Sunday, March 31, 2013

சென்னையில் ஒரு நாள் - A must watch...

சில படங்கள்தான் பார்த்துத் திரும்பிய பிறகு நெஞ்சை விட்டகலாமல் அதைப் பற்றியே நம்மை யோசிக்க வைக்கும். கணம் மாறாமல் நாமும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்போம். இது அப்படி ஒரு திரைப்படம். எனக்கு இன்னும் நானே ஒரு SUV genere Carஐ 140 - 150 கி.மீ வேகத்தில் சுமார் 2 மணி நேரம் ஆக்சிலரேட்டரில் இருந்து காலே எடுக்காமல் அழுத்து அழுத்தென்று அழுத்திய உணர்வு மேலிட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு நாள், ஒரு வாரம், ஒரு வருஷம் ஏன் பத்து வருஷம் கூட பஞ்சாகப் பறந்து விடுவதுதான் மனித வாழ்வின் இயல்பு. “நேத்துதான் ஜான்ஸ் ஸ்கூல்ல போய் 10th mark sheet வாங்குன மாதிரி இருக்கு...” இது நான் அடிக்கடி சொல்லும் வசனம். வசனமென்பதை விட வாயிலிருந்து வரும் தன்னிசையான உணர்வு. இப்படிப்பட்ட கரைந்தோடும் காலத்தில் சில நாட்கள், மணி நேரங்கள், மணித்துளிகள் ஆக மொத்தத்தில் தருணங்கள் வரலாறாக மாறிவிட வல்லவை. அப்படி வரலாறான ஒரு நாளைப் பற்றிய படம்தான் இது.



உடலுறுப்பு தானம், இதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற வார்த்தைப் பிரயோகங்களை எல்லாம் தமிழகத்தின் கடைநிலை பாமரனுக்கும் கொண்டு சேர்த்த நிகழ்வு ஹிதேந்திரனின் மூளைச்சாவும் அது தொடர்ந்த சம்பவங்களும். அப்படியான ஒரு உண்மைக்கதையைச் சுற்றிலும் நகரும் கதைக்களம். காரில் இதயம் சென்னை முதல் வேலூர் வரை செல்வதுதான் திரைக்கதையின் முக்கிய அம்சம் என்றாலும் அதைச் சுற்றிலுமான சம்பவங்களை திறமாக கோர்த்திருப்பதில் இந்தப் படம் - பிரமாதம்ம்ம்ம். சிலருக்குத் தோன்றக் கூடும் இப்படியான படு அமர்க்களமான, வேகமான கதையில் குடும்ப நிகழ்வுகள், சோகம், கிளைமேக்ஸ் ஜிந்தா காலனி சீக்வன்ஸ் உட்பட unwanted emotions and clichés அவசியமா என்று.. ஆனால்.... என்னைப் போன்ற சராசரி சினிமா ரசிகர்களுக்கு, கதையோடு ஒன்றிப் போக வேண்டி இந்த சென்டிமென்ட்டும் க்ளிஷேக்களும் மிக மிக அவசியமாகிறது.  

ஏதோ வழக்கமாக ராதிகா - சரத்குமார் நடத்தும் கடல் கடந்த நட்சத்திரக் கலைவிழாவுக்கு வந்திருப்பது போல படம் முழுதுமாக நட்சத்திரப் பட்டாளம்.  சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் ஆனாலும் ஒவ்வொருவரும் தங்கள் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ், லஷ்மி ராமக்கிருஷ்ணன் to be defenitely mentioned kind of acting – awesome as usual. பிரசன்னா – absolutely an underplay acting and it is well done. சேரன் - இவர் இந்தப் படத்தில் அழவும் சிரிக்கவும் இல்லை என்ற காரணத்தால் – Kudos சேரன். கலக்கிட்டீங்க. பிரகாஷ்ராஜ் – A typical replica character from most of his previous movies. ஆனாலும்... 'கேமரா ரோலிங்... செளமியா டீச்சர்.. அவங்க ரொம்ப நல்ல டீச்சர்... She takes special care of her..." முதலான சீன்களில் class Prakash. இனியா, அந்தக் கதாப்.... பாத்... சரி வேணாம் விடுங்க. :) சரத், ராதிகா, மின்னலைப்பிடித்து பாட்டுல ஆடுன மேட்டர் மேன், எங்கேயும் எப்போதும்ல பஸ்ஸ தொரத்தி தொரத்தி மனைவி கூடவே வருவானே அந்தப் பையன் - இவங்க எல்லாருமே பாத்திரத்துக்கேற்ற திறமான  தேர்வு.



"We have to give him the best good bye Gift... அவங்கப்பாம்மாவ சம்மதிக்க வை "

“உங்களுக்கெல்லாம் என் பையன் சாகக் கெடக்குற ஒரு உயிரு.... ஆனா எனக்கு அவன் உயிரோட இருக்க என் பையன் சார்..”

என்பது மாதிரியாக வசனங்கள் பல இடங்களில் படு ஷார்ப்.

 பாடல்கள் ஒன்றும் நினைவில் நிற்கவில்லையெனினும் கதையோட்டத்துக்கு தடையென்று சொல்லும் வண்ணம் எதுவுமில்லை என்பது ஆறுதல்.டெக்னிக்கலா சிலாகிக்க வேறெதும் பெருசா இருந்துச்சான்னு யோசிக்க முடியல. கவனிக்கவும் இல்லை. கதையோட்டத்தின் வீரியம் அப்படி. .  “The mission is ON” என்று சரத் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கும் படம்.. எடுக்கும் வேகம்... செம செம  செம ஸ்பீடு.  Shot By Shotன்னு யோசிக்க முடியல. ஆனால் படம் குடுக்க வேண்டிய Impact ஐ குடுக்க வேண்டிய அளவில் மிகச்சரியாக கொடுக்கிறது என்ற வகையில்...

இது மாதிரியான படங்கள் வணிக ரீதியான வெற்றி அடையாத பட்சத்தில் சில பத்தாண்டுகள் கழித்து நமக்கு டெலெக்ஸ் பாண்டியன்களும், பாதி பகவன்களும்  மட்டுமே திரைப்படங்களாக கிடைக்கும் பேராபத்தும் பெருங்கஷ்டமும் இருப்பதால்.... Mind it and Must watch.

ஆக மொத்தத்தில் "சென்னையில் ஒரு நாள்" -  உணர்வுப்பூர்வமான ஒரு ரோலர் கோஸ்டர் ரைட்.

150/150.

4 பேர் சொன்னது என்னான்னா..:

Ramani S said...

அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
உடனடடி விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 1

ஞானசேகர் ராஜேந்திரன் said...

அண்ணே..
இதுவரை நான் படிச்ச விமர்சனங்களில் இது தான் பெஸ்ட்.விமர்சனம்னா பாதி கதைய சொல்லிடு வாய்ங்க.ஆனா,நீங்க ஒன் லைன் மட்டும் சொல்லிட்டு,ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையை மட்டும் அருமையா விவரிதமைக்கு என் நன்றிகள்.

//கரைந்தோடும் காலத்தில் சில நாட்கள், மணி நேரங்கள், மணித்துளிகள் ஆக மொத்தத்தில் தருணங்கள் வரலாறாக மாறிவிட வல்லவை. அப்படி வரலாறான ஒரு நாளைப் பற்றிய படம்தான் இது.//

நான் மிகவும் ரசித்த வரிகள்.

நடுவுல சரத்குமாரையும்,ராதிகா அவர்களையும் ஒரு வோட்டு வோட்டிடீங்க.

மொத்தத்தில் சிறப்பான விமர்சனம்.

Sowmitha Suresh said...

அருமையான விமர்சனம் :)

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.