Friday, February 1, 2013

கடல் - கலங்கல்

கடல்...  நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பில் இருந்து ஒரு musical extravaganza impact கடந்த ஓரிரு மாதங்களில் தமிழகமெங்கும் ஏற்படுத்தி விஷ்வரூபத்தின் ரூப ரூப பிரச்சனைகளுக்கு நடுவே இன்று வெளியாகியிருக்கும் படம். பார்த்தாகி விட்டது... படம் எப்படி என்பதையெல்லாம் பார்க்கும் முன்பு சில விஷயங்கள்...

ராஜா  சார், கமல் சார் என்று தமிழ் சினிமாவில் ஆதர்ஷம் என்று கருத வேண்டிய மிக சிலருள் மணி சாருக்கு நிச்சயம் தகுந்த இடமுண்டு. ஒரு நாயகன், ஒரு தளபதி, ஒரு மெளன ராகம், ஒரு அக்னி நட்சத்திரம், ஒரு அலைபாயுதே, ஒரு இருவர், ஒரு கன்னத்தில் முத்தமிட்டால், ஒரு ரோஜா, ஒரு பாம்பே - வேறு எவராலும் சர்வ நிச்சயமாக எடுத்திருக்க முடியாத ஒரு ஒரு படங்கள் இவை. இதில் எந்தவொரு படத்திலுமே கதைக்காக மிகவும் கஷ்டப்பட்டிருப்பார் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ரோஜா, பாம்பே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களின் கதைக்களனுக்காக கச்சிதமாக உழைத்திருப்பார். ஒவ்வொரு ப்ரேமிலும் பளிச்சிடும் அசாதரண உழைப்பு அது. மற்ற படங்களிலெல்லாம் கதாப்பாத்திர தேர்வை கவனத்தோடு செய்து விட்டு அவர்கள் திரையில் காட்டும் உணர்வுகள் மூலம் நமது உணர்வுகளிலும், நாடி நரம்புகளிலும் கபடி ஆடுவதில் அவர் நிகர் அவர் மட்டுமே. கீழே வசனமே இல்லாத இந்த ஒரு காட்சியைப் பாருங்கள்... ரஜினி காதல் தோல்வியுறும் நிலையில் வரும் அச்சில காட்சிகள். ஆரஞ்சும் இளமஞ்சளும் நிறைந்த அந்த வானத்தின் கீழ் ராஜாவின் உச்சகட்ட இசைத்தாலாட்டில்... இந்த ஒரு காட்சி. இதைப் பார்த்து உணர்ச்சிவசப்படாமல் யாராவது இருக்க முடியுமா? இதனாலேயே இதனாலேயே மணி சார் ஒரு ஆதர்ஷம்.


"நான் தமிழ் சினிமாவே பார்ப்பதில்லை, 1980களில் தமிழ் சினிமா முழுதும் குப்பையாக இருந்ததால் அதைக் காப்பாற்றவே நான் வந்தேன், என்னுடைய முதல் தமிழ் படமான பகல் நிலவைப் போல் ஒரு குப்பையான படம் இருக்கவே வாய்ப்பில்லை" - ஒரு சராசரி மனிதனாக இப்படியெல்லாம் உளறிக் கொட்டினாலும் ஒரு creator ஆக ஒரு Flim maker ஆக மணி சார் ஆதர்ஷம்தான்.

இப்படிப்பட்ட மணி சார் தளபதி படத்தில் தான் அறிமுகப்படுத்திய அரவிந்த்சாமிக்கு மீண்டும் ஒரு startup break வேண்டி அவரை கதாநாயகனாகப் போட்டு தமிழில் இயக்கியிருக்கும் படம்தான் "கடல்". கூடவே கெளதம் கார்த்திக், துளசி, அர்ஜுன் ஆகியோர் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் ஏதேனும் ஒரு பாடலையேனும் சிலாகித்து முகப்புத்தகத்தில் ஒரு Share ஒரு ஸ்டேட்டஸோ போடாத இளசுகள் மிகக்குறைவு. Rahman Unplugged ரிலீஸ் ஆன முதல் வாரத்திலெல்லாம் நெஞ்சுக்குள்ள பாடல் மின்சாரமாய் பரவிக் கொண்டிருந்தது. அதிலும் கடந்த ஒரு வாரத்தில் மகுடி மகுடியெல்லாம் ஒரு வைரஸைப் போல இணையமெங்கும் வியாபித்துக் கிடந்தது. அந்த வகையில் இந்தப் படத்தை கண்டிப்பாக காப்பாற்றப் போகிறவர்கள் ரஹ்மான் ரசிகர்கள் மட்டுமே. பாட்டுக்கான காட்சிப்படுத்தலும் அசத்தலே. மூங்கில் தோட்டம் பாடலின் காட்சிகளெல்லாம் amazingly refreshing.. Class... கூடவே மற்ற மணி சாரின் படங்களைப் போலவே ராஜீவ் மேனனில் அற்புதமான ஒளியமைப்பில், பிரசாத்தின் அசத்தலான எடிட்டிங்கில் yet again a technically sound movie..


விவேக் சொல்லுவாரே - "இப்பல்லாம் பாட்டு சீன் வந்தா பொண்ணுங்களே வெளிய போய் தம் கட்டுது" - இந்தப்படத்தில் பாட்டு சீன் தவிர்த்த மற்ற சீன்களுக்கு எல்லாமே அது நடக்கிறது. ரஹ்மானின் பாடல்கள் மட்டும் இல்லாது போயிருந்தால் இந்தப்படத்தைக் காப்பாற்றியிருக்கவே முடியாது.. டைட்டில் சாங்குக்கே மகுடி மகுடி போட்டு பெப் ஏற்றினார்கள். ஆனால் அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படம் பப்படம். அரவிந்த்சாமியா, கெளதமா, அர்ஜுனா - யாருடைய கதாப்பத்திரத்துக்கு முக்கியத்துவம் குடுப்பது என்பது தெரியாமலேயே படம் முழுக்க அலை மோதியிருக்கிறார்கள். "nativity"ல் வழக்கமாக கொஞ்சம் கோட்டை விடும் மணி சார் அதற்காக கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். ஆனாலும் நிறைய காட்சிகளில் ஒட்டவில்லை. "ஏலே பாம்புலே.. ஏலே சாத்தான்லே... ஏலே..." என அர்ஜுன் ஏனோ எங்கள் ஊர் பாஷையைக் கொலை செய்து கடித்துத் துப்புகிறார். ப்ளீஸ் மக்களே.. இனிமேல் திருநெல்வேலி பாஷையெல்லாம் வேணாமே. கதாநாயகன் அரவிந்த்சாமி மட்டுமே கொஞ்சம் ஆறுதல். கெளதம் "a warm welcome" kind of நடிப்பு. கொஞ்சம் நடித்திருக்கிறார். துலசி - என்ன பார்க்கிறீர்கள் - எழுத்துப்பிழைதானே... இருக்கட்டும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பிழை அவர்தான் என சுட்டிக்காட்ட முயன்ற பின்நவீனத்துவ டெக்னிக் அது.. குழந்தைத்தனம் என்ற பெயரில் ம்ம்.. ம்ம்... என்று பேசிப் பேசியே கொள்/ல்வதால் - யெஸ் ஷீ இஸ் கோயிங் டு பி லேடி ரவிகிருஷ்ணா ஆப் தி கோலிவுட்." "என்ன பாவம் என்ன பாவம்" என்று கேட்கும் துளசிக்கான பதில் - "நீயும் பாவம்.. நாங்களும் பாவம்.. பாவமே பாவம்.. அய்யோ பாவம்"

கடலில் மீன் இருக்கிறது என்றார்கள்... தோமை என்றார்கள், தாமஸ் என்றார்கள், டாம் என்றார்கள், கெளதமும் துளசியும் பிரசவம் பார்த்தார்கள் என்றார்கள், துளசி அர்ஜுனின் மகள் என்றார்கள், ப்பா ப்பா ப்பா என்றார்கள், கடைசியில் மனநிலை பிறழ்வு என்றார்கள், தெளிவு என்றார்கள்.... அட போங்கடா.....


மேலே இருக்கும் தளபதி சீன் போல ஒரே ஒரு சீன், ஒன்னே ஒன்னு இருந்திருந்தால் கூட படம் தப்பித்திருக்கும்...


ஆக மொத்தத்தில் கடல் Musically and Visually a nice movie.. But apart from that - சாத்தானே அப்பாலே போ.

9 பேர் சொன்னது என்னான்னா..:

DiaryAtoZ.com said...

Nice Review

Anbu said...

:-(

டேவிட் எப்படி அண்ணா இருக்காம்?

Anonymous said...

Thala you are a great critic.....

Anonymous said...

ppa pppa pppppp a

http://shareblood.in

முன்பனிக்காலம் said...

Soooper Criticism!

Mythu said...

chance e illaaa... ur review..... :-) ... hats offf....

அமுதா கிருஷ்ணா said...

காலை காட்சி போக வேண்டியது.குரோம்பேட்டை வெற்றியில் கேன்சலானதால் நாங்கள் ஒரு கும்பல் தப்பிச்சோம்.

amas said...

நல்ல பதிவு. நன்றி!
amas32

David Jebaraj said...

மேலே இருக்கும் தளபதி சீன் போல ஒரே ஒரு சீன், ஒன்னே ஒன்னு இருந்திருந்தால் கூட படம் தப்பித்திருக்கும்...

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.