்வீட்ஸ்:

கடவுளே இல்லையென்பவன் கூட "ஜனனி ஜனனி" பாடலின் முடிவில் பக்தனாக மாறிவிடுகிறான். இசைக்கடவுளின் பக்தனாக. ராகதேவனின் பக்தனாக. இளையராஜாவின் பக்தனாக.

'மைக்' மோகன், ராமராஜன், பிரதாப் போத்தன் போன்றவர்களை இன்றளவிலும் நினைவிருக்க ஒரே ஒரு காரணம் இளையராஜா மட்டுமே #solereasonRaja

இளையராஜா என்ற வர்த்தையை நினைக்கும் எந்தவொரு தருணத்திலும் என் காதில் கேட்கும் வரிகள் இவைதான். "உந்தன் ராஜராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே"

நீதானே என் பொன்வசந்தம் பாடல்களுக்காய் காது திறந்து காத்திருக்கின்றேன். கடவுள் காப்பாற்றுவார். Raja is God. God is Raja.

 Raja is God - God is Raja Raja is God - God is Raja Raja is God - God is Raja

கார்ட்டூன் கார்னர் : 


#####################

நான் பார்த்ததிலேயே ஆகச்சிறந்த தேசிய கீதம் இதுதான். On a sagacity my eyes were howling, my legs stood up and my hands saluted at the end of the video. Superb making and kudos to everyone who were part of this.

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

4 பேர் சொன்னது என்னான்னா..:

ராஜ் said...

நல்ல மினி மீல்ஸ்.. ரொம்பவே ரசித்தேன். கார்டூன் செம கலக்கல்..
நான் இருக்குற ஊர்ல பெட்ரோல் விலை கிட்ட தட்ட ரூ.84. ஆனா இப்ப யாருமே லிட்டர்க்கு போடுறது கிடையாது. நான் 300 குடுத்து மொத்தமா போடுவேன். அதனால பெருசா எனக்கு ஒன்னும் மாற்றம் தெரியாது.

முன்பனிக்காலம் said...

மிகவும் ரசித்தேன்.. பிரதாப் போத்தன் என்றவுடன் என் இனிய பொன் நிலவே தான் ஞாபகம் வருகிறது. எவ்வளவு உண்மை..ராஜா இல்லையென்றால் பல இரவுகள் பலருக்கும் விடியாது போயிருக்கும்.

ராம்குமார் - அமுதன் said...

நன்றீஸ் ராஜ்.. 84 ஆஆஆஆஆ... ம்ம்ம்.. நானும் அப்படியே... ஆனாலும் 7.50 என்பது கொஞ்சம் அதிகமே.. எவ்வளவு குறைக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

ராம்குமார் - அமுதன் said...

@முன்பனிக்காலம்... ராஜா மட்டும் இருந்திருக்கவில்லையென்றால் பலரும் பைத்தியமாகக் கூட மாறியிருக்கக் கூடும்... 80s என்ற வார்த்தைக்கு தமிழகத்தின் தலையாய representative அவரே...

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.