Friday, May 4, 2012

தட்கல் டைம்ஸ்.


ஆயகலைகள் 64 என்று முற்காலத்தில் சொன்னவர் யாராக இருந்தாலும் மன்னிச்சூ. லெட் மீ ஆட் ஒன் மோர்... மொத்தத்தில் ஆயகலைகள் 65. 65வது கலை என்ன தெரியுமா... ? IRCTCல் தட்கலில் ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுவது. தட்கலில் இதுவரை டிக்கெட் புக் செய்த எவரும் மிகச்சாதரணமாக இதை ஒத்துக் கொள்வார்கள்.


"மாப்பிளை நல்ல திறமையான ஆளாப்பா?"
"யேய் என்ன இப்படி கேட்டுட்ட... மாப்பிளை போன தீபாவளி டிக்கெட்டையே தட்கல்ல எடுத்தவரப்பா. அவ்ளோ டேலண்டு" - பெண்பார்க்கும் படலங்களில் இனி இது போன்ற வசனங்களை கண்டிப்பாகக் கேட்க முடியும். உண்மையிலேயே தட்கலில் திறமையாய் டிக்கெட் எடுப்பவர்களுக்கு இந்த சமூகத்தில் ஒரு படி மேலான அந்தஸ்து வழங்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையினுடைய உச்சபட்ச பிரஷரை, பொறுமையின்மையை தட்கல் டிக்கெட் எடுக்கும் படலங்களில் சந்திக்கிறார்கள் என்று சொன்னால் சிறிதும் மிகையாகாது. இவன் கடலினும் பெரிய பொறுமைக்காரன்டா என்று பெயர் வாங்கிய எவரையும் ஜஸ்ட் லைக் தாட் கடுப்பேற்றி கிறுக்கனாக்கி கையில் கிடைப்பவற்றையெல்லாம் தூக்கிக் கடாச வைப்பதில் தட்க்கல் டிக்கெட்டுகளுக்கு ஈடு இணையானதென எதையுமே சொல்வதற்கில்லை. எனது நண்பன் ஒருவனெல்லாம் மரணவாக்குமூலமே எழுதி வைத்திருக்கிறான் "எனது வாழ்நாளில் உச்சபட்ச டென்ஷன் காரணமாக இதயத்தின் குழாயோ, மூளையின் நரம்போ வெடித்து நான் செத்தால் அதற்கு IRCTC காரர்களே தார்மீகப் பொறுப்பாவார்கள்" என்று.

நேற்று போட்ட ஒரு ட்வீட் :
நன்றாக சுற்றி விட்டு "உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே" என்று சொல்வதில் இக்கால Figureகளை just like that மிஞ்சி விடுகிறது IRCTC #Tatkal நேரக் கடுப்புகள்

அதுவும் அதிகாலை ஏழரை மணிக்கெல்லாம் எழுந்து அரைத்தூக்கத்தில் டிக்கெட் எடுப்பது என்பது, சொல்லொனாத் துயரம். எனக்கெல்லாம் 7.30 என்பது கிட்டத்தட்ட நடுராத்திரி. ஏழரை முதல் எட்டு மணி வரைக்கும் "மேகம் கருக்குது" பாட்டுல வர்ற ஜோதிகா மாதிரி பளபளன்னு பல்லக்காட்டுற IRCTC எட்டு மணி ஆனவுடனே இடுப்பு சீன்ல கடுப்பு காட்டுற ஜோதிகா மாதிரி ஆகிரும். என்ன வேணாக் கேளுங்க, காசு குடுங்க, ரெண்டு அடி வேணாலும் அடிங்க. ஆனா என் இடுப்பப் பாத்தியான்னு கேக்குற ஜோ மாதிரியே இதுவும் ரெண்டே வார்த்தைய மாறாம சொல்லும் "Service Unavailable". கடுப்போஸ்த்ரலேபியா.எட்டு மணிக்கு ஸ்டார்ட் ஆகுற booking processதான் உண்மையான Humanised Multitasking. ஒருபக்கம் erail.in ல் டிக்கெட் எண்ணிக்கை குறைகிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மறுபக்கம் IE, FireFox, Chrome, Opera போன்ற பல பிரவுசர்களிலும் வேறு வேறு ஐ.டிக்களில் IRCTS வலைதளத்தில் Login செய்து வைத்திருக்க வேண்டும்.  ஒவ்வொன்றிலும் Plan My Travel ல எல்லாத்தகவலையும் கொடுத்து, ட்ரெயின செலக்ட் பண்ணி, அடுத்த பக்கத்துக்கு போய் பயணம் செய்யப் போகிறவர்களின் தகவல்களைக் கொடுத்து.. அந்த எடத்துல ஒரு Word verification வச்சான் பாருங்க ஒருத்தன். நல்லவன்டா  நீயி...  பாதி நேரம் அந்த இமேஜ் சனியன் லோடாகியே தொலையாது. அதுவும் Chromeக்கும் அந்த இமேஜுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம்தான். ஏதோ நீங்களோ, உங்கம்மா, அப்பாவோ முற்காலத்துல செஞ்ச நல்ல வினைகளின் காரணமா இதெல்லாம் தாண்டுனீங்கன்னா அப்புறம் காசுபணம் கொடுக்குற பார்மாலிட்டி. "பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என"ன்னு நம்மளும் "சுத்துதே சுத்துதே பூமி"ன்னு அதுவும், ரொம்ப டென்ஷன் ஆகுற சமயமே அதுதான். இத்தனைக்கும் நடுவுலயும் நம்ம IRCTCய ஒரு பூவப் பாத்துக்குறா மாதிரி பத்திரமாப் பாத்துக்கணும். எசகுபிசகா எங்கயாவது கையக் கிய்ய தப்பா வச்சாங்காட்டி கோபப்பட்டு யாருகிட்ட வந்து எங்க வைக்கிறன்னு கீழார உள்ள மாதிரி த்தூன்னு துப்பிரும். 


எல்லாம் முடிஞ்சு டிக்கெட் வந்தா இந்த நாள் இனிய நாள். வராங்காட்டி இந்த நாளும் ஈனநாளே. இவ்வளவு கஷ்டப்பட்டும் டிக்கெட் கெடைக்கலன்னு கடுப்புல இருக்கேல, எவனாச்சும் "கடமையைச் செய் பலனை எதிர்பாராதே"ன்னு தத்துவம் சொன்னான்னா, அவன ங்கோ, கே, தா, கி, பூ, லூஇதுல எந்த எழுத்துல ஆரம்பிக்கிற கெட்ட வார்த்தையச் சொல்லித் திட்டுனாலும் தப்பே இல்லை. எனக்குத் தெரிஞ்சு நம்மாளுங்களத் தவிர வேற எந்த நாட்டுக்கரனாலையுமே செய்ய முடியாத காரியம்ன்னா அது இந்த தட்கல்ல டிக்கெட் எடுக்குறதுதான். சொல்லப்போனால் ஒவ்வொரு தட்க்கல் டிக்கெட் எடுக்கப்பட்டு செய்யப்படும் ரயில் பயணமும் ஏறக்குறைய ஒரு லிம்கா புத்தகத்திற்கான சாதனைதான். Great Indians. You all are the epitome of patience, and keep on living cool under any kind of pressure.  Kudos Guys.

இப்படிக் கஷ்டப்பட்டு டிக்கெட் எடுத்து வச்சுருப்போம். இன்னைக்கு சாயங்காலம் ஊருக்கு கெளம்பனும்ன்னு சந்தோஷமா ஆபிஸ்ல இருந்து கெளம்பேல உங்க டேமேஜர் கூப்பிட்டு சொல்லுவார் பாருங்க... "Ram, due to very tight deadlines, we need to work over this weekend and close out everything. So please plan accordingly man…"  அதுதான் அதுதான் The Real கடுப்பேத்துறார் மை லார்ட்.

12 பேர் சொன்னது என்னான்னா..:

தமிழ்வாசி பிரகாஷ் said...

சார், அடுத்த வாரம் சென்னைக்கு தட்கல் எடுக்கலாம்னு பிளான் வச்சிருக்கேன். உங்க போஸ்ட் படிச்சதுக்கப்புறம் ரொம்பவே யோசனை பண்றேன்.

தட்கல் அவசியமான்னு....
பேசாம பஸ்ல போற வழிய பாருன்னு மனசு சொல்லுது...

தேங்க்ஸ்ங்கண்ணா

HOTLINKSIN.COM திரட்டி said...

பதிவை இணைத்தால் பரிசு...
http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

Ramani said...

தட்கல் பதிவு அவஸ்தையை அதிகபட்சமாக
அனுபவித்து இருந்தால் ஒழிய இத்தனை
நகைச்ச்சுவை உணர்வுடன் சொல்லிச் செல்வது கடினம்
மனம் கவர்ந்த் பதிவு.வாழ்த்துக்கள்

GOPS said...

இன்று மகளுக்காக தக்கல் டிக்கெட் ட்ரை பண்ணிட்டு இருக்கும் பொது கரெக்ட் ஆக உங்க ப்ளாக் ...நானும் "எனது வாழ்நாளில் உச்சபட்ச டென்ஷன் காரணமாக இதயத்தின் குழாயோ, மூளையின் நரம்போ வெடித்து நான் செத்தால் அதற்கு IRCTC காரர்களே தார்மீகப் பொறுப்பாவார்கள்" என்று எழுதி வைத்துள்ளேன் . (உங்க ப்ளாக் படித்து கொண்டு டிக்கெட் போட்டதில் வைடிங் லிஸ்ட் 21 &22 தான் கிடைத்தது )

Senthil Ganesh S said...

அருமையான வலைப்பதிவு...
ஒவ்வொரு தடவ டிக்கெட் எடுக்கும்போதும் கடுப்பின் உச்சத்த தொடுறேன்....

Senthil Ganesh S said...

அருமையான வலைப்பதிவு...
ஒவ்வொரு தடவ டிக்கெட் எடுக்கும்போதும் கடுப்பின் உச்சத்த தொடுறேன்....

ராஜ் said...

செம பதிவு...ரொம்ப நல்லா இருந்தது...நல்ல காமெடி..
இவ்வளவு வருஷ சர்வீஸ்ல நான் ஒரு வாட்டி கூட கரெக்டா தட்கல் டிக்கெட் புக் பண்ணினதா வரலாறு, பூகோளம், இயற்பியல், வேதியல் எதுவுமே நடத்து கிடையாது..
நீங்க நிறைய வாட்டி கரெக்டா புக் பண்ணுன ஆளு மாதிரி தெரியுது...

ராம்குமார் - அமுதன் said...

அனைவருக்கு நன்றிகள் வந்தமைக்கும் கருத்துகளுக்கும்.

@தமிழ்வாசி : அதாங்கணா கரெக்ட்டு...

@Gopsji : கிட்டத்தட்ட தட்கல்ல டிக்கெட் எடுக்குற எல்லாருமே அதை எழுதி வச்சுருக்காங்க...

@ராஜ் : நமக்கு எப்பவுமே 50 - 50 பாஸ்... ஆனதும் ஆகாததும்...

@ரமணி : வாழ்க்கை என்பதே ஒரு அனுபவம்தானே...

Mada swamy Subramanian said...

அருமை அருமை

Suresh S R said...

ரயிலில் உடன் வரும் முன்பதிவு மையங்களில் ரிசர்வ் பண்ணினவங்க எல்லோரும் பேசுறப்ப “கம்பியூட்டர்ல்ல வீட்டில இருந்து ரொம்ப ஈசியா சுலபமா பண்றாங்க, அதனால நமக்கு சரியா கிடைக்க மாட்டேங்குது”னு சொல்வாங்க பாருங்க.......... அப்படியே இழுத்துகிட்டு வந்து ரெண்டு சாத்து சாத்தணும் போல இருக்கும்.

ராம்குமார் - அமுதன் said...

@சுரேஷ் : சேம் பீலிங்க்ஸ் யூ நோ :))

Arasu said...

இந்த லட்சனத்துல IRCTC introduced IP filter. From one IP you can able to book only 2 transcation of tatkal tickets.

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.