Friday, June 22, 2012

சகுனி - சம்திங் மிஸ்ஸிங்.


கதையே இல்லாத இன்னுமொரு 'கார்த்தியின்' கமர்சியல் சினிமா. ஆக கதை, எமோஷன், உணர்வுப்பூர்வ - இந்த வகையறாவில் வராத இல்லாஜிக்கல் சினிமா. சரி, கமர்ஷியல் சினிமாவின் உயிர்நாடியான திரைக்கதை எப்படி என்று பார்த்தால் - அதிலும் கொஞ்சம் பல்ஸ் கம்மியே. அதற்காக மரண மொக்கை, தலைவலித்திரைப்படம் என்றும் ஒதுக்கித் தள்ளும் வகையிலும் இல்லை.அரசியல்தான் படத்தின் களம் என்றால் எவ்வளவு யோசித்திருக்க வேண்டும். "அமைதிப்படை" முதல் "கோ" வரை அதிரிபுதிரியான பல்வேறு தமிழ் அரசியல் சினிமாக்கள் பார்த்து ரசித்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு,  சகுனி உண்மையிலேயே சம்திங் மிஸ்ஸிங்தான்.படத்தின் முதல் பாதியில் சந்தானம் இன்ட்ரோ, "படிப்படியான" ஹீரோயின் இன்ட்ரோ, அனுஷ்கா என்று கொஞ்சமே கொஞ்சம் கவனஈர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றுகிறார் அறிமுக இயக்குநர் சங்கர் தயாள். சந்தானம் பல இடங்களில் கிச்சுக்கிச்சு மூட்டுவதால் படம் எங்கேதான் போகிறது என்பதை யோசிக்கவே முடியாமல் போய்க் கொண்டே இருக்கிறது. கார்த்திக்கெனவும் ஒரு screen presence இருக்கிறது. காமெடியில் டைமிங் பிரமாதமாக ஒர்க்கவுட் ஆகிறது. ஏற்கனவே பண்பலைகளில் ஹிட்டான ஜி.வி.பிரகாஷின் பாடல்களுக்கு நடனமாட முயற்சிக்கிறார். ஆக “இந்தப்”படத்தில் அதிகதிமாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார். ஹீரோயின் தான் "ஐயோ பாவம்யா.. ரெண்டு பாட்டில் குளுகோஸ் ஏத்தி உடம்ப கிடம்ப தேத்தி வுடுங்கய்யா" என்பது போல பரிதாபமாக இருக்கிறார். மத்தபடி தமிழ் சினிமாவில் மிகப்புதுமையான முறையில் கதாநாயகி திரையில் வந்தவுடனேயே பாட்டு வரும்படியான கான்செப்ட் அருமையிலும் அருமை.


இரண்டாம் பாதியில்தான் கொஞ்சம் சொதப்பல். நாசர், ராதிகா, கோட்டா சீனிவாசராவ் என்று பல பேரைக் கொண்டு வந்ததிலேயே கொஞ்சம் கிறுகிறுத்தது. அத்தனை பேரைக் கொண்டு வந்தும் மேஜிக்கலாக எதுவும் செய்யாமல் போனது படு 'சப்'. பிரகாஷ்ராஜ் கிரணை துணை முதல்வர் வேட்பாளராக அறிவித்தவுடனேயே பக்கத்து சீட்டில் இருந்த பத்து வயது பாலகன் சொல்லி விட்டான் "அடுத்த சீன்ல பாம் வைக்கப் போறாங்க, பாரேன்" பழைய சட்டி பாஸ். எவ்ளோ நாளைக்குதான் அதுலயே பாலக்காச்சுவீங்க. இது போகவும் படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்டுகள். ஆனால் படம் முடித்து வந்து பிரியாணி ஆர்டர் செய்த பொழுது "லெக்பீஸ் இல்ல பாய்." என்று ரஹ்மான் பாய் சொன்னபொழுதில் அடைந்த ஷாக்கைக் கூட அந்த ட்விஸ்டுகள்  தரவில்லை என்பது துரதிர்ஷ்டம்.


தமிழ்சினிமாவில் சென்டரல் ஸ்டேஷனில் வைத்து கிளைமேக்ஸ் படமாக்கப்பட்ட 14,377வது படம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது. அதிலும் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து ஹீரோவும், ஹீரோயினும் ஒன்று சேருமாறு காட்சியமைத்தது  இந்த டெக்னாலஜி யுகத்தின் மிகப்புதுமையான காட்சியாகப் பார்க்கப்படுகிறது. படத்தில் எந்தக்காட்சியிலேயும் அழுத்தம் இல்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக கிளைமேக்ஸில் ப்ரணீதாவை தோளில் சாய்த்து கார்த்தி அழுத்துவதாகவும்  கார்த்தியின் இன்னொரு தோளை சந்தானம் அழுத்துவதாகவும் அழுத்தமான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் என்பது பாராட்டுக்குரியது.  "டெல்லியில் ஏதோ பிரச்சனையாம். நாந்தான் போய் சமாளிக்கனுமாம்" என்று கிளைமேக்ஸெல்லாம் முடிந்த பிறகு கார்த்தி சொல்லும் பொழுதில் "பாவம்.. யாரு பெத்த புள்ளையோ.. இப்படி ஆகிப்போச்சே" என்ற அனுதாபம் மேலிடுவதைத் தடுக்க முடியவில்லை.


கமர்ஷியல் சினிமா வெறியர்களுக்கு வேண்டுமானால் ஒரு முறை..... 
"சகுனி" என்கிற நல்ல பவர்புல்லான டைட்டிலுக்கேற்ற அளவில் சாணக்கியத்தனங்கள் இல்லாமல் போனதால் சகுனியால் ஷைனிங் செய்ய முடியாது என்றே தோன்றுகிறது.


கார்த்தி - சங்கர் தயாள் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் guys.

Monday, June 18, 2012

ட்வீட்டாலஜி..


"எவ்ளோ நேரானாலும் பரவால்ல ஆனா 1 மணிக்குள்ள முடிச்சுரு"ன்னு சொல்லி 12:30க்கு வேலை குடுக்குறான்பாரு அவன்தான் தி ரியல் டேமேஜர்

கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

எது எப்படியோ. நாம் ஒவ்வொருவருமே வாழ்வில் சில முறையேனும் "தூங்குவதைப் போல" நடித்திருப்போம்.

கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

இரட்டைக்கிளவிக்கும் அடுக்குத்தொடருக்கும் நடுவிலான வித்தியாசம்தான் பெண்ணுக்கும் ஆணுக்குமான வித்தியாசம்

கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

ஆனாலும் சங்குமாவ வச்சு சங்கி மங்கி ரேஞ்சுக்கு காமெடி பண்ணிட்டானுக#திஸ் பேட் அம்மா அன்டு முலாயம் ப்ளேடு பஸ்கட் பால் இன் தி மை லைப்

கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

சரத்குமாரின் இரட்டை வேடம் - அதிமுக அதிருப்தி #எந்த வேஷம் ? நாட்டாமையா, இல்ல தம்பி பசுபதியா ?

கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

வாலு படத்துக்கு பிரபல பதிவர்கள் வைக்கப் போகும் ரைமிங் பஞ்ச் விமர்சன தலைப்புகளை நினைத்தாலே அடி நெஞ்சு அலறுகிறது # வாலு

கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

புதுக்கோட்டையில் தேமுதிக டெப்பாஸிட் பெற்றது #இப்போ சொல்லுங்க கேப்டன் "நான் வளர்கிறேனே மம்மி"

கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும். முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்# ட்விட்டை ராகமாக பாடாதவர்கள்குறைவு 

கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா #ட்விட்டை ராகமாகப் பாடாதவர்கள் குறைவு (@Tparavai)

கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

எனது செல்போன்களின் மெமரி கார்டு, மெலடி கார்டாகிப் போனது ராஜா பாடல்களால்தான்

கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

ஈமு கோழி விளம்பரத்துக்கு நமீதா வருவதென்பது பல்பு விளம்பரத்துக்கு எடிசனே வருவதற்கு ஒப்பானது 


கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

பெரும்பாலான "உயர்தர" சைவ உணவகங்களில் சாப்பிடுவது "நடுத்தர" மக்களே.. #அவதானிப்பு

கீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சுகீச்சு கீச்சு கீச்சு

"முடிஞ்சாச் செய்யுங்க" என்பதன் உள் அர்த்தம் பல வேளைகளில் "முடிச்சிட்டுச் சொல்லுங்க" என்பதாகவே இருக்கின்றது.

Monday, June 4, 2012

மினி மீல்ஸ் - 04/06/2012


வாழ்க்கையின் பின்னாளில் எத்தனை வெற்றிகள் பெற்றாலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கொடுக்கும் சந்தோஷம் அலாதியானது. வருத்தப்படவே தெரியாத வயதில் வரும் முடிவுகளாதலால் இருக்கலாம். 2012 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. "வழக்கம் போல இவ்வாண்டும் மாணவிகளே..." என்று தொடங்கும் செய்திகள் நாளைய செய்தித்தாள்களில் வரப்போகின்றது. ஆனால் இந்தாண்டு மாநிலத்தில் முதல் மதிப்பெண் 497ஆம். தமிழிலும் கூட முதல் மதிப்பெண் 100/100ஆம். நாங்க படிச்ச காலத்துலலாம் தமிழ் கட்டுரைகளுக்கு 10க்கு 7.5, 8 மார்க்தான் அதிகமாகப் போடுவார்கள். ஆனா இப்போல்லாம்... என்னவோ போடா மாதவா.


வெற்றி பெற்றவர்களை ஆரவாரமாக வாழ்த்தும் அதே சமயத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதும் அரவணைப்பதும் அவசியமாகிறது. அதே போல் பக்கத்து வீடு, எதிர் வீடு, சொந்தக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் என மற்றவர் மதிப்பெண்களை ஒப்பிட்டு பேசுவதோ மட்டம் தட்டுவதோ பெற்றோர்கள் தயவு செய்து யாரும் செய்யாதீர்கள். அது அவ்வயதில் தரும் வேதனை அளப்பறியது.

SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC

IPL Corner : 

ஆசை 60 நாள் IPL முப்பது நாள் என ஒரு வழியாக IPL முடிவு பெற்று விட்டது. கொல்கட்டா வெற்றி பெற்றது மகிழ்ச்சியே. காம்பீர் கப்பைத் தூக்கியதும் மகிழ்ச்சியே. ஆனால் அதற்குப்பிறகு Eden Gardenல் ஷாருக்கான் மற்றும் குழுவினர் செய்த அளப்பறை, "யப்பா தாங்க முடியலடா சாமி".  இனி செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 20 - 20 உலகக்கோப்பை போட்டிகள் வரை கிரிக்கெட் பார்ப்பதற்கு கொஞ்சம் ஓய்வளிக்கலாம் என்றிருக்கிறேன். பின்ன ஆபிஸ்ன்னா வருஷத்துல மூணு மாசமாச்சும் உழைக்கனுமா இல்லையா? :))

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL

போன ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வேளச்சேரி விஜயாநகர் சிக்னலில் நின்று கொண்டிருந்த பொழுது நல்ல வயதானவொரு மூதாட்டி காசு இரந்து எனக்கு எதிர்ப் பக்கமாய் இருந்த ஜன்னல் கதவைத் தட்டினாள். நானும் காசு போடலாம் என முடிவு செய்து அந்த ஜன்னல் கதவைத் திறந்து விட்டேன். அவளும் தலையை உள்ளே விட்டுக் கையை நீட்டினாள். எப்பொழுதும் டோல் கேட்டுகளில் குடுக்க வேண்டி Dashboardஇலேயே சில்லறை வைத்திருப்பது வழக்கம். துழாவிப் பார்த்தால் அந்த நேரத்துக்கு ஒன்றுமே இல்லை. சரி என்று பர்ஸை வெளியில் எடுத்துப் பார்த்தால் மொத்தமாய் நான்கே நான்கு நோட்டுக்கள். ஒரு 1000, இரு 500 ஒரு 100. பத்து, அஞ்சு, ஏன் சில்லறை என 50 பைசா கூட இல்லை. நான் மீண்டும் காரிலும் பர்சிலும் துழாவிப் பார்த்து விட்டு "சில்லறை இல்லயே பாட்டி" என்றேன். அவள் காதில் எதுவும் கேட்காதவள் போலாய் நீட்டிய கையை ஆட்டிக் கொண்டே இருந்தாள். 6 - 5 - 4 - 3 - 2 - 1 - 90 - 89 - 88 சிக்னல் பச்சை விழுந்திருந்தது. சில்லறை இல்லை என இரண்டு மூன்று முறை சொல்லியும் அவள் தலையை வெளியில் எடுப்பதாய் இல்லை. பின்னாலிருந்து மற்ற வண்டிகளின் ஹாரன் சத்தம் காதைக் கிழிக்க ஆரம்பித்தது. ஜன்னலை மூடி அவள் கடைசி வரை கையை எடுக்காவிட்டால்  கஷ்டமாகி விடும். மெதுவாக காரை முன்செலுத்த முனைந்தாலும் அவள் கையையோ தலையையோ வெளியில் எடுப்பதாய் இல்லை. கீழே விழுந்து விடுவாளோ என்ற பயம் ஏற்பட்டது. மேலும் மேலும் ஹாரன் சத்தம் அதிகமாக "போய்யா" "போடா" "பேமானி" மற்றும் இதர சில வார்த்தைகளும் கேட்க கேட்க உச்சகட்ட பிரஷரில் 100 ரூ. நோட்டை எடுத்துக் கொடுத்து விட்டேன். அவளும் சிரித்துக் கொண்டே கையை எடுக்க ஒருவாறாக காரைக் கிளப்பிக் கொண்டு வந்தேன். என்னதான் யோசித்து யோசித்து முயற்சித்துப் பார்த்தாலும் தானம் தர்மம் பண்ணிய உணர்வைக் கொண்டு வரவே முடியவில்லை. எவ்வளவோ காச வெட்டியா செலவழிக்கிறோம், நூறு ரூபாதான போனாப் போகுது என்ற எண்ணமே மேலோங்கி நிலைபெற்றது.

ஹ்ம்ம்ம்.. எப்படிப் பார்த்தாலும் நாமும் மனிதர்கள்தான் - மனிதரிலும் சராசரி நான்.

###### ##### ##### ##### ##### ##### ##### ##### ####

 உருமி படம் பார்த்தேன். டப்பிங்காகவே இருந்தாலும் தமிழில் ஒரு நல்ல வரலாற்றுப்பதிவைப் பார்த்த மனதிருப்தி ஏற்பட்டது. நான் படம் பார்க்க சென்றதற்கு மிக முக்கியக்காரணம் எனக்கு வரலாறு மிகவும் பிடிக்குமென்பதாலேதான் என்றால் - நம்ப மாட்டீங்கள்ல. நான் படத்துக்கு போனதற்கு காரணம் நித்யா மேனனும் வித்யா பாலனும் மட்டுமே. ஆனால் படத்திலிருந்து திரும்பி வரும்பொழுது ஜெனிலியாவின் மிகப்பெரிய விசிறியாக மாறி விட்டிருந்தேன். இதுவரை லூசுப்பெண்ணாக மட்டுமே தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட ஜெனிலியா "அரக்கல் ஆயிஷா" என்ற இஸ்லாமியப் பெண் கதாப்பாத்திரத்தில் பிச்சு உதறியிருக்கிறாள். 


பிரபுதேவா, பிரித்விராஜ், ஆர்யா, தபூ, வித்யா பாலன், நித்யா மேனன், ஜெனிலியா என மிகப் பெரிய Star Cast. நல்லதொரு முயற்சி எடுத்த சந்தோஷ் சிவனுக்கு ஒரு பூங்கொத்தல்ல பூங்காவே பரிசளிக்கலாம்.
\
Urumi Genelia Urumi Genelia Urumi Genelia Urumi Genelia Urumi Genelia

இவ்வார விகடன் வலைபாயுதேவில் என் ட்வீட் ஒன்று வந்திருக்கிறது. நன்றி விகடன் :)


விகடன் விகடன் விகடன் விகடன் விகடன் விகடன்
மை ட்வீட்ஸ் மாமே :
மும்தாஜுக்காக தாஜ்மகாலக் கட்டுனது ஷாருக்கான்.,.,., இது.,., ஷாஜகான்.. ஆனா அந்த மும்தாஜையே கட்டுனது எங்க வீராசாமிடா #WhyTRisGod

என்னை முகப்புத்தகத்திலிருந்து மீட்டெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது ட்விட்டர்#ஒரு போதையிலிருந்து மறுபோதை. Orkut -> FB -> Twitter -> ? -> ? -> -_-
கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் ராணுவ சேவை புரிவேன் - தோனி #பேட்டிங்கே உங்களுக்கு வாள்சண்டை மற்றும் சிலம்பம் சுத்துற பயிற்சிதான பாஸ

இசை படத்தின் போஸ்டர் பார்த்து ஒரு 2 மணி நேரம் "ஸ்டன்னிங்ஸ் ஆப் இன்டியா" ஆகிட்டேன்.. ரசனையின் உச்சம் :)

இந்த அனுமார் சஞ்சீவி மலைய தூக்குனது மாதிரி நம்ம சென்னைய அப்படியே அலேக்கா தூக்கி டெல்லி பக்கத்துல வச்சுட்டீங்கன்னா.. #WeWantPetrol #Chennai

Google என்பது என்ற googol வார்த்தையின் spelling mistakeல் உருவான பெயரே. #சகுனத்தை நெம்புபவர்கள் நெம்பலாம்.
Tweets Tweets Tweets Tweets Tweets Tweets Tweets Tweets
கார்ட்டூன் கார்னர் :

###### ##### ##### ##### ##### ##### ##### ##### ####

பட்டையக் கெளப்புற பாட்டி.. 1000000% laughter guaranteed. : )))

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.