Saturday, July 14, 2012

பில்லா II - ஸ்டைலிஷான மொக்கை

படம் பார்த்து வந்திருக்கிறேன். தற்பொழுதைய மனநிலையில் இந்த விமர்சனத்தை எங்கிருந்து தொடங்குவது என்ற பெருங்குழப்பம் நிலவுகிறது. நேற்றே தெரிந்ததுதான். விமர்சனங்களிலும் விவரிக்கப்பட்டதுதான். இது இப்படித்தான் என்று. சில நண்பர்களின் கதறலலொலியை கண்டு கொள்ளவில்லை. கீச்சர்களின் கர்ணகொடூர கீச்சுகளைச் சட்டை செய்யவில்லை. முகப்புத்தக நண்பர்களின் முக்கல் முனகலையும் மதிக்கவில்லை. இத்தனையும் தாண்டி இப்படத்தைக் காண எனக்கு நானே செய்து கொண்ட சமரசங்கள் இரண்டு.  ஒன்று யுவன். இன்னொன்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அஜீத்.  அஜீத் என்றால் அஜீத்தே அல்ல. இம்மாதிரி படங்களுக்காக அஜீத்துக்கே உரித்தான ஸ்டைலிஷ் லுக். நான் அமர்க்களத்திற்கு பிறகு தியேட்டரில் சென்று பார்த்த அஜீத் படம் பில்லா 1 தான். அதற்குப்பிறகு மங்காத்தா. இதற்கு நடுவே வேறேதும் பார்த்தே தீர வேண்டிய படங்கள் வந்ததா என யோசித்தால்....!!! ஆனால் பில்லா 1ன் கதைக்கு களத்துக்கு கதாப்பாத்திரத்துக்கு அஜீத் ஆகச்சரியான தேர்வாக இருந்தார். அசத்தலாகவே இருந்தது. நயந்தாராவிடமும் நமீதாவிடமும் இருந்து வெளிப்பட்ட கவர்ச்சி கதையோடியைந்ததாகவே இருந்தது. யுவன் பிரமாதப்படுத்தியிருந்தார். விஷ்னுவர்த்தன் பில்லாவுக்கான justiceஐ சரியாகச் செய்திருந்தார். ஆனதெல்லாம் அதோடே. 
ஆனால் பில்லா 2... ? பில்லா 2- இந்திய சினிமாவின் முதல் Prequel படம். ஏற்கனவே ஹிட்டடித்த சூப்பர் ஸ்டாரின் பில்லாவுக்கு செய்யப்பட்ட remakeக்கு செய்யப்பட்ட prequel.  இந்தப்படம் நல்லாருக்கா... ? நல்லா இல்லையா ?  பிடித்தவற்றை முதலில் பேசி விடுவோம். ஏனெனில் பின்னால் பேச ஏகப்பட்ட விஷயமிருக்கிறது.  இப்படத்துக்கான மிக உன்னதமான உழைப்பை நல்கியிருப்பவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் படத்தின் கேமராமேனே. அநியாயத்துக்கு அற்புதப்படுத்தியிருக்கிறார். Frame By Frame அருமை. தேவையான இடத்தில், தேவையான அளவில், தேவையான ஒளியில் இந்தக்களத்துக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் R.D. ராஜசேகர். அவருடைய ஒளிப்பயணத்தில் மிகச்சிறந்த மைல்கல்லென இப்படத்தைச் சொல்லலாம்.  படத்தில் வில்லனாக நடித்திருக்கும்... கேட்பது புரிகின்றது. எந்த வில்லன் என்றுதானே.  இல்லையா.. எத்தனையாவது வில்லன் என்றா? 112வது. ஜார்ஜியாவின் டிமிட்ரியாக நடித்திருக்கும் வித்யுத் ஜாம்வால். நல்லதொரு தேர்வு. அது அறிமுகக் காட்சியில் "Who said that?" என்றவாறே படியில் இருந்து இறங்கி வந்து இருக்கும் அத்துனை பேரையும் அடித்து வீழ்த்தும் Action sequence , To say Awesome. அது தவிர...? Thats it. Let us go to the Let downs.

யுவனின் பிண்ணனி இசை இரண்டு இடங்களில் பிரமாதம். தியேட்டரே ஆர்ப்பரித்தது. ஆனால் அது பில்லா 1 தீம் ம்யூசிக்தான் என்பது மென்சோகம். மதுரப்பொண்ணு பாடல் ஒன்றுதான் உருப்படி. கேட்பதற்கும் பார்ப்பதற்கும். கமலின் 'வேட்டையாடு விளையாடு' "கற்க கற்க" போல ஒரு மிகப்பிரமதமான stylish montage ஆக அஜீத்திற்கு வந்திருக்க வேண்டிய "Gang Gang Gangster" பாடலை படமெல்லாம் முடிந்த பின்னர் Title Marqueeக்கு பயன்படுத்தியிருப்பதில் உள்ள ராஜதந்திரத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. சக்ரி டொலெட்டி.படத்தின் இயக்குநர். இந்த விமர்சனம் இதற்கு மேல் பயணிக்கும் பாதைக்கும் காரணகர்த்தா அவரே. படத்தின் கதைக்காக ஸ்டோரி போர்ட் இப்படித்தான் இருந்திருக்கக் கூடும் என்று ஒரு சிறிய கற்பனை. 

"தல அப்படியே நடந்து வர்றார். கைல ஒரு ஏ.கே 47. அங்க ஒரு 5 பேர் நம்மூர்க்காரங்க உக்காந்து இருக்காங்க. அப்படியே லைட்டா டில்ட் பண்ணி zoom out பண்ணா டுப் டுப் டுப். புல் பயர்... அஞ்சு பேரும் சாகுறாங்க"

இதையே ஒரு 168 முறை எழுதிவிட்டு நம்மூர்க்காரங்க என்பதை "foreigners"- என்றும், ஏ.கே 47 என்பதை "Pistol" "Air gun"  என்றும் Find and Replaceல் replace செய்திருக்கிறார்கள். கதை ரெடி. ஸ்டார்ட்.. ஆக்ஷன்... கேமரா... டும் டும் டுப் டுப் டுப்...


பார்வதி ஓமணக்குட்டன்... பாவம் இந்த ஓமணக்குட்டி. சகுனியின் ப்ரணீதாவிற்கு பிறகு மீண்டும் ஒரு குளுகோஸ் ஏற்றப்பட வேண்டிய அப்பிராணி ஜீவன். இநதக் கதாப்பாத்திரம் என்ன மாதிரியான ஒரு characterization என்பதில் இன்னுமொரு ராஜதந்திரத்தை ஒளித்து வைத்திருக்கிறார் இயக்குநர்.  அவர் வரும் ஒவ்வொரு காட்சியின் இறுதியிலும் ரசிகர்கள் "இதனால் தாங்கள் சொல்ல விளைவது....????" என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். உதாரணமாக ஒரு காட்சியில் அஜீத்தும் அவரும் ஒரு ஹோட்டலில் அமர்ந்திருக்கிறார்கள். மெனுவைப் பார்க்கும் பார்வதியிடம் அஜீத் : "என்ன பாக்குற.. எப்படியும் நீ ஐஸ்க்ரீம்தான ஆர்டர் பண்ணப் போற?" என்று கேட்கிறார். உடனே அவளும் சிரித்துக் கொண்டே "ஐஸ்க்ரீம்" என்கிறாள். காட்சி முடிகிறது.... இதனால் தாங்கள் சொல்ல விளைவது...? ஙே ஙே ஙே.... இது போல இன்னும் பல அதி அற்புதமான காட்சிகளும் படம் நெடுக விரவிக் கிடக்கின்றது. புருனா - வாழ்விழந்த ஒரு மூதாட்டிக்கு வாழ்வளிக்கும் பொருட்டு ஏதொவொரு முதியோர் இல்லத்தில் இருந்து கூட்டி வந்திருக்கிறார்கள் போலும்.

உன்னைப் போல் ஒருவனில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இரா.முருகனின் வசனங்கள் படத்தில் படு ஷார்ப். ஆனால் ஒவ்வொன்றும் பேசப்படும் இடங்கள் அட்டர் ப்ளாப். 

படத்தின் அடுத்த பகுதியின் வரவாக ரகுமானைக் காட்ட முனைந்தவர்கள் அது போலவே நமீதாவையும் காட்ட முற்பட்டிருக்கலாம் என்பதும் ரசிகர்களின் ஏக்கமாக இருந்தது. "பில்லா 1 கூட இதவிட ஸ்டைலிஷா இருந்துச்சே மச்சி" என்றவொரு ரசிகரின் கேள்விக்கு அவருடைய பக்கத்து சீட் கார நண்பர் கொடுத்த விளக்கம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது... "இப்பதான மச்சி தல டானாகிருக்கார். இனிமேல் நல்லா சம்பாரிச்சுதான் ஸ்டைலான ட்ரெஸ்ஸெல்லாம் வாங்கிப் போடுவாரு". அஜீத்தை எள்ளளவும் குறை சொல்வதற்கில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையில் சிக்கித் தவித்திருக்கிறார்.  செதுக்கு செதுக்கென்று செதுக்கி விட்டார்கள். சினிமாவை பொழுதுபோக்காக பார்க்கும் நமக்கே யூகிக்க முடிகின்ற பலதரப்பட்ட ட்விஸ்டுகளை அவரால் கதை கேட்கையில் யூகிக்க முடியாமல் போனது... ஏனோ அந்த ஹிக்ஸ் போஸானுக்கே வெளிச்சம்.

முடிவில் நண்பனொருவனின் முகப்புத்தக ஸ்டேட்டஸோடு இதனை முடிக்கிறேன்...

சாமி கும்பிட போனேன், ஆகா நல்ல தரிசனம்...கோவில் குப்பையாய் கிடந்தால் நமக்கென்ன #பில்லா 2

தமிழ் சினிமா நடிகர்களால் அல்ல ரசிகர்களாலே வாழ்கிறது. அதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டிய தருணமிது.

மொத்தத்தில் டேவிட் பில்லா - Operation success yet the patient died. அந்தோ பரிதாபம் -  ஆமென்.

14 பேர் சொன்னது என்னான்னா..:

ராஜ் said...

நடுநிலை விமர்சனம்... :)

Philosophy Prabhakaran said...

வேப்பெண்ணை கடலெண்ணெய் வெளக்கெண்ணை... தல படம் எப்படி இருந்தா எனக்கென்ன...

! சிவகுமார் ! said...

//இநதக் கதாப்பாத்திரம் என்ன மாதிரியான ஒரு characterization என்பதில் இன்னுமொரு ராஜதந்திரத்தை ஒளித்து வைத்திருக்கிறார் இயக்குநர்.//

ஹா..ஹா...அந்த பொண்ணுதான் படத்துக்கே முக்கியமான டுஸ்ட்டுங்கோ...

! சிவகுமார் ! said...

//படத்தின் அடுத்த பகுதியின் வரவாக ரகுமானைக் காட்ட முனைந்தவர்கள் அது போலவே நமீதாவையும் காட்ட முற்பட்டிருக்கலாம் என்பதும் ரசிகர்களின் ஏக்கமாக இருந்தது.//

இப்போதைய நமீதாவை காட்ட வேண்டுமெனில் இரண்டு தேவி பேரடைஸ் அகல ஸ்க்ரீன் தேவை..

Doha Talkies said...

விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது நண்பரே.
கண்டிப்பாக படம் பார்கிறேன்.
சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க..
http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html

முகவை மைந்தன் said...

//விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது நண்பரே.
கண்டிப்பாக படம் பார்கிறேன்.//

கி கி கி கி கி.........

ராம்குமார் - அமுதன் said...

@ராஜ் : நன்றி ராஜ்...

@பிரபாகர் : உனக்கென்ன... உனக்கென்ன... எங்களுக்குள்ள வலிச்சுச்சு :))

@சிவகுமார் : ரெண்டு பத்தாட்டி என்னங்க... பாதியாச்சும் :))

@தோஹா டாக்கீஸ், @முகவை மைந்தன் : கீ கீ கீ ... ஹி ஹி ஹி :))

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

nice review

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அஜீத் ஸ்டைலிஷ் என்பதைப் பலரும் ஒப்புக்கொள்கின்றனர்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

unga blog nalla irukku

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

good keep itup

Kumaran said...

படம் பார்த்து தோன்றியதை அப்படியே விமர்சனமாக்கி இருக்கீங்க..நல்லாருக்கு.நன்றி.

noway said...

unmaiyai sonnatharku nandri.

Rajan said...

[ "பில்லா 1 கூட இதவிட ஸ்டைலிஷா இருந்துச்சே மச்சி" என்றவொரு ரசிகரின் கேள்விக்கு அவருடைய பக்கத்து சீட் கார நண்பர் கொடுத்த விளக்கம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது... "இப்பதான மச்சி தல டானாகிருக்கார். இனிமேல் நல்லா சம்பாரிச்சுதான் ஸ்டைலான ட்ரெஸ்ஸெல்லாம் வாங்கிப் போடுவாரு"]

ROFL

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.