Monday, June 4, 2012

மினி மீல்ஸ் - 04/06/2012


வாழ்க்கையின் பின்னாளில் எத்தனை வெற்றிகள் பெற்றாலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கொடுக்கும் சந்தோஷம் அலாதியானது. வருத்தப்படவே தெரியாத வயதில் வரும் முடிவுகளாதலால் இருக்கலாம். 2012 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. "வழக்கம் போல இவ்வாண்டும் மாணவிகளே..." என்று தொடங்கும் செய்திகள் நாளைய செய்தித்தாள்களில் வரப்போகின்றது. ஆனால் இந்தாண்டு மாநிலத்தில் முதல் மதிப்பெண் 497ஆம். தமிழிலும் கூட முதல் மதிப்பெண் 100/100ஆம். நாங்க படிச்ச காலத்துலலாம் தமிழ் கட்டுரைகளுக்கு 10க்கு 7.5, 8 மார்க்தான் அதிகமாகப் போடுவார்கள். ஆனா இப்போல்லாம்... என்னவோ போடா மாதவா.


வெற்றி பெற்றவர்களை ஆரவாரமாக வாழ்த்தும் அதே சமயத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதும் அரவணைப்பதும் அவசியமாகிறது. அதே போல் பக்கத்து வீடு, எதிர் வீடு, சொந்தக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் என மற்றவர் மதிப்பெண்களை ஒப்பிட்டு பேசுவதோ மட்டம் தட்டுவதோ பெற்றோர்கள் தயவு செய்து யாரும் செய்யாதீர்கள். அது அவ்வயதில் தரும் வேதனை அளப்பறியது.

SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC SSLC

IPL Corner : 

ஆசை 60 நாள் IPL முப்பது நாள் என ஒரு வழியாக IPL முடிவு பெற்று விட்டது. கொல்கட்டா வெற்றி பெற்றது மகிழ்ச்சியே. காம்பீர் கப்பைத் தூக்கியதும் மகிழ்ச்சியே. ஆனால் அதற்குப்பிறகு Eden Gardenல் ஷாருக்கான் மற்றும் குழுவினர் செய்த அளப்பறை, "யப்பா தாங்க முடியலடா சாமி".  இனி செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 20 - 20 உலகக்கோப்பை போட்டிகள் வரை கிரிக்கெட் பார்ப்பதற்கு கொஞ்சம் ஓய்வளிக்கலாம் என்றிருக்கிறேன். பின்ன ஆபிஸ்ன்னா வருஷத்துல மூணு மாசமாச்சும் உழைக்கனுமா இல்லையா? :))

IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL IPL

போன ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வேளச்சேரி விஜயாநகர் சிக்னலில் நின்று கொண்டிருந்த பொழுது நல்ல வயதானவொரு மூதாட்டி காசு இரந்து எனக்கு எதிர்ப் பக்கமாய் இருந்த ஜன்னல் கதவைத் தட்டினாள். நானும் காசு போடலாம் என முடிவு செய்து அந்த ஜன்னல் கதவைத் திறந்து விட்டேன். அவளும் தலையை உள்ளே விட்டுக் கையை நீட்டினாள். எப்பொழுதும் டோல் கேட்டுகளில் குடுக்க வேண்டி Dashboardஇலேயே சில்லறை வைத்திருப்பது வழக்கம். துழாவிப் பார்த்தால் அந்த நேரத்துக்கு ஒன்றுமே இல்லை. சரி என்று பர்ஸை வெளியில் எடுத்துப் பார்த்தால் மொத்தமாய் நான்கே நான்கு நோட்டுக்கள். ஒரு 1000, இரு 500 ஒரு 100. பத்து, அஞ்சு, ஏன் சில்லறை என 50 பைசா கூட இல்லை. நான் மீண்டும் காரிலும் பர்சிலும் துழாவிப் பார்த்து விட்டு "சில்லறை இல்லயே பாட்டி" என்றேன். அவள் காதில் எதுவும் கேட்காதவள் போலாய் நீட்டிய கையை ஆட்டிக் கொண்டே இருந்தாள். 6 - 5 - 4 - 3 - 2 - 1 - 90 - 89 - 88 சிக்னல் பச்சை விழுந்திருந்தது. சில்லறை இல்லை என இரண்டு மூன்று முறை சொல்லியும் அவள் தலையை வெளியில் எடுப்பதாய் இல்லை. பின்னாலிருந்து மற்ற வண்டிகளின் ஹாரன் சத்தம் காதைக் கிழிக்க ஆரம்பித்தது. ஜன்னலை மூடி அவள் கடைசி வரை கையை எடுக்காவிட்டால்  கஷ்டமாகி விடும். மெதுவாக காரை முன்செலுத்த முனைந்தாலும் அவள் கையையோ தலையையோ வெளியில் எடுப்பதாய் இல்லை. கீழே விழுந்து விடுவாளோ என்ற பயம் ஏற்பட்டது. மேலும் மேலும் ஹாரன் சத்தம் அதிகமாக "போய்யா" "போடா" "பேமானி" மற்றும் இதர சில வார்த்தைகளும் கேட்க கேட்க உச்சகட்ட பிரஷரில் 100 ரூ. நோட்டை எடுத்துக் கொடுத்து விட்டேன். அவளும் சிரித்துக் கொண்டே கையை எடுக்க ஒருவாறாக காரைக் கிளப்பிக் கொண்டு வந்தேன். என்னதான் யோசித்து யோசித்து முயற்சித்துப் பார்த்தாலும் தானம் தர்மம் பண்ணிய உணர்வைக் கொண்டு வரவே முடியவில்லை. எவ்வளவோ காச வெட்டியா செலவழிக்கிறோம், நூறு ரூபாதான போனாப் போகுது என்ற எண்ணமே மேலோங்கி நிலைபெற்றது.

ஹ்ம்ம்ம்.. எப்படிப் பார்த்தாலும் நாமும் மனிதர்கள்தான் - மனிதரிலும் சராசரி நான்.

###### ##### ##### ##### ##### ##### ##### ##### ####

 உருமி படம் பார்த்தேன். டப்பிங்காகவே இருந்தாலும் தமிழில் ஒரு நல்ல வரலாற்றுப்பதிவைப் பார்த்த மனதிருப்தி ஏற்பட்டது. நான் படம் பார்க்க சென்றதற்கு மிக முக்கியக்காரணம் எனக்கு வரலாறு மிகவும் பிடிக்குமென்பதாலேதான் என்றால் - நம்ப மாட்டீங்கள்ல. நான் படத்துக்கு போனதற்கு காரணம் நித்யா மேனனும் வித்யா பாலனும் மட்டுமே. ஆனால் படத்திலிருந்து திரும்பி வரும்பொழுது ஜெனிலியாவின் மிகப்பெரிய விசிறியாக மாறி விட்டிருந்தேன். இதுவரை லூசுப்பெண்ணாக மட்டுமே தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட ஜெனிலியா "அரக்கல் ஆயிஷா" என்ற இஸ்லாமியப் பெண் கதாப்பாத்திரத்தில் பிச்சு உதறியிருக்கிறாள். 


பிரபுதேவா, பிரித்விராஜ், ஆர்யா, தபூ, வித்யா பாலன், நித்யா மேனன், ஜெனிலியா என மிகப் பெரிய Star Cast. நல்லதொரு முயற்சி எடுத்த சந்தோஷ் சிவனுக்கு ஒரு பூங்கொத்தல்ல பூங்காவே பரிசளிக்கலாம்.
\
Urumi Genelia Urumi Genelia Urumi Genelia Urumi Genelia Urumi Genelia

இவ்வார விகடன் வலைபாயுதேவில் என் ட்வீட் ஒன்று வந்திருக்கிறது. நன்றி விகடன் :)


விகடன் விகடன் விகடன் விகடன் விகடன் விகடன்
மை ட்வீட்ஸ் மாமே :
மும்தாஜுக்காக தாஜ்மகாலக் கட்டுனது ஷாருக்கான்.,.,., இது.,., ஷாஜகான்.. ஆனா அந்த மும்தாஜையே கட்டுனது எங்க வீராசாமிடா #WhyTRisGod

என்னை முகப்புத்தகத்திலிருந்து மீட்டெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது ட்விட்டர்#ஒரு போதையிலிருந்து மறுபோதை. Orkut -> FB -> Twitter -> ? -> ? -> -_-
கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் ராணுவ சேவை புரிவேன் - தோனி #பேட்டிங்கே உங்களுக்கு வாள்சண்டை மற்றும் சிலம்பம் சுத்துற பயிற்சிதான பாஸ

இசை படத்தின் போஸ்டர் பார்த்து ஒரு 2 மணி நேரம் "ஸ்டன்னிங்ஸ் ஆப் இன்டியா" ஆகிட்டேன்.. ரசனையின் உச்சம் :)

இந்த அனுமார் சஞ்சீவி மலைய தூக்குனது மாதிரி நம்ம சென்னைய அப்படியே அலேக்கா தூக்கி டெல்லி பக்கத்துல வச்சுட்டீங்கன்னா.. #WeWantPetrol #Chennai

Google என்பது என்ற googol வார்த்தையின் spelling mistakeல் உருவான பெயரே. #சகுனத்தை நெம்புபவர்கள் நெம்பலாம்.
Tweets Tweets Tweets Tweets Tweets Tweets Tweets Tweets
கார்ட்டூன் கார்னர் :

###### ##### ##### ##### ##### ##### ##### ##### ####

பட்டையக் கெளப்புற பாட்டி.. 1000000% laughter guaranteed. : )))

11 பேர் சொன்னது என்னான்னா..:

Philosophy Prabhakaran said...

// என்னதான் யோசித்து யோசித்து முயற்சித்துப் பார்த்தாலும் தானம் தர்மம் பண்ணிய உணர்வைக் கொண்டு வரவே முடியவில்லை. எவ்வளவோ காச வெட்டியா செலவழிக்கிறோம், நூறு ரூபாதான போனாப் போகுது என்ற எண்ணமே மேலோங்கி நிலைபெற்றது. //

ஹி... ஹி... ROFL... நல்லா ஏமாந்திருக்கீங்க... ஆனா அதே சமயம் காகிலோ கோழி கறியை KFCயில 450 + TAX கொடுத்து சாப்பிடும்போது கூட ஏமாந்துதான் போகிறோம்... அதனுடன் ஒப்பிடும்போது இது பரவாயில்லை என்று மனதில் தேற்றிக்கொள்ளலாம்... அந்த கிழவி அன்னைக்கு நைட்டு ஒசத்தியான சரக்கு அடிச்சிருக்கும்...

ராம்குமார் - அமுதன் said...

@Philosophy Prabhakaran : யோசிச்சுப்பாத்தா ROFLதான்... சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி :)

அவள் சரக்கு அடித்திருக்கக் கூடும்... இல்லை ரெண்டு வேளை நல்லா சாப்பிட்டிருக்கக் கூடும்... எதுவாகினும் அவள் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருப்பாள்.. :)

Webtreat said...

அருமையான வலைப்பதிவு... இது போன்ற சுவாரஷ்யமான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்... :-)

ராம்குமார் - அமுதன் said...

முதன்முறையாக தளத்திற்கு வந்ததற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வசந்தன் :))

ராஜ் said...

இப்ப எல்லாம் யாரும் 10th பெயில் ஆகி நான் கேள்விப்பட்டது இல்லை பாஸ்..தேர்வில் தோல்வினா அது 450 மார்க்குக்கு கீழ வாங்குறது தான்..
//எப்படிப் பார்த்தாலும் நாமும் மனிதர்கள்தான் - மனிதரிலும் சராசரி நான்.//
உண்மையான வரிகள்..
உங்க ஸ்டைல் உருமி விமர்சனம் எதிர்பார்கிறேன்.. முனு படம் ஸ்டைல்ல
அந்த டான்ஸ் பாட்டி Tide (சரியாய் தெரியவில்லை) விளம்பரத்துல வர பாட்டி மாதிரியே இருக்கு. அதுலயும் செம டான்ஸ் ஒன்னு போட்டு இருக்கும்..

சமுத்ரா said...

good post

ராம்குமார் - அமுதன் said...

//தேர்வில் தோல்வினா அது 450 மார்க்குக்கு கீழ வாங்குறது தான்..// - உண்மை சகா.. ஆனாலும் இன்னும் தோல்வி என இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்கத்தான் செய்கிறார்கள்...

உருமி மூணு படம் ஸ்டைல்ல விமர்சனம் பண்ணக்கூடிய படம் அல்ல :)) நல்ல படம்... கண்டிப்பாக பாருங்கள்... இன்னொரு முறை படம் பார்த்தால் விமர்சனம் போடுகின்றேன்..

ராம்குமார் - அமுதன் said...

@சமுத்ரா - நன்றி சமுத்ரா !!

T.N.MURALIDHARAN said...

உங்கள் வலைப்பதிவை இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரமிருப்பின் பார்த்து கருத்திடவும்.
http://blogintamil.blogspot.in/

arul said...

arumai athilum antha dance enna oru enjoyment valkayai eppadi vaala vendum endru solli kodukkirar antha paati

Unknown to myself said...

அப்படியே பக்கத்துல உக்கார்ந்து நீயே பேசற மாதிரி பீலிங்...இந்த மாதிரி பீலிங் ஐ வார்த்தைல கொண்டு வருவது ரொம்ப கஷ்டம்.
இனி Regular ஆ இந்த பக்கம் வரணும் போல இருக்கு!

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.