Monday, January 7, 2013

கேள்விகளால் ஒரு வேள்வி

"ஹலோ தம்பி, நீங்க கணக்கம்பாளையம் பழனிச்சாமிதான?" 


வாரமலரின் குறுக்கெழுத்து போட்டுக் கொண்டிருந்த ஒரு பின்னிரவு நேரப் பேருந்து பயணத்தில் இப்படியாகத்தான் ஆரம்பித்தது அந்த உரையாடல். உரையாடல் என்பதை விட 'இல்லீங்களே' என்பதை மட்டுமே நான் பதிலாகக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி நேரம் என்பதே ஆகப் பொருத்தம். 

"ஏன் தம்பி, பொய் சொல்றீங்க.?"

"இல்லீங்க... பொய்யெல்லாம் இல்லீங்க..." 

"ரெண்டு வருஷம் முன்ன வரைக்கும், சின்னக்காம்பாளையம் பஸ்ஸ்டான்டு பக்கத்துல ஜூஸ் கடை போட்டிருந்தீங்கள்ல?"

"இல்லீங்களே.. அது நான் இல்லீங்க.. நான் சென்னைல இருக்... திருநேலில இருந்..." 

"இப்போ சென்னைல இருக்கீங்களா? முன்ன ஏதோ கடன் பிரச்சனைலதான ஊர விட்டு போய்ட்டீங்க?"

பக்கென்றது எனக்கு... "அய்யா, நிறுத்துங்க... உண்மைலயே அது நான் இல்லீங்க..." 

"ஊர்ல போய் உங்களப் பாத்தத சொல்லிருவேன்னு பயப்படுறீங்களா? என்ன மனுசங்களோ நீங்கல்லாம்?" இம்முறை கேள்வியை தனக்குத் தானே கேட்டுக் கொண்டவாறு அவருடைய சீட்டுக்கு எழுந்து போனார். 
வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட கேள்விகளுல் மிக வித்தியாசமான கேள்விகள் அந்தப் பெரியவருடையது... யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையில் எப்பொழுதுமே நம்மை எத்தனையோ கேள்விகள் சுற்றிக் கொண்டேதான் இருக்கின்றன... 

"பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேனுமா?" தொடங்கி 

"அப்புறம் தம்பி.. என்ன பண்றீங்க?" 

"எப்போ கல்யாண சாப்பாடு போடப் போறீங்க?" 

"அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?" 

"வீட்ல ஏதும் விஷேசம் உண்டா?" 

“சாப்ட்வேர் கம்பெனில என்ன வேலைதான் பாப்பீங்க? “ 

“நீங்க நடிக்க வரலேன்னா என்ன ஆகிருப்பிங்க? “ 

“ரஜினி அரசியலுக்கு வருவாரா? “ 

“கரண்ட் எப்போ வரும்?” 

“ஏன்... அதுல என்ன தப்பு?” 

"இதெல்லாம் ஒரு கேள்வியா?" 

ஏன்? எதுக்கு? எப்போ? எப்படி? எதனால? எங்க? என்பது வரைக்குமாய் லட்சோப லட்சம் கேள்விகள்...

அது ஒரு நாளின் பின்னிரவில் மணி 4:45.. Projectல் Productionல் ஏதோ ஒரு issueவை debugக்கிக் கொண்டிருந்தோம்... யுனிக்ஸ் சர்வர், லினக்ஸ் சர்வர், சரவண பவன் சர்வர் தொடங்கி வசந்த பவன் சர்வர் வரை நோண்டி நோண்டி கண்கள் களைத்துப் போயிருந்த நேரத்தில் டேமேஜர் தோளில் பையை மாட்டிக் கொண்டே உலகத்தின் மிகக் குரூரமான அந்தக் கேள்வியைக் கேட்டார்... 

"நாளைக்குக் காலைல சீக்கிரமா ஒரு 8 மணிக்கு வர முடியுமா?" 

அக்கேள்வி கேட்கப்பட்ட நொடியிலிருந்து சரியாக 96 மணி நேரத்தில் என்னுடைய பதில் கேள்வியை அவரிடம் கேட்டேன்... 

"Notice Periodல ஒரு மாசம் Buy out பண்ணிக்கலாமா? :))

அதிலிருந்து எப்பொழுதுமே "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வர்றீங்களா?" "இன்னிக்கு ஏன் லேட்டு?" போன்ற கேள்விகள் சுத்தமாய் பிடிக்காமலே போய் விட்டன... வர்றப்பதான் வருவேன்... தர்றப்பதான் தருவேன்... 

என்னுடைய சக சாப்ட்வேர் சகோதர சகோதரிகளின் வாழ்வில் வட்டமிடும் மிகக் கொடூரமான கேள்வி ஒன்றே ஒன்று மட்டும் இன்னும் மிச்சமிருக்கிறது... அது மிக மிக பயங்கரமானதொரு ஒரு கேள்வி. QA, UAT, XAT எல்லாம் கடந்து code productionக்கு போய் நான்கு மாதங்கள் கழிந்தாலும் எந்தவொரு issueவின் பொருட்டும் கேட்கப்படும் அந்த பயங்கரமான கேள்வி யாதெனில்…

"Why this is not covered as part of unit testing?" 

என்ன கொடுமை சார் இது... :))

                                                                                                             

5 பேர் சொன்னது என்னான்னா..:

Philosophy Prabhakaran said...

அல்டிமேட்டா இருந்தது... இந்த பதிவுடைய ஒப்பனிங்கை நீங்கள் எப்படி யோசித்தீர்கள் என்று வியப்பாக இருக்கிறது... அதாவது முதல் பாதியில் இருந்து இரண்டாவது பாதிக்கான லீடு கிடைத்ததா அல்லது vice versa ?

ராம்குமார் - அமுதன் said...

நன்றி பிரபா...கடைசி கேள்விக்காகதான் எழுத ஆரம்பிச்சேன்... அப்படியே கோர்த்து கோர்த்து விட்டதுதான் :)))

Prillass s said...

சொவ்வொறையாளர். I mean Software Programmer-SOFTWARE க்கு தமிழ் இதுவா ?நிஜம் தானா?

ராம்குமார் - அமுதன் said...

@Prillass s எங்கோ ஒரு முறை படித்த ஞாபகம்.... அதனாலேயே போட்டிருக்கிறேன்....

Viswanathan said...

Ramkumar, Somehow I came across your blog searching for something else; Fortunate enough. I correlate couple of your articles on my childhood experiences; 'Thalapathi' film above and your ticket buying exp: for 'Vishwaroopam'. I had the same exp: when I was 11 yrs old .... BTW, I am from Tvl-Junction, born and brought-up there till +2. This exp: was in PVT theatre, Junction .... I lived right across the street from PVT. Thanks, for making me stop a while and look back-Thinking abt school days, playing on the streets,bathing in thamirabarani, visitng native village during weekends (dude, what's your plan for the weekend?, well this was!), etc. (BTW from ur post above, thank God, I am not a 'Chevvoraiyaalar'). Keep writing... mikka nandri.

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.