Friday, June 22, 2012

சகுனி - சம்திங் மிஸ்ஸிங்.


கதையே இல்லாத இன்னுமொரு 'கார்த்தியின்' கமர்சியல் சினிமா. ஆக கதை, எமோஷன், உணர்வுப்பூர்வ - இந்த வகையறாவில் வராத இல்லாஜிக்கல் சினிமா. சரி, கமர்ஷியல் சினிமாவின் உயிர்நாடியான திரைக்கதை எப்படி என்று பார்த்தால் - அதிலும் கொஞ்சம் பல்ஸ் கம்மியே. அதற்காக மரண மொக்கை, தலைவலித்திரைப்படம் என்றும் ஒதுக்கித் தள்ளும் வகையிலும் இல்லை.அரசியல்தான் படத்தின் களம் என்றால் எவ்வளவு யோசித்திருக்க வேண்டும். "அமைதிப்படை" முதல் "கோ" வரை அதிரிபுதிரியான பல்வேறு தமிழ் அரசியல் சினிமாக்கள் பார்த்து ரசித்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு,  சகுனி உண்மையிலேயே சம்திங் மிஸ்ஸிங்தான்.படத்தின் முதல் பாதியில் சந்தானம் இன்ட்ரோ, "படிப்படியான" ஹீரோயின் இன்ட்ரோ, அனுஷ்கா என்று கொஞ்சமே கொஞ்சம் கவனஈர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றுகிறார் அறிமுக இயக்குநர் சங்கர் தயாள். சந்தானம் பல இடங்களில் கிச்சுக்கிச்சு மூட்டுவதால் படம் எங்கேதான் போகிறது என்பதை யோசிக்கவே முடியாமல் போய்க் கொண்டே இருக்கிறது. கார்த்திக்கெனவும் ஒரு screen presence இருக்கிறது. காமெடியில் டைமிங் பிரமாதமாக ஒர்க்கவுட் ஆகிறது. ஏற்கனவே பண்பலைகளில் ஹிட்டான ஜி.வி.பிரகாஷின் பாடல்களுக்கு நடனமாட முயற்சிக்கிறார். ஆக “இந்தப்”படத்தில் அதிகதிமாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார். ஹீரோயின் தான் "ஐயோ பாவம்யா.. ரெண்டு பாட்டில் குளுகோஸ் ஏத்தி உடம்ப கிடம்ப தேத்தி வுடுங்கய்யா" என்பது போல பரிதாபமாக இருக்கிறார். மத்தபடி தமிழ் சினிமாவில் மிகப்புதுமையான முறையில் கதாநாயகி திரையில் வந்தவுடனேயே பாட்டு வரும்படியான கான்செப்ட் அருமையிலும் அருமை.


இரண்டாம் பாதியில்தான் கொஞ்சம் சொதப்பல். நாசர், ராதிகா, கோட்டா சீனிவாசராவ் என்று பல பேரைக் கொண்டு வந்ததிலேயே கொஞ்சம் கிறுகிறுத்தது. அத்தனை பேரைக் கொண்டு வந்தும் மேஜிக்கலாக எதுவும் செய்யாமல் போனது படு 'சப்'. பிரகாஷ்ராஜ் கிரணை துணை முதல்வர் வேட்பாளராக அறிவித்தவுடனேயே பக்கத்து சீட்டில் இருந்த பத்து வயது பாலகன் சொல்லி விட்டான் "அடுத்த சீன்ல பாம் வைக்கப் போறாங்க, பாரேன்" பழைய சட்டி பாஸ். எவ்ளோ நாளைக்குதான் அதுலயே பாலக்காச்சுவீங்க. இது போகவும் படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்டுகள். ஆனால் படம் முடித்து வந்து பிரியாணி ஆர்டர் செய்த பொழுது "லெக்பீஸ் இல்ல பாய்." என்று ரஹ்மான் பாய் சொன்னபொழுதில் அடைந்த ஷாக்கைக் கூட அந்த ட்விஸ்டுகள்  தரவில்லை என்பது துரதிர்ஷ்டம்.


தமிழ்சினிமாவில் சென்டரல் ஸ்டேஷனில் வைத்து கிளைமேக்ஸ் படமாக்கப்பட்ட 14,377வது படம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது. அதிலும் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து ஹீரோவும், ஹீரோயினும் ஒன்று சேருமாறு காட்சியமைத்தது  இந்த டெக்னாலஜி யுகத்தின் மிகப்புதுமையான காட்சியாகப் பார்க்கப்படுகிறது. படத்தில் எந்தக்காட்சியிலேயும் அழுத்தம் இல்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக கிளைமேக்ஸில் ப்ரணீதாவை தோளில் சாய்த்து கார்த்தி அழுத்துவதாகவும்  கார்த்தியின் இன்னொரு தோளை சந்தானம் அழுத்துவதாகவும் அழுத்தமான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் என்பது பாராட்டுக்குரியது.  "டெல்லியில் ஏதோ பிரச்சனையாம். நாந்தான் போய் சமாளிக்கனுமாம்" என்று கிளைமேக்ஸெல்லாம் முடிந்த பிறகு கார்த்தி சொல்லும் பொழுதில் "பாவம்.. யாரு பெத்த புள்ளையோ.. இப்படி ஆகிப்போச்சே" என்ற அனுதாபம் மேலிடுவதைத் தடுக்க முடியவில்லை.


கமர்ஷியல் சினிமா வெறியர்களுக்கு வேண்டுமானால் ஒரு முறை..... 
"சகுனி" என்கிற நல்ல பவர்புல்லான டைட்டிலுக்கேற்ற அளவில் சாணக்கியத்தனங்கள் இல்லாமல் போனதால் சகுனியால் ஷைனிங் செய்ய முடியாது என்றே தோன்றுகிறது.


கார்த்தி - சங்கர் தயாள் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் guys.

2 பேர் சொன்னது என்னான்னா..:

RameshKumar said...

yenna panna ticket book panniyache

ஆரூர் மூனா செந்தில் said...

nice review amuthan

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.